நம்முடைய இந்து ஞான மரபின் அடையாள மான வேதங்கள் தான் உலகின் முதல் நூல் அதுவே உலகின் பழமையான மொழியான சமஸ்கிருதத்தின் அடையாளம் என்று. உலகம் ஒப்புக் கொண்ட்டுள்ளது அதிலும் வேத காலங்களில் மிகச்சிறந்த தத்துவ ஞானியாக விளங்கிய கார்க்கி வாசக்னவியை பற்றி சராசரி பாரதியனே அறிந்துள்ளான்.
வாசக்னு ரிஷியின் மகளான இவர் பிறப்பின் தொடக்கம் பற்றி கார்க்கி சம்ஹிதை என்று ஒரு நூலை எழுதியிருக்கிறார். எப்படி சங்ககாலங்களில் ஒளவையார், வெள்ளி வீதியார்,ஒக்கூ ர்மாசாத்தியார், பெருங்கோப்பெண்டு மற்றும் பொன்முடியார் பெண் புலவர்களின் பாடல்கள் அகநானூறு, புறநனூறு, பத்துப்பாட்டு மற்றும் நற்றினை போன்ற சங்க இலக்கியங்களில் இருக்கிறதோ அதே மாதிரி சங்க காலங்களுக்கு முற்பட்ட வேத காலங்களில் வாழ்ந்த பெண் கவிஞர்கள் இயற்றிய சூக்தங்கள் நான்கு வேதங்களிலும் நிறைந்து இருக்கின்றன.
இவர்களில் கோஷா லோபமுத்ரா மைத்ரேயி மற்றும் கார்கி பற்றியே அதிக தகவல்கள் கிடைக்கின்றன. இவர்கள் தான் பிரம்ம வதி னிகள் என்று அழைக்கப்பட்டவர்கள். இதில் லோபமுத்ரா அகஸ்தியரின் மனைவி. இவர் இயற்றிய சூக்தம் உலகின் முதல் நூலான ரிக் வேதத்தில் இருக்கிறது.
அடுத்து கோஷா என்கிற தத்துவ ஞானி மரு த்துவ கடவுள்களான அஷ்வினி குமாரர்களை பற்றி புகழ்ந்து பாடிய சூக்தம் ரிக் வேதத்தில் இருக்கிறது. தன்னுடைய தோல் நோயை குணப்படுத்தியதற்காக அஸ்வினி குமாரர்க ளை கோஷா புகழ்ந்து எழுதிய சூக்தங்கள் ரிக் வேதத்தில் இருந்தாலும் கோஷா உபநிஷத்துகளின் வழியாகவே அதிகம் அறியப்படுகிறார்.
கிரேக்கத்தின் முதல் படைப்புகளே ஹோமர் அளித்த இலியட்டும் ஒடிசியும் தான். அதற்கு முன் கிரேக்க வரலாற்றில் எந்த ஒரு படைப்பும் இருந்ததற்கான வரலாறு இல்லை.
அந்த ஹோமரின் காலத்தில் பாரதத்தில் வாழ்ந்த கார்க்கிவாசக்னவி சமகாலத்தாவர் வேதங்களுக்கு பிறகு வந்தவை தான் உபநிஷத்துகள். வேதங்கள் வாழ்க்கையின் தேடல்கள் என்றால் உபநிஷத்துகள்வாழ்வின் அடைதல் ஆகும் இந்த உலக வாழ்வு பற்றிஅறிய விரும்பும் தத்துவ ஞானிகளின் கடைசி புகழிடம் உபநிஷத்துக்கள் தான்.
.
நம்முடைய வாழ்க்கையின் குறிக்கோள் என்ன? பிறப்பும் இறப்பும் ஏன், எப்படி நிகழ்கின்றன? அடிப்படை உண்மை எது? அழிவில்லாத மெய்ப்பொருள் ஒன்று உண்டானால் அதன் சுபாவம் என்ன? அதுதான் கடவுளா? இவ்வுலகம் எப்படித் தோன்றியது? ஏன் தோன்றியது? மறுபிறப்பின் தத்துவம் என்ன? நன்மையும் தீமையும் மனிதனைப் பொருத்ததா, அல்லது அவைகளுக்கென்று தனித்துவம் உண்டா?
இப்படி பல தத்துவஞானிகள் இன்றும் விடை தேடிக் கொண்டு இருக்கும் ஒரு வாழ்வியல் தத்துவத்திற்கு வடிகாலாக இருப்பது உபநிஷத்துகள் தான். உபநிஷத்து களின் காலத்தில் தான் கிரேக்கத்தில் ஹோமர் இலியட்டையும் ஒடிசியையும் இயற்றினார் என்று கூறுகிறார் கள்..
உபநிஷத்துகளுக்கு முன் வேதங்கள் அதற்கு முன் மகாபாரதம் இராமாயணம் என்று இந்திய ஞானவழி மரபுகள் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கும் பொழுது சமஸ்கிருதத்தில் இருந்ததை விட கிரேக்க புராணங்களே பழமையானது என்பது ஆங்கிலேயர்கள் பாரதம் தான் உலக ஞானத்தின் அடையாளம் என்பதை மறைக்க மேற்கொண்ட முயற்சியேயாகும்.
