Thursday, July 19, 2018

சூரிய யோகங்கள்


நவகிரகங்களில் ஒன்றான
சூரியனால் நமக்கு பல விதமான நன்மைகள் ஏற்படுகிறது. அவ்வாறு சூரியனால் ஏற்படும் யோகங்களை பற்றி காண்போம்!...

வசி யோகம் :

ஒருவருடைய ஜாதகத்தில் சூரியனுக்கு 12-ல் சந்திரன், ராகு, கேதுவைத்தவிர மற்ற ஐவர்களான புதன், குரு, சுக்கிரன், சனி இவர்களில் ஒருவர் இருந்தால் வசியோகத்தில் பிறந்தவர்கள்.

பலன்கள் :

உலகப் புகழ் பெற்றவர்கள். நல்ல குணமும், இனிமையான வார்த்தைகள், தருமம் செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவர்கள். அமைச்சர்கள், அரசாங்க உயர் பதவி, உயர்ந்த அந்தஸ்தை அடைவார்கள்.

வெசி யோகம் :

ஒருவருடைய ஜாதகத்தில் சூரியனுக்கு இரண்டில் சந்திரன், ராகு, கேதுகள் தவிர மற்ற கிரகங்கள் இருந்தால் வெசி யோகம்.

பலன்கள் :

அழகானவர், இனிமையாக பேசுவார்கள், தைரியசாலிகளாகவும் இருப்பார்கள். தந்தையர் புகழ் பெற்றிருப்பர். உறவினருக்கு உதவுவார்கள். இவர்கள் பணத்தை சேமிக்க பழக வேண்டும்.

உபயசர யோகம் :

சூரியனுக்கு முன்னும், பின்னும் பஞ்சமகா புருஷக் கிரகங்கள் தனித்தோ அல்லது இணைந்திருந்தாலோ உபயசர யோகமாகும் (இது சந்திரனின் துருதரா யோகத்தை போன்றது) சுபர்கள் இருந்தால் சுப பலனைத்தரும்.

பலன்கள் :

பேச்சுத் திறமையுள்ளவர்கள். கெட்டிக்காரர்கள், தைரியசாலிகள், உறவினர்களுக்கு உதவி செய்வார்கள். அனைவரும் பாராட்டுவார்கள்.

ரவிச் சந்திர யோகம் (வரிஷ்ட, சம, அதம) :

சு+ரியனும், சந்திரனும் ஒருவருக்கொருவர் பரஸ்பர கேந்திரத்தில் இருந்தால் வரிஷ்ட யோகம். திரிகோணத்தில் நின்றால் சம யோகம். உபஜெய ஸ்தானங்களில் இருந்தால் அதம யோகம். ரவிச்சந்திர யோகம்.

பலன்கள் :

அரசியல் செல்வாக்கு, லாபங்கள், நுண்ணறிவு, ஞாபகசக்தி, பேச்சுத்திறன், வெற்றி கிட்டும். சம யோகமாக இருந்தால் பலன் குறையும், தீமை தராது.

அதம யோகமானால் குருடு, மன நலம் பாதிப்பு, மூடத்தனம், அவமானம் ஏற்படும்.

பாஸ்கர யோகம் :

சூரியனுக்கு இரண்டில் சந்திரனும் அல்லது லக்கினத்தில் சூரியனும், 2ல் புதனும், 11-ல் சந்திரனும் இருந்தாலும், குரு, சந்திரனுக்கு 4-7-10-ல் இருந்தால் பாஸ்கர யோகம் அமையும்.

பலன்கள் :

தைரியசாலிகளாகவும், உயர்ந்த அந்தஸ்துள்ளவர்களாகவும் இருப்பர். சகல சாஸ்திரங்களை அறிந்தவர்கள். மேடைப் பேச்சுள்ளவர்கள். மனமகிழ்ச்சி உள்ளவர்கள். தனது தொழிலை சிறப்புடன் செய்வார்கள்.

திரிலோசன யோகம் :

சூரியன், சந்திரன், செவ்வாய் ஒருவருக்கொருவர் திரிகோணங்களில் இருந்தால் திரிலோசன யோகம் அமையும்.

பலன்கள் :

சிறந்த சிந்தனையாளர், சிறந்த பேச்சாளர், சகோதரர்களுக்கு உதவி செய்வார்கள். பிறரை எளிதில் எடைபோடுவார்கள். அதிக செல்வம் மற்றும் நீண்ட ஆயுள் கொண்டவர்கள்.

