Monday, October 21, 2024

முத்துசாமி தீட்சிதர்

மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட கொடுமை தமிழகத்தில்தான் நடந்தது

அவர்கள் சங்கீதம் வளர்க்க வரவில்லை அவர்கள் நோக்கம் சங்கீதமும் அல்ல மாறாக ஒரே நோக்கம் இந்து வழிபாட்டினை உரிய சங்கீதங்களை கொண்டு செய்து பக்தி வளர்ப்பது
தியாகராஜ சுவாமிகள், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் என அவர்கள் இந்து வழிபாட்டை ஊக்குவித்தவர்கள், அதற்காக வாழ்ந்தவர்கள், அப்படிபட்ட உன்னதமான பக்தர்களை சங்கீதம் மட்டும் பாடியவர்கள் என வரலாற்றில் பதிந்தர்தெல்லாம் புரிந்து கொள்ளமுடியா சதி

இந்த முத்துசாமி தீட்சிதர் அவ்வகையில் மிகபெரிய ஞானி, ஒருவகையில் திருநீலகண்ட யாழ்பாணரின் மறுபிறப்பு

தமிழக இந்து பாரம்பரியம் மகா உயர்வானது அகத்தியர் காலம் முதல் கம்பன் காலம் வரை யாராவது வந்து இந்து ஆன்மீகத்துக்கு ஒரு உத்வேகம் கொடுத்து கொண்டே இருந்தனர், சேக்கிழார் காலம் வரை அது தொடர்ந்தது, ராமானுஜர் காலம் அப்படித்தான் இருந்தது

அதன் பின் அந்நிய ஆப்கன் படையெடுப்பில் தமிழகம் வீழ பெரும் குழப்பம் உண்டாயிற்று எல்லாம் மொத்தமாக அழிந்தன, பின் வந்த நாயக்கர்களும் மராட்டியர்களும் இந்து பக்தியினை மீட்டெடுத்தனர்

அதுவும் மராட்டியர் ஆட்சியில் தஞ்சையில் ஸ்வாமி ராமதாசர் சிவாஜியின் கோரிக்கை பேரில் மடம் அமைத்தபின் பெரும் ஆன்மீக எழுச்சி ஏற்பட்டது

அதன் பின்பே ராகவேந்திர ஸ்வாமிகள் முதல் பலர் உருவாகி வந்தார்கள், அப்படி வந்தவர்தான் முத்துசாமி தீட்சிதர்

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர் என போற்றபடுபவரும், இசையில் பல பாடங்களையும் ராகங்களையும் இயற்றி அழியா புகழ் பெற்றவருமான அவருக்கு பெரும் ஞான வரலாறு உண்டு

அவர் 1775ல் திருவாரூரில் பிறந்தவர், பாடலும் ராகமும் அவருக்கு எளிதாக வந்தது, எக்காலமும் காசுக்கும் பொருளுக்கும் பாடமாட்டேன், இறைவன் தந்த சங்கீதத்தை கொண்டு பொருளீட்டமாட்டேன் என் சங்கீதம் இறைவனுக்கே என நின்றவர் அவர்

இத்தனைக்கும் குடும்பம் இருந்தது, அவரை அறிந்தோர் கொடுத்த தட்சனை ஒன்றாலே வாழ்ந்து வந்தார்

மிக பெரிய வறுமையில் சிக்கி நம்பமுடியாத ஆச்சரியங்களுடன் இறைசக்தியால் நடத்தபட்டவர் அவர், சரபோஜி மன்னனை பாடினால் பெரும் வாழ்வு கிட்டும் என மனைவி போராட, அந்த நிலையிலும் இறைவனை பாடிவிட்டு அவர் அப்படியே உறங்கிவிட மனைவியின் கனவில் வந்த தெய்வம் இவர் யாரென சொல்ல அத்தோடு அவரை வணங்க ஆரம்பித்தாள் மனைவி

எனினும் வறுமை அவரை வீழ்த்திவிடாதவாறு தேவைக்கேற்ற உதவிகள் தெய்வாதீனமாக வந்துகொண்டே இருந்தன‌

முருகனை ஞான குருவாக கொண்டு திருத்தணியில் அவர் வணங்கியபோது ஒரு முதியவர் வந்து அவர் வாயில் கல்கண்ட இட அப்பொழுது தொடங்கியது அவரின் மிகபெரிய சங்கீத பணி, கீர்த்தனைகளை அள்ளி அள்ளி இறைத்தார்

அதன் பின் காஞ்சி உள்ளிட்ட பல இடங்களில் பாடினார், ஏராளமான கீர்த்தனைகளை வகை வகையாக கொடுத்தார் இப்படி இசையாகவே வாழ்ந்த அந்த இசைமேதை காசிக்கு சென்றார், எல்லா ஞானியருக்கும்
எல்லா இந்துவுக்கும் காசிபயணம் ஒரு அங்கீகாரம் என்பதற்கு அவர் விலக்காகிவிட முடியாது

காசியில் சிதம்பர யோகி எனும் மகானுடன் அவர் சுமார் 5 ஆண்டுகாலம் தங்கியிருந்தார், அப்பொழுதுதான் அந்த அதிசயம் நடந்தது

காசியின் கங்கையில் அவர் குளித்து கரையேறிய நேரம் அன்னை சரஸ்வதியே தோன்றி ஒரு வீணை வழங்கினாள், அது மற்ற வீணைகளைவிட வித்தியாசமாய் இருந்தது, அந்த யாழ் பகுதி மேல் நோக்கி இருந்தது
அதை கொண்டுதான் அழியா ராகங்களை படைத்தார் முத்துசாமி தீட்சிதர்

