Sunday, September 23, 2018

அபிஷேகம் செ‌ய்வது ஏ‌ன்

சாமி சிலைகள், விக்ரகங்களுக்கு, லிங்கங்களுக்கு பல்வேறாக அபிஷேகங்கள் செய்வதற்கான காரணம் என்ன?

சிற்பங்களை காலமெல்லாம் அழியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மனிதர்களில் ஆண், பெண், அலி என்று இருப்பது போலவே கற்களிலும் ஆண் கல், பெண் கல், அலி கல் என்றெல்லாம் உண்டு.

அலி கல் அவ்வளவாக பயன்படுத்துவது கிடையாது. பதுமை செய்வது போன்ற ஒரு சிலவற்றிற்கு மட்டுமே இந்த அலி கல்லைப் பயன்படுத்துவார்கள்.

ஆண் கல்தான் முக்கியமாக எடுத்துப் பயன்படுத்துகிறார்கள். இந்தக் கற்களுக்கு செதுக்கி செதுக்கி உயிரூட்டம் கொடுக்கிறார்கள். இந்தக் கற்கள் என்பது மிக சக்தி வாய்ந்த ஒரு வஸ்து. இதற்கு இயற்கையோடு இயற்கை, கல் என்பதும் இயற்கை, தர்பை என்பதும் இயற்கை.

இந்த தர்பையால்தான் கும்பாபிஷேகத்தின் போது இறைவனுடைய சிற்பத்தைத் தீண்டுகிறோம். அதன்மூலம் அதற்கு ஒரு உயிர்ப்பு சக்தியைக் கொடுக்கிறோம்.

இதேபோல அபிஷேகங்கள் செய்யும் போதும் இறைவனுடைய அழைப்பு கூடுகிறது. பால் அபிஷேயம் என்றால் ஒரு அழைப்பு, தேன் அபிஷேகம் என்றால் ஒன்று, பஞ்சாமிர்தம் என்றால் ஒரு அழைப்பு என்று உண்டு.

பொதுவாக இறைவனை எவ்வாறு பார்க்கிறோம். சில நேரம் நண்பனாகப் பார்க்கிறோம், சில நேரத்தில் தாய், தந்தையாக நேசிக்கிறோம்.

அதனால்தான் நமக்குக் கிடைப்பதை இறைவனுக்கு கொடுத்துவிட்டு நாமும் எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படித்தான் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதனால்தான் எந்தெந்த பருவத்தில் என்னென்ன கிடைக்கிறதோ அதை வைத்து இயற்கையோடு இயற்கையாக வழிபடுகிறோம்.

ஆகையால், அபிஷேகங்களுக்கு தனி சக்தி உண்டு. அதனால் இறை ஆற்றல் கூடும்.

☀ஆண்டவனுக்கு உரிய ஆராதனைகளுள் பதினாறு வகை உபசாரங்கள் முக்கியமானவை என்கின்றன ஆகமங்கள். அவற்றுள்ளும் அபிஷேகமே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், ஆற்றல் மிக்கதாகவும் கூறப்பட்டுள்ளது.

தமிழில் #திருமுழுக்கு என்று கூறப்படும் அபிஷேகத்துக்கு நம் முன்னோர் இருப்பத்தாறு வகை திரவியங்களைப் பயன்படுத்தினார்கள். காலப்போக்கில் அது பதினெட்டாகி, தற்போது பெரும்பாலான கோயில்களில் 12 வகை திரவியங்களைக் கொண்டே அபிஷேகம் நடத்தப்படுகிறது.

இந்த திரவியங்கள் *எள் எண்ணெய், பஞ்ச கவ்யம், பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், தேன், கரும்புச்சாறு, பழரசம், இளநீர், சந்தனம், சுத்த ஜலம்* என்ற வரிசையில் அபிஷேகத்துக்கு பயன்படுத்தும் வழக்கம் பெரும்பாலான கோயில்களில் உள்ளது.

*சிலைகளுக்கு ஏன் இப்படி விதவிதமான திரவியங்களால் அபிஷேகம் செய்யவேண்டும்?*

#அதற்கு_முக்கியமான #காரணம்.

