Friday, December 29, 2017

திருவாதிரைக்கு ஒரு_வாய்_களி

சிதம்பரத்திற்கருகே ஒரு ஊரில் சேந்தனார் என்ற ஒரு சிவ பக்தர் வாழ்ந்து வந்தார். இவர் சிவபெருமானிடம் அளவு கடந்த அன்பு கொண்டவர். அவர் தினமும் விறகுகள் வெட்டி விற்று அதன் மூலம் வரும் வருமானத்தில், உணவை தயாரித்து அன்றைய தினம் ஒரு சிவனடியார்க்கு உணவிட்டு, அவர் பசியாற்றி, பின் தான் உணவருந்தி, சிவ சிந்தனையுடன் தனது தொண்டினை சிறப்பாக ஆற்றி வந்தார்.

ஒரு நாள் பலத்த மழை காரணமாக அவர் சேர்த்து வைத்திருந்த விறகுகள் காயாமல் போகவே, அன்றைய தினம் வரும் வருமானமும் தடைபட, நல்ல அரிசியுடன் கூடிய உணவுக்கு வழியின்றி, கிடைத்த கேழ்வரகு தானியத்தில் செய்த களியை வைத்துக்கொண்டு யாராவது சிவனடியார்கள் வந்தால் அவர்களுக்கு தானமிட்டு தொண்டு செய்து அவர்கள் பசியை போக்கிவிடலாமென்று ஆவலுடன் காத்திருந்தார். நேரம் செல்ல செல்ல எவரையும் காணாது சிவபெருமானை துதித்தபடி இருந்தார். பக்தர்களை சோதிப்பதும், பின் அவர்களின் பெருமையை உலகத்துக்கு பறைச்சாற்றுவதும் சிவபெருமானின் லீலைகளில் ஒன்றல்லவா?

இவரின் பெருமையை உலகத்திற்கு அனறைய தினம் காட்டிட உள்ளத்தில் முடிவெடுத்தார் சிவபெருமான். தானே ஒரு அடியார் வேடத்தில், அவரின் இல்லத்திற்கு வந்து அவர் பக்தியுடன் படைத்த கேழ்வரகு களியை “இதுவல்லவோ அமிர்தம்”! என்று பாராட்டியபடி, உண்டு பசியாறி, இரவு பசிக்கும் வேண்டுமென, அவரிடம் வேண்டியதை பெற்றுச் சென்றார்.

மறு நாள் சிதம்பரம் கோவில் பூஜைக்காக கோவிலை திறந்து இறைவனுக்கு அபிஷேக ஆராதைனைகள் நடத்திட வந்து கருவறை கதவை திறந்த சிவாச்சாரியார்கள், இறைவன் குடிகொண்டிருக்கும், கருவறை முழுதும் ஆங்காங்கே சிதறியிருந்த உணவாகிய கேழ்வரகு களியமுதுகளை கண்டும், இறைவனின் வாயிலும், கரத்திலும் இருந்த கேழ்வரகு களியமுதை கண்டும் திகைத்துப் போய் அந்நாட்டு மன்னனிடம் சென்று முறையிட்டார்கள்.

முன் தினம் அரசனின் கனவில் வந்து சேந்தனார் தமக்குப் படைத்த கேழ்வரகு களியமுதின் பெருமைகளை இறைவன் குறிப்பட்டிருந்ததும், கோவில் அர்ச்சகர்கள் வந்து முறையிடுவதும், ஒத்துப்போகவே அரசன் ஆச்சரியத்தில் ஆழ்ந்தான். அமைச்சரை வரவழைத்து, அந்த சேந்தனாரின் விபரம் சொல்லி அவரை உடனழைத்து வர ஆட்களை அனுப்பினான்.

