Tuesday, April 23, 2013

தொப்பையை குறைக்க வழி;



* உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற எனர்ஜியை தருகிறது. அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும். பின் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆகவே மறக்காமல் காலை வேளையில் மறவாமல் ஏதேனும் ஆரோக்கியமானவற்றை சாப்பிட வேண்டும்.

* பானை போன்ற வயிறை குறைக்க, மற்ற வழிகளை விட சிறந்தது உடற்பயிற்சி தான். அதிலும் நடைப்பயிற்சி தான் சிறந்தது. ஆகவே காலையில் எழுந்ததும் தினமும் குறைந்தது 30 நிமிடமாவது நடந்தால் நல்லது. இதனால் உடல் மற்றும் தொடையில் இருக்கும், தேவையற்ற கலோரிகள் கரைந்துவிடும்.


* எடையைக் குறைக்க தேன் ஒரு சிறந்த மருத்துவப் பொருள். ஆகவே காலையில் எழுந்ததும், ஒரு டம்ளர் நீரில் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டீஸ்பூன் தேன் மற்றும் சிறிது மிளகு தூள் சேர்த்து, தினமும் குடிக்க வேண்டும்.

* காரமான உணவுப் பொருட்களான இஞ்சி, மிளகு, இலவங்கப்பட்டை போன்றவையும் மிகவும் சிறந்தது. அதிலும் தினமும் இஞ்சி டீயை 2-3 முறை குடிக்க வேண்டும். இது உடல் பருமனைக் குறைக்கும் சிறந்த பொருள்.

* இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை சாதாரண நீரில் குடித்து வந்தால், உடல் எடை குறையும். மேலும் சாப்பிட்டப் பிறகு ஒரு டம்ளர் சூடான நீரை குடித்து வந்தால், இயற்கையாகவே உடல் எடை குறைந்துவிடும்.

* உடல் எடையை குறைக்க டயட்டில் இருக்கும் போது பச்சை காய்கறிகள், தக்காளி மற்றும் கேரட் போன்ற கலோரி குறைவான, ஆனால் அதிக வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். இதனை அதிகம் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் விரைவில் குறையும், அதிக பசியும் எடுக்காமல் இருக்கும்.

* தொடர்ந்து 3-4 மாதங்கள், காலையில் எழுந்ததும் 10 கறிவேப்பிலையை சாப்பிட வேண்டும். இதனால் பெல்லி குறைந்து, அழகான இடுப்பைப் பெறலாம்.

* எப்போதும் உணவு உண்ணும் முன் ஒரு துண்டு இஞ்சியை, எலுமிச்சை சாறு மற்றும் உப்பில் தொட்டு சாப்கிட வேண்டும். இதனால் அதிகமான அளவு உணவை உண்ணாமல், கட்டுப்பாட்டுடன் உணவை உண்ணலாம்.

இவ்வாறெல்லாம் செய்து வந்தால், பானைப் போன்ற வயிற்றை குறைத்து, அழகான உடல் வடிவத்தைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம்.

கொசு ஈஸியா விரட்டலாம்!!!



Natural Safe Mosquito Repellents நிறைய வீடுகளில் கொசுக்களை விரட்ட கெமிக்கல்கள் கலந்த கொசு விரட்டிகளை பயன்படுத்துகின்றனர். அவ்வாறு அத்தகைய கொசு விரட்டிகளை பயன்படுத்துவதால், சருமம் மற்றும் கண்களுக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, நுரையீரலுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அத்தகைய கேடுகள் விளைவிக்கும் கெமிக்கல் கலந்த கொசு விரட்டிகளை பயன்படுத்துவதை விட, வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்களை வைத்து கொசுக்களை விரட்டலாம்.

இதனால் கொசுக்கள் அழிவதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும். அத்தகைய வீட்டு கொசு விரட்டிகள் என்னவென்று பார்ப்போமா!!!

இயற்கை முறையில் கொசுக்களை விரட்ட...

தேங்காய் நார் :
தேங்காய் உடலுக்கு மட்டும் நன்மை தராமல், வீட்டில் பல செயல்களுக்கும் பயன்பட்டு நன்மை தருகிறது. எப்படியென்றால் தேங்காய் நார்கள், வீட்டில் பாத்திரங்களை கழுவுவதற்கு பயன்படுவதோடு, வீட்டில் இருக்கும் கொசுக்களை விரட்டவும் பயன்படுகிறது. எவ்வாறென்றால், இந்த காய்ந்த தேங்காய் நார்களை எரித்தால், அதில் இருந்து வரும் புகை கொசுக்களை எளிதில் விரட்டிவிடும். தற்போது தேங்காய் நார்கள் கூட கடைகளில் விற்கப்படுகிறது. ஆகவே அந்த நார்களை வாங்கி வந்து, மாலை நேரத்தில் நார்களை நெருப்பில் காட்டி, அனைத்து ரூம்களுக்கும் அந்த புகையை காண்பித்து, சிறிது நேரம் கழித்து பாருங்கள், ஒரு கொசு கூட வீட்டில் இருக்காது. இந்த புகையால் உடலுக்கு பாதிப்பு வராதா? என்று கேட்கலாம். இயற்கை நார்களில் இருந்து ஏற்படுத்தும் புகையால் எந்த பாதிப்பும் ஏற்படாது.

கற்பூரம் : கொசுக்கள் அழிவதற்கு முக்கியமான பொருள், சல்பர். இந்த சல்பர் எங்கு இருந்தாலும், கொசுக்கள் வெளியில் தான் இருக்கும். கற்பூரம் இந்த சல்பரினால் ஆனது. ஆனால், ஒரு பிரச்சனை என்னவென்றால், கற்பூரத்தை காற்றில் வைத்தால், அது உடனே கரைந்துவிடும். ஆ

கவே இந்த கற்பூரத்தை ஒரு தட்டில் வைத்து, எரித்து வீட்டைச் சுற்றி காண்பித்தால், கொசுக்கள் அந்த வாசனைக்கு வராது. இல்லையென்றால், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, அதில் கற்பூரத்தைப் போட்டு வைத்தால், அதில் இருந்து வரும் வாசனைக்கு கொசுக்கள் வீட்டை எட்டிக் கூட பார்க்காது.

கெரோசின் மற்றும் கற்பூரம் :

இந்த இரண்டுமே மிகவும் சிறந்த, கொசுக்களை அழிக்க வல்ல பொருட்கள் ஆகும். அதற்கு கொசுக்களை அழிக்க கடைகளில் விற்கும் மிசின்களில் உள்ள காலி டப்பாவில், கெரோசினை விட்டு, அதில் சிறிது கற்பூரத்தை விட்டு, மின்சார பிளக்கில் மாட்டி விட வேண்டும். இதனால் கொசுக்கள் வீட்டில் வராமல் இருப்பதோடு, உடல் ஆரோக்கியத்திற்கு எந்த கெடுதலும் ஏற்படாமல் இருக்கும்.

