1. ஒரு பிரதட்சணம், ஒரு நமஸ்காரம்.
2. உடம்பைப் போர்த்திக்கொண்டு பிரதட்சணம், சமஸ்காரம் செய்தல்(பெண்கள் இதற்கு விதிவிலக்கு)3. தனித்தனியாக ஒவ்வொரு தெய்வத்தையும் நமஸ்கரித்தல்.
4. பிரசாதத்தைத் தவிர வேறு உணவு வகைகளை கோவிலுக்குள் சாப்பிடக்கூடாது.
5. வீட்டு விலக்கு, சாவுத்தீட்டு போன்ற அசுத்த நிலையில் செல்லக்கூடாது.
6. கண்டகண்ட இடத்தில் கற்பூரம் ஏற்றக் கூடாது. விக்கிரங்களைத் தொட்டு வணங்கவே கூடாது.
7. கர்ப்ப கிரகத்தினுள் நமஸ்காரம் செய்யக்கூடாது.
8. கொடி மரம், நந்தி, பலி பீடம் இவைகளுக்கு குறுக்காகச் சென்று பிரதட்சணம் செய்யக்கூடாது.
9. தெற்கு முகமாக நமஸ்காரம் செய்யக்கூடாது.
10. தலைக்கு எண்ணெய் தேய்த்துக்கொண்டோ, ஈரஆடையுடன் கூடவோ தெய்வ வழிபாடு செய்யக்கூடாது.
11. ஆலயத்தினுள், படுத்து உறங்குதல், அரட்டை அடித்தல், உரக்க சிரித்தல், அழுதல், தாம்பூலம் தரித்தல் போன்ற காரியங்களைச் செய்யக்கூடாது.
12. பொய் பேசுதல், மற்றவர்களை நிந்தித்தல், பெண்களிடம் தகாத முறையில் நடத்தல் போன்றவை கூடாது.
13. ஆலயத்தினுள் மனிதர்கள் யாருக்குமே நமஸ்காரம் செய்யக் கூடாது. ஆலயம், இறைவனுடைய இல்லம். இங்கு செய்யப்படும் மரியாதைகள் அனைத்தும் அவனுக்கு மட்டுமே உரியன.
14. ஆலயத்தின் உள்ளும், புறமும், மல ஜலம் மற்றும் சிறுநீர் கழிப்பது மகா பாவம்.
15. காலணிகள், தோல் பை மற்றும் மிருகத் தோலாலான எந்த பொருளுடனும் ஆலயத்தினுள் நுழையக் கூடாது.
16. கோவில் மூடிய நிலையில் இருக்கும் போதும் சுவாமி வீதியில் உலா வரும் போதும் கோவிலினுள் சென்று தரிசனம் செய்ய முயற்சிக்கக்கூடாது.
No comments:
Post a Comment