பின் அன்றைய தினம் சிதம்பரம் கோவிலில் எழுந்தருளியுள்ள நடராஜரின் ரதோத்ஸ்வத்தில் கலந்து கொள்ள வந்திருந்த அரசன் முன்னின்று இறைவனை பக்தியுடன் தேரில் எழுந்தருளச்செய்த பின், பக்தியுடன் தேரின் வடம் பிடித்து அரசனும் மற்றும் அனைவரும் ரதத்தை இழுக்க முயல தேர் மழையினால் சேறான இடத்தில் அழுந்திக் கொண்டு நகர மறுத்தது. அவ்வேளையில் அரசனால் தேடப் பட்ட சேந்தனாரும், நடராஜரின்த் தேர் திருவிழாவை கண்டு களிக்க அங்குதான் வந்திருந்தார். அப்போது ஒரு அதியசம் நடந்தது. “சேந்தனாரே.! என் மீது பல்லாண்டு பாடினால் தேரின் சக்கரம் விடுபட்டு நகரும். நீ பாடுவாயாக.!” என்று வானிலிருந்து ஓர் அசரீரி குரல் எழுந்தது. அனைவரும் திகைத்தனர். யார் அவர்? எங்கே அந்த சேந்தனார்? என்று அனைவரும் திகைக்க, “இறைவா! எனக்கு பாடவெல்லாம் தெரியாதே! இந்த ஏழைக்கு உன் மீது வைத்திருக்கும் அன்பைத் தவிர எனக்கு என்ன தெரியும்.? என இறைவனின் திருமுகத்தை நோக்கி சேந்தனார் மெய்யுருகி கதற, “உன்னால் இன்று முடியும்! பாடு” என்ற அசரீரியின் குரலுக்கு அடுத்த நொடி மீண்டும் ஒரு அதிசயம் நடந்தது.

சேந்தனார் இறைவனின் அருளால் இறைவனை வாழ்த்தி

மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள் வஞ்சகர் போயகல
பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து புவனி யெல்லாம் விளங்க அன்னநடை மடவாள் உமைகோன் அடியோ முக்கருள் புரிந்து
பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே

என்ற பாடலை முதல் பாடலாகக் கொண்டு பதின்மூன்று பாடல்களாக பல்லாண்டு பாடினார்.

உடனே பள்ளத்திலிருந்து விடுபட்டு தேர் நகர்ந்தது. அனைவரும் சேந்தனாரின் காலில் விழுந்து வழிபட்டனர். அரசன் சேந்தனாரின் பெருமைகளை தன் கனவில் கண்ட நிகழ்ச்சியினை,அனைவருக்கும் உரைக்க, “இறைவனே வந்து என் கையால் உணவு புசித்தானா?” என்ற மகிழ்வில் பக்தியின் உச்சத்தில் சேந்தனார் மனம் கனிந்து உருகினார்.

இவ்வாறு தன் பக்தனுக்கு சிவபெருமான் அருள் புரிந்ததும் ஒரு திருவாதிரை நாளே! இன்றும் சிவன் கோவில்களில், களி செய்து இறைவனுக்கு படைத்து பிரசாதமாக வழங்குகின்றனர்.

“திருவாதிரைக்கு ஒரு வாய்க் களி!  உண்ணாதவருக்கு நரகக் குழி ” என்ற பேச்சு வழக்கும் உண்டு.

ஓம்_நமசிவாய
திருச்சிற்றம்பலம்

இந்துக்கள்அறிய வேணடியவை

ஒவ்வொரு இந்துவும் அறிய வேண்டிய, உணர வேண்டிய சில விஷயங்கள்
அனைத்து மதத்திற்கும் மூல மதமாக நமது இந்துமதம் (Hindu) தொன்று தொட்டே இருந்து வருகிறது.
ஒவ்வொரு இந்துவும் அறிய வேண்டிய, உணர வேண்டிய சில விஷயங்கள்

நான்கு வகை உயிரினங்கள் :

1. சுவேதஜம்

– புழுக்கத்திலிருந்து பிறக்கக்கூடியன – புழு, பூச்சி, கொசு போன்றவை.

2. உத்பிஜம்

– பூமியைப் பிளந்து கொண்டு வெளிவருவன – மரம், செடி, கொடி போன்றவை.

3. அண்டஜம்

– முட்டையிலிருந்து வெளிவருவன – பறவைகள், சில நீர்வாழ்வன போன்றவை.

4. ஜராயுதம்

– கருப்பையிலிருந்து வெளிவருவன – மனிதன், சில விலங்குகள் போன்றவை.

ஆதித்தனுடைய ஏழு புத்திரர்கள் :

1. கர்ணன்  (Karnan)
2. காளந்தி (Kalandhi)
3. சுக்ரீவன் (Sukriva)
4. தத்திய மகன் (Son of Thathiya)
5. சனி (Sani)
6. நாதன் (Nathan)
7. மனு (Manu)

நந்தியின் அருள் பெற்ற எட்டுப்பேர் :

1. சனகர் (Sanagar)
2. சனாதனர் (Sanadhanar)
3. சனந்தகர்  (Sanandhagar)
4. சனத்குமாரர் (Sanathkumarar)
5. வியாக்கிரபாதர்  (Viyakkirabhadhar)
6. பதஞ்சலி (Padhanjali)
7. சிவயோக முனிவர் (Shivayoga Munivar)