ஒரு கோயிலின் மூலவர் சிலை எந்த அளவுக்கு அருள் ஆற்றலை வெளிப்படுத்துவதாக அமைகிறது என்பது, அந்த சிலைக்குச் செய்யப்படும் அபிஷேக திரவியங்களின் எண்ணிக்கையையும், அளவையும், அது செய்யப்படும் சிறப்பையும் பொறுத்தே அமையும்.

இன்றைய விஞ்ஞான அடிப்படையில் சொல்வதானால், உயர்வான மின்கலனில் ஆற்றல் சேமித்து வைக்கப்பட்டாலும், உரிய காலகட்டத்தில் அதனை சார்ஜ் செய்வது முக்கியம் அல்லவா? சில மின்கலன்களின் உள்ளே உள்ள திரவங்களை குறிப்பிட்ட காலகட்டத்தில் மாற்றி அமைப்பதும் அவசியமாக இருக்கிறதுதானே? அப்படித்தான் இறையருளை மந்திர, யந்திர ஸ்தாபனங்கள் மூலம் சிலாரூபத்தில் இருத்திடும்போது அந்த ஆற்றலை நிலைக்கச் செய்யவும் அதிகரிக்கச் செய்யவும் அபிஷேகம் முதலானவை அவசியமாகிறது.

இந்த உண்மையை சங்க காலத்துக்கு முன்பே நம் மூதாதையர் கண்டுபிடித்துவிட்டனர். எனவேதான் கோயில்களில் மூலவர் சிலைக்கு அபிஷேகம் நடத்துப்படுவதற்கு அவர்கள் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தனர்.

அதோடு அபிஷேகப் பொருட்கள் தடையின்றிக் கிடைக்க கைங்கர்யம் செய்வதற்கு வசதியாக கோயில் சொத்தாக நிலங்களை எழுதி வைத்தனர்.

அபிஷேகங்களில் பல வகைகள் இருந்தாலும் *மகா அபிஷேகம், அன்னாபிஷேகம், சங்காபிஷேகம்* ஆகிய மூன்றும் சிறந்ததாகும்.

அதேபோல எந்த வகை அபிஷேகம் செய்தாலும் அதனை ஒரு நாழிகை, அதாவது இருபத்து நான்கு நிமிடங்கள் செய்யவேண்டும் என்று ஆகம விதிகளில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், சில கோயில்களில் அவற்றின் நடைமுறை வழக்கப்படி இரு நாழிகை அளவுக்கு (48 நிமிடங்கள்) அபிஷேகங்கள் செய்யப்படுவது உண்டு. இது, ஒவ்வொரு கோயிலுக்கும் உரிய சிலை பிரதிஷ்டை பந்தன விதிகளை ஒட்டி மாறுபடுவதும் உண்டு.

அபிஷேகத்துக்கு பயன்படுத்தும் தண்ணீரில் சுத்த கந்த திரவியங்களான *பாதிரிப்பூ, உத்பலம், தாமரைப்பூ, அலரிப்பூ, வெட்டிவேர்* ஆகியவற்றை கலந்து வாசனைதீர்த்தமாக அபிஷேகம் செய்வது சிறந்தது.

முற்காலத்தில் மூலவிக்ரகத்துக்கு நடத்தப்படும் அபிஷேகங்களுள் *சந்தனம், விபூதி, கலச அபிஷேகம்* ஆகியவற்றைத் தவிர மற்றவற்றைப் பார்க்க பக்தர்களை அனுமதிக்கமாட்டார்கள்.

ஆகமப்படி இவை தவிர மற்ற எந்த அபிஷேகத்தையும் பக்தர்கள் பார்க்கக்கூடாது. என்றாலும் பல கோயில்களில் எல்லா அபிஷேகத்தையும் பக்தர்கள் காண அனுமதிக்கப்படுகிறார்கள்.

🌸கருவறையில் கற்சிலையாகக் காட்சிதரும் மூலவர் திருமேனி, பிரபஞ்ச சக்திகளை எல்லாம் ஒருங்கே ஈர்த்து அதைக் கோயில் முழுவதும் பரவச் செய்கிறது.