Girl Frozen For 500 years


Girl who was killed as an offering to the Inca gods sometime between 1450 and
1480, at approximately 11–15 years old.best-preserved mummy ever found, with
internal organs intact, blood still present in the heart and lungs, and skin and facial
features mostly unscathed. No special effort had been made to preserve her and
500 years later still looked like sleeping children
Girl Frozen For 500 years
Girl who was killed as an offering to the
Inca gods sometime between 1450 and
1480, at approximately 11–15 years old.
best-preserved mummy ever found, with
internal organs intact, blood still present in
the heart and lungs, and skin and facial
features mostly unscathed. No special
effort had been made to preserve her and
500 years later still looked like sleeping
children

முழு நம்பிக்கையுடன் - இறைவனை அணுகுங்கள்..!

சித்தர்கள், ரிஷிகள் - வேறு ரூபத்தில் இறைவனை தொழுவது, சில குறிப்பிட்ட ஆலயங்களில் அடிக்கடி நடக்கும். இங்கே சர்ப்பம், பல பேர் கூடி இருக்கும்போது - அந்த குறிப்பிட்ட கிரகண நேரத்தில் - ஆலயத்தின் உள்ளே வந்து, இறைவனின் சிரசில் அமர்ந்து வில்வ இலையை வைத்து இருக்கிறது. இரண்டு, மூன்று முறை இது நடந்ததாம். இரவு நேரங்களில் யாரும் இல்லாத நேரத்தில் அடிக்கடி நடப்பதாகவும் கூறுகிறார்கள்... கொஞ்சம் மிகைப் படுத்தலாகவும் இருக்கலாம்...

ஆனால், ஒரு பாம்பு வந்து கும்பிடுகிறதே என்னும்போது - கடவுள் இல்லை என்று சொல்வது மடத்தனமாக தெரிகிறது. வில்வத்தின் மகிமையையும் , இந்த ஆலயத்தின் மகிமையையும் பாருங்கள். இந்த நிகழ்வு நடந்த மறுநாளே, தின இதழ்களும் இந்த நிகழ்வை உறுதிப் படுத்தி இருந்தன. பல ஆன்மீக இதழ்களின் 'கவர் ஸ்டோரி' யாகவும் இருந்தது... இருந்தபோதும், நிறைய பேருக்கு தெரியாமல் இருந்து இருக்கலாம்.

இதைப் போன்ற அதிசயங்கள் , நம் கண் முன் நடந்தால் தான் - இறைவனை நம்புவேன், என்று உரைக்கும் உங்கள் உள் மனதின் மடத்தனத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு - உண்மையான பக்தியுடன், முழு நம்பிக்கையுடன் - இறைவனை அணுகுங்கள்..! அதன் பிறகு நடக்கும் அற்புதத்தை உணர்ந்து பாருங்கள்..!
சித்தர்கள், ரிஷிகள் - வேறு ரூபத்தில் இறைவனை தொழுவது, சில குறிப்பிட்ட ஆலயங்களில் அடிக்கடி நடக்கும். இங்கே சர்ப்பம், பல பேர் கூடி இருக்கும்போது - அந்த குறிப்பிட்ட கிரகண நேரத்தில் - ஆலயத்தின் உள்ளே வந்து, இறைவனின் சிரசில் அமர்ந்து வில்வ இலையை வைத்து இருக்கிறது. இரண்டு, மூன்று முறை இது நடந்ததாம். இரவு நேரங்களில் யாரும் இல்லாத நேரத்தில் அடிக்கடி நடப்பதாகவும் கூறுகிறார்கள்... கொஞ்சம் மிகைப் படுத்தலாகவும் இருக்கலாம்...

ஆனால், ஒரு பாம்பு வந்து கும்பிடுகிறதே என்னும்போது - கடவுள் இல்லை என்று சொல்வது மடத்தனமாக தெரிகிறது. வில்வத்தின் மகிமையையும் , இந்த ஆலயத்தின் மகிமையையும் பாருங்கள். இந்த நிகழ்வு நடந்த மறுநாளே, தின இதழ்களும் இந்த நிகழ்வை உறுதிப் படுத்தி இருந்தன. பல ஆன்மீக இதழ்களின் 'கவர் ஸ்டோரி' யாகவும் இருந்தது... இருந்தபோதும், நிறைய பேருக்கு தெரியாமல் இருந்து இருக்கலாம்.

இதைப் போன்ற அதிசயங்கள் , நம் கண் முன் நடந்தால் தான் - இறைவனை நம்புவேன், என்று உரைக்கும் உங்கள் உள் மனதின் மடத்தனத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு - உண்மையான பக்தியுடன், முழு நம்பிக்கையுடன் - இறைவனை அணுகுங்கள்..! அதன் பிறகு நடக்கும் அற்புதத்தை உணர்ந்து பாருங்கள்..!

நமது மூளை



              நமது மூளைதான் மற்ற உறுப்புகளை விடவும் பசி மிகுந்தது, அதாவது 20 சதவீத சக்தி மூளை செயல்பட செலவிடப்படுகிறது. ஆண்களின் மூளை அளவில் பெரியதாக இருந்தாலும் பெண்களின் மூளை செல்களின் எண்ணிக்கையை விட குறைவு தான்.தொடு உணர்வு மூளையால் உணரப்படுகிறது ஆனால் மூளையை தொடுவதை அதனால் உணரமுடியாது.
இப்போதும் எனது மனதறிய என்று இதயத்தை காட்டி சொல்கிறோம் மூதறிஞர்கள் (Ancient Philosophers) பலரும் மனிதனின் நடவடிக்கை இதயத்தால் தான் கட்டுப்படுத்தப்படுகிறது என்று நம்பினார்கள்.

மூளையில் இருக்கும் ஒரு நரம்பு செல் ஒரு நொடியில் ஒரு லட்சம் சமிங்சைகளை அறிந்து கொள்ளும். குறித்த நிறத்தை அறிந்துகொள்ளும் சக்தி பெண்களுக்கு அதிகம். அதிகபட்சமாக 2 மணி நேரமே ஒரு இரவில் கனவு காண முடியும். உணர்வுகளை மூளை தொடு உணர்ச்சி மூலம் அறியப்படுவதை விட ஒலி மூலம் விரைவில் அறிந்து கொள்ளும்.
நமக்கு சட்டுணு ஞாபகம் வந்தது என்று சொல்கிறோம் அது 0.0004 நொடிகள்.

அதிகமான இயற்கை மரணங்கள் மனிதன் தூங்கும் நேரமான் அதிகாலை 3 மணியில் இருந்து 4 மணிக்குள் நிகழ்கிறது.
நமது மூளை குறித்த சில ருசிகர தகவல்கள் !!

நமது மூளைதான் மற்ற உறுப்புகளை விடவும் பசி மிகுந்தது, அதாவது 20 சதவீத சக்தி மூளை செயல்பட செலவிடப்படுகிறது. (..ஓவரா தான் யோசிக்கிறான்..) 

ஆண்களின் மூளை அளவில் பெரியதாக இருந்தாலும் பெண்களின் மூளை செல்களின் எண்ணிக்கையை விட குறைவு தான்.( …நம்மில் சிலர் இருந்துட்டு போகட்டும்பா !.)