8. திருமூலர் (Thirumoolar)

அஷ்ட பர்வதங்கள் :

1. கயிலை (Kailai)
2. இமயம் (Himalaya)
3. ஏமகூடம் (Eamakoodam)
4. கந்தமாதனம் (Kandhamaadhanam)
5. நீலகிரி (Neelagiri)
6. நிமிடதம்  (Nimidadham)
7. மந்தரம் (Mantharam)
8. விந்தியமலை (Vindhaya Mount)

ஆத்ம குணங்கள் :

1. கருணை (Mercy)
2. பொறுமை (Patience)
3. பேராசையின்மை (without Greed)
4. பொறாமையின்மை (without Jealousy)
5. நல்லனவற்றில் பற்று [உறுதி] (persistence)
6. உலோபத்தன்மையின்மை  (Ulobathanmaiyinmai)
7. மனமகிழ்வு (Pleasure)

8. தூய்மை (Purity)

எண்வகை மங்கலங்கள் :

1. கண்ணாடி (Mirror)
2. கொடி (Flag)
3. சாமரம் (Samaram)
4. நிறைகுடம் (Full pot)
5. விளக்கு (Lamp)
6. முரசு (Drum)
7. ராஜசின்னம் (The royal symbol)
8. இணைக்கயல் (

எண்வகை (எட்டு வகை) வாசனைப் பொருட்கள் :

1. சந்தனம் (Sandal)
2. கோட்டம்
3. கஸ்தூரி (Musk)
4. கற்பூரம் (Camphor)
5. குங்குமம் (Vermilion)
6. பச்சிலை
7. அகில்
8. விளாமிச்சை வேர் (Rhizome root)

ஏழுவகைப் பிறப்புக்கள் :

1. தேவர் (Deity)
2. மனிதர் (Human)
3. விலங்குகள்  (Animals)
4. பறப்பவை (Birds)
5. ஊர்பவை
6. நீர்வாழ்பவை
7. தாவரம் (Plants)

ஈரேழு உலகங்கள் – முதலில் மேல் உலகங்கள்:

1. பூமி (Earth)
2. புவர்லோகம்
3. தபோலோகம்
4. சத்யலோகம்
5. ஜனோலோகம்
6. மஹர்லோகம்
7. சுவர்க்கலோகம்

ஈரேழு உலகங்கள் – கீழ் உலகங்கள் :

1.அதலம்
2.கிதலம்
3.சுதலம்
4. இரசாதலம்
5. தவாதலம்
6. மகாதலம்
7.பாதாலம்.

குபேரனிடம் இருக்கும் நவநிதிகள் :

1.சங்கநிதி
2.பதுமநிதி
3.கற்பநிதி
4.கச்சபநிதி
5. நந்தநிதி
6. நீலநிதி
7. மஹாநிதி
8. மஹாபதுமநிதி
9. முகுந்த நிதி

அஷ்ட ஐஸ்வர்யங்கள் :

1. தனம்
2. தான்யம்
3. பசு
4. அரசு
5. புத்திரர்
6. தைரியம்
7. வாகனம்
8. சுற்றம்

எண்வகை போகங்கள் :

1. அணிகலன்
2. தாம்பூலம்
3. ஆடை
4. பெண்
5. பரிமளம்
6. சங்கீதம்
7. பூப்படுக்கை
8. போஜனம் (உணவு)

நவ நாகங்கள் :

1. ஆதிசேஷன்
2. கார்க்கோடகன்
3.அனந்தன்
4. குளிகன்
5. தஷன்
6. சங்கபாலன்
7. பதுமன்
8. மகாபதுமன்
9. வாசுகி

நன்மை தரக்கூடிய தச தானங்கள் :

1. நெல்
2. எள்
3. உப்பு
4. தீபம்
5. மணி
6. வெள்ளி
7. வஸ்திரம்
8.சந்தனக்கட்டை
9. தங்கம்
10. நீர்ப்பாத்திரம்

நமது சமய கருத்துக்கள் ஒவ்வொரு இந்துக்களும் கற்க வேண்டும். நாம் கற்றதின் படி (தர்மத்தை) கடைபிடிக்க வேண்டும் .

கற்று தெளிவதோடு நின்றுவிடாமல் கற்ற தை, பெற்றதை, தெரிந்ததை நமது குழந்தைகளுக்கு. கற்பிப்போம். இதன் மூலம் நமது தேசம், தெய்வம், த‌ர்மம் காக்கப்படும்.

முத்துசாமி தீட்சிதர்

மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...