Sunday, June 18, 2023

Dr.குப்புசாமி

நெல்லை மாவட்டம் பத்தமடையில் அந்தண குலத்தில் குப்புசாமி  1887ல் பிறந்தார்.  வறுமையுற்ற குடும்பம் என்றாலும் அவர் படிப்பில் கெட்டிக்காரர், அதனால் அந்நாளைய மருத்துவபடிப்பினை தஞ்சாவூரில் படித்தார்.
அவரின் தந்தையின் மரணம் அவரை வறுமையில் தள்ளி 1915 களில் மலேய நாட்டுக்கு தள்ளிற்று.

அது மலேயாவின் ரப்பர் தோட்டம் ஆதிக்கம் செலுத்திய காலம், அந்நாட்டில் பெரும் தொழிலாளர்களை குவித்த வெள்ளையன் அவர்களுக்காக மருத்துவர்களையும் குவித்திருந்தான், ஓயா மழை கொட்டும் ரப்பர் எஸ்டேட்டுகளில் ,காடுகள் நிறைந்த அத்தேசத்தில் நோய் இயல்பானது பல விஷயங்களுக்கு தரமான மருத்துவர்கள் தேவையாய் இருந்த காலமது.

அப்பொழுதுதுதான் குப்புசாமி அங்கு பணியாற்றினார், மலேய தோட்ட தொழிலாளர்களில் இந்தியாவில் பொருளாராதார ரீதியாக ஒடுக்கபட்ட மக்கள் அதிகம்.

குப்புசாமி மலேயாவின் மிக சிறந்த மருத்துவராக மின்னினார் அவர், பெரும் பட்டமும் பதக்கமும் அவரை தேடி வந்தது, மிகபெரிய மருத்துவ கலாநிதியாக .

மலேயாவில் எஸ்டேட் கூலிதொழியான பெண்ணின் பிரசவத்தில் உதவி மிக கடினபட்டு தாயினையும் சேயினையும் இருநாட்கள் போராடி காத்தார் அந்த குப்புசாமி.

உயிர் பிழைத்த குடும்பம் அவர் காலில் விழுந்து நன்றி சொல்லிற்று, அந்த நன்றியில் தெய்வத்தை உணர்ந்தார் குப்புசாமி.

மலேய நாட்டில் ஒரு ஏழை குடும்பத்துக்கே இவ்வளவு உதவி தேவைபட்டால் இந்தியாவில் எவ்வளவு பெரும் உதவி தேவையாயிருக்கும் என எண்ணினார், விளைவு சேவையில் இறைவனை காணலாம் என்ற மனம் அவருக்கு வந்தது.

இன்னும் அவரின் சிந்தனை நீண்டது, மருத்துவம் நோயினை மட்டும் தீர்க்கின்றது ஆனால் மனம் சம்பந்தமான சிக்கலை, வாழ்வியலின் பல தீர்வுகளை அதனால் சொல்லமுடிவதில்லை.

ஆன்ம பலமே உண்மையான மருத்துவம் என்பதை அந்நொடியில் தெரிந்து கொண்டார்.

அவரின் மனம் ஆன்ம பலம் ,யோகா, தியானம் என இறைநிலையை நோக்கிய பயணத்தைத் துவக்கியது.

தன் டாக்டர் தொழிலை உதறினார், கோட்டும் ஸ்டெஸ்கோப்பும் அகன்றது காவியும் ருத்திராட்சமும் கழுத்தில் ஏறியது, ஆயினும் மனம் நிலையின்றி தவித்தது.

தன் மனதை அடக்க ரிஷிகேஷம் சென்றார் குப்புசாமி அல்லது விதி இழுத்து சென்றது,பல நாள் பட்டினி கிடந்தார், வீதியில் உறங்கினார், பிச்சைகார கோலத்தில் ஞானம் தேடினார்.

