1. சிவனுக்கு இடமிருந்து வலமாக ஐந்து முறை சுற்றி வர வேண்டும்.
2. அனைத்து வகையான சத்திகளுக்கும் ஐந்து முறை அல்லது ஒருமுறை இடமிருந்து வலமாகச் சுற்றி வர வேண்டும்.
3. முருகன், பிள்ளையார், விநாயகர், கணபதி, ஐயனார், கருப்பு முதலியவர்களுக்கு இடமிருந்து வலமாக மூன்று முறை சுற்றி வர வேண்டும்.
4. திருமால், பிறமண், குபேரன், இயமன் முதலியவர்களுக்கு இடமிருந்து வலமாக நான்கு முறை சுற்றி வர வேண்டும்.
5. ஒன்பது கோள்கள், சனீசுவரன், சூரியன், சந்திரன், பைரவர், பலிபீடம், கொடிமரம் முதலியவர்களை இடமிருந்து வலமாக ஏழு முறை சுற்றி வர வேண்டும்.
6. பறவை, விலங்கினங்கள் சமாது வலமிருந்து இடமாக நான்கு முறை சுற்றி வர வேண்டும்.
7. துறவிகளின் சமாது வலமிருந்து இடமாக ஏழுமுறை சுற்ற வேண்டும்.
8. இல்லறத்தார் சமாதை வலமிருந்து இடமாக ஒன்பது முறை சுற்றி வர வேண்டும்.
9. உயிருள்ள கன்னிப் பெண்களை ஒன்பது முறை வலமிருந்து இடமாகச் சுற்றி வர வேண்டும்.
10. வாவரசிகளை (வாழ்வு + அரசிகள் => இல்லறத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற சுமங்கலிப் பெண்கள்) வலமிருந்து இடமாக நான்கு அல்லது ஐந்து முறை சுற்றி வர வேண்டும்.
11. பூசையில்லாத அல்லது பாழடைந்த ஆலயங்களை வலமிருந்து இடமாக இரண்டு முறை சுற்றி வர வேண்டும்.
12. சித்தி வழங்கக் கூடிய குருவை, குருதேவரை, அருளை அநுபவப் பொருளாக வழங்கக் கூடிய அருளாளர்களை வலமிருந்து இடமாக பதினாறு அல்லது பதினெட்டு முறை சுற்றி வந்து ஒவ்வொரு முறையும் அவரது மெய்தொட்டு வணங்க வேண்டும். வணங்குபவர் தனித்திருந்தால் அல்லது அறைக்குள் இருந்தால் அல்லது இருளில் இருந்தால் வணங்கப் படுபவரின் ஒப்புதல் பெற்று ஆரம்பத்திலும் முடிவிலும் முத்தங்கள் கொடுத்து வணங்க வேண்டும்.
குறிப்பு:- வணங்குபவரின் இடது கை, வலது கை அடிப்படையில்தான் இடமிருந்து
வலம் வருவது அல்லது வலமிருந்து இடம் வருவது கையாளப் பட வேண்டும்.
-ஞானாச்சாரியார்
'அன்பு சித்தர்'
-ஞானாச்சாரியார்
'அன்பு சித்தர்'