Saturday, January 5, 2013

சளியை விரட்டும் கருந்துளசி…!



‘சனி பிரச்னையிலிருந்து கூட தப்பிச்சுடலாம்… இந்த சளி பிரச்னை வந்தால்தான் தாங்க முடியாது…’ என்று சிலர்  கூறக் கேட்டிருப்பீர்கள். கேட்க இது வேடிக்கையாக இருந்தாலும், அன்றாட வாழ்வில் ‘டர்…புர்’னு மூக்கை சிந்தியவாறு வாடிக்கையாக நாம் பார்க்கும் மனிதர்கள் ஏராளம். இந்த சளித்தொல்லையை நீக்கும் அரிய மருந்துச்செடியாக கருந்துளசியை குறிப்பிடலாம்.
நம் உடலில் ஏற்படக்கூடிய எந்த நோயையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ‘சிறுதுளி பெருவெள்ளம் போல’ சிறுசளி பெரிய பிரச்னையை உருவாக்கி விடும். நோய் எதிர்ப்பு சக்தி நம்மிடம் சீராக இருந்தால், எந்த நோயையும் ஈசியாக விரட்டி விடலாம். குறைவாக இருக்கும் பட்சத்தில் சளி போன்ற உபாதைகள் அடிக்கடி ஏற்படுகிறது. இது மெல்ல மெல்ல விஸ்வரூபம் எடுத்து நமது மூச்சுப்பாதையை பாதித்து நச்சாகி விடுகிறது.
நுரையீரல் பகுதியில் வறட்சி ஏற்படாமல் இருப்பதற்காக நம் உடலில் இயற்கையாகவே உருவாக்கப்பட்டதுதான் சளி. இது  பல்கி பெருகும்போது, அதிகளவு சளியை வெளியேற்றி, மீண்டும் இதனால் ஒவ்வாமை ஏற்படாமல் பாதுகாப்பதற்காக மருந்துகளை நாம் உட்கொண்டு வருகிறோம்.  அன்றாட உணவு பழக்க வழக்கங்களில் சில மாறுதல்களை செய்தால், இந்த பிரச்னையை ஓரளவு சரி செய்யலாம். மஞ்சள், மிளகு, சிற்றரத்தை, பூண்டு, மல்லி, சின்ன வெங்காயம் போன்றவைகள் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகின்றன.
கருந்துளசியை சளித் தொல்லைக்கு ஒரு சிறந்த மருந்துச் செடியாக குறிப்பிடலாம். ‘ஆசிமம் டெனியபுளோரம் டைப்பிகா’ என்ற தாவரவியல் பெயர் கொண்ட இந்த செடிகளின், இலைகள் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகின்றன.  சிறிது கருந்துளசி இலைகளை எடுத்து பசும்பாலில் போட்டு காய்ச்சி குடிக்க வேண்டும். இது பாலின் ஒவ்வாமையால் ஏற்படுகின்ற சளியை நீக்குகிறது. நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து ஆவி பிடித்தால், சைனஸ் தொல்லையால் ஏற்பட்ட சளி நீங்கும்.
அடிக்கடி சளி பிடிக்காமல் இருக்க 5 அல்லது 10 கருந்துளசி இலைகளை ஒரு லிட்டர் நீரில் ஊற வைத்து, அந்த நீரை அருந்தி பின்னர் இலைகளை மென்று சாப்பிட வேண்டும். தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் 3, 4 இலைகளை சாப்பிட்டு வந்தால் கிருமித் தொற்றினால் ஏற்படும் சளித்தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.
அந்த காலத்தில் வீட்டில்  துளசி செடிக்கென்று ஒரு இடத்தை ஒதுக்கி வளர்ப்பார்கள். இப்போ, ‘அந்த இடத்திலேயும் ஒரு பிளாட் கட்ட முடியுமா… பாருப்பா’ என்று கேட்கும் காலம் வந்து விட்டது. பின்னே ஏன் நோய் அதிகரிக்காது?

தினமும்உணவில் நெய் சேர்ப்பது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது



