Thursday, July 19, 2012

பெரிசுகளின் நகைச்சுவை

”சிறுவனாய் இருக்கும் போது பைக் கேட்டு பிரார்த்தனை செய்தேன். அப்புறம் தான் புரிந்தது கடவுள் அப்படி வேலை செய்கிறதில்லை என்று. ஒரு பைக்கை திருடி ஆண்டவனிடம் மன்னிப்பை கேட்டுக்கொண்டேன்” - எர்னோ பிலிப்ஸ்
”குழந்தை பிறந்த முதல் பன்னிரண்டு மாதங்கள் அது பேசவும் நடக்கவும் கற்பிக்கிறோம்.
அடுத்த பன்னிரண்டு மாதங்கள் அது ஓரிடத்தில் உட்காரவும் வாயை பொத்தவும் கத்துகிறோம்” - பிலிஸ் டில்லர்
”வேறு யாருக்கோ நடக்கின்றவரை எல்லாமே வேடிக்கை தான்” - வில் ரோஜர்ஸ்
”ஒருவருக்கு வயதாகத் தொடங்கும் போது மூன்று விஷயங்கள் ஆரம்பிக்கின்றன.
ஒன்று ஞாபக மறதி.
மற்ற இரண்டும் ஞாபகமில்லை” - சர் நார்மன் விஸ்டம்
”பயனுள்ள பொய்யை விட, கேடு விளைவிக்கும் உண்மை நல்லது” - எரிக் போல்டன்
”குடும்பக்கட்டுப்பாட்டுக்கு ஆதரவாய் இருப்போர் எல்லோருமே ஏற்கனவே பிறந்துவிட்டதை கவனித்தீர்களா?” - பென்னி ஹில்
”நாற்பதோரு வருடமாய் ஒரே பெண்ணையே காதலித்து வருகிறேன். மனைவிக்கு தெரிந்தால் கொன்று போடுவாள்” - ஹென்றி யங்மேன்
”யாரை உங்களுக்கு தெரியும் என்பது முக்கியமில்லை, அதை எப்படி மனைவி கண்டு பிடித்து விட்டாள் என்பது தான் முக்கியம்” - ஜோயி ஆடம்ஸ்
”சாக பயமில்லை. ஆனால் அது நடக்கும் போது நான் அங்கிருக்கக் கூடாது” - வுடி ஆலன்
”உண்மையான நண்பன் உங்கள் தோல்விகளை கண்டுகொள்ளமாட்டான், வெற்றிகளை சகித்துக்கொள்வான்” - டக் லார்சன்
”பேரம் பேசக் கூட செலவாகும் என ஒரு பெண்ணை புரியவைத்தல் ரொம்ப கஷ்டம்” - எட்கர் வாட்சன் கோவ்
”நகைச்சுவை இருவரிடையே உள்ள தூரத்தை குறைக்கிறது” - விக்டர் போர்ஜ்

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...