⁠⁠⁠⁠ ⁠⁠⁠சிவ அபிஷேக பலன்கள்

1) அருகம்புல் ஜலத்தினால் சிவாபிஷேகம் செய்தால் நஷ்டமான  பொருட்கள்
திரும்ப கிடைக்கும்.

2) நல்லெண்ணெய் அபிஷேகத்தினால் அபம்ருத்யு நசிக்கும்.

3) பசும்பால் அபிஷேகத்தினால் ஸகல ஸௌக்கியம் கிட்டும்.

4) தயிர் அபிஷேகத்தினால் பலம், ஆரோக்கியம், யஸஸ் கிட்டும்
.
5) பசு நெய்யினால் அபிஷேகம் செய்தால் ஐஸ்வர்ய ப்ராப்தி கிட்டும்.

6) கரும்பு ரஸத்தினால் அபிஷேகம் செய்தால் தன வ்ருத்தி கிட்டும்
.
7) மிருதுவான சர்க்கரையினால் அபிஷேகம் துக்கம் நசிக்கும்.

8) தேன் அபிஷேகத்தினால் தேஜோவ்ருத்தி கிட்டும்.

9) புஷ்ப ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் பூலாபம் கிட்டும்.

10) இளநீரினால் அபிஷேகம் செய்தால் சகல ஸம்பத்தும் கிட்டும்.

11) உத்திராட்ச ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் ஐஸ்வர்யம் கிட்டும்.

12) பஸ்மத்தினால் அபிஷேகம் செய்தால் மஹா பாபங்கள் நசிக்கும்.

13) கந்தத்தினால் (அரைத்தெடுத்த சந்தனம்) அபிஷேகம் செய்தால் புத்திர
ப்ராப்தி கிட்டும்.

14) ஸ்வர்ண (தங்கம்) ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் கோரமான
தாரித்ரியம் நசிக்கும்.

15) ஸுத்த ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் நஷ்டமானவை திரும்ப
கிடைக்கும்.

16) வில்வ ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் போகபாக்யங்கள் கிட்டும்.

17) அன்னத்தினால் அபிஷேகம் செய்தால் அதிகாரம், மோக்ஷம் மற்றும்
தீர்க்காயுள் கிட்டும்.

18) திராட்சை ரஸத்தினால் அபிஷேகம் செய்தால் எல்லாவற்றிலும் ஜயம்
உண்டாகும்.

19) கர்ஜூரம் (பேரிச்சம்பழம்) ரஸத்தினால் அபிஷேகம் செய்தால் ஸத்ருக்கள்
இல்லாமல் போவர்.

20) நாவல்பழ ரஸத்தினால் அபிஷேகம் செய்தால் வைராக்கிய ஸித்தி
கிட்டும்.

21) கஸ்தூரி ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் சக்ரவர்த்தி ஆகலாம்.

22) நவரத்தின ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் தான்யம், க்ருஹம்,
கோவ்ருத்தி கிட்டும்.

23) மாம்பழ ரஸத்தினால் அபிஷேகம் செய்தால் தீராத வியாதிகள் தீரும்.

24) மஞ்சள் நீரினால் அபிஷேகம் செய்தால் மங்களம் உண்டாகும், .
⁠⁠⁠⁠

⁠⁠⁠

கர்ம வினைகள் நீக்கும் தானங்கள்

அமாவாசை திருநாளில் தானங்கள் செய்வோம்.  நமது கர்மவினைகளை தூள் தூளாக்குவோம்.

பொருட்கள்      -        தானம் செய்வதால் ஏற்படும் பலன்கள்
  
அன்னம்            -         வறுமையும், கடனும் நீங்கும்

துணி                 -        ஆயுள் அதிகமாகும்

தேன்                  -       புத்திர பாக்கியம் உண்டாகும்

தீபம்                   -       கண்பார்வை தெளிவாகும்

அரிசி                  -       பாவங்களை போக்கும்

நெய்                   -       நோய்களை போக்கும்

பால்                    -      துக்கம் நீங்கும்

தயிர்                   -       இந்திரிய சுகம் பெருகும்

பழங்கள்             -       புத்தியும், சித்தியும் உண்டாகும்

தங்கம்                -      குடும்ப தோஷங்களை நீக்கும்

வெள்ளி              -       மனக்கவலை நீங்கும்

பசு                        -       ரிஷி, தேவர், பிதுர் கடன்கள் அகலும்

தேங்காய்           -       நினைத்த காரியம் வெற்றியாகும்

நெல்லிக்கனி      -      ஞானம் உண்டாகும்

பூமி தானம்         -      ஈஸ்வர தரிசனம் உண்டாகும்

மேற்கண்ட அட்டவணையில் குறிப்பிட்டுள்ள பொருட்களை தானம் செய்வது சிறப்பு.  சிலருக்கு பொருள் வசதி குறைவாக இருக்கும்.  அவர்களால் தானம் செய்வது சிரமம். அவர்கள் கவலை கொள்ள வேண்டாம்.  இவற்றைக் காட்டிலும் சிறந்த தானம் ஒன்று உண்டு.  அது என்ன?

