Sunday, March 23, 2025

பகத்சிங்

பிரிட்டிசாருக்கு எதிரான கடைசிகட்ட சுதந்திரபோரில் ஜாலியன் வாலாபாக் சம்பவம் கொடுமையானது, அங்கிருந்து எத்தனையோ தேசாபிமானிகள் போராட கிளம்பினார்கள்
அந்த 1919ம் ஆண்டு நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த பின்னால் 12 வயது சிறுவனாக, இரத்தம் சிந்தியமண்ணை எடுத்து தனது ஆடையில் முடிந்துகொண்டு போராட புறப்பட்ட ஒரு இளைஞன் அவன்

அமைதியான முறையில் போராடிகொண்டிருந்த பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதிராயின் படுகொலை அவனை போராளியாக்கி கொலைகுற்றவாளி ஆக்கிற்று.

லாலா லஜபதிராயினை அடித்து கொன்றவன் அதிகாரி சாண்டர்ஸ், அந்த சாண்டர்ஸ் பின் சுட்டு கொல்லபட்டான்

மிருகனதனமான அதிகாரி என்றும் இந்தியரை தன் பூட்ஸ்காலால் நசுக்கி அடக்கலாம் என சொன்னவனுமான அவனை காவல் நிலைய வாசலிலே சுட்டுபோட்டது தேசம்

சான்டர்ஸையும் அவன் மேலதிகாரி ஸ்காட் என்பவனையும் சேர்த்து வைத்த குறியில் ஸ்காட் தப்பினாலும் சான்டர்ஸ் சிக்கினான்

அந்த கொலையில் பகத்சிங் தேடபடும் குற்றவாளி என அறிவிக்கவும்பட்டவன் பகத்சிங்

சாண்டர்ஸின் கொலையில் தேடபடும்பொழுதே ஆட்சியாளர் மன்றத்தில் ஒரு சட்டத்தை கண்டித்து குண்டுவீசி, அதன் நியாத்தை அமைதியாக வெளிகாட்டிய போராளி.

அந்த சட்டம் சைமன் கமிஷன் கொடுத்த ஆலோசனை சட்டம், இந்தியர் இல்லா குழுவால் இந்தியருக்கு உரிமைகள் சில என சொல்லபட்ட சட்டம், இந்தியரிடம் ஏதும் கேட்காமலே தருவது உரிமை அல்ல பிச்சை என கோரினான் பகத்சிங்

டெல்லி பாராளுமன்றத்தில் அவன் குண்டு வீசியது உலக கவனமும் லண்டன் கவனமும் பெறுவதற்காகவே, அதை சரியாக செய்தான் அந்த தேசாபிமானி

அக்குண்டுவீச்சில் யாரும் கொல்லபடவில்லை எனினும், இவரால் ஏற்பட்ட எழுச்சியினை கண்டு பயந்த அரசாங்கம் அவரை கொல்ல இது பெரும் வாய்ப்பாக கருதிற்ற, தூக்கு தண்டனை விதித்தது.

அந்த பகத்சிங்கின் உறுதி ஆச்சரியமானது, அவ்வழக்கில் சம்பவம் நடந்த அன்று பகத்சிங் ஊரில் இல்லை, அதை நீதிமன்றத்தில் நிரூபித்து மகனை மீட்க அவரின் தந்தை படாதபாடுபட்டார்

ஆம், சாண்டர்ஸ் கொலையில் அவன் நேரடியாக இல்லை, அப்படியே பார்லிமென்ட் குண்டுவீச்சிலும் யாருக்கும் காயமில்லை அவ்வகையில் பகத்சிங் குறைந்தபட்ச தண்டனையோடு வெளிவந்திருக்கலாம்

ஆனால் பகத்சிங் உறுதியாக சொன்னான், "இந்த வழக்கு இல்லையென்றாலும் இன்னொரு வழக்கு நிச்சயம் எதிர்காலத்தில் பாயும், என் வழி இத்தேசத்தின் விடுதலைக்கு அப்படியானது, அதனால் நான் அதை எதிர்கொள்வதே சரி, என் வழியில் என்னை விட்டுவிடுங்கள்.."