தொடு உணர்வு மூளையால் உணரப்படுகிறது ஆனால் மூளையை தொடுவதை அதனால் உணரமுடியாது.
இப்போதும் எனது மனதறிய என்று இதயத்தை காட்டி சொல்கிறோம் மூதறிஞர்கள் (Ancient Philosophers) பலரும் மனிதனின் நடவடிக்கை இதயத்தால் தான் கட்டுப்படுத்தப்படுகிறது என்று நம்பினார்கள்.

மூளையில் இருக்கும் ஒரு நரம்பு செல் ஒரு நொடியில் ஒரு லட்சம் சமிங்சைகளை அறிந்து கொள்ளும்.
குறித்த நிறத்தை அறிந்துகொள்ளும் சக்தி பெண்களுக்கு அதிகம் (….அதான் எங்களுக்கு தெரியுமெ ….புடவை கடையில் இருந்து ஒரு குரல் !? )

அதிகபட்சமாக 2 மணி நேரமே ஒரு இரவில் கனவு காண முடியும்.(…யாருக்கு தெரியும் ! கனவு காண்பவர்களைத் தான் கேக்கோணும்…)

உணர்வுகளை மூளை தொடு உணர்ச்சி மூலம் அறியப்படுவதை விட ஒலி மூலம் விரைவில் அறிந்து கொள்ளும்.

நமக்கு சட்டுணு ஞாபகம் வந்தது என்று சொல்கிறோம் அது 0.0004 நொடிகள்.

கொஞ்சம் இருங்கள் … ஒரே ஒரு தகவல். 

அதிகமான இயற்கை மரணங்கள் மனிதன் தூங்கும் நேரமான் அதிகாலை 3 மணியில் இருந்து 4 மணிக்குள் நிகழ்கிறது.

சிவபிரானின் பிட்சாடனர் கோலம்



தமிழ்நாட்டில் பெரும்பாலான சிவாலயங்ளில் இந்த மூர்த்தி இருப்பார்.

தமிழில் கந்தபுராணம், திருவிளையாடற் புராணம், காஞ்சிப் புராணம் ஆகியவற்றில் பிட்சாடனர் பற்றிய விளக்கங்கள் உள்ளன.

இடது காலை ஊன்றி வலது காலை சற்றே வளைத்து நிற்கும் தோற்றம்.
முன் வலக்கரத்தில் உள்ள அறுகம்புல்லால் மானை ஈர்த்தும்,
பின் இடக்கரம் ஒன்றில் உடுக்கை
மற்றொன்றில் பாம்புடன் திரிசூலம்
முன் இடக்கரத்தில் கபாலம்

தலை ஜடாமண்டலத்துடனும்
வலது காலில் வீரக் கழலும் உள்ளன.

பிட்சாடனர் கோலம் ஐந்து வகைத் தொழிலைக் குறிக்கிறது.
உடுக்கை ஒலி-உலக சிருஷ்டி;
திரிசூலம் - அழித்தல்,
மானுக்குப் புல் கொடுத்தல் - அருள் புரிதல்;
அருகில் நிற்கும் குண்டோதரனை அடக்கி அருளுதல்-மறைத்தல்;
கபாலம் ஏந்தி நிற்பது - காத்தல்.

மேனியில் அணிந்துள்ள பாம்புகள் யோக சாதனைகளாகவும்,
பாதச் சிலம்பு ஆகமங்களாகவும்,
பாதுகைகள் வேதங்களாகவும் உள்ளன.

இறைவன் நமது அன்பையே பிட்சையாக ஏற்கிறார்.
பக்தியைப் பெற்று அருளைக் கொடுத்தல்.

பொருளை பிட்சை இடுவது புண்ணியம்.

சிவாலயங்களில் நடக்கும் பிரம்மோற்சவ விழாவில் 8-ம் நாள் பிட்சாடனர் வலம் வருவார்.

காஞ்சிபுரம், திருச்செங்காட்டங்குடி, திருவையாறு, திருவிடைமருதூர், திருவெண்காடு, குடந்தை, வழுவூர், பந்தநல்லூர் போன்ற தலங்களில் உள்ள பிட்சாடன மூர்த்தங்கள் எழிலார்ந்தவை.

திருவெண்காடு அருகில் மேலப்பெரும் பள்ளம் என்ற சிவதலம் உள்ளது. இங்குள்ள பிட்சாடனர் வீணை ஏந்திய கோலத்தில் உள்ளார்.

இவ்வடிவினைக் கண்ட திருநாவுக்கரசர் தனது திருத்தாண்டகத்தில்

“முறித்த தொரு தோல் உடுத்து முண்டஞ் சாத்தி
முனி கணங்கள் புடைசூழ முற்றந் தோறும்
தெறித்த தொரு வீணையராய்ச் செல்வார்’

சிதம்பரத்திலும், திருச்செங்காட்டங்குடியிலும் பிட்சாடனருக்கு என தனிச் சந்நதிகள் உள்ளன.


பிட்சாடனர் - வழுவூர் (நாகப்பட்டினம்)

நடராஜர் - சிதம்பரம்
தட்சிணாமூர்த்தி - ஆலங்குடி (திருவாரூர்)
சோமாஸ்கந்தர் - திருவாரூர்
கல்யாணசுந்தரர் - திருமணஞ்சேரி


ரிஷபாரூடர் - வேதாரண்யம்
சந்திரசேகரர் - திருப்புகலூர் (திருவாரூர்)
காமசம்ஹாரர் - குறுக்கை
காலசம்ஹாரர் - திருக்கடையூர், நாகை
சலந்தராகரர் - திருவிற்குடி
திரிபுராந்தகர் - திருவதிகை (கடலூர்)
கஜசம்ஹாரர் - வழுவூர் (நாகப்பட்டினம்)
வீரபத்திரர் - திருப்பறியலூர் - நாகை
கிராதகர் - கும்பகோணம் (கும்பேஸ்வரர்)
கங்காளர் - திருச்செங்காட்டங்குடி( திருவாரூர்)
சக்ரதானர் - திருவீழிமிழலை (திருவாரூர்)
கஜமுக அனுக்கிரக மூர்த்தி - திருவலஞ்சுழி (திருவாரூர்)
சண்டேச அனுக்கிரகர் - கங்கைகொண்ட சோழபுரம் (அரியலூர்)
ஏகபாதமூர்த்தி - மதுரை
லிங்கோத்பவர் - திருவண்ணாமலை
சுகாசனர் - காஞ்சிபுரம்
உமா மகேஸ்வரர் - திருவையாறு (தஞ்சாவூர்)
அரியர்த்த மூர்த்தி - சங்கரன்கோவில் (திருநெல்வேலி)
அர்த்தநாரீஸ்வரர் - திருச்செங்கோடு (நாமக்கல்)
நீலகண்டர் - சுருட்டப்பள்ளி( ஆந்திரா)
சிவபிரானின் பிட்சாடனர் கோலம் : (Shiva darisanam)

தமிழ்நாட்டில் பெரும்பாலான சிவாலயங்ளில் இந்த மூர்த்தி இருப்பார்.

தமிழில் கந்தபுராணம், திருவிளையாடற் புராணம், காஞ்சிப் புராணம் ஆகியவற்றில் பிட்சாடனர் பற்றிய விளக்கங்கள் உள்ளன.