நோயில்லாதவர்கள் தினமும் உணவில் சுத்தமான நெய் சேர்த்தால், உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.  அதிகமாக நெய் சாப்பிட்டால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பொதுவாக சொல்வார்கள். ஆனால், நோயில்லாதவர்கள் தினமும் உணவில் சுத்தமான நெய் சேர்த்தால், உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இருதய நோய் பாதிப்பு உள்ளவர்களும், உடல் பருமனாக உள்ளவர்களும் நெய் சேர்ப்பது நல்லதல்ல. கொழுப்பை அதிகரித்து அவர்களுக்கு தீங்கு விளைவிக்கும். அவர்கள் நெய்யை உணவில் சேர்க்காமல் ஒதுக்கி விட வேண்டும். அதே சமயம், நோய் பாதிப்பு எதுவும் இல்லாதவர்கள் என்றால்,
அவர்கள் எந்த பயமும் இல்லாமல் தினமும் சுத்தமான நெய்யை உணவில் சேர்த்து கொள்ளலாம்.
தினமும் உணவில் நெய் சேர்ப்பதால் ஏற்படும் பலன்கள் குறித்து அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்று ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டது. அதன் விவரம் வருமாறு:
1. தினமும் நெய் சேர்ப்பது உடல் நலம் மற்றும் மன நலனுக்கு உகந்தது. இதனால், உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.
2. உடலில் உள்ள கெட்டச் சத்துக்களை வெளியேற்றவும், கண் பார்வையை அதிகரிக்கவும், தசைகளை வலுப்படுத்தவும் நெய் உதவுகிறது.
3 .வெண்ணெய்யை விட உருக்கப்பட்ட சுத்தமான நெய்யில் கொழுப்பு குறைவாக உள்ளதால், வேகமாக செரிக்கும்.
4. நெய்யை பிரிட்ஜில் வைக்க வேண்டியதில்லை. அதை கைபடாமல் வெளியில் வைத்திருந்தாலே நீண்ட காலத்துக்கு கெடாது. அதனால், நெய்யில்
மாற்றம் ஏற்படாது.
5. நெய் சாப்பிடுவது மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கும். செரிமானத்தை ஊக்குவிப்பதால் நாம் எடுத்து கொள்ளும் உணவில் எடை குறையாமல்
சமநிலையில் வைக்க உதவும்.
6. விட்டமின் ஏ, டி, இ, கே ஆகியவை நெய்யில் உள்ளதால் உடலில் ரத்தத்ததை சுத்தப்படுத்தி ரத்த சுழற்சியை மேம்படுத்தும்.   
7 .உடல் செயல்பாட்டுக்கு சில கொழுப்பு சத்துகள் தேவை. அதை நெய் சாப்பிடுவதால் பெறலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விஷ்ணு விசேஷச் செய்திகள்

image

* திருப்பதி ஏழுமலைக்கு மேல் உள்ள நாராயணகிரியில் ஏழு மலையானின் பாதச்சுவடுகள் பதிந்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஸ்ரீவாரி பாதம் எனப்படும் அந்த இடத்தில் திருமலைவாசனின் பாதச்சுவடுகளே வழிபடப்படுகின்றன.
* திபருமலையில் உள்ள பெருமாளுக்கு மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தன்று வில்வ இலையால் அர்ச்சனை செய்யப்படுகிறது.
* நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் போகிற வழியில் உள்ள திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் அல்லாவுக்கு பூஜை நடக்கிறது.
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் உள்ள பெருமாளின் உற்சவத் திருமேனியில் மார்பில் சிவலிங்க அடையாளம் உள்ளது.
* உடுப்பி கிருஷ்ணருக்கு நவராத்திரி ஒன்பது நாட்களும் புடவை உடுத்துகிறார்கள்.
* ஆந்திராவில் பத்ராசலத்தில் ராமர் சங்கு, சக்கரத்துடன் காட்சியளிக்கிறார்.
* திருநெல்வேலிக்கு அருகில் உள்ள நாங்குநேரியில் பெருமாளுக்கு தினமும் மூன்று லிட்டர் எண்ணெய் சாத்தப்படுகிறது. பின்பு இது பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
* சிவனைப்போல் முக்கண் உடைய பெருமாளைக் காண, சிங்கபெருமாள் கோயில் செல்ல வேண்டும். இங்குள்ள மூலவர் நரசிம்மமூர்த்திக்கு மூன்று கண்கள் உள்ளன.
* திருக்கண்ணபுரத்தில் கண்ணபுரத்தான் பத்மாசனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, பத்மினி, ஆண்டாள் என நான்கு தேவியருடன் சங்கு சக்கரம் தாங்கிக் காட்சியளிக்கிறார்.
* ஆசியாவிலேயே மிகப்பெரிய பள்ளிகொண்ட பெருமாள் உள்ள தலம் திருமயம். ஒரே மலையைக் குடைந்தமைத்த சிவன்-திருமால் கோயில் இதுமட்டும்தான்.
* திருச்சி முசிறி சாலையில் உள்ள வேதநாராயணன் கோயிலில் பெருமாள் அனைத்து வேதங்களையும் தலையணையாக வைத்துப் படுத்திருக்கிறார். இதனால் அவரும் வேதநாராயணன் என்று பெயர்.
* காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயிலில் உள்ள அத்திவரதர், அனந்தசரஸ் என்ற திருக்குளத்தில் நீருக்கு அடியில் நிரந்தரமாக எழுந்தருளியுள்ளார். 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே வந்து மக்களுக்கு காட்சி தரும் இவரது தரிசனம் 2019ம் ஆண்டு கிடைக்கும்.
* திருக்கோவிலூரில் உள்ள மூலவர் இலுப்பை மரத்தால் ஆனவர். இவரது பெயர் திருவிக்ரசுவாமி.
* கர்நாடகத்தில் உள்ள ஸ்ரீரங்கபட்டினத்தில் உள்ள ரங்கநாதர் எழுந்தருளியுள்ள ஆதிசேஷனுக்கு ஏழு தலைகள் இருப்பது வித்தியாசமானது.
* திருமலை, தான்தோன்றிமலை, உப்பிலியப்பன்கோயில், குணசீலம் ஆகிய நான்கு பெருமாள் கோயில்களிலும் தாயாக்கு சன்னதி இல்லை.
* பொதுவாக பெருமாள் ஆதிசேஷன் மேல் சயனித்தபடி இருப்பார். ஆனால் ஸ்ரீவைகுண்டத்தில் நத்தத்தில் ஆதிசேஷன் குடைபிடிக்க, பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.
* காஞ்சிபுரத்தில் உள்ள விளக்கொளிப் பெருமாள் கோயிலில் பெருமாள் ஜோதி வடிவில் இருப்பதாக ஐதிகம். இங்கு பெரிய கார்த்திகை அன்று பெருமாளுக்கு விளக்கேற்றி வழிபடுகிறார்கள்.
* கருங்குளத்தில் பெருமாளை மூன்று அடி உயரமுள்ள சந்தனக்கட்டை வடிவில் வைத்து அபிஷேக ஆராதனை செய்து பூஜித்து வருகிறார்கள். இதற்கு இரண்டு பக்கமும் சங்கு, சக்கரம் இருக்கிறது.
* மாமல்லபுரம் ஸ்தலசயனப் பெருமாள் கோயிலில் பெருமாள் ஒரு கரத்தை தலைக்கு வைத்துக் கொண்டு தரையில் சாய்வாகக் கால் நீட்டி சயனம் கொண்டிருக்கிறார். சங்கு, சக்கரம் இல்லை.
* காஞ்சி உலகளந்தபெருமாள் திருக்கோயிலில் திருமழிசையாழ்வாராலும், திருமங்கை மன்னராலும் மங்களாசாசனம் செய்யப்பட்ட நான்கு திவ்ய தேசங்கள் உள்ளன. பேரகம், நீரகம், காரகம், கார்வானம் ஆகியவையே அவை.