அந்த தேடலில் மகான் விஸ்வானந்த சரஸ்வதியினை சந்தித்தார், அவர் இவரை எதிர்பார்த்து இருந்தவர் போல அழைத்து தீட்சை கொடுத்து ஞானத்தை ஞானமே அடையாளம் கண்டுகொள்ளும் என்பது போல அந்த விஸ்வானந்தர் இவருக்கு சிவானந்தர் எனும் பட்டமும் கொடுத்து மன்னனிடம் சொல்லி ஒரு காணிநிலமும் கொடுத்து ஆசிரமம் அமைத்தார்

அப்படித்தான் சிவானந்தாவின் ஆஸ்ரமம் தொடங்கியது, மெல்ல மெல்ல அவரின் ஆன்மீக மருத்துவ சேவை உள்ளிட்டவை தொடர்ந்தன‌

ஒரு கட்டத்தில் 100 பணியாளர்கள் கொண்ட மருத்துவ ஆஸ்ரமம் எழுந்தது, அதில் தொழுநோயாளி முதல் எல்லா நோயாளிகளும் பராமரிக்கபட்டனர்.

ஆம் சிவானந்த சுவாமிகளே இந்தியாவில் ஏழை தொழுநோயாளிகளை மருத்துவரீதியாக அரவணைத்த மகான், தெரசா இவருக்கு பின்னால் வந்தவர்.

இந்தியாவின் சொந்த மக்களுக்கான தொழுநோய் மருத்துவமனையினை தொடங்கியது   இந்த இந்து சன்யாசிதான்.‌

ஒருநாள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட பெண்ணோருத்தி சாமியின் சீடர்களால் காப்பாற்றபட்டு அவரிடம் கொண்டுவரபட்டார்கள், அவள் தொலைதூரத்தில் இருந்து வந்தவள், அவள் சாக துணிந்த காரணம் மணமாகாமல் கர்ப்பம் தரித்தது.

சுவாமி அவளை திட்டவில்லை, கர்ப்பம் கலைக்க சொல்லவில்லை, அவளை பெற்றோரிடமும் அனுப்பவில்லை, அனுப்பினால் என்னாகும் என்பது சுவாமிக்கு புரிந்தது.

அவள் அங்கேயே தங்க வைக்கபட்டாள் குழந்தை பிறந்ததும் குழந்தை இல்லா தம்பதியிடம் அக்குழந்தையினை ஒப்படைத்துவிட்டு அப்பெண்ணின் வழியில் அவளை போக சொன்னார்.

சுவாமியின் காலில் விழுந்து இரு பெண்களும் அழுதனர், சுவாமி நிதானமாக சொன்னார்.

"ஒரு உயிரை காத்து இன்னொரு உயிரிடம் ஒப்படைக்க‌ இறைவன் என்னை பயன்படுத்தினான் அவ்வளவுதான்".

சிவானந்த சாமியின் புகழும் அவரின் ஞானமும் அது கொடுத்த போதனையும் ஏராளம், ஏகபட்ட புத்தகங்களை எழுதினார், உலகெல்லாம் அவர் மடம் கிளைகளும் திறந்தது.

இன்று சுமார் 300 கிளைகளுடன் மிகபெரிய தொண்டு நிறுவணமாக அது வளர்ந்தும் நிற்கின்றது

அந்த இளைஞன் 1962ல் ரிஷிகேஷில் விரக்தி நிலையில் இருந்தான், ஒல்லியான உருவமும் குள்ள வடிவமும் கொண்ட அவன் கண்களில் நீர்வழிய சுவாமி முன் நின்றிருந்தான்.

அவனையே உற்று நோக்கினார் சுவாமி, அந்த இளைஞன் கண்ணீர் விட்டு சொன்னான், "சுவாமி நான் ஏழை மீணவ வீட்டு மகன், நன்றாக படித்து பைலட்டாக வேண்டுமென கனவு கண்டேன், படித்தும் முடித்தேன்.