இடது காலை ஊன்றி வலது காலை சற்றே வளைத்து நிற்கும் தோற்றம். 
முன் வலக்கரத்தில் உள்ள அறுகம்புல்லால் மானை ஈர்த்தும், 
பின் இடக்கரம் ஒன்றில் உடுக்கை
 மற்றொன்றில் பாம்புடன் திரிசூலம்
 முன் இடக்கரத்தில் கபாலம் 

 தலை ஜடாமண்டலத்துடனும் 
 வலது காலில் வீரக் கழலும் உள்ளன.

பிட்சாடனர் கோலம் ஐந்து வகைத் தொழிலைக் குறிக்கிறது. 
உடுக்கை ஒலி-உலக சிருஷ்டி; 
திரிசூலம் - அழித்தல், 
மானுக்குப் புல் கொடுத்தல் - அருள் புரிதல்;
அருகில் நிற்கும் குண்டோதரனை அடக்கி அருளுதல்-மறைத்தல்; 
கபாலம் ஏந்தி நிற்பது - காத்தல்.

மேனியில் அணிந்துள்ள பாம்புகள் யோக சாதனைகளாகவும், 
பாதச் சிலம்பு ஆகமங்களாகவும், 
பாதுகைகள் வேதங்களாகவும் உள்ளன.

இறைவன் நமது அன்பையே பிட்சையாக ஏற்கிறார். 
பக்தியைப் பெற்று அருளைக் கொடுத்தல்.

பொருளை பிட்சை இடுவது புண்ணியம். 

சிவாலயங்களில் நடக்கும் பிரம்மோற்சவ விழாவில் 8-ம் நாள் பிட்சாடனர் வலம் வருவார். 

காஞ்சிபுரம், திருச்செங்காட்டங்குடி, திருவையாறு, திருவிடைமருதூர், திருவெண்காடு, குடந்தை, வழுவூர், பந்தநல்லூர் போன்ற தலங்களில் உள்ள பிட்சாடன மூர்த்தங்கள் எழிலார்ந்தவை.

திருவெண்காடு அருகில் மேலப்பெரும் பள்ளம் என்ற சிவதலம் உள்ளது. இங்குள்ள பிட்சாடனர் வீணை ஏந்திய கோலத்தில் உள்ளார். 

இவ்வடிவினைக் கண்ட திருநாவுக்கரசர் தனது திருத்தாண்டகத்தில்

“முறித்த தொரு தோல் உடுத்து முண்டஞ் சாத்தி 
 முனி கணங்கள் புடைசூழ முற்றந் தோறும்
 தெறித்த தொரு வீணையராய்ச் செல்வார்’

சிதம்பரத்திலும், திருச்செங்காட்டங்குடியிலும் பிட்சாடனருக்கு என தனிச் சந்நதிகள் உள்ளன.


பிட்சாடனர் - வழுவூர் (நாகப்பட்டினம்)

நடராஜர் - சிதம்பரம்
 தட்சிணாமூர்த்தி - ஆலங்குடி (திருவாரூர்)
சோமாஸ்கந்தர் - திருவாரூர்
 கல்யாணசுந்தரர் - திருமணஞ்சேரி


 ரிஷபாரூடர் - வேதாரண்யம்
 சந்திரசேகரர் - திருப்புகலூர் (திருவாரூர்)
காமசம்ஹாரர் - குறுக்கை
 காலசம்ஹாரர் - திருக்கடையூர், நாகை
 சலந்தராகரர் - திருவிற்குடி
 திரிபுராந்தகர் - திருவதிகை (கடலூர்)
கஜசம்ஹாரர் - வழுவூர் (நாகப்பட்டினம்)
வீரபத்திரர் - திருப்பறியலூர் - நாகை
 கிராதகர் - கும்பகோணம் (கும்பேஸ்வரர்)
கங்காளர் - திருச்செங்காட்டங்குடி( திருவாரூர்)
சக்ரதானர் - திருவீழிமிழலை (திருவாரூர்)
கஜமுக அனுக்கிரக மூர்த்தி - திருவலஞ்சுழி (திருவாரூர்)
சண்டேச அனுக்கிரகர் - கங்கைகொண்ட சோழபுரம் (அரியலூர்)
ஏகபாதமூர்த்தி - மதுரை
 லிங்கோத்பவர் - திருவண்ணாமலை
 சுகாசனர் - காஞ்சிபுரம்
 உமா மகேஸ்வரர் - திருவையாறு (தஞ்சாவூர்)
அரியர்த்த மூர்த்தி - சங்கரன்கோவில் (திருநெல்வேலி)
அர்த்தநாரீஸ்வரர் - திருச்செங்கோடு (நாமக்கல்)
நீலகண்டர் - சுருட்டப்பள்ளி( ஆந்திரா)

Saturday, April 20, 2013

சீந்தில் கொடி-TINOSPORA CARDIFOLIA.






1) மூலிகையின் பெயர் -: சீந்தில் கொடி.


2) தாவரப்பெயர் -: TINOSPORA CARDIFOLIA.


3) தாவரக்குடும்பம் -: MENISPERMACEAE.


4) வேறு பெயர்கள்- அமிர்த வல்லி, சோமவல்லி, சாகாமூலி சஞ்சீவி, ஆகாசவல்லி போன்றவை.(GUDUCHI).


5) பயன் தரும் பாகங்கள் -: கொடி, இலை மற்றும் வேர்.


6) வளரியல்பு - : சீந்தில் கொடி தமிழ் நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது. வரட்சியைத் தாங்கக்கூடியது.உயரமான மரங்களில் காடுகளில் அதிகமாகப் படரும் ஏறு கொடி. கடல் மட்டத்திலிருந்து ஆயிரம் அடியில் வளரக் கூடியது. இதய வடிவ இலைகளையும் தக்கையான சாறுள்ள தண்டுகளையும் காகிதம் போன்ற புறத் தோலையும் உடைய ஏறு கொடி. கொடியின் தரை தொடர்பு அகற்றப் பட்டால் கொடியின் மெல்லிய விழுதுகள் வளர்ந்து தரையில் ஊன்றி கொடிதழைக்கும். இது கோடையில் பூக்கும். பூ ஆண், பெண் என்ற இருவகையுண்டு. மஞ்சள் நிரத்தில் இருக்கும்.பெண் பூ தனியாக இருக்கும். அவரை விதை போன்று சிவப்பு நிற விதைகள் உண்டாகும். விழுதுகள் 30 அடி நீளங்கூட வளரும். விதையை விட தண்டு கட்டிங் மூலம் இனப் பெருக்கம் சிறப்பாக இருக்கும்.


7) மருத்துவப்பயன்கள் -: முதிர்ந்த கொடியை நறுக்கி இடித்து நல்ல நீரில் கரைத்து வடிகட்டி அசையாது சில மணி நேரம் வைத்திருந்து நீரை வடித்துப் பார்க்க அடியில் வெண்ணிறமான மாவு படிந்திருக்கும். மீண்டும் நீர் விட்டுக் கரைத்து தெளிய வைத்து இறுத்து எடுத்து உலர்த்தி வைக்கப் பளிச்சிடும் வெண்ணிறப் பொடியாயிருக்கும். இதுவே சீந்தில் சர்க்கரை எனப் படும். இது ஓர் கற்ப மருந்தாகக் கருதப்படுகிறது. உணவுக் கட்டுப் பாட்டுடன் நீண்ட நாள் சாப்பிட பல பிணிகளும் நீங்கும் என்பதாம்.


