Sunday, August 24, 2025

பக்திக்கு மட்டுமே கட்டுப்படுவான் கண்ணன் .

ஒரு ஐயர்  தினமும் வீதி வழியாக கிருஷ்ண பஜகோவிந்தம் 11வது பாவத்தை பாடியபடியே வீடு வீடாக சென்று அன்ன யாசகம் பெற்று உண்பவர் ,

ஒரு நாள் இப்படி வீதி வழியாக அவர் பாடி கொண்டு வரும்போது 10 வயது சிறுமி ஒருத்தி அந்த ஐயரை அழைத்தாள்,,,”சுவாமி என் வீட்டுக்கு வருகிறீர்களா உங்களுக்கு அன்னமிட காத்திருக்கிறேன்” என்றாள்,

ஐயர் அந்த சிறுமியை உற்று பார்த்தார் ,

அவள் கிழிந்த ஆடையை நேர்த்தியாய் பெயர்த்து அழகாக உடுத்தி இருந்தாள் ஏழ்மையிலும் பால் மனம் கொண்ட அழகான முகம் ,

ஐயர்–“யாரம்மா நீ என்னை குறிப்பாக உன் வீட்டிற்கு அழைத்து அன்னமிட காரணம் என்ன என்று சொல்லம்மா” என்று அன்புடன் கேட்டார் ,

சிறுமி –“சுவாமி நான் தினமும் உங்களது கிருஷ்ண பஜனை பாடல்களை ரசித்து கேட்பேன் ,,இப்படி அனுதினமும் கேட்டு கேட்டு எனக்கு தாங்கள் பாடிய முழு பாடலும் மனபாடம் ஆயிற்று ,,அதனால் உங்களை குருவாக நினைத்து என் இல்லத்திற்கு அழைக்கிறேன் வாருங்கள் சுவாமி” என்றாள் பணிவன்புடன்.

அவளது பேச்சில் இருக்கும் அன்புக்கு கட்டுப்பட்டு அந்த சிறுமியின் இல்லத்திற்கு சென்றார் ஐயர் ,,,,(சின்ன குடிசை ,,,மிகவும் சுத்தமாக வைத்திருந்தார்கள் ,

அந்த சிறுமியின் தாயும் தந்தையும் நெசவாளர்கள் அந்த நேரம் அவர்கள் சந்தைக்கு சென்றிருந்தார்கள் .

இந்த சிறுமியும் தனக்கு ஒரு சிறிய நெசவு இயந்திரத்தை வைத்திருந்தாள்),

ஐயர் சிறுமியின் இல்லத்திற்கு நுழைந்ததும் அவரது பாதங்களுக்கு நீர் வார்த்து கழுவி பூக்களால் பூஜை செய்து பின் தான் சாப்பிட வைத்திருந்த பழமும்,,பாலும் உண்ணக் கொடுத்தாள் அந்த சிறுமி ,

அவளது அன்பான விருந்தோம்பலில் ஆனந்தமாக உணவருந்திய ஐயர் ,

பின் அவளது நெசவு இயந்திரத்தின் அருகே சிக்கலான நூல்கள் அறுந்து ஆங்காங்கே கிடப்பதை பார்த்து ,,”அம்மா ,,,சுத்தமான இந்த வீட்டில் எதற்கு இந்த சிக்கலான நூல்களை எல்லாம் குப்பை போல் வைத்து உள்ளீர்கள்” என்று கேட்க

சிறுமி –“ஐயோ சாமி அது குப்பை இல்லை எல்லாம் கண்ணன் தன் பிஞ்சு கைகளால் அறுத்து அறுத்து எறிந்த நூல்கள்” .

ஐயர் திகைப்புடன் “என்னம்மா சொல்கிறாய் கண்ணன் அறுத்த நூல்களா”?

சிறுமி —“ஆமாம் சுவாமி நான் தினமும் நீங்கள் பாடிய கிருஷ்ண கீர்த்தனையை பாடி கொண்டே ராட்டினம் சுற்றுவேன் அப்பொழுது கண்ணன் சிறு குழந்தையாக இங்கு வருவான் நான் சொல்ல சொல்ல கேட்காமல் என் பாட்டை ரசித்த படியே இந்த நூலை அறுத்து அறுத்து எறிவான் பின் மறைந்து விடுவான்” ,

இதை கேட்டதும் ஐயர் திகைத்து ‘இத்தனை நாள் நான் பாடிய பாடலுக்கு வராத கண்ணன் ,,,,நான் பாடி கேட்டு மனபாடம் செய்த இந்த சிறுமி பாடியா வந்திருப்பான் ,,,,,சரி பார்த்து விடுவோம் ,அதையும் ‘