சிவனின் சிறப்பு செய்திகள்

image

* பிருங்கி முனிவர் வண்டு வடிவெடுத்து சிவ பெருமானை வழிபட்டதால் சிவ லிங்கத்தில் வண்டு துளைத்த அடையாளம் ஏற்பட்டது. இந்த அரிய வடிவினை நாம் திருநல்லூரில் காணலாம். இங்கு இறைவன் பஞ்சவர்ணேஸ்வரர் என்ற திரு நாமத்துடன் அருள்பாலிக்கிறார்.
* நீடூரில் ஒரு நண்டு சிவபெருமானை வணங்கியதால் சிவலிங்கத்தின் உச்சியில் நண்டு வளை உள்ளது. இங்கு சுவாமியின் பெயர் அருட்சோமநாதர்.
* ரத்தினம் வேண்டிய ஒரு அரசனை இறைவன் சோதித்தபோது அவனுடைய வாளால் வெட்டப்பட்ட லிங்கத் திருமேனியை ரத்தினகிரியில் காணலாம். இங்கு சிவபெருமான் ரத்தினகிரீஸ்வரர் என்ற பெயருடன் காட்சி தருகிறார்.
* தலைச்சங்காட்டில் திருமால், சிவபெருமானை வழிபட்டு, பாஞ்சஜன்ய சங்கைப் பெற்றதால் அங்கு சங்கு வடிவில் மூலவராகக் காட்சியளிக்கிறார் ஈசன். இறைவனுடைய பெயர் சங்காரண்யேஸ்வரர்.
* கேரள மாநிலம் திருச்சூரில் வடக்குநாதர் சுவாமி கோயிலில் சிவன் நெய் மலையாக காட்சி தருகிறார். ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த லிங்கம் இது.
* அமர்நாத்தில் உள்ள பனிலிங்கம் சந்திரனைப்போலவே 15 நாளில் வளர்ந்து பௌர்ணமியில் முழு லிங்கமாகவும் அடுத்த 15 நாளில் தேய்ந்து அமாவாசையில் மறைவதும் சிறப்பம்சம்.
* கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் சிவலிங்கம் வடதுபுறம் சாய்ந்திருப்பதைக் காணலாம்.
* அர்ஜுனனின் அம்புபட்ட லிங்கத்தை திருவிஜயமங்கையில் தரிசிக்கலாம். இங்கு இறைவன் விஜயநாதேஸ்வரர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.
* செம்பனார்கோயிலில் உள்ள சிவபெருமான் சொர்ணபுரீஸ்வரர் என்ற பெயருடன் 32 இதழ்களை உடைய தாமரை வடிவ ஆவுடையாரில் சுயம்பு லிங்கமாக எழுந்தருளியிருக்கிறார்.
* காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் ஆலயத்தில் சிவன் எட்டுக்கைகளுடன் சிற்பமாகக் காட்சியளிக்கிறார்.
* மகாராஷ்டிரா மாநில் எல்லோரோ குகைகளுக்கு அடுத்து உள்ள “குஸ்மேசம்’ என்னும் ஊரில் உள்ள சிவலிங்கம் குங்குமத்தால் ஆனது.
* பொதுவாக பெருமாள் கோயிலில்தான் சடாரி வைப்பார்கள். ஆனால் மூன்று சிவன் கோயில்களில் மட்டும் சடாரி வைக்கப்படுகிறது. அவை காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயில், காளஹஸ்தி கோயில், மற்றும் சுருட்டப்பள்ளி சிவன் கோயில் ஆகும்.
* திருவக்கரை வக்கிரகாளியம்மன் கோயிலில் உள்ள சிவபெருமானது பெயர் சந்திரமௌலீஸ்வரர். அவர் மும்முகலிங்கமாக தரிசனம் அளிக்கிறார். அதில் கிழக்கு முகம் தத்புருஷ லிங்கம் என்றும், வடக்கு முகம் வாமதேவ முகமாகவும், தெற்கு முகம் அகோர மூர்த்தியாகவும் வணங்கப்படுகின்றனர்.
* ஆலகால நஞ்சை உண்ட சிவபெருமான் அம்பிகையின் மடியில் சயனித்திருக்கும் அரிய காட்சியை காசியில் உள்ள “அனுமன் காட்’டில் காமகோடீஸ்வரர் கோயிலில் காணலாம். ஆந்திர மாநிலம் சுருட்டப்பள்ளியிலும் பள்ளிகொண்டீஸ்வரர் தரிசனம் கிடைக்கிறது.
* பெங்களூருக்கு அருகே சிவகெங்கா என்ற இடத்தில் சிவலிங்கத்தின் மேல் நெய்யை வைத்தால் வெண்ணெயாக மாறுகிறது. இந்த வெண்ணெயை வீட்டுக்குக் கொண்டு வரலாம். எத்தனை நாள் ஆனாலும் வெண்ணெய் உருகுவதில்லை.
