மங்கோலிய பரம்பரை. செங்கிஸ்கானின் வழிவந்தவன்
ஏப்ரல் 9 ம் தேதி 1336 ல் பிறந்தவன் .
அறுபது வயதுக்குப்பின் தன் பேரனான பீர் முகமதுவை பெரும்படையுடன் அனுப்பிவிட்டு, பின்னாலே இன்னொரு 90 000 வீரர்களுடன் இந்துஸ்தானில் நுழைந்தான்.
வழியெங்கும் பார்க்கும் அனைத்து ஆண்களையும் கொன்று, பெண்களை அடிமைகளாக்கி நாசம் செய்தான்.
அப்போது டெல்லியை ஆண்ட சுல்தான் கையாலாகாமல் பார்த்திருக்க, டெல்லியை சூறையாடி டெல்லியில் மட்டும் இவன் கொன்றது ஒரு லட்சம் பேர்.
இவனுக்கு நொண்டி தைமூர் என்று பேர் இருப்பதை அறிவான் ..ம்ம் எவனாவது அதை என் முன்னால் சொல்கிறானா என்று பார்க்கிறேன்...என்று குரூரமாக நகைப்பானாம்..
சொன்னால் ?
அவனுடன் ராணா பிரதாப் போல வாள் சண்டை ஈடுவானா ?
இல்லை மாமல்லர் போல மல்யுத்தம் செய்வானா?
இல்லை வீரபாண்டியன் போல ஈட்டி எறிவானா?
நூறுபேரை காவலாய் வைத்துகொண்டு நிராயுதபாணியை வெட்டும் வெட்டிவீரன் தான் தைமூர்..
ஒருவழியாக டெல்லி அராஜாகத்துக்குப்பின் நாடு திரும்பினான் என்றுதான் சரித்திரம் படித்திருப்போம்.
படிக்காத உண்மை சரித்திரம் .......இதோ
டில்லியை அடுத்த மீரட், ஹரியானா, ஷரன்பூர், ஹரித்துவார் பகுதிகளின் ராஜாவான இந்து மன்னர் தேவ் பாலாவுக்கு தைமூரின் கொலை வெறி படை எடுப்பு தெரிந்தது.
டெல்லியை அடுத்து அவன் இந்த பகுதிக்குதான் நகர்வான் என்றும் தெரிந்திருந்தார் .
அவரிடம் பெரும் படை கிடையாது .
மஹா பஞ்சாயத்துக்கு அழைப்புவிடுத்தார்
ஜாட், குஜ்ஜார், வால்மீகி, ராஜ்புத், பிராமணர் என்று அனைத்து ஜாதியினரும் கூடி
" வாழ்ந்தால் வாழுவோம் வீழ்ந்தால் வீரமாக சாவோம் " என்று முடிவெடுத்து ஆயுதங்களை தூக்கினர்.
ஒவொரு வீட்டிலும் ஆட்கள் வெளியே வர 80000 பேர் கொண்ட படை தயாரானது..
இவர்களுக்கு தலைவனாக ஜோக்ராஜ் சிங்க் குஜ்ஜார் என்ற மாவீரன் நியமிக்கப்பட்டார்
ஏழு அடி உயரமான இவரை மகாபலி என்று அழைப்பார்கள் ..குதிரையை தூக்கி எறியக்கூடியவர் .
பெண்களின் மானத்தை காக்க எழுந்த படையில் பெண்களும் வருவோம் என்று சொல்லி 20 வயதே ஆன ராம் பியாரி குஜ்ஜார் என்ற பெண்ணின் தலைமையில் 40000 பெண்கள் திரண்டனர் ..
அதிகம் பயிற்சி பெறாத படை...எதிரி மூர்க்கமானவன்… ஆயுதங்கள் இயந்திரங்கள் வைத்திருப்பவன் .எனவே கொரில்லா முறையை பயன்படுத்துவது என்று முடிவெடுத்தனர் .
