Saturday, December 14, 2019

அமர்சிங் Vs ஜகாங்கீர்

பிரதாப்பின் புதல்வர் அமர்சிங் ஜகாங்கீருடன் 17 முறை போர் புரிந்தார் 
17 முறையும் மொகலாய  படைகள் துரத்தி அடிக்கப்பட்டது.
 
இறுதிப்போர்  ஒண்டாலா கோட்டைக்குமுன் நடந்தது 

இளவரசர் குர்ரத்தின் தலைமையில் பெரும்படை ஒண்டாலாவை முற்றுகை  இட்டது.

நடு இரவு  

ராஜபுத்திர பட்டத்து யானை பிளிற,
 கோட்டைக்கதவுகள் திறந்தன 

மாவீரர் ஜெயன்த்   சந்தாவத்   தலைமையில் மின்னலென வெளியே வந்த ராஜபுத்திர படைகள் மொகலாய படைகளை  துவம்சம் செய்ய  ,கூடாரங்கள் கொளுத்தப்பட, குர்ரத்தின் பாதுகாப்புப்படை அவரை இரண்டு மைல் அப்பால் தூக்கிக்கொண்டு ஓடின. 

மொகலாய படை நிலை குலைந்து பாதியாக குறைந்தது. 

வெற்றியுடன் ராஜபுத்திர படைகள் மறுபடியும் கோட்டையில்  நுழைந்தது  

இந்த வெற்றிக்கு பிறகும் அமரசிங் சமாதானத்துக்கு  ஒப்புக்கொண்டார் .ஏன் தெரியுமா?

ஜகாங்கீர் டைரி குறிப்புகளிலிருந்து அவரது சொந்த வார்த்தைகளில் :

" நான் பதவி ஏற்று எட்டாவது வ்ருடம் என் அதிருஷ்ட மகன் குர்ரம் ஒண்டாலா கோட்டையை  பிடிக்கமுடியாவிட்டாலும் அதை சுற்றியுள்ள பிரமுர்களின் மனைவியர், மகள், முதியோரை 
சிறைபிடித்து கூடுகளில் அடைத்து வைத்துவிட்டான் .
அவர்களை விடுவிக்க முடியாத நிலையில் 
வேறு வழி இல்லாமல் ராணா சமாதானத்துக்கு ஒப்புக்கொண்டு என் மகனுடன்  உடன்படிக்கை செய்துகொண்டார் "

இதே ராஜபுத்திர ஆவணங்களில்… 

சமாதானத்துக்கு செல்லுமுன் ...

" இந்த மகுடம் நான் தரித்திருப்பது எனக்காக அல்ல ...மக்களுக்காக என்ற ராணா, மகன் கருணாவின் நெற்றியில் சுக்லமிட்டு, இனி மேவாரின் கௌரவம் உன்கையில் என்று சொன்னார்.

பரிவார வங்களுடன் சென்று ஒப்பந்தம் கையெழுத்திட்டவர் திரும்பும்போது பின்தங்கி கோட்டைக்கு வெளியே தந்தை கட்டிய பாழடைந்த மண்டபத்தினருகே நின்றார் .

“ என் சாம்பலை என் தந்தையுடன் சேர்த்திடுங்கள் “ என்று சொல்லி உள்ளே நுழைந்தவர் அதன்பின் வெளியே வரவே இல்லை ...சாம்பலாகும்வரை .

படித்தபின் இலேசாக கண்கள் பனித்தது 

இவரை பற்றிய ராஜபுதன தெருப்பாடலை ஆங்கில ஆசிரியர் இப்படி மொழி பெயர்த்திருக்கிறார் : 

Rather than be less 
Cared not to be at all

No comments:

Post a Comment

பகத்சிங்

பிரிட்டிசாருக்கு எதிரான கடைசிகட்ட சுதந்திரபோரில் ஜாலியன் வாலாபாக் சம்பவம் கொடுமையானது, அங்கிருந்து எத்தனையோ தேசாபிமானிகள் போராட கிளம்பினார்க...