* தாராசுரத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் கோயிலில் உள்ள ராஜகம்பீர மண்டபத்தில் மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர் இருக்கிறார்.
* ஐந்துமுகம் கொண்ட சிவபெருமான் ஏழு தலங்களில் அருள்புரிகிறார். 1. காசி, 2. நேபாளம், 3. காளஹஸ்தி, 4. திருவானைக்காவல், 5. சித்தேஸ்வர் மகாதேவ், 6. ராசிபுரம், 7. காஞ்சி கைலாசநாதர் கோயில்.
* தஞ்சை மாவட்டம் குடவாசல் அருகே உள்ளது நாலூர் திருமயானம். இங்கு உள்ள சுயம்பு லிங்கத்தின் மேற்பகுதி பலாபழம் போன்று முள்ளுமுள்ளாக உள்ளது. சுவாமியின் பெயர் பிலாச வனேஸ்வரர்.
* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு தெற்கே சிறிது தூரத்தில் “ஜ்வரஹரேஸ்வரர்’ என்ற பெயருடன் ஈசன் எழுந்தருளியுள்ளார். வேலூர் கோட்டை கோயிலிலும் மூன்று கால்களுடன் ஜ்வரஹரேஸ்வரர் காட்சியளிக்கிறார்.
* மயிலாடுதுறை அருகே திருவிற்குடியில் உற்சவமூர்த்தியான சிவபெருமான் திபருக்கரத்தில் சக்கரம் ஏந்தி நிற்கும் காட்சியைக் காணலாம். வலது மேல் கரத்தில், மழுவும், இடது மேல் கரத்தில் மானும் வைத்திருக்கின்றார். இங்கு சிவனுக்கு துளசியால் அர்ச்சனை செய்கின்றனர்.

மங்குஸ்தான் பழம்



பொதுவாக பழங்கள் எல்லாம் விட்டமின்கள் நிறைந்தவை . எண்கள் உடம்புக்கும் நல்லது. சாப்பாட்டுக்கு பின் ஒரு பழம் சாப்பிடுங்கோ என்கிறார்கள் பெரியோர். பழங்களில் இதுவும் ஒரு ருசியான பழம் தான் மங்குஸ்தான் பழம். இது மாதுளம் பழத்தைப் போன்ற தோற்றத்தில் இருக்கும்.
இந்தப்பழத்தின் தோல் பகுதி தடிப்பாக  இருக்கும். இப்பழத்தின் தோல் பகுதியை உடைத்தால் மூன்று அல்லது நான்கு சுளைகள் இருக்கும். சுளைகள் இளஞ்சிவப்பு, வெள்ளை நிறத்தில் இருக்கும். இந்த பழத்திலும் பல நன்மைகள் உண்டு. பல நோய்களுக்கு நிவாரணியாக இருக்கிறது .
உடல் சூட்டைத் தணித்து தேகத்தை சமநிலையில் வைத்திருக்கும், வயிற்றுவலியைக் குணப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு. வயிற்றில் புண் இருந்தால் வாயில் புண் ஏற்படும். இதனால் வாய் துர்நாற்றம் வீசும், மேலும் உண்ணும் உணவுப் பொருட்கள் பல் இடுக்குகளில் தங்கி விடுகின்றன.
இதனால் உண்டாகும் கிருமிகளால் வாய் துர்நாற்றம் வீச ஆரம்பிக்கும். மங்குஸ்தான் பழத்தை நன்கு சுவைத்து சாப்பிட்டு, அல்லது அதன் தோலை காயவைத்து பொடி செய்து தேன்கலந்து சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும். கணனியில்  வேலை செய்யும் இளைய தலைமுறையினருக்கு பொதுவாக கண்கள் வறட்சி அடைந்து கண் எரிச்சலை உண்டாக்கும்.
இதனால் சிலர் தலைவலி, கழுத்து வலி என அவதிக்குள்ளாவார்கள். இவர்கள் மங்குஸ்தான் பழம் சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் நீங்கி, கண் நரம்புகள் புத்துணர்வு பெறும். அதிகப்படியான உடல் கொழுப்பைக் குறைத்து மாரடைப்பு, பக்கவாதம், நீரிழிவு  நோய்களைத் தவிர்க்க மங்குஸ்தான் பழச்சாறு குடிக்கலாம் என்று அமெரிக்க ஆய்வில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
சிறுநீர் நன்கு வெளியேறினால் தான் உடலில் தங்கியுள்ள தேவையற்ற அசுத்த நீர் வெளியேறும். சிறுநீர் நன்கு வெளியேற மங்குஸ்தான் பழம் சிறந்த மருந்தாகும். இருமலை தடுக்கும், சூதக வலியை குணமாக்கும்,  தலைவலியை போக்கும், நாவறட்சியை தணிக்கும்.

