Saturday, August 20, 2016

வானூர்தி குறித்து கம்பர்




1000 ஆண்டுகளுக்கு முன்னரே, வானூர்தி எப்படி பறக்க வேண்டும் என்று கம்பர் தன் கம்பராமயணத்தில்குறித்து இருக்கிறார். இது உண்மையில் வியப்பான ஒன்று தான்.ஏனென்றால் ஆரம்பத்தில் மேலை நாடுகளில் வானூர்திகள் உருவாக்கப்பட்ட போது, அதை எப்படி பறக்க வைப்பது என்று தெரியாமல் நிறைய பேர் மாண்டு போனர். சிலர், மலைகளின் உச்சியில் ஏறி அங்கிருந்து குதித்து பறக்க வைக்க முயன்றனர்.ஆனால், 1000 ஆண்டுகளுக்கு முன்னர் வானூர்தி எப்படி பறக்க வேண்டும் என்று கம்பர் குறித்திருக்கிறார். ”மண்ணின் மேல்அவன் தேர்சென்ற சுவடு எல்லாம் ஆய்ந்துவிண்ணில் ஓங்கிய ஒருநிலை மெய்யுற வெந்தபுண்ணில் ஊடுஒரு வெல்என மனம்மிகப் புழுங்கிஎண்ணி நாம்இனிச் செய்வது என்ன இளவலே என்றான்.”இராவணன் விமானத்திலே சீதையைக் கவர்ந்து போய்விட்டான். இராமரும் தம்பியும் தேடிப் போகிறார்கள். இராவணனின் விமானச் சக்கரங்கள் மண்ணிலே உருண்டு சென்ற அடையாளங்கள் தெளிவாகத் தெரிகிறது. அதைப் பின்பற்றிச் செல்கிறார்கள். ஆனால் போகப் போக தெளிவாகத் தெரிந்த சக்கரச் சுவடுகள்தெளிவில்லாமல் ஆகி விடுகின்றன. மண்ணிலே பட்டும் படாமலும் தெரிகின்றன. ஒருகட்டத்துக்குமேல் விமானத்தின் சுவடுகளே இல்லை. ஆம்! விமானம் ஓடுபாதையில் ஓடி வானத்தில் எழுந்து போய்விட்டது.எவ்வளவு துல்லியமாக விளக்கி இருக்கிறார் என்று பாருங்கள். வானூர்திகள் ஓடுபாதையில் ஓடி வேகம் எடுத்து புவியீர்ப்பை முறித்த பின்தான் மேலே எழ முடியும் என்ற விஞ்ஞான விளக்கம் சோழர் காலத்துக் கவிஞனான கம்பனுக்கு எப்படித் தெரிந்து இருந்தது. வானூர்தி பறப்பதை நேரில் கண்டாரா? இல்லை அது தொடர்பான ஏடுகள் அந்த அறிவை வழங்கினவா? அப்படியென்றால்,தாடியும் சடாமுடியும் கொண்டதாகச் சித்தரிக்கப்படும் சங்கப் புலவர் கூட்டத்தில் வானூர்திகளை வடிவமைக்கும் திறன் தெரிந்த பொறியியலாளரும் இருந்தார்களா?| 
அறிவியலும் ஆன்மீகமும் கலன்ந்தது தான் இந்து தருமம் |

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...