அந்த ஆற்றலானது அபிஷேகம் செய்வதால் பலமடங்கு அதிகரிக்கிறது.

நம் முன்னோர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடித்த இந்த உண்மையை, இன்றைய விஞ்ஞானிகள் சமீபத்தில்தான் கண்டுபிடித்து ஒப்புக்கொண்டுள்ளனர்.

பழமையான கோயில்களில் உள்ள மூலவர் சிலைகளின் பீடத்தில் அரிய மூலிகைகளும், ஆற்றல் வாய்ந்த மந்திரத் தகடும் (யந்திரம்) பதிக்கப்பட்டு உள்ளன.

இந்த யந்திரமும், மூலிகைகளும் வெளிப்படுத்தும் ஆற்றலும் அபிஷேகத் தீர்த்தத்தில் கலக்கிறது.

அதனால்தான் அதனைத் தலையில் தெளித்துக் கொண்டாலும் சிறிதளவு உட்கொண்டாலும் அபரிமிதமான புத்துணர்ச்சி கிடைக்கிறது.

தயிர், பால், சந்தனம், தண்ணீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யும்போது மூலவர் சிலையில் அதிக அளவில் ஆற்றலைக் கடத்தும் திறன் ஏற்படுகின்றது.

அபிஷேகம் செய்யச் செய்ய கருவறையில் உள்ள காற்று மண்டலத்தில் எலக்ட்ரான்கள் அதாவது எதிர்மின்னூட்டியின் அளவு அதிகரிப்பதை அறிவியல் சோதனைகள் மூலம் கண்டறிந்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.

அபிஷேகம் காரணமாக கருவறையில் உள்ள காற்றில் அதிக ஈரப்பதம் இருக்கும்.

ஈரப்பதத்தில் ஒளியின்வேகம் அதிகமாக இருக்கும்.

அதனால்தான் அபிஷேகத்தின் போதும், தீபம் காட்டும்போதும் கருவறை காற்று மண்டலம் அயனியாக்கப்பட்ட மூலக்கூறுகளுடன் வெளியில் வருவதாகவும்.

அது கோயில் முழுதும் பரவி, பக்தர்கள் மனதில் பக்தி உணர்வினை அதிகரிப்பதாகவும் கூறுகிறார்கள்.

அபிஷேகத்தின் போது சொல்லப்படும் மந்திர ஒலி, சிலை மீது பட்டு நேர் அயனியாக வெளிப்படுகிறது.

நேர் அயனியை சிவமாகவும், எதிர் அயனியை சக்தியாகவும் நம் முன்னோர் உருவகப்படுத்தி, அபிஷேகம் செய்யும்போது சிவசக்தி ஐக்கிய பாவத்திருவிளையாடல் நடப்பதாக வரையறுத்துள்ளனர்.
அந்த ஆற்றல் சேமிக்கப்படவேண்டும் என்பதற்காகவே கருவறையில் இருந்து கோமுகம் வழியே சென்று, பின் அபிஷேக திரவியங்கள் நேராக கோயில் திருக்குளத்தை சென்றடைய வழிவகை செய்திருந்தனர்.

அதுபோலவே அபிஷேகத்துக்கு உரிய பொருளை நேரடியாக எடுத்துவந்து தருவதைவிட அதனைச் சுமந்தபடி பிராகாரத்தில் வலம் வந்து பின்னர் கொடுப்பதே நல்லது என்பதால்தான், பால் காவடி முதலானவற்றைச் சுமந்துவருபவர்கள் கோயிலை வலம் வந்து அளிக்கும் வழக்கத்தையும் ஏற்படுத்தினர்.

பொதுவாக பாலாபிஷேகம் செய்வதை பெரும்பாலான பக்தர்கள் விரும்பி செய்வதுண்டு.

அதனாலேயே எல்லா கடவுளுக்கும் பாலாபிஷேகம் அடிக்கடி நடைபெறும்.

