பொதுவாக வருமானம் வரும் கோயிலில் தான் அறமற்ற துறை கால் பதிக்கும். அந்தக்
கோயிலை தன் வசம் எடுத்துக்கொள்ளும். ஆள் நடமாட்டம் இல்லாத கோயிலுக்குள்
அறமற்ற துறை நுழைவதில்லை.
கோயில் உண்டியலிலேயே குறியாக இருக்கும்
அறமற்ற துறை உண்டியலில் குவியும் பணத்தில் 10% கோயில் பணிகளுக்கு
செலவிடுகிறது. ஏனைய வருமானத்தை இதர செலவுகளுக்கு பயன்படுத்துகிறது.
உதாரணமாக, கோயில் செயல் அலுவலருக்கு ஜீப் வாங்குவது, மடிக்கணினி வாங்குவது,
அமைச்சர்களின் தனிப்பட்ட உதவியாளர்களுக்கு கார் வாங்குவது, அரசாங்கத்தின்
இதர செலவுகளுக்கு என கோயில் வருமானம் பயன்படுத்தப்படுகிறது. நித்தம்
கோயிலில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களுக்கு உண்டியலிலிருந்து பங்கு
கொடுக்கப்படுவதில்லை.
தான் எடுத்துக்கொண்டு கோயில்களை
சீர்படுத்துகிறேன் பேர்வழி என்று நம்முடைய புராதன சின்னங்களையும், கலை
பொக்கிஷங்களையும் அழித்துவிடுகிறது அறமற்ற துறை. கிடைத்தக்கறியா
சிற்பங்களும், நுட்பமான வேலைப்பாடுகள் அடங்கிய பொருட்களும்
கோயில்களிலிருந்து களவாடப்படுகின்றன. கோயில் புணர் நிர்மானம் என்ற வகையில்
அறமற்ற துறை டெண்டர்கள் விட்டு பல கோடிகளை சம்பாதிக்கிறது. சாமியை பார்க்க
தனி கியூ அமைத்து அதற்கு சீட்டு விற்று அதில் பணம் சம்பாதிக்கிறது.
கோயிலுக்கு சொந்தமாக நம் முன்னோர்கள் எழுதி வைத்த லட்சக்கணக்கான நிலங்களை
அறமற்ற துறை ஏனையோர்களுடன் சேர்ந்து ஆட்டையை போடுகிறது.
பல கோயில்
நிலங்கள் ரியல் எஸ்டேட் நிலங்களாக மாறியிருக்கின்றன/மாறிவருகின்றன. பல
சந்தர்ப்பங்களில் கோயில் நிலங்கள் சர்ச் கட்டுவதற்கும், மசூதி
கட்டுவதற்கும் வழங்கப்பட்ட அவலங்களும் நடந்தேறி உள்ளன. கோயில் நிலத்தில்
மாற்று சமூகத்தினர் கடைகள் அமைக்கின்றனர். ஆனால் அதற்கு அவர்கள் வாடகை
ஏதும் தருவதில்லை. வாடகைக்கு விடப்பட்ட கோயில் சொத்துக்களிலிருந்தும்
கோயிலுக்கு வருவாய் ஏதும் வருவதில்லை. கோயில்களுக்கு வராத வாடகை
கோடிக்கணக்கில் இருக்க அறமற்ற துறை அதை வசூலிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை.
நம்முடைய வீட்டையோ, சொத்தையோ மற்றவர் ஆக்கிரமித்தால் நாம் உடனே வழக்கு
தொடர்கிறோம், நம்முடைய சொத்தை மீட்கிறோம். ஆனால் கோயில் சொத்துக்கள்
ஆக்கிரமிக்கப்படும்போது அது நம்முடைய கவனத்திற்கு வருவதில்லை. அப்படியே
வந்தாலும் நாம் அதை கண்டு கொள்வதில்லை. அரசியல் குண்டர்கள் தலையீடு இருக்கு
நமக்கேன் வம்பு என்று நாம் ஒதுங்கிவிடுகிறோம். இது அறமற்ற துறையின்
அராஜகங்களுக்கு வலிமை சேர்க்கிறது.
தன்னுடைய வரவு செலவு கணக்குகளை
தானே தணிக்கை செய்யும் அதிகாரத்தைப் பெற்ற ஒரு அதிசய அரசுத்துறை உலகில்
உண்டெனில் அது அறமற்ற துறைதான்.
இவ்வளவு பணத்தை கொள்ளையடிக்கும்
அறமற்ற துறை பொது மக்களுக்கு என்று எந்த வசதியையும் கோயில்களில் செய்து
தருவதில்லை. அறமற்ற துறையின் நிர்வாகத்தில் இருக்கும் பெரும்பான்மையான
கோயில்கள் சரியாக பாராமரிக்கப்படுவதில்லை.
அறமற்ற துறையின் கிடுக்கிப்பிடியிலிருந்து என்று நம்முடைய கோயில்கள் விடுபடுமோ அன்றுதான் நம்முடைய தர்மம் தழைத்தோங்கும்.
நாம் நம் கோயில்களையும், தர்மத்தையும் காக்க வேண்டுமென்றால் கோயில்களில்
காணிக்கை செலுத்தக்கூடாது. மாறாக அர்ச்சகர் தட்டில் காணிக்கை செலுத்தலாம்.
சாமிக்கு நெய்வேத்தியத்திற்கு ஏற்பாடு செய்யலாம். உண்டியலில் மட்டும் காசு
போடக்கூடாது. மகரந்தம் இருக்குமவரை தான் தேனீக்கள் பூக்களை அண்டும்.
அதேபோல் உண்டியலில் காசு விழும் வரைதான் அறமற்ற துறை கோயில்களை தன் கைவசம்
வைத்திருக்கும். அறமற்ற துறையின் கட்டுபாட்டில் இருக்கும் வரையில்
கோயில்களுக்கு விமோச்சனம் இல்லை. எனவே ஹிந்து சகோதரர்கள் இது குறித்து
சிந்திப்பீர், செயல்படுவீர்.