கொய்யா


image
பழங்களிலேயே விலை குறைவானதும், அனைவராலும் எளிதில் வாங்கி உண்ணக் கூடியதுமான கொய்யாப் பழத்தில் முக்கிய உயிர் சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன.கொய்யாமரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கனி மட்டுமல்லாது, இலை, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்டுள்ளது.
* வைட்டமின் . பி மற்றும் வைட்டமின் . சி ஆகிய உயிர்ச்சத்துக்கள் கொய்யாப்பழத்தில் அடங்கியுள்ளன. கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாது உப்புக்களும் இதில் காணப்படுகின்றன.
* கொய்யாமரத்தின் இலைகள் திசுக்களை சுருக்கும் மற்றும் குருதிப்போக்கினைத் தடுக்கும் திறன் உடையவை, மலச்சிக்கல் போக்கும். கசாயம் வாந்தியினை தடுக்கும். ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டால் இலையை காய்ச்சி கொப்பளிக்கலாம்.
* கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல் தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன. கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.
* கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயம் புண் இவற்றின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும் கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கும் உதவுகின்றன.
* கொய்யாமரத்தின் பட்டை பாக்டீரியா அழுகலை தடுக்கும். காய்ச்சலைப் போக்கும். வேர்பட்டை குழந்தைகளின் வயிற்றுப்போக்கினை குணப்படுத்தும். கொய்யாப்பழத்தை அறிந்து சாப்பிடுவதை விட பழத்தை நன்றாக கழுவிய பிறகு பற்களில் நன்றாக மென்று தின்பதே நல்லது. இதனால் பற்களும், ஈறுகளும் பலப்படும்.
* வேறு எந்தப் பழத்திலும் இல்லாத வைட்டமின் சி என்ற உயிர்ச்சத்து இப்பழத்தில் அதிக அளவில் காணப்படுகிறது. அதனால் வளரும் குழந்தைகளுக்கு கொய்யாப்பழம் ஒரு வரப்பிரசாதமாகும். உடல் நன்கு வளரவும், எலும்புகள் பலம் பெறவும் கொய்யாப்பழம் உதவும்.
* கொய்யாவின் தோலில் தான் அதிகசத்துக்கள் உள்ளன. இதனால் தோலை நீக்கி சாப்பிடக்கூடாது. முகத்திற்கு பொலிவையும், அழகையும் தருகிறது. தோல் வறட்சியை நீக்குகிறது. முதுமை தோற்றத்தை குறைத்து இளமையானவராக மாற்றுகிறது.
* மது போதைக்கு அடிமையான மது பிரியர்கள் அப்பழக்கத்தில் இருந்து விடுபட நினைத்தால் இப்பழத்தை அதிகம் சாப்பிடலாம். இதை தொடர்ந்து சாப்பிட்டால் மது அருந்தும் ஆசை, வெறி எல்லாம் தூள் தூளாகி விடும். மிக எளிதில் மது போதை பழக்கத்தில் இருந்து விடுதலை பெறலாம்.
* கொய்யா மரத்தின் சில பகுதிகளுடன் வேறு சில பொருட்களும் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு கஷாயத்தை அருந்தினால் பிரசவத்திற்கு பின்பு வெளியாகும் கழிவுகளை வெளியேற்ற மிகவும் உதவுவதாக சித்த மருத்துவத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* சாப்பிடுவதற்கு முன் இப்பழத்தை சாப்பிடுவது நல்லதல்ல. சாப்பிட்ட பின்போ, அல்லது சாப்பிடுவதற்கு நீண்ட நேரத்திற்கு முன்போ, சாப்பிட நல்லது.
* நோயால் அவதியுற்று மருந்து சாப்பிட்டு வருபவர்கள் இப்பழத்தை சாப்பிட்டால் மருந்து முறிவு ஏற்படும். இருமல் இருக்கும் போது இப்பழத்தை சாப்பிட்டால் அதிகமாகும். தோல் தொடர்பான வியாதி உள்ளவர்கள் இப்பழத்தை உண்டால் நோய் அதிகரிக்கும்.
* கொய்யாப்பழத்திற்கு மருந்தை முறிக்கும் ஆற்றல் உண்டு. ஒரு சிலருக்கு மயக்கத்தை ஏற்படுத்தும். வாதநோய், ஆஸ்துமா போன்ற நோய் உள்ளவர்கள் இப்பழத்தை சாப்பிடக்கூடாது.
* கொய்யாப்பழத்தை இரவில் சாப்பிடக்கூடாது. சாப்பிட்டால் வயிறு வலி உண்டாகும். கொய்யாவை அளவுடன் சாப்பிடவேண்டும். அளவிற்கதிகமாக சாப்பிட்டால் பித்தம் அதிகரித்து வாந்தி மயக்கம் ஏற்படும்.