பால் அபிஷேகம் குறிப்பாக பிரதோஷ காலத்தில் நந்திக்குச் செய்யப்படும்போது அது மிக முக்கியத்துவம் பெறுகிறது.

அதேபோல முருகனுக்குத் திருநீறு, பால், பஞ்சாமிர்தம் போன்றவற்றால் அபிஷேகம் செய்யும்போது அளவுகடந்த ஆற்றல் வெளிப்படுகிறது.

அதன் காரணமாக பக்தர்கள் வாழ்க்கையில் செழுமையும் நலமும் நிறைகிறது.

ஆண்டவனின் அருளாற்றலை அதிகரிக்கச் செய்யக்கூடிய அற்புதமான செயல், அபிஷேகம். உங்களால் இயன்றபோதெல்லாம் அபிஷேக நேரத்தில் கோயில்களுக்குச் செல்லுங்கள்.
நீங்கள் நேரடியாக அபிஷேகத்தை தரிசிக்கவேண்டும் என்பது இல்லை.

கோயிலுக்குள் இருந்தாலே போதும் உங்கள் வாழ்வில் கோடிகோடி நன்மைகள் சேரும்.

Sunday, September 9, 2018

47 வகையான நீர்நிலைகள்

01. அகழி – (Moat) கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்.

02. அருவி – (Water fall) மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது.

03. ஆழிக்கிணறு - (Well in Seashore)கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு

04. ஆறு - (River) – பெருகி ஓடும் நதி.

05. இலஞ்சி -(Reservoir for drinking and other purposes)பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம்.

06. உறை கிணறு -(Ring Well)மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு.

07. ஊருணி -(Drinking water tank)மக்கள் பருகும் நீர் நிலை.

08. ஊற்று – (Spring) பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது.

09. ஏரி -( Irrigation Tank) வேளாண்மை பாசன நீர் தேக்கம்.

10. ஓடை (Brook) அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் – எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர்.

11 கட்டுந் கிணக்கிணறு (Built-in -well) – சரளை நிலத்தில் வெட்டி, கல், செங்கல் இவைகளால் சுவர்கட்டிய கிணறு.

12. கடல் - (Sea) சமுத்திரம்.

13. கம்வாய் (கம்மாய்) -(Irrigation Tank) பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர்.

14. கலிங்கு - (Sluice with many Ventures)ஏரி முதலிய பாசன நீர் தேக்கம் உடைப்பெடுக்காமல் இருப்பதற்கு முன் எச்சரிக்கையாக கற்களால் உறுதியாக்கப்பட்ட பலகைகளால் அடைத்து திறக்கக்கூடியதாய் உள்ள நீர் செல்லும் அமைப்பு.

15. கால் – (Channel) நீரோடும் வழி.

16. கால்வாய் - (Supply channel to a tank ) ஏரி, குளம் ஊருணி இவற்றிக்கு நீர் ஊட்டும் வழி.

17. குட்டம் – (Large Pond) பெருங் குட்டை.

18. குட்டை - (Small Pond) சிறிய குட்டம். மாடு முதலியன் குளிப்பாட்டும் நீர் நிலை.

19. குண்டம் - (Small Pool) சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை.

20. குண்டு – (Pool) குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம்.

21. குமிழி – (Rock cut Well) நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடை கிணறு.

22. குமிழி ஊற்று – (Artesian fountain)-அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று

23 . குளம் - (Bathing tank) ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப்பயன்படும் நீர் நிலை.

24. கூவம் – (Abnormal well) ஒரு ஒழுங்கில் அமையாத கிணறு.

25 . கூவல் – (Hollow) ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம்.

26. வாளி (stream) ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால்வழி அதிக நீர் வெளிச் செல்லுமாறு அமைந்த அல்லது அமைக்கப்பட்ட நீர்நிலை.

27. கேணி –( large well) அகலமும், ஆழமும் உள்ள ஒரு பெருங் கிணறு.

28. சிறை - (Reservoir) தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை.