சீந்தில் உடற்பலம், சிறுநீர், காமம், தாய்ப்பால், பித்தம் ஆகியவற்றைப் பெருக்கும். முறை நோய் மஞ்சள் காமாலை, வாதம், கேன்சர், அல்சர், ஈரல் நோய் ஆகியவை தீர்க்கும், உடல் தேற்றும்.


சீந்தில் சர்க்கரை, கல்லீரல், மண்ணீரல் ஆகியவைகளை உரம் பெறச் செய்யும். பிற மருந்தின் சேர்கையுடன் நீரிழிவு, காமாலை, பாண்டு, சோகை, வீக்கம், இருமல், கபம், சளி, வாந்தி, காய்ச்சல்,மூர்ச்சை ஆகியவற்றைத் தீர்க்கலாம்.

சீந்தில் கொடி, நெற்பொறி வகைக்கு 50 கிராம் 1 லிட்டர் நீரிலிட்டு 150 மில்லியாக வற்றக் காய்ச்சிக் காலை, மதியம், மாலையாக 50 மி.லி. யாகக் குடித்து வர மேக வெப்பம், தாகம் தீரும்.


முதிர்ந்த கொடிகளை உலர்த்திப் பொடித்து காலை, மாலை அரைத் தேக்கரண்டி பாலுடன் சாப்பிட்டு வர உடல் உரம் பெறும். பனங்கற்கண்டுடன் சாப்பிட மதுமேகத்தால் தோன்றும் கை, கால் அசதி, மிகுதாகம், உடல் மெலிவு, விரல்களில் சுருக் சுருக்கென்று குத்துதல் ஆகியவை தீரும்.

நறுவல்லி மரம்.-CORDIA DOCHOTOMA.











மூலிகையின் பெயர் :- நறுவல்லி.


தாவரப்பெயர் :- CORDIA DOCHOTOMA.


.தாவரக்குடும்பம் :- BORAGINACEAE.


பயன்தரும் பாகங்கள் :- பழம், பட்டை, பிஞ்சு, இலை மேலும் பருப்பு (விதை) முதலியனவாகும்.


வளரியல்பு :- நறுவல்லி ஒரு பூ பூக்கும் ஒரு நடுத்தர மர வகையைச் சேர்ந்தது. இந்த மரத்தை நறுவிலி என்றும் அழைப்பர். அடிமரம் உயரம் அற்றதாக வளைந்து திருகுடையதாக கரணைகள் கொண்டிருக்கும். இது இந்தியா, இண்டோமலாயா, வட ஆஸ்திலேலியா, மேற்கு மலநேசியா, சைனா, ஜப்பான், தாய்வான், பாக்கீஸ்தான், இலங்கை, கம்போடியா, லாஸ், பர்மா, தாய்லேண்ட், வியட்னாம், இந்தோனேசியா, மலேயா, நியுஜினியா, ஆஸ்திரேலியா, ஆகிய நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவில் ராஜஸ்தான், மேற்குத் தொடர்ச்சி மலை, மாய்மர் காடுகள் ஆகிய இடங்களில் காணப்படும். ஆங்கிலத்தில் பொதுவான பெயர்கள்- Glue berry, Pink pearl, Bird lime tree, Indian cherry, ஆகியவை. இது வளமான மண்ணில் நன்கு வளரும். சரள் மண்ணில் வளராது. மணற்பாங்கான இடத்தில் நன்கு வளரும். இது சுமார் 40 அடி முதல் 90 அடி உயரம் வரை வளரும். இந்த மரம் மென்னையாக இருக்கும். பட்டையை நீக்கி விட்டு இதில் ஈருகோலி மற்றும் பேன் சீப்புச் செய்வார்கள். மரத்தின் விட்டம் 25-50 செ.மீ. இருக்கும். மரம் சிறிது திருகிச் செல்லும். 1500 அடி கடல் மட்டத்திற்கு மேல் வளராது. மழையளவு 250-300 எம்.எம் வரை தேவைப்படும். ஓடை ஓரங்களில் நன்கு வளரும். இதன் இலைகள் ஓவல் வடிவத்தில் இருக்கும், முக்கோண வடிவிலான தனித்த மாற்றடுக்கில் அமைந்த இலைகள் காம்படி அகன்றும் முனை சிறுத்தும் காணப்படும். இலைகளை லார்வா சாப்பிடும். மாட்டுத் தீவனமாகப் பயன்படுத்துவர். பர்மாவில் இலைக்காக வளர்ப்பார்கள். கொனைகளின் இறுதியில் வெள்ளை நிறமுடைய சிறிய மலர்கள் கொத்தாகப் பூத்திருக்கம். 2 செ.மீ. குறுக்களவுள்ள முட்டை வடிவிலான சதைப்பற்றுள்ள காய்கள் கொத்தாகக் காய்த்துப் பழமாகும் போது கருப்பு நிறமுடையனவாக மாறும். இலைகள் எதிர் அடுக்கில் அமைந்திருக்கும். இதன் அகலம் 2-3 செ.மீ. நீளம் சுமார் 10 செ.மீ. இருக்கும். பூக்கள் சிறிதாகவும், வெண்மை நிறத்திலும் கொத்துக் கொத்தாக இருக்கும். பூ 8 எம்.எம். நீளத்தில் இருக்கும். பூக்கள் தன் மகரந்தச் சேர்க்கையால் காய் உண்டாகும். இதன் பிஞ்சை ஊறுகாய் போடப் பயன்படுத்துவார்கள். இதன் பழங்கள் 10-13 எம். எம். நீளம் இருக்கும். பழங்கள் கத்தரிப்பூ நிறத்திலும், ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறத்திலும் கொத்துக் கொத்தாக இருக்கும். இதன் பழம் சாப்பிட வழுவழுப்பாக இருக்கும். விதை 6 எம்.எம். நீளம் கொண்டவை. விதைமூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. பறவைகளால் விதைகள் பரவும்..


