Monday, August 22, 2016

நீலகண்ட பிரம்மச்சாரி


ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்தவர். திருநெல்வேலி மாவட்ட கலக்டர் ஆஷ் கொலை வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர். நீதிமன்றம் தண்டனை விதித்த போது நீலகண்ட பிரம்மசாரிக்கு வயது 21. ஏழாண்டுகள் கடுங்காவல் தண்டனை முடிந்த பிறகு, நீலகண்ட பிரம்மச்சாரி 1919 ஆம் ஆண்டு விடுதலையானார். 

       விடுதலையான பிறகும் கூட, அவர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக தன்னுடைய நடவடிக்கைகளை தொடர்ந்தார். இதன் பொருட்டு, நீலகண்ட பிரம்மச்சாரி 1922 ஆம் ஆண்டு மறுபடியும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் 8 ஆண்டுகள் கழிந்து 1930 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். 

          அதன் பின்னர் உலக வாழ்கையில் நாட்டமில்லாமல் துறவியானார். தேசம் முழுவதும் சுற்றித் திரிந்தார். 1936 ஆம் ஆண்டு மைசூரில் உள்ள நந்தி மலையில் ஆஸ்ரமம் அமைத்து தங்கினார். சுற்றியிருந்த ஏழை எளியவர்களுக்கு உதவி செய்து வந்தார். ஆன்மீகத்தில் கவனம் செலுத்தினார். நீலகண்ட பிரம்மச்சாரி, சத்குரு ஒம்கார் என்று அழைக்கப்பட்டார். அவர் தன்னுடைய 89வது வயதில் மரணமடைந்தார். 

          கம்யூனிஸ்டாக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, பெரிய மகானாக இருந்து சமாதி அடைந்தார்.

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...