பகத்சிங் ஏன் வரலாற்றில் நிற்கின்றான் என்றால் இதற்காகத்தான்.

ஆசிரமம்,சத்தியாகிரகம்,ஆண்மீக சோதனை இன்னும் என்னவெல்லாமோ செய்துகொண்டிருந்த காந்தி, பகத்சிங்கினை காப்பாற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

வன்முறைக்கு நான் எதிரி என சொல்லிவிட்டு "ரகுபதிராகவ ராஜாராம்" என பாட சென்றுவிட்டார் காந்தி,

அப்படியானால் லாலா லஜபதிராய் தானே தலையில் அடித்து செத்துவிட்டாரா என கேட்டால் அமைதியாக ஆட்டுப்பால் குடித்துகொண்டிருந்தார்.

வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது என சொன்னார் காந்தி, பகத்சிங்கினை அவர் ஆதரிக்கவில்லை.
அதே நேரம் பகத்சிங்கிற்கும் நாட்டுக்காக சாவதில் தயக்கமேதுமில்லை.

24 வயதில் சர்ச்சைக்குள்ளான முறையில் தூக்கிலபட்டதாக அறிவிக்கபட்ட பகத்சிங்கின் மரணம் மிகுந்த சர்ச்சைக்குள்ளானது, அதில் மறைக்கபட்ட பல விஷயங்கள் உண்டு.

ஆம் தூக்கு என நாம் சொன்னாலும், சாண்டர்ஸின் குடும்பமே சிறையில் வந்து அவனை அடித்து கொன்றது என்ற இன்னொரு சர்ச்சை உண்டு

அவனின் மரணம் லாகூர் முதல் கன்னியாகுமரி வரை பெரும் எழுச்சியினை கொடுத்தது, அவனுக்காக கைகுழந்தையோடு இந்திய மகளிர் தெருவுக்கு வந்து அஞ்சலி செலுத்தியது அன்று பிரிட்டனை அலற செய்தது

பெரும் எழுச்சியினை இங்கு கொடுத்துவிட்டுத்தான் மறைந்தான் பகத்சிங், அது மறுக்கமுடியாத வரலாறு

குறுகிய காலம் வாழ்ந்தாலும் மாபெரும் எழுச்சியினை அவரின் மரணம் தோற்றுவித்து அடுத்த 15 ஆண்டுகளில் விடுதலை கொடுக்கும் அளவிற்கு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மாற்றம் கொண்டுவந்தது.

ஒரு வகையில் பகத்சிங் அதிர்ஷ்டசாலி, அவன் விரும்பிய சுதந்திரத்தினை காணாவிட்டாலும், அவனால் தாங்கமுடியாத இந்திய பிரிவினையும்,அதுவும் சொந்த பஞ்சாப் 3 துண்டாக உடைக்கபட்ட கொடுமையும் காண அவன் இல்லை.

பகத்சிங்கை தூக்கிலிடும் முடிவுக்கு லார்டு இர்வின் என்பவனிடம் கையெழுத்து ஒப்புதல் வழங்கியவர் காந்தி, லஜபதிராய் அடித்து கொல்லபட்டபோது பிரிட்டிசாரை பெரிதும் கண்டிக்காதவரும், குறைந்தபட்சம் வருத்தம் க்ட தெரிவிக்க சொல்லாதவருமான அதே காந்தி

லஜபதிராயின் சாவுக்கு நீதிகேட்காத காந்தி பகத்சிங்கின் தூக்குக்கு வேகமாக சம்மதித்தார், ஏன் என்றால் அத்தான் காந்தி அவரின் கொள்கை அப்படியானது

பகத்சிங்குக்கு தேசம் அஞ்சலி செலுத்தும் நேரம், அவனோடு மரித்த இருவருக்கும் அஞ்சலி செலுத்தும் நேரம், காந்தி கொடுத்த வலியும் எட்டிபார்க்கின்றது

No comments:

Post a Comment

பகத்சிங்

பிரிட்டிசாருக்கு எதிரான கடைசிகட்ட சுதந்திரபோரில் ஜாலியன் வாலாபாக் சம்பவம் கொடுமையானது, அங்கிருந்து எத்தனையோ தேசாபிமானிகள் போராட கிளம்பினார்க...