ஹோமரின் இலியட்டும் ஒடிசியையும் படித்தால் கண்ணை மூடிக்கொண்டு அட. இது நம்மு டைய ராமாயணம் மகாபாரதம் மாதிரி இருக்கிறதே என்று கூறி விடலாம். கண்ணில்லாத
ஹோமர் இலியட்டையும் ஒடிசையையும் நிச்ச யமாக செவி வழியாக உணர்ந்தே இயற்றி இருக்க வேண்டும்.அவருக்கு யார் கூறி இருக்க முடியும்?
கிமு 4 ம் நூற்றாண்டின் இறுதியில் கிரேக்க த்தில் இருந்து பாரதத்திர்க்குள் நுழைந்த மெகஸ்தனிஸ் மூலமாகவோ இல்லை கிமு 4ம் நூற்றாண்டின் மத்தியில் மெகஸ்தனிஸ்க்கு முன்பாக இந்தியாவுக்குள் நுழைந்த அலெக் சாண்டர் மூலமாகவோ தான் மகாபாரதமும் ராமாயணமும் கிரேக்கத்தில் நுழைந்து ஹோமர் மூலமாக இலியட்டாகவும் ஒடிசியாகவும் உருமாறியது என்று உறுதியாக கூறலாம்.
ஏனென்றால் ஹோமரின் காலம் எதுவென்று இது வரை உறுதியாக கண்டுப்பிடிக்க வில்லை. அதனால் இந்தியாவில் இருந்து கிரேக்கத்திற்கு ஏற்றுமதியானதே இலியட்டும் ஒடிசியும். இருந்தாலும் ஹோமரின் காலம் குத்து மதிப்பாக கிமு 8 ம் நூற்றாண்டு என்று கூறப் படுவதால் அதே காலகட்டத்தில் இந்தியாவில் வாழ்ந்த சமஸ்கிருதத்தில் தத்துவ ஞானியாக இருந்த கார்க்கி வாக்சனவியின் அறிவு பற்றி
பார்ப்போம்...
2800 ஆண்டுகளுக்கு முன் ஜனகன் அரச சபையில் கிட்டத்தட்ட பாண்டிய மன்னனின் சபையில் 1000 பொற்காசுக்களுக்காக தருமிக்காக வாதாடிய சிவபெருமானுடன் நெற்றிக்
கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று வாதாடிய நக்கீரன் நிலையில் யக்ஞ வல்கிய ருடன் வாதிட்ட கார்க்கி வாசக்னவியை ஒப்பி ட்டு கூறலாம்.
கார்க்கியின் கேள்வி- யக்ஞவல்கியரே . இந்த பூமியில் உள்ள அனைத்து வஸ்த்துக்களும் தண்ணீரினால் ஒரு துணி நெய்யப்படுவதைப்போல இணைந்து இருக்கின்றன. அப்படி என்றால் தண்ணீர் எதனால் இணைந்து இருக்கின்றது என்று ஒரு கேள்வி கேட்கிறார்.
பதிலுக்கு எக்ஞவல்கியர் காற்றினால் தண்ணீர் நிறைந்துள்ளது என்கிறார். கார்க்கி க்கும் யக்ஞ வல்கியருக்கும் இடையில் நடைபெற்ற இந்த வாதப்போர் யோகயஞ்ன வல்கி ய சம்ஹிதை என்கிற பெயரில் ஒரு தொகுப்பாகவே இருக்கிறது.
கொஞ்சம் யோசித்து பாருங்கள்..நீரில் ஹைட் ரஜன் ஆக்சிசன் வாயுக்கள் இருக்கிறது என்று ஹென்றி கேவண்டிஷ் என்கிற பிரிட்டிஷ் ஆய்வாளர் கிபி 18 ம் நூற்றாண்டின் பிற்பகுதி யில்தான் உலகிற்கு கூறுகிறார்.
ஆனால் கிமு 8ம் நூற்றாண்டுகளில் நடைபெ ற்ற தத்துவ மாநாட்டில் கார்க்கி வாக்சனவியும் யக்ஞ வல்கியரும் ஆன்மா பற்றி நடத்திய தர்க்கப்போரில் நீரில் நிறைந்துள்ளது வாயு என்று அறிந்து வாதம் செய்துள்ளதை நினை த்தால் வேத காலங்களில் இந்தியாவில் இருந்த அறிவியலை அறிந்து கொள்ளலாம்.
அது மட்டுமல்லாது வேத காலங்களில் பாரதியப் பெண்களின் அறிவும் ஒரு அரச சபையில் நடைபெற்ற தத்துவ மாநாட்டில் அமர்ந்து பிரம்ம ஞானி என்று பெயர் பெற்றவர்களையே
எதிர்த்து வாதப்போர் நடத்தும் அளவிற்கு ஆற்றலோடு இருந்துள்ளதை நினைத்தால் 3000 வருடங்களுக்கு முன்பே தேவபாஷா என்று அழைக்கப்படும் சமஸ்கிருதம்
பேசிய பெண்கள் தான் உலகிலேயே அறிவில் சிறந்து இருந்தார்கள் என்று அறிந்து கொள்ளலாம்.
நன்றி
திரு.Vijayakumar aranthangi
No comments:
Post a Comment