ரம்புட்டான் பழம்

ரம்புட்டான் பழம் சத்து பட்டியல்
பழத்தின் விதையைச் சூழ உட்கொள்ளக் கூடிய சாறு நிறைந்த சதைப்பகுதி காணப்படுவதால் அது மக்களிடையே விரும்பப்படும் பயிராக மாறியுள்ளது. ரம்புட்டான் பழம் மஞ்சள் , சிகப்பு என இரண்டு வகைகளில் உண்டு . முள்கள் போன்று இருக்கும் .
உள்ளே தோலை உரித்தால் அதற்குள் சதை பற்றுடன் விதையுடன் இருக்கும் அந்த சதையை சாப்பிட வேண்டும். விதையை எறிய வேண்டும் .இந்த பழங்களில் அதிக மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளது. தற்போது பழங்களை அதிகம் சாப்பிடாமல் இரசாயனம் கலந்த குளிர்பானங்களை விரும்பி அருந்துகின்றனர்.
இவை உடலுக்கு பல தீங்குகளை இழைக்கக்கூடியது. அதனால் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் கொடுக்கும் பழங்களை சாப்பிட்டு வந்தால் நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம்.
பயன்கள் : இப்பழம் பனை நுங்கு போன்று இருக்கும். ரம்புத்தான்  பழங்களின் சர்க்கரை அளவு பழங்களின் சதையின் ஒவ்வொரு 100 கிராமுக்கும் நீர்ச்சத்து – 82.3 கிராம், புரதம் – 0.46 கிராம், கார்போஹைட்ரேட் – 16.02 கிராம், சர்க்கரை – 2.9 கிராம், நார்சத்து – 0.24 கிராம், கால்சியம் – 10.6 மி.கிராம், பாஸ்பரஸ் – 12.9 மி.கிராம், அஸ்கார்பிக் அமிலம் – 30 மி.கிராம் உள்ளது.

பேரிக்காய்

பேரிக்காயும் அதன் நன்மைகளும்.........!!
இதனை நாட்டு ஆப்பிள் என்று அழைப்பார்கள். வெளித் தோற்றத்திற்கு பச்சை காய் போல் தோன்றும். ஆனால் இது பழம்தான். சில காய்கள் பழுப்பு நிறத்தில் காணப்படும் பேரிக்காய் குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே கிடைக்கும் பழமாகும். இக்காலங்களில் இதை வாங்கி சாப்பிடுபவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுவார்கள்.
சுவையான இந்தப் பழத்தில் ஏ, பி, பி2, என வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இரும்பு சத்து, சுண்ணாம்புச் சத்து, கணிசமான அளவு உள்ளது. வளரும் குழந்தைகளுக்கு சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் அவசியத் தேவை. இந்த சத்துக்கள் பேரிக்காயில் நிறைந்துள்ளன. பேரிக்காய் எலும்பு, தசை வளர்ச்சிக்கும் உடல் வலுவுக்கும் உதவுகிறது.
பேரிக்காய் கிடைக்கும் காலங்களில் வாங்கி இரவு உணவுக்குப்பின் படுக்கைக்கு செல்லும் முன் ஒரு பழம் வீதம் சாப்பிடக் கொடுத்தால் குழந்தைகள் நன்கு வளர்ச்சி பெறுவார்கள் கருவில் வளரும் குழந்தை நன்கு வளர பேரிக்காய் பெரிதும் உதவுகிறது. கருவில் உள்ள குழந்தையின் எலும்பு வலிமை பெற பேரிக்காய் சிறந்த மருந்து.
பிறந்த இளம் குழந்தைக்கு தாய்ப்பாலே சிறந்த ஊட்டச் சத்து மிகுந்த உணவாகும். தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். குழந்தை பிறந்தது முதல் தாய்ப்பால் கொடுப்பது மிகவும் அவசியம். ஆனால் தற்போது தாய்ப்பால் கொடுப்பது குறைந்து வருகிறது. சில பெண்களுக்கு தாய்ப்பால் சரியாக சுரப்பதில்லை.
இவர்கள் காலையிலும் மாலையிலும் 1 பேரிக்காய் வீதம் தினமும் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். வயிற்றில் புண் இருந்தால்தான் வாயில் புண் ஏற்படும். இந்த வாய்ப் புண்ணையும், வயிற்றுப் புண்ணையும் ஆற்றும் சக்தி பேரிக்காய்க்கு உண்டு.
தினமும் ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் விரைவில் குணமாகும். இரத்தத்தில் இருந்து பிரிந்த தாது உப்புக்கள் சிறுநீரகத்தில் படிந்து அவை கல்லாக மாறுகின்றன. இவற்றைப் உடைத்து வெளியேற்ற தினமும் இரண்டு பேரிக்காய் சாப்பிட்டு வருவது நல்லது.

