பிள்ளை பெற்றுக்கொள்ள விரும்பும் ஒரு ஜோடியில்
எவருக்கேனும் மோசமான மரபணுக் கோளாறு இருந்து, அவர்களுக்கு பிறக்கக்கூடிய
பிள்ளைக்கு உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய உடல்நலப் பிரச்சினை ஏற்படும்
என்றிருந்தால், மூன்றாவதாக ஒரு நபரிடம் இருந்து கொஞ்சம் மரபணுவை கடன்
வாங்கிக் கொண்டு செயற்கை முறையில் கருவை உருவாக்கும் நவீன சிகிச்சை முறை
தார்மீக அடிப்படையில் சரியானதுதான் என புதிய ஆய்வறிக்கை ஒன்று
தெரிவித்துள்ளது.
மூன்று பேர் சம்பந்தப்பட்ட ஐ.வி.எஃப். என்று
சொல்லப்படும் இவ்வாறான சிகிச்சை மூலம் பிறக்கும் பிள்ளைகள், மூன்று
நபர்களிடம் இருந்து மரபணுக்களை கொண்டு உருப்பெற்றிருக்கும்.இந்த சிகிச்சை முறை மூலம் சில துன்பகரமான மற்றும் வாழ்க்கைக்கு பாதகமான உடல்நலக் கோளாறுகளில் இருந்து குழந்தைக்கு விடுதலை கிடைக்கும் என ஐக்கிய ராஜ்ஜியத்தில் உயிரியல் ஆராய்ச்சிகளின் தார்மீக நெறிமுறைகளுக்கான ஆய்வு மையமான நஃப்பீல்ட் கவுன்சில் கூறுகிறது.
உயிரணுக்களுக்கு சக்தி தரும் மையங்களாக அமைந்திருக்ப்பவை மைட்டோகாண்ட்ரியா என்பன.
பிள்ளை பெற்றுக்கொள்ள விரும்பும் ஒருவருக்கு இது பழுதுடையதாக இருக்கும் பட்சத்தில், பிறக்கக்கூடிய பிள்ளைக்கு அந்தக் கோளாறுடைய மைட்டோகோண்ட்ரியாவை மாற்றி அமைப்பதாக இந்த புதிய உத்தி அமைந்துள்ளது.
மைட்டோகாண்ட்ரியா என்பது அதற்கென்ற பிரத்யேகமான டி.என்.ஏ. மரபணுக் கூறுகளைக் கொண்டுள்ளது. சிலவேளையில் இது திரிபு அடைந்து பழுதாகிவிடுகிறது.
ஐக்கிய ராஜ்ஜியத்தில் மட்டுமே மைட்டோகாண்ட்ரியா பழுதுடன் ஒவ்வொரு ஆண்டும் 6,500 குழந்தைகள் பிறப்பதாக கணக்கிடப்படுகிறது.
இந்த பழுதோடு பிறக்கும் குழந்தைகளுக்கு தசைகள் மிகவும் பலவீனமடைவது, கண்பார்வை இல்லாமல்போவது, இருதயக் கோளாறு ஏற்படுவது போன்ற பிரச்சினைகள் உருவாகின்றன.
ஒரு தம்பதியரில் மைட்டோகோண்ட்ரியா மரபணுக் கோளாறுடைய கொண்டவர் இருந்தால், அத்தம்பதியர் இருவரிடம் இருந்தும் நியூக்ளியர் டி.என்.ஏ.வை மட்டும் பிரித்தெடுத்து, ஆரோக்கியமான மைட்டோகோண்ட்ரியா கொண்ட மூன்றாவது பெண்ணொருவரின் கருமுட்டையில் அவற்றை செலுத்தி பிள்ளையின் கருவை உருவாக்குவதாக இந்த சிகிச்சை அமைந்துள்ளது.
இம்முறையில் கருவுருவாக்கப்படும் குழந்தையின் மரபணுவில் ஆயிரத்தில் ஒரு பங்கு மூன்றாவது நபரிடம் இருந்து பெற்றதாக இருக்கும்.
No comments:
Post a Comment