மருத்துவப்பயன்கள் :– நறுவல்லியின் தன்மை சூடும், குழுமையும் ஆகும். இதன் முக்கிய பயன் சுத்த இரத்தம் உண்டாக்கும். வண்டல் சம்பந்தமான நோய்களைக் கண்டிக்கும். கபத்தை அறுக்கும். தாகம், பித்தம் நீர்சுருக்கு, சூடு சம்பந்தமான இருமல் இவைகளை நீக்கும். குடலுக்குப் பலம் கொடுக்கும். குரல் கம்மல், வயிற்றுக் கடுப்பு இவைகளை நீக்கும். மருந்து களினால் உணைடாகும் வேகத்தைத் தணிக்கும். பேரீச்சம் பழத்துடன் அரைத்துப் பூச பருக்களை உடைக்கும். நறுவல்லியின் செய்கைகள் யாதெனில், கார்ப்பு, துவர்ப்பு, இனிப்புச்சுவைகள், குழுமை, செரிமானத்தை வளர்த்தல் போன்றவையாகும். நறுவல்லியின் பட்டையின் பொடியும், கொட்டையின் பொடியும் கிருமி நோய், கொப்பளம், பித்தம், அக்கி, நஞ்சு, குடல் புண்கள், மார்பக மற்றும் நிறுநீர் குழாய் சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்தும். இதன் பட்டை குடற்புழுக்களைக் கொன்று வெளியேற்றுவதோடு மலத்தைக் கட்டவும் செய்யும். உடலுக்குக் குளிர்ச்சி தரும் இது இரத்திலான அசுத்தத்தை நீக்குகின்றது. அஜீரணத்தைப் போக்குவதோடு காச்சலையும் தணிக்கின்றது. சீதபேதி, உடல் எரிச்சல், தொழுநோய், சொறிசிரங்கு ஆகியவற்றையும் குணமாக்கும். இதன் இலை காம உணர்வை மேலோங்கச் செய்யும் இயல்புடையது. வெட்டை நோய், கண்ணிலான வலி ஆகியவற்றைக் குணமாக்கும். இதன் பழம் உடலுக்குக் குளிர்ச்சி தருவதோடு பேதி மருந்தாகப் பயன்பட்டுக் குடலில் உள்ள புழுக்கள் வெளியேறவும் உதவுகின்றது. காம உணர்வைத் தூண்டுவதோடு, சிறுநீர் எளிதில் பிரியவும் உதவும். தொழுநோய், தோல்வியாதிகள், உடல் எரிச்சல், மூச்சிறைப்பு, மூட்டுவலி, வறட்டு இருமல், சிறுநீரகக் கோளாறுகள், தொண்டை வறட்ச்சி, மண்ணீரல் வீக்கம் ஆகியவற்றைக் குணப்படுத்தும் மருந்தாகவும் இப்பழம் பயன்படுகிறது.


‘நறுவிலியி லைக்கு இரைப்பு நாசம் வேர்க்கு
மறுவில் எலும்புருக்கி மாறும் – நறுவிலியின்
தன்பழம் இரத்தபிஞ் சார்மேக முந்தீர்க்கும்
ந்நறுவலி'

நெருஞ்சில்-TRIBULUS TERRESTRIS.






1. மூலிகையின் பெயர் -: நெருஞ்சில்.

2. தாவரப் பெயர் -: TRIBULUS TERRESTRIS.

3. தாவரக்குடும்பம் -: ZYGOPHYLLACEAE.

4. வேறு பெயர் -: திருதண்டம்,கோகண்டம், காமரசி என்பன.

5. வகைகள் -: சிறு நெருஞ்சில், செப்பு நெருஞ்சில் பெருநெருஞ்சில் (யானை நெருஞ்சில்) என 3 வகைப்படும்.

6. பயன்தரும் பாகங்கள் -: கொடியின் இலை, வேர்,காய், பூ, தண்டு, மற்றும் முள் என அனைத்தும்.

7. வளரியல்பு -: நெருஞ்சில் மணற்பாங்கான இடங்களில் தரையில் படர்ந்து காணப்படும் முட் செடி.. இந்தியாவில் எங்கும் பரவலாகக் காணப்படுகிறது. தமிழகமெங்கும் சாலையோரங்களிலும், தரிசு நிலங்களிலும் வளர்கிறது. மஞ்சள் நிற மலர்களையுடையது. மலர்கள் சூரிய திசையோடு திரும்பும் தன்மையுடையன. இதன் காய் முற்றிக் காய்வதால் முள்ளுடன் இருக்கும். இதன் பெரு நெருஞ்சிலை யானைவணங்கி என்பர்.

சிறு நெருஞ்சில் பசுமையான புல் தரைகளிலும், மற்ற இடங்களிலும் தரையோடு தரையாக படர்ந்து வளரும். இதனுடைய இலைகள் பார்ப்பதற்கு புளிய இலைகள் போல் இருக்கும். ஆனால் அவற்றை விட சிறிய அளவிலும், பூக்கள் ஐந்து இதழ்களிடன் மஞ்சள் நிறமாக சிறியதாகவும் இருக்கும்.
காய்கள் கடலை அளவாகவும், எட்டு-பத்து கூறிய நட்சத்திர வடிவ முட்களிடனும் இருக்கும்.

பெரு நெருஞ்சில் சிறு செடி வகுப்பைச் சேர்ந்தது. இதன் இலைகள் அகலமாகவும், பெரியதாகவும் இருக்கும். காய்கள் பெரிதாக அருநெல்லிக்காய் அளவில் இருக்கும்.

செப்பு நெருஞ்சில் இலைகள் மிகவும் சிறியது. காயும் மிளகை விட சிறியதாக இருக்கும். இதன் பூக்கள் மூன்று இதழ்களைக் கொண்டதாய் சிகப்பு நிறமாக இருக்கும். முட்கள் காணப்படாது.

இதன் இனப்பெருக்கம் விதைமூலம் செய்யப்படுகிறது.


8. மருத்துவப் பயன்கள் -: இதன் குணம் - கல்லடைப்பு, நீரடைப்பு, நீர் எரிச்சல், நீர் வேட்கை, வெள்ளை நோய், வெப்ப நோய், சொட்டு நீர் முதலியவற்றை நீக்கும் குணமுடையது. உடம்பு எரிச்சல், வெண் புள்ளி, மேகம் முதலியவற்றை யானை நெருஞ்சில் தீர்க்கும் குணமுடையது.

நெருஞ்சில் செடி இரண்டு வேருடன் பிடங்கி, ஒரு பிடி அருகம்புல்லுடன் சட்டியில் போட்டு ஒரு லிட்டர் நீர்விட்டு அரை லிட்டராகச் சுண்டக் காய்ச்சி குடி நீராகப் பயன்படுத்தலாம். 50 மி.லி.அளவு இரு வேளை மூன்று நாள் வெறும் வயிற்றில் குடித்து வர உடல் வெப்பம் தணியும், கண் எரிச்சில், நீர் வடிதல், சிறு நீர் சொட்டாக வருதல் குணமாகும்.

நீர் அடைப்பு, சதையடைப்பு, கல்லடைப்பு முதலிய நோய்களுக்கு நன்கு கசக்கிய நெருஞ்சில் காயை அறுபத்தெட்டு கிராம் எடுத்து அதனுடன் கொத்துமல்லி விதை எட்டு கிராம் , நீர் 500 மி.லி. சேர்த்து ஒரு சட்டியில் வார்த்து நன்கு காய்ச்சி வடித்து நாற்பது மி.லி. வீதம் உள்ளே அருந்தி வர நோய்தீரும்.

நாட்பட்ட வெள்ளை நோயுடன் கூடிய நீர் கடுப்பிற்கு நெருஞ்சில் காயையும், வேரையும் ஒரே அளவாக எடுத்துக் கொண்டு அதனுடன் பச்சரிசி கூட்டி கஞ்சி வைத்து அருந்தி வர குணமாகும்.

சமூலத்துடன் கீழாநெல்லிச் சமூலம் சமன் சேர்த்து மையாய் அரைத்து கழற்சிக் காயளவு எருமைத் தயிரில் கலந்து காலை, மாலை 1 வாரம் கொடுக்க நீர்த்தாரைஎருச்சல், வெள்ளை, நீரடைப்பு, மேகக்கிரந்தி, ஊரல் தீரும்.