ஐயர் அந்த சிறுமியை பார்த்து “அம்மா இப்பொழுது நீ பாடி கொண்டே ராட்டினம் சுற்று கண்ணன் வருகிறான என்று பார்கிறேன்” என்றார் ,

சிறுமியும் பாடி கொண்டே ராட்டினம் சுற்றினாள்,,,,சிறிது நொடியில் ,,,,சந்தோசமாக கத்தினாள் “சுவாமி கண்ணன் வந்து விட்டான்” என்று

ஐயர் —-“எங்கே என் கண்ணுக்கு யாரும் தெரியவில்லையே” என்றார் ,

சிறுமி உடனே கண்ணனிடம் “கண்ணா என் குரு நாதருக்கு ஏன் நீ தெரியல” என்றாள் ,

கண்ணன் -“உன் குருநாதர் தன வயிற்று பிழைப்புக்காக மட்டுமே எனது கீர்த்தனைகளை பாடுகிறார் ,,,,அதில் ,,பக்தி,பாவம் ,,உள்ளன்பு ,,எதுவுமே கிடையாது ,,,,அதனால் அவர் கண்ணுக்கு தெரியவே மாட்டேன் “என்றான் கண்ணன் ,

கண்ணன் சொன்னதை அப்படியே சிறுமி தன் குருநாதரிடம் சொன்னாள்,

அதற்கு ஐயர் “நான் உன் குரு தானே எப்படியாவது எனக்கு கண்ணனை காண செய்யேன்” என்றார் ,கெஞ்சலாக சிறுமியிடம் ,

குரு சொன்னதை கேட்ட மாய கண்ணன் ,,,,,சிறுமியிடம் “தோழியே நீ பாடு உன் பாடலில் நான் ஆடிக்கொண்டே நூல்களை அறுத்து எறிவேன் ,,நூல்கள் அறுவது மட்டும் அவர் கண்களுக்கு தெரியும் படி செய்கிறேன் அதை பார்த்து அவரை மகிழ சொல். இதுவும் நீ அன்பாக கேட்டதால் தான் செய்கிறேன் ,,ம்ம் நீ பாடு” என்றான் கண்ணன் ,

சிறுமியும் கண்ணன் சொன்னதை குருவிடம் சொன்னாள்.

அவரும் “சரி நீ பாடம்மா இந்த பாவி அதையாவது பார்த்து புண்ணியம் தேடி கொள்கிறேன்” என்றார் ,

சிறுமி பாட ஆரம்பித்தவுடன், நூல்கள் தானாக அறுந்து விழுவதை பார்த்தார் ஐயர் ,,,,அப்படியே பரவசமாகி தான் செய்த தவறுக்கு கண்ணனிடம் மன்னிப்பு கேட்டு விட்டு சிறுமியை வாழ்த்தி ,வீதியில் இறங்கி பாடி கொண்டே சென்றார்

இப்பொழுது அவரது கைகள் யாசகம் கேட்கவில்லை

பக்திக்கு மட்டுமே கட்டுப்படுவான் கண்ணன் .

"ஸ்ரீ கிருஷ்ணா உன் திருவடிகளே சரணம்

ஸர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்பநம்


தீதும் நன்றும் பிறர் தர வாரா


ஒரு ஈயிடம் அதன் தாய் இறக்கும் முன் அறிவுரை கூறியது. "மகனே, எப்போதுமே பளபளப்பான ஒட்டிக் கொள்ளக் கூடிய காகிதங்களில் இருந்து விலகியே இரு. உன் தந்தை அதில் சிக்கி தான் இறந்து போனார்." அந்த ஈயும் தாயின் அறிவுரை கேட்டு பளபளப்பான ஒட்டிக் கொள்ளும் காகிதங்களில் இருந்து சில காலம் விலகியே இருந்தது.

ஆனால் பல இளைய ஈக்கள் அந்த ஒட்டும் காகிதங்கள் அருகில் அனாயாசமாக பறந்து செல்வதைக் கண்ட போது அதற்கு ஆச்சரியமாக இருந்தது. சில ஈக்கள் வேகமாகச் சென்று உட்கார்ந்ததுடன் பிரச்சினை ஏதும் இல்லாமல் திரும்ப வந்த போது அந்த ஈயிற்கு தாயின் பயம் அனாவசியமாகத் தோன்றியது.

அந்த பளபளத்த காகிதங்களின் அருகில் சென்ற போது ஈக்களின் பிரதிபலிப்பு பார்த்த போது அது பார்வைக்கு மிகவும் ரம்மியமாக இருந்தது. 

அந்த ஈ தனக்குள் ஒரு இனம் புரியாத துணிச்சலை வரவழைத்துக் கொண்டு மெல்ல மெல்ல அந்தக் காகிதத்தின் அருகே சென்று சென்று பார்த்தது, அங்கு அந்த ஈ க்கு எந்தவித பிரச்சினையும் தெரியவில்லை அறிவதற்கு அதுக்கு எதுவுமில்லை. 