தைமூர் வரும்வரை காத்திருக்காமல் ,அரவமில்லாது கிளம்பிய படை இரவு நேரத்தில் டெல்லியில் தைமூரின் முகாமுக்குள் நுழைந்து கொலை கலையை காட்டியது .
முதல் தாக்குதலில் 9000 துருக்கியர்கள் கொல்லப்பட்டனர். அவர்கள் பிணங்கள் யமுனா நதியில் எறியப்பட்ட்டது .
இப்படி மூன்றுமுறை வெவ்வேறு பகுதிகள் வழியாக நடந்த தாக்குதலில் தைமூரின் படைகள் கலகலத்துப் போனது.
தாக்கியது மீரட் பஞ்சாயத்தின் படைகள் என்று தெரிந்து தைமூர் படைகளை மீரட்டை நோக்கி நகர்த்தினான்
வழியில் தீடிரென தாக்கிய பெண்கள் படை ஆட்களை தாக்காமல் உணவு பொருட்களை அபகரித்து மிகுந்ததை அழித்து உணவுக்கு அலையவிட்டது தைமூரின் படைகளை .
..மீரட்டில் உணவு கிடைக்கும் என்று உள்ளே நுழைந்த தைமூரின் படைகள் ஆட்களே இல்லாத வெறிச்சோடிய நகரை கண்டு அதிர்ந்ததது
இங்கும் கொரில்லா தாக்குதல் நடத்தப்பட்டாலும் , அதை எதிர்பார்த்திருந்த தைமூரின் படைகள் சமாளித்து தாக்க இரண்டு பக்கமும் சேதங்கள் .
வேறு வழி இல்லாமல் ஹரித் துவாருக்கு திரும்பினான் தைமூர்.
நகருக்குள் மூன்று முறை நடந்த போரில் பெரும் சேதம் தைமூருக்கு
முக்கியமாக மூன்றாவது போரில் ஹர்பீர் சிங் என்ற ஜாட் வீரன் பன்னிரண்டு அடி துள்ளிக்குதித்து தைமூரின் நெஞ்சில் ஈட்டியை பாய்ச்சினான் .ஹிஜிரா என்ற தளபதி தைமூரை கீழே விழாமல் தாங்க, மற்றவர்கள் ஹர்பீர் சிங்கின்மேல் ஈட்டிகளை ஏறிய , மஹாபலி ஜோக்ராஜ் ஹாதாகாதம் செய்தபடி நுழைய, ஹர் பீர் சிங்க் மீட்க்கப்பட்டார் ..
எனினும் ஹர்பீர் வீரமரணம் அடைய தைமூரின் படைகளும் திரும்ப ஆரம்பித்தது
90000 பேருடன் வந்த தைமூருடன் இப்போது சில ஆயிரம் பேர்தான் மிஞ்சினர் .....
படுகாயத்துடன் தூக்கி செல்லப்பட்ட தைமூர்,
அவன் அடுத்த தலைமுறை
என்று அடுத்த 150 ஆண்டுக்கு மேற்கு பகுதியிலிருந்து யாருமே பாரதத்துக்குள் நுழைய துணியவில்லை
இந்த வெற்றிக்காக பஞ்சாயத்து படைகள் இழந்த வீர்களின் எண்ணிக்கை 35 000
இன்றும் அந்த பகுதிகளில் ராம்பியாரி, ஜோக்ராஜ் என்ற பெயர்கள் இங்கே ராஜேந்திரன், ராஜராஜன் போல பிரபலம் .
இதை ஏன் நம்முடைய சரித்திர புத்தகங்களில் பார்க்க முடியவில்லை?
ஒரு ஆழ்ந்த சரித்திர உண்மை என்னே தெரியுமா?
தைமூர் , நாதிர் ஷா , அப்தாலி போன்ற காட்டுமிராண்டிகள் டெல்லி மாநகரை சூறையாடியபோது டெல்லியை ஆண்டது இஸ்லாமிய அரசர்கள்தான்.
சரித்திரம் முழுவதும் கைலாகாதவர்களாக வெறும் லஞ்சம், வஞ்சம் வைத்தே ஆண்டுகொண்டிருந்தால் பின் எப்படி?