பிளம்ஸ் பழத்தின் நன்மைகள்

பிளம்ஸ் பழத்தின் நன்மைகள்
பல்வேறு சுவைகளில் பல்வேறு பெயர்களில் இப்பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இப்பழங்கள் உடலுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளிக்கவல்லவை. ஆப்பிள், பிளம்ஸ், செவ்வாழை, மாதுளம்பழம், இலந்தை, செர்ரி, போன்றவை சிவப்பு நிறப் பழங்களில் அடங்கும்.
* வைட்டமின் ஏ சத்து அதிகம் நிறைந்தபழங்கள். இவை இரத்தத்தை விருத்தி செய்யும், இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்கும் தன்மை கொண்டது.
• இரத்தத்தில் கலந்துள்ள கொழுப்புப் பொருட்களை கரைக்கும் குணமுடையது. சிறுநீரகக் கோளாறுகளை நீக்கும். தசைகளின் இறுக்கத்தைக் குறைத்து மென்மையடையச் செய்யும். நரம்புகளுக்கு ஊக்கத்தைக் கொடுத்து மூளை நரம்புகளுக்கு அதிக பலம் கொடுக்கும்.
• மனம் அழுத்தத்தைப் போக்கும் டென்ஷனைக் குறைக்கும். நினைவாற்றலைத் தூண்டும். கண்பார்வை தெளிவுறச் செய்யும் சக்தி, சிவப்பு நிறப் பழங்களுக்கு உண்டு. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
* எலும்பு மஜ்ஜைகளைப் பலப்படுத்துகிறது. இதயத்திற்கு சிறந்த டானிக்காக இந்த சிவப்பு நிறப் பழங்கள் விளங்குகின்றன.

பீன்ஸ் சத்துப்பட்டியல்

பீன்ஸின் மகத்துவத்தை இங்கே படித்தபின் நீங்கள் பீன்ஸ் பிரியர் ஆனால்ஆச்சரியப்படுவதற்கில்லை. அவ்வளவு சத்துகள் அடங்கியது பீன்ஸ். பேப்பேசி குடும்பத்தைச் சேர்ந்த இதன் அறிவியல் பெயர் பேசில்லஸ் வல்கரிஸ். செடியில் வளரும் பீன்ஸ், கொடியில் விளையும் பீன்ஸ் வகைகள் உள்ளன.
இதிலுள்ள சத்துக்களை அறிந்து கொள்வோம்… புதிதாக பறிக்கப்பட்ட பீன்ஸ் குறைந்த அளவு கலோரி ஆற்றல் தரக்கூடியவை. 100 கிராம் பீன்ஸ் உடலுக்கு 31 கலோரி ஆற்றல் வழங்கும். பச்சை பீன்ஸ் நிறைய வைட்டமின்கள், தாது உப்புக்கள் நிறைந்துள்ளது. எளிதில் உடலில் கலக்கும் நார்ச்சத்து நிறைந்தது.
100 கிராம் பீன்ஸில் 9 சதவீதம் ஆர்.டி.ஏ. அளவில் நார்ச்சத்து உள்ளது. ஆர்.டி.ஏ. என்பது தினசரி உடலில் சேர்க்க வேண்டிய அளவை குறிப்பதாகும். நார்ச்சத்தானது பெருங்குடல் நோய் எதிர்ப்புத் தன்மையுடன் இருக்க உதவும். குடற்புற்றுநோய்க்கு எதிராக செயல்படும். மேலும் ரத்தத்தில் கொலஸ்டிராலின் அளவையும் குறைக்கும்.
மிக அதிக அளவில் வைட்டமின் ஏ, பீன்ஸில் இருக்கிறது. லுடின், ஸி-சாந்தின், பீட்டா கரோட்டின் ஆகியவையும் குறிப்பிட்ட அளவில் இருக்கிறது. இது ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும், நோய் எதிர்ப்புத்திறனை வழங்கும். குழந்தைகளுக்கான வியாதியை உருவாக்கும் ஆக்சிஜன்-பிரி-ரேடிக்கலுக்கு எதிராக செயல்படும்.
பீன்ஸில் உள்ள ஸி-சாந்தின், புறஊதாக்கதிர்களில் இருந்து கண்களின் ரெட்டினாவைக் காக்கிறது. பச்சை பீன்ஸ் வகைகள் ஏ.ஆர்.எம்.டி. எனப்படும் வயது முதிர்வு சம்பந்தமான வியாதிக்கு எதிராக உடலுக்கு ஆற்றல்தரும். 100 கிராம் பீன்ஸில் 37 மைக்ரோ கிராம் போலேட்ஸ் உள்ளது.
இது வைட்டமின் 12 உடன் இணைந்து, டி.என்.ஏ. இணைப்பு மற்றும் செல் பகுப்பில் பங்கெடுக்கிறது. மேலும் மாதவிடாய் மற்றும் கர்ப்பகாலத்தில் நரம்புக் குழாய்கள் பாதிக்கப்படாமல் காக்க உதவுகிறது. பைரிடாக்சின் எனும் வைட்டமின் பி-6, தையமின் பி 1, வைட்டமின் சி ஆகியவை பீன்ஸில் நிறைந்துள்ளது.
வைட்டமின் சி, கிருமித் தொற்றுக்கு எதிராக உடலை காக்கக்கூடியது. ஆக்சிஜன்-பிரி-ரேடிக்கல்ஸ் உடலில் சேரவிடாமல் சுத்தமாக்குகிறது. ஆரோக்கியமான அளவில் இரும்பு, கால்சியம், மக்னீசியம், மாங்கனீசு, பொட்டாசியம் போன்ற தாதுஉப்புக்கள் நிறைந்துள்ளன. இவை வளர்ச்சிதை மாற்றத்திற்கு ரொம்ப அவசியமானது.
மாங்கனீசு நொதிகளின் செயல்பாட்டில் துணைக்காரணியாக செயல்படக்கூடியது. பிரிரேடிக்கல்ஸை விரட்டியடிக்கக் கூடியது. பொட்டாசியம் தாதுஉப்பு செல் மற்றும் உடலில் ஈரத்தன்மைக்கு அவசியமானது. இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பதிலும் பங்கெடுக்கிறது. 

