Friday, April 18, 2014

திருமணத்தடை உள்ளவர்கள் வழிபட வேண்டிய தலங்கள்


தென்னாங்கூர்:- திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசிக்கு அருகில் உள்ள தென்னாங்கூர் ஸ்ரீ பாண்டுரங்கன் ருக்மணி கோயிலில் உள்ள ஸ்தல மரமான தமால மரத்தை மனச் சுத்தியுடன் பிரார்த்தனை செய்து கொண்டு 12 முறை வலம் வந்து வணங்கினால் தடைகள் நீங்கி திருமணம் நடக்கும்.

திருவக்கரை:- பாண்டிச்சேரி- மயிலம் பாதையில் உள்ள திருவக்கரை சந்திரசேகரேஸ்வரர் ஆலயத்தில் உள்ள வக்ர காளியின் க
ருவறையின் உள் சுற்றில் இருக்கின்ற கருங்கல் சுவருக்கு மஞ்சள் பூசி பூஜை செய்தால் விரைவில் திருமணம் நடக்கும்.

திருஆதனூர்:- தஞ்சை மாவட்டம் சுவாமி மலைக்கு அருகில் உள்ள திரு ஆதனூர். திவ்ய தேசத்தில் உறையும் ஆண்டவன் அபயப் பெருமாளுக்கும், பார்க்கவி தாயாருக்கும் திருக்கல்யாண உற்சவம் நடத்தி வழிபடுவர்களுக்கு தடைகள் நீங்கி திருமணம் நல்ல முறையில் நடைபெறும்.

கூத்தனூர்:- கும்பகோணம்-காரைக்கால் சாலையில் உள்ள ஸ்ரீலட்சுமி நாராயணன் ஆலயத்தில் உள்ள பிரம்மச்சாரியான அனுமனுக்கு திருமணத்தடை உள்ள ஆண்கள் வெறும் வெற்றிலை மாலை சாத்தாமல் வெற்றிலைக்குள் சீவலை வைத்து கட்டிய மாலையை அணிவித்து பூஜை செய்தால் திருமணத்தடை நீங்குவது உறுதி.

ஸ்ரீவாஞ்சியம்:- நன்னிலம்-குடவாசல் பேருந்து சாலையில் உள்ள வாஞ்சி நாதேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நாகதீர்த்தத்தில் நாக தோஷத்தால் நீண்ட நாட்கள் திருமணம் ஆகாதவர்கள் நீராடி, நாகநாதசுவாமியையும், நாகராஜரையும் பிராத்தனை செய்து வேண்டிக் கொண்டால் விரைவில் திருமணம் நடக்கும்.

சென்னை தம்பு செட்டி தெரு:- இங்குள்ள காளிகாம்பாள் கோயில் உள்ள சிறப்பு தெய்வமான நாகேந்தரருக்கு மஞ்சள் கயிறு சுற்றி வேண்டினால் விரைவில் திருமணம் நடந்தேறும்.

ரிஷிவந்தியம்:- விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியத்திலுள்ள அர்த்த நாரீசுவரர் ஆலயத்தில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று திருமணமாகாத ஆண், பெண் இரு பாலருக்கும் திருமணத்தோஷப் பரிகாரம், சிறப்பு அர்ச்சனைகள், வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. இதனால் இவர்களுக்கு விரைவில் திருமணம் அமைகின்றன.

சிங்கப்பெருமாள் கோயில்:- செங்கல்பட்டிலிருந்து 10 கீ.மி. தொலைவில் உள்ள சிங்கப்பெருமாள் கோயிலில் உறையும் ஸ்ரீ பாடலாத்திரி நரசிங்க சுவாமியை வலம்(கிரிவலம்) வந்து வணங்கி, இறைவனின் மூன்றாவது கண்ணை ( திருநேந்திரத்தை) தரிசனம் செய்தால், திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.

No comments:

Post a Comment

முத்துசாமி தீட்சிதர்

மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...