சிறிது நேரத்தில் அதற்கு தைரியம் கூடி வர மின்னல் வேகத்தில் சென்று அந்தக் காகிதத்தில் அமர்ந்து பார்த்து பார்த்து நொடியில் மின்னல் வேகத்திலேயே கிளம்பியது. பிரச்சினை இல்லை.

அந்தக் காகிதத்தில் அப்படியே ஈக்கள் உட்கார்ந்து அனாயாசமாக போவதைப் பார்த்த அந்த ஈயிற்கு தன் அனுபவமும் சேர்த்து யோசிக்கையில் இதில் எந்தப் பிரச்சினையும் இருப்பதாகத் தோன்றவில்லை. 

பகட்டும் பளபளப்பும் நிறைந்த அந்தக் காகிதத்தில் அமர்ந்து விளையாடுவது ஜாலியாக இருந்தது. போய் சற்று அதிக நேரம் தங்கி வர ஆரம்பித்தது. 

சிறிது நேரத்தில் மிக களைப்படைந்து விட்ட அந்த ஈ அப்படியே உறங்கி விட்டது. அது விழித்த பிறகு பறக்க நினைத்த போது ஒரு இறகு அந்த பளபளப்பு காகிதத்தில் நன்றாகவே ஒட்டிப் போயிருந்தது. அதனால் பறக்க முடியவில்லை. அந்தக் காகிதத்தில் இருந்து அந்த ஈ தப்பிக்க முடிந்தாலும் கூட அந்த ஒட்டி போன இறகை இழந்தேயாக வேண்டும். அது இறகை இழந்ததா, இல்லை வாழ்க்கையையே இழந்ததா என்று நாம் ஆராயப் போவதில்லை. 

நாம் ஆராயப் போவதெல்லாம் அந்த
ஈக்கு அந்தக் காகிதத்தின் மீது சென்று அமரும் அவசியம் இருந்ததா என்பதை மட்டும் தான். 

அந்த அவசியம் இருக்கவில்லை என்பது தான் உண்மை. அது ஆபத்தானது, அது தந்தையின் உயிரையே குடித்தது என்பதையும் அது முன்பே அறிந்து இருந்தது. 

ஆனால் அந்த பளபளப்பு, ஓரிரு முறை சென்று வர சென்று வர அதற்கு ஒன்றும் ஆகவில்லை என்கிற தைரியம், மற்றவர்களும் செய்கிறார்கள் என்ற சமாதானம், ஜாலியாக இருக்கிறது என்கிற எண்ணம் எல்லாமாக சேர்ந்து அதன் அறிவை மழுங்கடித்து விட்டது, ஆபத்தில் சிக்க வைத்திருக்கிறது.

உலகில் அந்த பளபளப்பான ஒட்டிக் கொள்ளும் காகிதத்தைப் போன்ற தீய விஷயங்கள் பல இருக்கின்றன. சூதாட்டம், போதைப் பழக்கம், தகாத உறவு வைத்துக் கொள்ளல் போன்ற எத்தனையோ வலைகள் வலைத்தளங்கள் இருக்கின்றன. ஆரம்பத்தில் அது போன்றவையால் பெரிய தீங்கு ஏற்படாத நிலைமை கூட இருக்கலாம். ஆனால் அதை வைத்து ஆபத்தைக் குறைத்து மதிப்பிட்டு விடாதீர்கள். 

அதில் தங்க ஆரம்பிக்கும் போது உங்களை உடும்புப்பிடியுடன் அந்த வலை உங்களை இழுத்துப் பிடித்துக் கொள்ளும். பெரும் சேதத்தையோ, நாசத்தையோ ஏற்படுத்தாமல் அந்த விஷ வலை உங்களை தப்பிக்க விடாது.

வாழ்க்கையில் பல விஷயங்கள் இல்லாமல் நாம் சந்தோஷமாக வாழ முடியும். ஆனால் நாம் அப்படி நினைக்கத் தவறுவது தான் பல வருத்தங்களுக்கு மூல காரணமாக உள்ளது. 

அந்த ஈயின் இயல்பான வாழ்க்கைக்கு எப்படி அந்த பளபளப்புக் காகிதம் எந்த விதத்திலும் தேவையாக இருக்க வில்லையோ, அப்படியே நாம் மகிழ்ச்சியாக நிறைவான வாழ்க்கை வாழ முன்பு குறிப்பிட்டது போன்ற தீய வலைகள் தேவையில்லை. 

இப்படி ஏதாவது ஒரு வலை உங்கள் வாழ்க்கையில் கவர்ச்சியை ஏற்படுத்துமானால் இந்த ஈ கதையை நினைவுபடுத்திக் கொண்டு புத்திசாலித்தனமாக விலகிச் செல்லுங்கள்.

"தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப்படும்" என்கிறது திருக்குறள். 

தீ தான் சார்ந்திருக்கும் பொருளை எல்லாம் சாம்பலாக்கும் வல்லமை படைத்தது. அந்தத் தீயை விட ஆபத்தான தீயவைகள் இருக்கின்றன என்றும் எச்சரிக்கையுடன் இருக்கும்படி சொல்கிறது திருக்குறள்.

Saturday, August 23, 2025

பிரம்மகுப்தர்

கணிதத்தில் பூஜ்ஜியத்தின் கண்டுபிடிப்பாளர்

இந்தியாவிலிருந்து
7 ஆம் நூற்றாண்டின் இந்திய கணிதவியலாளரும் வானியலாளருமான பிரம்மகுப்தர், இயற்கணிதத்தின் வளர்ச்சியில் ஒரு அடித்தள நபராகக் கருதப்படுகிறார். பூஜ்ஜியத்தை ஒரு எண்ணாக அறிமுகப்படுத்துதல் மற்றும் அதன் பயன்பாட்டிற்கான விதிகளை நிறுவுதல், அத்துடன் நேரியல் மற்றும் இருபடி சமன்பாடுகளைத் தீர்ப்பதற்கான முறைகளை உருவாக்குதல் உள்ளிட்ட துறையில் அவர் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்தார். அவரது பணி இயற்கணிதம் மற்றும் முக்கோணவியலில் பிற்கால முன்னேற்றங்களுக்கு அடித்தளமிட்டது.

அவரது பங்களிப்புகளைப் பற்றிய விரிவான பார்வை இங்கே:
பூஜ்ஜியம் மற்றும் எதிர்மறை எண்கள்:
பிரம்மகுப்தர் பூஜ்ஜியத்துடன் தனது பணிக்காகப் புகழ் பெற்றவர், அதை எண்கணித செயல்பாடுகளுக்கான அதன் சொந்த விதிகளைக் கொண்ட ஒரு எண்ணாகக் கருதுகிறார். சமன்பாடுகளைத் தீர்ப்பதற்கும் கடன்கள் மற்றும் சொத்துக்கள் போன்ற அளவுகளைக் குறிப்பதற்கும் முக்கியமான எதிர்மறை எண்களுடன் பணிபுரிவதற்கான விதிகளையும் அவர் நிறுவினார்.

இயற்கணித சமன்பாடுகள்:
பிரம்மகுப்தர் இருபடி சமன்பாடுகளைத் தீர்ப்பதற்கான சூத்திரங்களை உருவாக்கினார் மற்றும் பெல்லின் சமன்பாடு போன்ற நிச்சயமற்ற சமன்பாடுகளைப் படித்தார், இயற்கணிதக் கொள்கைகளைப் பற்றிய வலுவான புரிதலை நிரூபித்தார்.
வடிவியல் பயன்பாடுகள்:
அவரது பணி வடிவியல் வரை நீட்டிக்கப்பட்டது, அங்கு அவர் ஒரு சுழற்சி நாற்கரத்தின் பரப்பளவிற்கான சூத்திரங்களை உருவாக்கினார் (பிரம்மகுப்தாவின் சூத்திரம்). வடிவியல் சிக்கல்கள் மற்றும் வானியல் கணக்கீடுகளைத் தீர்க்க இயற்கணித முறைகளையும் அவர் பயன்படுத்தினார்.

செல்வாக்கு:
பிரம்மகுப்தாவின் படைப்பு, குறிப்பாக அவரது "பிரம்மஸ்புதசித்தாந்தம்" என்ற புத்தகம் அரபு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு இஸ்லாமிய உலகில் கணிதத்தின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது, இறுதியில் ஐரோப்பிய கணிதத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

அல்-குவாரிஸ்மி போன்ற பிற கணிதவியலாளர்களும் இயற்கணிதத்தில் தங்கள் பங்களிப்புகளுக்காகக் கொண்டாடப்பட்டாலும், பூஜ்ஜியம், எதிர்மறை எண்கள் மற்றும் சமன்பாடு தீர்வு குறித்த பிரம்மகுப்தாவின் ஆரம்பகாலப் பணிகள் அவரை இந்தப் பாடத்தின் வரலாற்றில் ஒரு முக்கிய நபராக ஆக்குகின்றன.

சுவாமி ரங்கநாதானந்தர்

சங்கரன் என்று பெயரிடப்பட்ட இந்த சுவாமி, 1908 ஆம் ஆண்டு புனித அன்னை சாரதா தேவியின் ஜெயந்தியின் புனிதமான சந்தர்ப்பத்தில் கேரளாவின் திருக்கூரில...