29. சுனை - (Mountain Pool ) மலையிடத்து இயல்பாயமைந்த நீர் நிலை.

30. சேங்கை – (Tank with duck weed) பாசிக்கொடி மண்டிய குளம்.

31. தடம் - (Beautifully constructed bathing tank)அழகாக் நாற்பபுறமும் கட்டப்பட்ட குளம்.

32 . தளிக்குளம் - (tank surrounding a temple) கோயிலின் நாற்புறமும் சூழ்ந்தமைந்த அகழி போன்ற் நீர் நிலை.

33. தாங்கல் – (Irrigation tank) இப்பெயர் தொண்ட மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியை குறிக்கும்.

34. திருக்குளம் – (Temple tank) கோயிலின் அணித்தே அமைந்த நீராடும் குளம். இது புட்கரணி எனவும் பெயர் பெறும்.

35. தெப்பக்குளம் -(Temple tank with inside pathway along parapet wall)ஆளோடியுடன் கூடிய, தெப்பம் சுற்றி வரும் குளம்.

36. தொடு கிணறு - (Dig well) ஆற்றில் அவ்வொப்பொழுது மணலைத்தோண்டி நீர் கொள்ளும் இடம்.

37. நடை கேணி – (Large well with steps on one side) இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங் கிணறு.

38. நீராவி - (Bigger tank at the center of Building hall) மைய மண்டபத்துடன் கூடிய பெருங் குளம். ஆவி என்றும் கூறப்படும்.

39. பிள்ளைக்கிணறு -(Well in middle of a tank) குளம் ஏரியின் நடுவே அமைந்த கிணறு.

40. பொங்கு கிணறு - (Well with bubbling spring) ஊற்றுக்கால் கொப்பளித்துக்கொண்டே இருக்கும் கிணறு.

41. பொய்கை - (Lake) தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்டதொரு நீர் நிலை.

42. மடு - (Deep place in a river) ஆற்றிடையுடைய அபாயமான பள்ளம்.

43. மடை - (Small sluice with single venturi) ஒரு கண்ணே உள்ள சிறு மதகு.

44. மதகு - (Sluice with many ventures) பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் பெரிய மடை அடைப்பும் திறப்பும் உள்ளது.

45. மறு கால் - (Surplus water channel) அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால்.

46. வலயம் - (Round tank) வட்டமாய் அமைந்த குளம்.

47 வாய்ககால் - (Small water course) ஏரி முதலிய நீர் நிலைகள்.

Saturday, September 1, 2018

சிவ மந்திர பலன்


துங் நமசிவாய என்று உச்சரிக்க - வித்துவான் ஆகலாம்.

ஓங் கங்சிவய என்று உச்சரிக்க - சக்தி அருள் உண்டாம்.

ஓம் சிங்சிவாய என்று நம என்று உச்சரிக்க - நினைப்பது நடக்கும்.

ஓம் பங்சிவாய நம என்று உச்சரிக்க - தடைகள் நீக்கும்.

ஓம் யங்சிவாய நம என்று உச்சரிக்க - துன்பங்கள்  விலகும்.

ஓம் மாங்நமசிவாய என்று உச்சரிக்க - செல்வம் செழித்தோங்கும்.

ஓம் மங்சிவாயநம என்று உச்சரிக்க - கவலைகள் வற்றும்

கெங்ஓம் நமசிவாய என்று உச்சரிக்க - வசிய சக்தி மிகும்

ஓம் மங்யங் சிவாய என்று உச்சரிக்க - விஷங்கள் இறங்கும்.

அங் ரங்ஓம்சிவாய என்று உச்சரிக்க - சாதனை படைக்கலாம்.

ஓங் அங் சிங் சிவாயநம என்று உச்சரிக்க  - சப்த கன்னியர் தரிசனம்.

ஓங் வங்சிங் சிவாயநம என்று உச்சரிக்க - முக்குணத்தையும் வெல்லலாம்.

ஹிரீம் நமசிவாய என்று உச்சரிக்க - அரிய பேறுகள் கிடைக்கும்.

