துக்காராம் மராத்தியைத் தவிர வேறு மொழி தெரியாதவர். படிக்காதவர். பரிபூர்ண பக்தியோடு விட் டல ஸ்மரணம் செய்பவர். அபங்கங்கள் இயற்றி பாடுவார்.
விட்டலன் அவரிடம் அலாதி அன்பு கொண்டவன். அவரோடு பேசுவான் சாப்பிடுவான். உற்ற நண்பர்கள் இவ்வாறு தானே இருப்பார்கள். தேஹு என்ற அந்த கிராமத்து பிராமணர்கள் துக்காராமை ஒரு விஷ ஜந்துவாகவே பார்த்தார்கள்.
எரியும் தீயில் எண்ணையாக துக்காராமோடு சேர்ந்து பாண்டுரங்கன் சாப்பிடுகிறான் என்ற செய்தி அவர்களை வாட்டியது. ஆனால் அண்டை கிராமங்களில் துக்காராம் புகழ் பரவியது. இதனால் எங்கும் அவரை வரவேற்றனர்.
எங்கு சென்றாலும் யார் என்ன உணவளித்தாலும் துக்காராம் தனக்கு அருகே ஒரு மற்றொரு இலை போடுங்கள் என்பார்
"யாருக்கு?"
"என் பாண்டுரங்கனுக்குத்தான்"
எல்லோரும் சாப்பிட்டு முடித்தவுடன் அந்த ஆளில்லாத இலையும் காலியாகத்தான் இருக்கும் விட்டலன் அரூபமாக (மற்றவர் கண்ணுக்கு) அமர்ந்து சாப்பிடுவான்.
தேஹூ பிராமணர்கள் சும்மா இருப்பார்களா?
சின்ச்வாட் என்று ஒரு ஊர் கூப்பிடு தூரத்தில் இருந்தது அங்கு சிந்தாமணி தேவ் எனும் விநாயக உபாசகர் அவர் விநாயகர் கோயிலில் விசேஷம் அந்த சிந்தாமணி தேவ் அழைத்தால் விநாயகர் அவரோடு அமர்ந்து அன்னம் புசிப்பார் அதனால் பிரமாத ஏற்பாடுகளில் அன்னதானமும் இருந்தது அன்று ஏனோ அன்னம் புசிக்க சிந்தாமணி தேவ் விநாயகரை அழைத்திருந்தார் ஆனால் அவர் வரவில்லை ஆனாலும் சிந்தாமணி தேவ் துக்காராமை அழைத்து அவமானப்படுத்தவென்றே ஒரு தீர்மானம் வரிசையாக எல்லோரும் சாப்பிட உட்கார்ந்தபோது துக்காராம் அருகே ஒரு காலி இலை போட்டார்கள்.
துக்காராமோ "எனக்கு இந்தப்பக்கமும் ஒரு இலை போடுங்கள்" என்று கேட்டுக்கொண்டார்.
"ஏன் விட்டலன் ரெண்டு பக்கமும் உட்கார்ந்து உங்களோடு சாப்பிடப்போகிராரோ?" பிராமணர்கள் அவரைக் கேலியாக கேட்டார்கள்
"இல்லை. எப்போதும் போல் விட்டலன் இடப்பக்கம் அமர்வார்.
உங்கள் ஊர்
வினாயகர் வந்து வலப்பக்கம் அமர்வார்"
சிரித்தார்கள் பிராமணர்கள் மற்றும் சிந்தாமணி தேவும் ஏற்கனவே படப்போகிற அவமானத்துக்கு விநாயகர் வேறு சாட்சியா?"
அவர்கள் சந்தேகத்துக்கு இடமில்லாமல் இரண்டு இலையில் உள்ள அன்னமும் குறைய ஆரம்பித்தது விநாயகனும் விட்டலனுடன் சேர்ந்து துக்காராமுடன் சமாராதனையில் சாப்பிட்டனர்
துக்காராம் சாப்பிட்டு முடித்தபோது அவருக்கு இரண்டு பக்க இலைகளும் சாப்பிடப்பட்டு காலியாக இருந்ததைப் பார்த்த பிராமணர்களும் சிந்தாமணி தேவும் வெட்கிப்போய் என்ன அபசாரம் செய்தோம் என்று துக்காராம் காலில் விழுந்தனர் அன்றிலிருந்து சிந்தாமணி தேவ் தீவிர துக்கா ராம் மகராஜ் சிஷ்யர்களில் ஒருவரானர்.
No comments:
Post a Comment