ஸ்ட்ராபெர்ரி மருத்துவ குணம்


தினமும் சத்தான உணவு வகைகளை உட்கொண்டால் மருத்துவரிடம் போக வேண்டிய அவசியம் இருக்காது. ஆனால் பொதுவாக அனைவருக்கும் தெரிந்தது தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரிடம் போக வேண்டியது வராது எனக் கூறுவது உண்டு. ஏனெனில், ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம்.
ஆனால், இந்த விஷயத்தில் ஸ்ட்ராபெரி பழம் ஆப்பிளையே மிஞ்சும் என்பது புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஸ்ட்ராபெரி பழத்தில் உள்ள பிலேவனாய்டு என்ற பொருள், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துக்கு இணையாக செயல்படுகிறது. எனவே, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த பழம் உதவும்.
இந்த பொருள் வேறு சில பழங்கள், காய்கறிகள், டீ மற்றும் ரெட் ஒயின் ஆகியவற்றில் உள்ளன. இது சர்க்கரை நோய், புற்று நோயை தடுக்கும் திறன் வாய்ந்தது. இதுதவிர எல்லாவிதமான நோய்களையும் தடுக்கும். தாவரங்களில் இலைகள் மற்றும் பழங்களை பூச்சிகள் தாக்குவதைத் தடுக்கவும் பிளேவனாய்டு உதவுகிறது.
ஸ்ட்ராபெர்ரி பழங்களில் வைட்டமின் சி, தையமின், ரிபோபேளேவின், நியாசின், பேன்டோதெனிக் அமிலம், போலிக் அமிலம், சையனோகோபாலமின், வைட்டமின் ஏ, டோக்கோபெரால், வைட்டமின் கே போன்ற வைட்டமின்களும், செம்பு, மாங்கனிஸ், அயோடின், பாஸ்பரஸ், மெக்னீசியம், கால்சியம், இரும்பு, துத்தநாகம், செலினியம் போன்ற தனிமங்களும், பல்வேறு வகையான அமினோ அமிலங்களும், தேவையான கொழுப்பு அமிலங்களும் ஏராளமாக நிறைந்துள்ளன.
இதில் ஆன்டி ஆக்சிடன்ட் என சொல்லப்படும் செல் அழிவை தடுக்கும் தன்மை உள்ளது. இந்த தன்மை நிறைந்துள்ள பழங்கள் பெரும்பாலும் சிவப்பு நிறத்தில் காணப்படுவது இதன் சிறப்புக்கு அடையாளமாகும். இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து மாரடைப்பு வராமல் தடுக்கும்.
இதை சாப்பிட்டால் கேன்சர் வருவதைத் தடுக்கலாம். மேலும் இது ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்கின்றது. ஸ்ட்ராபெர்ரி பழச்சாற்றை குடித்தால் பற்களில் கறை ஏற்படுவதை தவிர்க்கலாம். இதில் உள்ள அமிலங்கள் பல் கறையையும் நீக்குகின்றன.

"நகர்ப்புற நக்சல்" (Urban Naxal)

செயல்பாடுகள் மற்றும் சட்டப் பின்னணி ​1. அறிமுகம் மற்றும் சொல்லாடலின் தோற்றம் ​ "நகர்ப்புற நக்சல்" (Urban Naxal) என்பது இந்திய அ...