ஆனால் பைலட் தேர்வில் என்னை நிராகரித்துவிட்டார்கள், நான் அதற்கு தகுதி இல்லையாம், இனி நான் என்னாவேன் என எனக்கே தெரியவில்லை" என மனமுடைந்து நின்றான்.

புன்னகைத்த சுவாமி சொன்னார் "நீ படைக்கப்பட்டது விமான ஓட்டியாவதற்கு அல்ல. வேறு எதற்காகவோ நீ படைக்கப்பட்டிருக்கிறாய். அதை நோக்கிச் செல். காரணங்களின்றி இங்கு எதுவும் நடக்காது".

அவரிடம் ஆசீர்வாதம் வாங்கிய அந்த இளைஞன் பின் தீவிரமாக உழைத்து ஏவுகனை விஞ்ஞானியாகி பாரதத்தின் குடியரசு தலைவனுமானான்

அவர்தான் அப்துல் கலாம்.

சிவானந்தர் இந்தியாவின் மிகபெரும் யோகி, அதுவும் விஞ்ஞான கல்வி கற்றுவிட்டு அதெல்லாம் பணம் சம்பாதிக்கும் விஷயம் மட்டுமே, வாழ்க்கைக்கு உண்மையன தேவை ஆத்ம தெளிவு, ஆன்ம பலம் கொடுக்கும் ஆன்மீகம் என உணர்ந்து நின்றவர்.

சுருக்கமாக சொன்னால் தன்னை அறிந்தவர்.

எத்தனையோ லட்சம் மக்கள் அவரால் கல்வி, மருத்துவம், ஆன்மீக தெளிவு என பலன் பெற்றனர், இன்னும் பெற்று கொண்டே இருக்கின்றனர்.

ஒவ்வொருவர் வாழ்வும் அதன் நோக்கில் நல்லபடியாக செல்ல, அவர்கள் பிறந்த கடமையினை சரியாக செய்ய இடையூறுகளை நீக்கி வழிகாட்டினார் சுவாமி, இன்றும் அவரின் ஆஸ்ரமம் அதை தொடர்ந்து செய்கின்றது
அந்த நெல்லை பிறப்பு பாரதி போல தனித்துவம் மிக்கது, தொழுநோயாளிகளை தொட்டு அரவணைத்த உன்னத கரங்கள் அவருடையது.

ஆனால் தெரசாவுக்கு இருந்த விளம்பரமும் உலகளாவிய கொண்டாட்டமும் பாரத ரத்னா போன்ற விருதுகளும் ஏன் சுவாமி சிவானந்தாவுக்கு இல்லை.

அதுதான் நெல்லை பிறப்பான அந்த உத்தம சத்திய ஞானவானை ஏன் மறைத்தது?

ஆம் நெல்லையில் பாரதி தவிர ஏகபட்ட பிம்பங்கள் உண்டு, பொதுநல பித்தர்கள் உண்டு. தன் ஆஸ்தி கொடுத்து பாலம் கட்டிய சுலோச்சன முதலியார் முதல் பெரும் மருத்துவ வாழ்வினை உதறி தள்ளி தொழுநோய் ஆசிரமம் அமைத்த ஞானி சிவானந்தர் வரை பலர் உண்டு.

ஆனால் தமிழரில் யாருக்காவது இவர்களை தெரியும்?

அல்பேனியாவில் இருந்து வந்த தெரசாவினை தெரிந்த அளவு, மானிட நேயத்தில் உண்மையான பாரத மரபில் இங்கு தொழுநோயாளிகளை அரவணைத்த சுவாமி சிவானந்தா பற்றி யாருக்கும் தெரியாது.

இன்று அந்த மகான் சிவானந்தருக்கு பிறந்த நாள், அவரை வணங்கி ஆசிபெறலாம்.

இம்மாதிரி மகான்களை என்று தேசம் கொண்டாட தொடங்குமோ அப்பொழுதுதான் இத்தேசம் இன்னும் வேகமாக தன்  பொற்காலத்தை எட்டும்

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...