பின் தேசத்தின் பல ஆலயங்களில் பாடினார், எங்கெல்லாம் மக்களுக்கு நோய் நொடி பஞ்சம் என வருமோ அங்கெல்லாம் சென்று அவர் பாடினால் மக்களின் இன்னல் தீர்ந்தது அப்படியே பல அழகான கீர்த்தனைகளும் கிடைத்தன‌

இப்படி பாடிவரும் பொழுதுதான் நெல்லை பகுதி எட்டயபுரத்துக்கு அவர் ஜமீனின் அழைப்பை ஏற்று வந்திருந்தார், மிக கடுமையான பஞ்சம் அப்போது நிலவியது

அமிர்தவர்ஷினி ராகம்பாடி மழையினை பெய்வித்து பஞ்சம் தீர்த்த அவர், அங்கே சமாதி அடைந்தார், கே , அவரின் ஆத்மா ஒரு ஒளியாக பிரிந்ததை கண்டவர் உண்டு

அந்த எட்டயபுரத்தில்தான் அவருக்கு எட்டப்ப மன்னரால் ஒரு சமாதியும் எழுப்பபட்டது

இப்படி காவேரி கரையில் பிறந்து கங்கைகரையில் அன்னையிடம் வீணை வாங்கி தாமிரபரணி கரையில் சமாதியானார் அந்த இசை மாமேதை

அந்த எட்டயபுரத்தில் இருந்துதான் பின்னாளில் மகாகவி பாரதி எழுந்தான்

1835ல் அவர் இறந்தபொழுது அவருக்கு வயது 59

பங்குனி கார்த்திகை நாள் அவதரித்தார் என்பது வரலாறு

அவர் இயற்றிய சங்கீத கீர்த்தனைகள் கடலை போன்றவை என்றாலும் அவை ஐந்து கிருதிகளாக பிரிக்கபட்டு சங்கீதத்தின் அடிதளமாக கருதபடுகின்றன‌

முருகபெருமானின் வரம்பெற்றவரும் மிகபெரும் அடியாராக விளங்கி அற்புதமான சங்கீதங்களை தந்த அந்த அவதார பக்தருக்கு இந்து சமூகம் அவர் கீர்த்தனைகளை பாடி அஞ்சலி செலுத்திகொண்டிருக்கின்றது

இது ஆன்மீக மண், முழுக்க முழுக்க இந்து அடியார்களும் ஆழ்வார்களும் சங்கீத வித்வான்களும் யோகிகளும் சித்தர்களும் உருவான மண் அதை முத்துசாமி தீட்சிதரின் வாழ்வும் அறுதியிட்டு சொல்கின்றது

Friday, October 11, 2024

இராமர் பார்த்தா இரத்த மழையை

ராமாயணம் 7000 ஆண்டுகளுக்கு முன் நடந்த உண்மைக் கதை.
கர தூஷண வடத்தின் தொடக்கத்தில் விழுந்த ஒரு விண்கல் அதன் காலத்தை உறுதிப்படுத்துகிறது.  வால்மீகி பதினெட்டு ஸ்லோகங்களில் ஒரு முழு சர்கத்தில் விவரிக்கிறார்.  விண்கல் விழுந்ததால், பல நைட்ரஜன் ஆக்சைடுகள் காற்றில் உருவாகின.  அவை சிவப்பு நிறத்தில் உள்ளன.  தண்ணீரில் கரைந்து தண்ணீரை இரத்த சிவப்பாக மாற்றுகிறது.
வால்மீகி அப்பகுதியில் இரத்த மழை பெய்ததாகக் கூறுகிறார், இது பலத்த சத்தத்துடன் விழுந்த விண்கல்லை விளக்குகிறது.  இராமனும் இரத்த மழையைப் பார்த்தான்.  பூமி அதிர்ந்தது.  புழுதி மேகம்

எழுந்தது.  சூரியன் தூசியால் மறைக்கப்பட்டது.
இந்த விளைவுகளை ஏற்படுத்திய விண்கல், ஜிஐஎஸ்பி2 என அறிவியல் பட்டியலில் குறிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது ஆச்சரியமாக உள்ளது.  நாம் கண்டுபிடித்த ஆண்டு இது கி.பி 5078 இல் பதிவு செய்யப்பட்டுள்ளது.  இந்த வரைபடம் ராமாயணம் நடந்தது மற்றும் அதன் காலம் உண்மை என்பதை நிரூபிக்கிறது.
விண்கல் விழுந்த இடம் பஞ்சவாடி அருகே உள்ள திராம்பகேஸ்வரர் கோயிலுக்கு அருகில் உள்ள வட்ட குளங்கள்.  அவை விண்கற்களால் ஏற்படும் பள்ளங்கள் என விண்கல் பள்ளங்களின் சர்வதேச பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.  இந்த விண்கல் விழுந்த ஆண்டு ராமாயணம் மற்றும் அதன் காலம் பற்றிய உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கு.
இணைப்பில்:
1. ராமாயண அட்டவணை
2. விண்கல் தாக்கத்தின் ஆண்டிற்கான GISP2 வரைபடம்
3. திரம்பகேஷ்வர் கோவிலுக்கு அருகில் விண்கல் பள்ளங்கள்.


முத்துசாமி தீட்சிதர்

மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...