நெருஞ்சில் சமூலம் பத்து பங்கு, மூங்கிலரிசி ஐந்து, ஏலம் நான்கு, கச்சக்காய் நான்கு, ஜாதிக்காய் மூன்று, இலவங்கம் நான்கு, திரிகடுகு ஐந்து, குங்கும்ப்பூ சிறிது இவைகளை எடுத்து சட்டியிலிட்டு முறைப்படி குடிநீர்செய்து பனிரெண்டு முதல் முப்பத்தைந்து மி.லி. அளவு அருந்தி வர, சூட்டைத் தணித்து நீர் எரிச்சலையும் மேக நோயின் தொடர்பாக ஏற்பட்ட ஆண்மைக் குறைவையும் நீக்கி, உடலுக்கு வன்மையை ஏற்படுத்தும்.

தேள் கடிக்கு நெருஞ்சில் சிறந்த மராந்தாகப் பயன் படுத்தப்படுகிறது.

நெருஞ்சல் வித்தினைப் பாலில் அவித்து உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொண்டு காலை, மாலை கொடுத்து வரத் தாது கட்டும். இளநீரில் சாப்பிட்டு வரச் சிறுநீர்கட்டு, சதையடைப்பு, கல்லடைப்பு ஆகியவை தீரும்.

சமூலச்சாறு 1 அவுன்ஸ் மோர் அல்லது பாலுடன் கொள்ள சிறுநீருடன் இரத்தம் போதல் குணமடையும்.

பித்த வெட்டையால் ஏற்படும் வெண்குட்டம் குட்ட நோய் போல் கடுமையானது அன்று. தோலின் நிறத்தை மட்டுமே வெண்மையாக்கும். பித்த நீர் தோலில் படியும் போது வெப்பத்தை ஈர்த்து தோலின் நிறம் மாற்றுகிறது. இதற்கு நல்ல மருந்து இதுவாகும்.

பெரு நெருஞ்சில் காய் 250 கிராம், உளுந்து 100 கிராம், கருடன் கிழங்கு பொடி 200 கிராம், வாசுலுவை அரிசி 50 கிராம் சேர்த்து அரைத்து கல்கமாக்கவும். ஒரு கிலோ பசு நெய் வாணலியில் ஊற்றி எரிக்கவும். கல்கத்தை வடையாகத்தட்டி அதில் போட்டு எடுக்கவும், நெய்யை வடித்து வைக்கவும். காட்டுச் சீரகம், மிளகு வகைக்கு 100 கிராம் சேர்த்துச் சூரணம் செய்க. காலை, மாலை 5 மி.லி.நெய்யில் 5 கிராம் சூரணம் சேர்த்து சாப்பிடவும். வடையைப் பாலில் அரைத்து மேல் பூச்சாக பயன்படுத்தலாம். பூசி 2 மணி நேரம் கழித்து குளிக்கவும். புகை, புலால், போகம், புளி தவிர்க்கவும். வெண் குட்டம் குணமாகும். நாடபட்டதும் மேலும் பரவாமல் குணமாகும்.

நெருஞ்சில் விதை 300 கிராம், கோதுமை 500 கிராம், கொத்த மல்லி 100 கிராம், சுக்கு 50 கிராம் ஏலம் 10 கிராம் சேர்த்து இளவறுப்பாக வறுத்து பொடி செய்து வைக்கவும், இத்தூளை கொதி நீரில் போட்டு காபி போல சர்கரை சேர்த்து அருந்தலாம். உடலுக்கு நிறந்து ஊட்டம் தரும். குளிர்ச்சி தரும். எதிர்ப்பாற்றல் பெருகும்.

யானை நெருஞ்சலைப் பிடுங்கி நீரில் ஒரு மணி நேரம் ஊறவிடவும். இந்த நீரில் பட்டு, நூல் துணிகளை ஊற வைத்து எடுக்க அழுக்கு, கறை அகலும்.

திருநீற்றுப் பச்சை-OCIMUM BASILICUM




திருநீற்றுப் பச்சை.

1. மூலிகையின் பெயர் :- திருநீற்றுப் பச்சை.

2. தாவரப் பெயர் :- OCIMUM BASILICUM.

3. தாவரக் குடும்பம் :- LABIATAE.
4. வேறுபெயர்கள் :- உத்திரச்சடை, மற்றும் சப்ஜா.

5. பயன் தரும் பாகங்கள் :- இலை, வேர் மற்றும் விதை முதலியன.
6. வளரியல்பு :- இது சாதாரணமாக இந்தியாவில் எல்லா இடங்களிலும் வளர்கிறது. மேலும் பிரான்ஸ், இந்தோனேசியா, மொராக்கோ, அமரிக்கா, மற்றும் இத்தாலியிலும் பயிரிடப்படுகிறது. தோட்டங்களில் வளர்க்கப்படிகின்றது. இது சிறு செடி வகுப்பைச் சேர்ந்தது.
இதன் இலைகள் நடுவில் அகன்றும், நுனிகுறுகியும், நீண்டும் இருக்கும். பூக்கள் வெண்மையாக கதிர் போன்று இருக்கும். உலர்ந்த பின்னர் கருப்பு நிறமாக மாறும். இது நறு மணம் உடைய செடியாகும். இது துளசி இனத்தைச் சார்ந்தது. இது 40-50 செ.மீ. உயரம் வளரக்கூடியது.இது விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றது. இதன் இலையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயில் அஸ்ட்ரகால், பூஜினால், தைமால்டேனின் காம்பர் போன்ற வேதிப்பொருட்கள் அடங்கியுள்ளன.

7. மருத்துவப் பயன்கள் -: இதன் வேர் வெப்பத்தை உண்டாக்கி வயிற்றிலுள்ள வாயுவை அகற்றி வியர்வையை அகற்றும் செய்கை உடையது. இதன் விதை வழுவழப்புத் தன்மையோடு உடலிலுள்ள வெப்பத்தைக் குறைத்துச் சிறுநீரைப் பெருக்கும் செய்கை உடையது. சித்த மருத்துவத்தில் லேகியங்களிலும் தைலங்களிலும் மணத்திற்காக இதனைப் பயன்படுத்துகிறார்கள். பச்சை இலைகள் இருமல், சளி, உபாதைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. சமையலுக்குப் பயன் படுத்தப்படுகிறது, பசியைத்தூண்டுவதறுகும் உறக்கம் உண்டாக்குவதற்கும் உதவகிறது. வேர் காயங்களைப் போக்கப் பயன்படுகிறது. இதன் எண்ணெய் பூச்சிக்கொல்லியாகப் பயன்படுகிறது.

காது வலி, காதில் சீழ் வடிதல் முதலியநோய்களுக்கு இதன் இலையைப் பிழிந்து சாறு எடுத்து இரண்டு முதல் மூன்று துளி காதில் விட்டு வர காது வலி குறையும்.

முகப்பருக்கள் உடையவர்கள் திருநீற்றுப்பச்சிலைச் சாற்றுடன் வசம்புப் பொடியையும் குழைத்து பூசி வர முகப்பரு விரைவில் மறையும்.

படை முதலிய சரும நோய்களுக்கு இதன் இலைச் சாற்றை நோய்கண்ட இடத்தில் பூசிவர அவை எளிதில் மறையும்.

