கிருஷ்ணாவதாரதின்போது துவாரகையில் ருக்மணி ஒரு நாள் கிருஷ்ணனிடம் தனது ஆசை ஒன்று உள்ளதாகவும், அதை நிறைவேற்றி த்தரவேண்டும் என்று கேட்டுகொண்ட்டர்கள்.
ஒரு நாள் கிருஷ்ணன் விவரமாக அந்த ஆசை என்ன என்று கேட்டபோது, ருக்மணி கீழ்கண்டவாறு சொன்னார்கள்.
நாதா, நீங்கள் சிறு பிராயத்தில் கோகுலத்திலும்,பிருந்தாவனத்திலும்,மதுராவிலும்,பல லீலைகள் செய்தீர்கள் அல்லவா.
அப்போது உங்களுக்கு வயது பத்துக்குள்தான். ஆகவே, நான் அப்போது இல்லாததால், அந்த சிறு பிராயத்தில் நீங்கள் இருந்ததுபோல் எனக்கு காட்சி தரவேண்டும். என்றாள்.
உடன் கிருஷ்ணன் மூன்று வயது சிறுவன் போல் உள்ள தோற்றத்தை காண்பிக்க,தேவ சிற்பிகள் அதை அப்படியே வடிவமைத்துக் கொடுத்தார்கள்.
ருக்மணிக்கு ஏக சந்தோஷமாயிற்று. ருக்மணி அந்த விக்ரஹத்திற்கு தினமும் ஒரு நாள் கூட விடாமல் பூஜை செய்து வந்தார்கள்.
பிற்காலத்தில் துவாரகை கடலுக்கு அடியில் போய்விட்டது அல்லவா.அந்த விக்ரஹமும் அப்போது இல்லை.
இது ஒரு புறம் இருக்க, இப்போது, மத்வாசார்யாரை பற்றி கொஞ்சம் பாப்போம்.
மத்வர் தினமும் தனது அனுஷ்டானத்தை முடித்துக்கொண்டு எப்போதும் கிருஷ்ண ச்மரனத்திலேயே இருப்பார்.
அப்படி இருக்கையில் ஒரு நாள் கடலில் சீற்றம் அதிகம் காரணமாக , அங்கு வந்த கப்பல் நிலை தடுமாரிப்போனது.
கப்பலில் உள்ள மாலுமி என்னன்னவோ செய்து பார்த்தும் எதுவும் இயலவில்லை .
அப்போது, கரையில் நின்று ஜபம் செய்துகொண்டிருந்த மத்வரை பார்த்து குரல் கொடுக்க, பிறகு அந்த மாலுமி மத்வரை வேண்டிக்கொண்டார்.
சுவாமி மகான் போல் தெரிகிறது.நீங்கள்தான் எங்களை காப்பாற்றவேண்டும் என்றார்.
நமது ஆசாரியருக்கு தெரியாதா என்ன. அவரும் ஒப்புக்கொண்டு,தனக்கு உண்டான பாணியில், கிருஷ்ணனை வேண்டி ,புயலை ஓயச்செய்தார்.
இப்போது மாலுமிக்கு மிகவும் சந்தோசம் ஏற்பட்டு ,குரு காணிக்கை கொடுக்க சித்தம்பூண்டு ,மத்வரை அணுகினான். ஆச்சர்யார் என்ன நம்மைப்போல் ஆசைபடுபவரா என்ன
.திட்டவட்டமாக மறுத்துவிட்டார். மீண்டும் ஏதாவது பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதின் கட்டாயத்தால், மத்வர் அப்போது ஒன்று கேட்டார்.
உங்கள் கப்பலில் சரக்குகளுடன் வந்துள்ள,(packing materials), இது பிறகு தூக்கி எறியப்படும் ஒரு பொருள் ஆகும். அந்த கோபி சந்தன கட்டி என்கிற பொருள்.
அதை கொடுக்கும்படி கேட்டார். மாலுமிக்கோ வியப்பு. ஒன்றுக்கும் உதவாத இதை கேட்கிறாரே என்று. வியப்பில் ஆழ்ந்தவர், மத்வர் கேட்ட அந்த பொருளையே கொடுத்தார்.
மத்வாச்சாரியார், அதை சந்தோஷமாக பெற்றுக்கொண்டு, மாலுமியை ஆசிர்வதித்து, பிறகு அதை துப்புரவு வேலை செய்து, அதாவது அதை துடைத்து என்று அர்த்தம்.
இப்போது அப்படி அதை தேய்த்து அது கரைய கரைய, கடைசியில் ஒரு கிருஷ்ண விக்ரகம் வந்தது.
உடன் சுவாமி அதை தழுவிக்கொண்டு, சந்தோசம் அடைந்து, அதற்க்கு நித்திய ஆராதனைசெய்ய முன்வந்தார்கள்.
மத்வர் வாழ்ந்த இடம் இன்றைய உடுப்பி ஆகும். அந்த விக்ரஹம்தான் இன்று நாம் தரிசிக்கும், இல்லை இல்லை, துவாரகையிலே, ருக்மணி பூஜித்தாலே, அந்த கிருஷ்ணனை நாம் இன்று தரிசிக்க காரணம் இந்த மத்வரே ஆகும்.
மத்வர் காலம் கி.பி.13ம் நூற்றாண்டு. கிருஷ்ணாவதாரா காலத்தில் துவாரகையில் மூழ்கிய கிருஷ்ண விக்ரகம் ,எவ்வளவு காலம் கழித்து, மத்வர் கைக்கு கிடைத்து,அதை நாம் இன்று தரிசிக்கிரோமே என்னே நம் பாக்கியம் நண்பர்களே.
இந்த கிருஷ்ணரை கப்பலில் இருந்து கொண்டுவந்தார் அல்லவா. அப்போதே பல க்ரந்தங்கள் செய்துகொண்டே வந்தார். அந்த க்ராந்தம்தான்
,இப்போது, கோயிலில் தீபாராதனை காண்பிக்கும்போது சொல்லுகிற, அதே நேரத்தில் நம் வீட்டில் சொல்லுகிற,சொல்லவேண்டிய,சக்தி வாய்ந்த ஒரு கிரந்தம்தான்.
த்வாதசநாம ஸ்தோத்திரம்.....
என்ன இனி உங்கள் வீட்டிலும் இந்த மந்திரம் ஒலிக்கும்தானே அன்பர்களே
ஸர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து
No comments:
Post a Comment