ஐயுஞ் சிவாயநம என்று உச்சரிக்க - ஆறு சாஸ்திரம் அறியலாம்.

வங்சிங் ஓம்சிவாயா என்று உச்சரிக்க - தேவர்கள் தரிசனம் காணலாம்.

சங் சிவய நம என்று உச்சரிக்க - விஷ பாதிப்பு நீக்கும்.

ஓம் துங்சிவாய நம என்று உச்சரிக்க - முத்தொழிலும்  சிறக்கும்.

ஸ்ரீலம்ஹரீம் ஓம் நமசிவாய என்று உச்சரிக்க- பெரிய பூமிகள் கொடுக்கும்.

சிங் நமசிவய என்று உச்சரிக்க - பயிர்களால் நன்மை.

வங் சிவய நம என்று உச்சரிக்க - மழை நனைக்காது.

சிவாய ஓம்ஸ்ரீ என்று உச்சரிக்க - மழை நிற்கும்.

கலியுங் சிவாய என்று உச்சரிக்க - வெள்ளம் பெருக்கெடுக்கும்.

ஓம் கங்சிவ்வுங்சிவய என்று உச்சரிக்க - பெரியகாரியங்களில் வெற்றி.

சங்யவ் சி மந என்று உச்சரிக்க - தண்ணீரில் நடக்கலாம்.

மங் நங் சிங் சிவய என்று உச்சரிக்க - பிசாசு, பேய் சரணம் செய்யும்.

"சங் கங் சிவாயநமா" என உச்சரிக்க ஜீவனில் சிவத்தைக் காணலாம்.

"மங் மங் மங்" என உச்சரித்தால் உணவை வெறுத்து பசியை துறக்கலாம்.

"வசாலல சால்ல சிவாய நமா" என உச்சரித்தால் மழையில் நனையாமல் செல்லலாம்.

"சரனையச் சிவாய நம" என உச்சரிக்க வானில் பறக்கலாமாம்.

"கேங் கேங் ஓம் நமசிவாயம்" என உச்சரிக்க எல்லோரும் வசியமாவர்.

"ஓங் சருவ நம சிவாய" என உச்சரிக்க மழை உண்டாகும்.

வாமதேவ மந்திரம்

"கங்கங்ணங் நிஷர் சிவிங்கம்" என உச்சரித்தால் காமதேவன் அருள் கிட்டுமாம்.

"வங் வங் சிங் சிவாய நம"என உச்சரிக்க உலகின் எப்பாகத்திற்கும் வழி தெரியுமாம்.

"சதா சிவாய நம" என உச்சரிக்க நான்கு வேதத்தின் பொருள் அறியலாம்.

"ஓம் அங்கிஷ ஊங் சிவாயநம" என உச்சரிக்க நினைத்த இடத்தில் மனதினை விரைவாக செய்யலாம்.

சத்யோசாத மந்திரங்கள்

"சிவாய ஓம்" என உச்சரிக்க திருமாலில் ஆற்றல் கிட்டும்.

"ஓங் உங் சிவாய ஓம்" என உச்சரிக்க குண்டலினியின் சக்தியை காணலாம்.

"கிருட்டிணன் ஓம் சிவாய நம" என உச்சரிக்க இராவணன் மலையைப் பெயர்த்த பலம் கிட்டும்.

ஈசான மந்திரங்கள்

"சிமிறியும் ஊங்சிவாய ஊங் அங் நம ஓ" என உச்சரிக்க சிவதத்துவத்தை காணலாம்.

"மங் நங் சிவ சிவாய ஓம்" என உச்சரிக்க நந்தியின் தத்துவத்தை உணரலாம்.

"வங் யங் சிங் ஓம் சிவாய" என உச்சரிக்க எதிரியின் உடல் தனலாகும்.

"சிங் சிங் சிவாய ஓ" என உச்சரிக்க முக்காலத்தையும் உணரலாம்.

"மய நசிவ சுவாக" உச்சரிக்க ஆகாயத்தில் பறந்து செல்லும் சித்தர்களின் ஆசி கிட்டும்.

முத்துசாமி தீட்சிதர்

மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...