Wednesday, December 26, 2012

முருங்கைக்கீரை

நரம்புகளின் வீரியத்தை நிலைப்படுத்துவது முருங்கை.
தேங்காயை கற்பக விருட்சம் என அழைப்பது போல முருங்கையை பிரம்ம விருட்சம் என போற்றுகின்றனர். இக்கீரை மரத்தில் கிடைப்பதால் நிறைய பஞ்சபூத ஆற்றல்கள் உள்ளன. மனிதர்கள் சாப்பிடக்கூடிய கீரைகளில் முக்கியமாக சாப்பிடக்கூடிய கீரை முருங்கையும், கறிவேப்பிலையும் தான். இதை நாம் சமைத்து சத்துக்களை வீணாக்கி விடுகிறோம்.
ஏழைகளின் பிணிகளை விரட்டும் அற்புதக்கீரை. மலிவானது. எல்லா இடங்களிலும் எல்லாக் காலங்களிலும் கிடைக்கிறது. மனித குலத்திற்கு என படைக்கப்பட்ட முதல் தர கீரை முருங்கையாகும்.
முருங்கைக்கீரையில் உள்ள சத்துக்கள்:
  1. நீர்=71%
  2. மாவுப்பொருள்=12.5%
  3. புரதம்=6.7%
  4. கொழுப்பு=1.7%
  5. நார்பொருள்=12.5%
  6. தாது உப்புக்கள்=4%
  7. கால்சியம்=0.44%
  8. பாஸ்பரஸ்=0.07%
  9. இரும்புத் தாது=7 யூனிட்
  10. வைட்டமின் A=11300 யூனிட்
  11. வைட்டமின் B=70 யூனிட்
  12. வைட்டமின் C=200 யூனிட்
இவை அனைத்தும் 100 கிராம் முருங்கைக்கீரைச்சாறில்  உள்ள சத்துகள்.

மருத்துவக் குணங்கள்:
  • இதில் பொட்டசியம் அதிகமாக உள்ளதால் உடல் உப்பால் உடலை குலைத்தவர்கள் நலம் பெறுகின்றனர். உயர் இரத்த அழுத்த நோய் மறைகிறது.
  • நீரிழிவு பிணியாளர்களின் ஒப்பற்ற நம்பிக்கை நட்சத்திரம் முருங்கை எனலாம். அளவற்ற பிணிகளின் மூல நோயான மலச்சிக்கலை இரு வேளையிலேயே விரட்டிடும் அற்புதக்கீரை.
  • மாலைக்கண் மற்றும் சில கண் நோய் உள்ளவர்கள் முருங்கையால் உறுதியான முன்னேற்றம் பெறுவார்கள்.
  • முதுமைக்கும், இளமைக்கும் இடையில் ஊசல் ஆடுபவர்கள் முருங்கையால் வாழ்வின் வசந்தத்தை தக்கவைத்துக் கொள்ளலாம்.
  • ஹீமோகுளோபினைக் கூட்டும். இரத்த சோகை நீக்கும்.
  • பக்கவாதம், நரம்பு தள‌ர்ச்சி, அதிக உடல் எடை போன்ற பிணிகளைத் தினமும் முருங்கையைப் பயன்படுத்தி குணம் பெறலாம்.
  • தாது பலம் தரும் சஞ்சீவிக் கீரை.நரம்பு பலம் பெற முருங்கைக்கீரை மிக சிறந்தது.
குறிப்பு:
  • முருங்கைக்கீரைகளைச் சமைக்காமல் சாப்பிட்டால் பல பிணிகள் குறையும்.
  • சமைக்காமல் சாறாக எடுத்து நீரில் அல்லது தேனில் கலந்து சாப்பிடுவது சிறந்தது.

No comments:

Post a Comment

முத்துசாமி தீட்சிதர்

மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...