நாட்பட்ட வாந்தியால் துன்பப்படுபவர்கள் திருநீற்றுப் பச்சிலைச் சாற்றுடன் வெந்நீர் கலந்து அருந்தி வர வாந்தி குறையும்.

தேள் கடித்த பின் உண்டாகும் வலிக்கு திருநீற்றுப்பச்சிலைச் சாற்றை கடிவாயின் மீது பூச வேண்டும்.

திருநீற்றுப் பச்சிலைச் சாற்றுடன் சம அளவு பால் கலந்து காலை, மாலை என இரு வேளை 100 மி.லி.வீதம் அருந்தி வந்தால் வெட்டை நோய்கள், மேக சம்பந்தமான நோய்கள், பீனிசம், நாட்பட்ட கழிச்சல், உள் மூலம், சிறுநீரக சம்பந்தமான நோய்கள் முதலியவை குணமாகும்.

இதன் விதைகள் சர்பத்தில் போட்டு அருந்தும் பழக்கம் உள்ளது. இவை சிறந்த மணமூட்டியாகச் செயல்படுகிறது. இது ஆண்மையைப் பெருக்கும்.

திருநீற்றுப் பச்சிலையானது பிரசவத்தின் போது ஏற்படும் வலியைக் குறைக்கும்.

ஒரு சிலருக்கு கண் இரப்பையில் கட்டி ஏற்பட்டு வேதனை கொடுக்கும். இந்த சமயம், திருநீற்றுப் பச்சிலையைக் கொண்டு வந்து, கையினால் கசக்கினால் சாறு வரும். அந்தச் சாற்றை கட்டியின் மேல் கனமாகப் பூசிவிட வேண்டும். சாறு காய்ந்த பின் பழையபடி அதன் மேலேயே சாற்றைப் பூசி வர வேண்டும். இந்த விதமாகத் தொடர்ந்து பூசி வந்தால் கண் கட்டி பெரியதாகக் கிளம்பாமல் அமுக்கி விடும். சில சமயம் பெரிதாகி தானே உடைந்து சீழும் இரத்தமும் வெளியே வரும். சீழும் இரத்தமும் முழுவதும் வெளியே வந்த பின் சுத்தம் செய்து விட்டு, இந்தச் சாற்றையே போட்டு வந்தால் புண் ஆறிவிடும்.

பாவட்டை-PAVETTA INDICA.








1. மூலிகையின் பெயர் -: பாவட்டை.

2. தாவரப்பெயர் -: PAVETTA INDICA.

3. தாவரக்குடும்பம் -: RUBIACEAE.

4. பயன்தரும் பாகங்கள் -: இலை, தண்டு. காய், வேர் முதலியன.

5. வேறு பெயர்கள் -: Bride’s bush, Christmes bush.

6. வளரியல்பு -: பாவட்டை எப்பொழுதும் பச்சையாக இருக்கும் ஒரு புதர். தமிழகத்தில் எல்லாப் பகுதிகளிலும் புதர் காடுகளிலும், பெருங்காடுகளிலும் தானே வளர்கிறது. பெல்லிய காம்புள்ள இலைகளை எதிரடுக்கில் கொண்ட குறுஞ்செடிப் பதர். கொத்தான வெண்ணிற மலர்களை உச்சுயில் கொண்டது. இது நவம்பர் டிசம்பர் மாதங்களில் பூக்கும். இது 2 அடி முதல் 4 அடி உயரம் ஒரை வளரக்கூடியது. இலை 6-15 செ.மீ. நீளம் இருக்கும். இதன் வெண்மையான பூக்கள் பூச்சிகளைக் கவரும்.. பச்சையான காய்கள் முதிர்ந்து கருப்பு நிரமாக இருண்டையாக இருக்கும். இது 6 மி.மீ. விட்டத்தைக் கொண்டது. ஆசியா, ஆப்பிருக்கா மற்றும் ஆஸ்திலேஙியாவில் அதிகமாகக் காணப்படும். இது விதை மூலம் இனப்பெருக்கும் செய்யப்படுகிறது.

7. மருத்துவப் பயன்கள் -: பாவட்டை வேர் அல்லது இலை, கொன்றை, சிற்றாமுட்டி, வேலிப்பருத்தி இவற்றின் வேர், மிளகு, ஓமம் வகைக்கு10 கிராம் இடித்து 4 லிட்டர் நீரிலிட்டு அரை லிட்டராகக் காயச்சி வடித்து வேளைக்கு 30 மி.லி யாக தினம் 3 வேளை கொடுத்து வர வாத சுரம் போகும்.

பாவட்டை வேர், பூலாப்பூ சமனளவு அரைத்துக் கனமாகப் பூச அரையாப்புக் கட்டிகள் கரையும்.

பாவட்டைக் காயை சுண்டைக் காய் போலக் குளம்புகளில் சேர்த்து உண்டு வர வாத, கப நோய்கள் விரைவில் குணமாகும்.

பாவட்டை இலையை வதக்கி வாத வீக்கம், வலி ஆகியவற்றிக்கு இளஞ்சூட்டில் வைத்துக் கட்ட அந்நோய்கள் குணமாகும்.

‘ வாத சுரந்தணியம் வாயரிசி யேகிலிடுஞ்
சீதக் கடுப்பகலுந் தேமொழியே-வாதபுரி
பித்தவதி சாரமொடு பேராக் கபமுமறு
முற்றபா வட்டங்காய்க்கு ’ .

பாவட்டக் காயிக்கு வாதசுரம், அரோசகம், சிதக் கடுப்பு, பித்தாதி சுரம், சிலேஷ்ம தோஷம் நீங்கும் என்க.

இந்த காயக்கு முத்தோஷங்களையும் கண்டிக்கின்ற குணமுண்டு, இதனை வாத சுரங்களுக்குச் சித்தப்படுத்தும் படியான கியாழங்களில் சிறிது சேர்த்துப் பாகப் படுத்தலாம். இன்னும் பச்சைச் சுண்டக் காயை எப்படி குழம்புகளில் உபயோகப் படுத்துகிறார்களோ அப்படியை இதனையும் உபயோகப்படுத்துகிறார்கள். இதனால் கப சம்பந்தமான ரோகங்கள் வாத சம்பந்தமான ரோகங்கள் விரைவில் குணமடையும்.

‘ சீதவா தங்களறுந் தீபனமோவண்டாகும்
வாதங் கப்மொழியும் வார்குழலே-போதவே
ஆவட்டத் தாகடி மற்றுவடுந் தோஷம் போம்
பாவட்டைப் பத்திரிக்குப்பார். ’

பாவட்டை இலையால் சிலேஷ்ம வாதம், வாதகப தோஷம் ஆயாசம் தாபசுரம், திரி தோஷம் ஆகியவை போம். பசியுண்டாம் என்க.

"நகர்ப்புற நக்சல்" (Urban Naxal)

செயல்பாடுகள் மற்றும் சட்டப் பின்னணி ​1. அறிமுகம் மற்றும் சொல்லாடலின் தோற்றம் ​ "நகர்ப்புற நக்சல்" (Urban Naxal) என்பது இந்திய அ...