Saturday, June 30, 2018

ராவணனிடம் உபதேசம் கேட்டா ராமன்.


போரில் ராமனால் வீழ்த்தப்பட்ட ராவணன் மரணத் தருவாயில் இருந்தபோது, ராமன் பவ்யமாக அவன் காலடியில் நின்று," இலங்கேஸ்வரா.. தங்கள் ஞானம் தங்களோடு அழிந்துவிடக்கூடாது. நீங்கள் எனக்கு உபதேசிப்பதன்மூலம், அதை இந்த உலகம் அறிந்து பயன்பெற வேண்டும். எனக்கு உபதேசியுங்கள் என்று வேண்டி நின்றான்..!

ராவணன் உபதேசித்தான்..

1.உன் சாரதியிடமோ, வாயிற்காப்போனிடமோ, சகோதரனிடமோ பகை கொள்ளாதே. உடனிருந்தே கொல்வார்கள்.

2. தொடர்ந்து நீ வெற்றிவாகை சூடினாலும், எப்போதும் வெல்வோம் என்று எண்ணாதே.

3. உன் குற்றங்களை சுட்டிக் காட்டும் நண்பனை நம்பு.

4. நான், அனுமனை சிறியவன் என்று எடை போட்டதுபோல், எதிரியை எப்போதும் எளியவன் என்று எடைபோட்டுவிடாதே.

5. வானின் நட்சத்திரங்களை வளைக்க முடியும் என்று நம்பாதே. அவை நம் வழிகாட்டிகள்.

6. இறைவனை விரும்பினாலும், மறுத்தாலும் முழுமையாகச் செய்.

ராமன் வணங்கி உபதேசங்களை பெற்றுக் கொண்டான்.

எதிரியைக்கூட வணங்கி உபதேசம் பெற்றது எவ்வளவு உயர்ந்த பண்பு

No comments:

Post a Comment

முத்துசாமி தீட்சிதர்

மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...