அது தான் பசுவிற்கு உணவளிப்பது.  கன்றுடன் கூடிய பசுவிற்கு தானம் அளித்தல் மிகவும் நல்லது.  பசுவிற்கு என்ன பொருட்கள் தானமாக தரலாம் என்ற கேள்விக்கு பதில் இதோ.

பசுவிற்கு ஒரு கட்டு அருகம்புல் அளிக்கலாம்.  ஒரு கட்டு அகத்தி கீரையை உணவாக அளிக்கலாம்.  அன்னதானம் செய்யலாம்.  அதாவது பசுவிற்கு வாழையிலையில் சாதத்தை அளிக்கலாம்.  பழங்களை அளிக்கலாம்.  பழங்களில் வாழைப்பழமே மிகச் சிறந்தது.  ஆறு மஞ்சள் வாழைப்பழங்களை பசுவிற்கு உணவாக அளிக்கலாம்.  இதை விட சிறந்த ஒரு பொருள் ஒன்று உண்டு.  அது தான் அரிசியும், வெல்லமும் கலந்து ஒரு பாத்திரத்தில் பசுவிற்கு உணவாக அளிக்கலாம்.  இதை அதிகமாக தரக்கூடாது.  பசுவிற்கு வயிற்று உபாதையை உண்டாக்கும்.

கோமாதா என்றழைக்கப்படும் பசுவின் உடலில் அனைத்து தெய்வங்களும், தேவதைகளும் வாசம் செய்கின்றனர்.  அனைத்து தெய்வங்களுக்கும் மற்றும் தேவதைகளுக்கும் ஒரே நேரத்தில் தானம் செய்ய முடியுமா?  முடியும்.  பசுவுக்கு உணவளித்தால் அனைத்து தெய்வங்களுக்கும், தேவதைகளுக்கும் உணவளித்ததாகவே சமம்.  எனவே இத்தகைய சிறப்புடைய பசுவிற்க்கு தங்களால் இயன்ற அளவு உணவை அளிக்கவும்.

அமாவாசை நாளில் பசுவிற்கு உணவளித்து நமது கர்ம வினைகளை போக்குவோம்.  அமாவாசை நாளில் பசுவிற்கு உணவளித்தல் நம் பிதுர்களையும் மகிழ்விக்கும் செயல் ஆகும்.  நம் பிதுர்களும் மகிழ்ச்சி அடைந்து அவர்களின் ஆசிகளும் கிட்டும்.  நமது குலம் தழைக்கும்.  திருவண்ணாமலை தலத்தில் பசுவிற்கு உணவளித்தலே உலகின் மிகப்பெரிய தானம் ஆகும்.  இவ்வாறு செய்யும் தருணம் மிகப்பெரிய புண்ணியம் செய்தவர்களுக்கே கிட்டும்.

அமாவாசை நாளில் நமது முன்னோர்களை வழிபடும் போது செய்யப்படும் படையல் பொருள்களை (சாதம், வாழைப்பழம், வெற்றிலைப்பாக்கு, வடை, பாயசம் முதலியன) கன்றுடன் இருக்கும் பசுவிற்கு தானமாக அளித்துக் கொண்டே வாருங்கள்.  தங்களின் வாழ்வில் எல்லா வளங்களும் தானாகவே வந்து சேரும்.  அனைத்து கர்ம வினைகளும் தீரும்.

ஒவ்வொரு அமாவாசை தினத்திலும் பசுவிற்கு உணவளிப்போம். நமது கர்ம வினைகளை தூள் தூளாக்குவோம்.

தென்னாடுடைய சிவனே போற்றி...!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...!!

எம் அண்ணாமலையானே போற்றி போற்றி...!!!

ஓம் சிவ சிவ ஓம்

Wednesday, July 18, 2018

நவகிரகங்களின்_பயோடேட்டா

சூரியன்.
காசியப முனிவரின் குமாரர். ஒளிப்பிழம்பானவர். நவக்ரகங்களில் முதன்மை ஸ்தானம் பெற்றவர்.
சிம்மராசிக்கு அதிபதி. நவகிரகங்களில் நடுவில் அமர்ந்திருப்பவர்.
திக்கு - கிழக்கு
அதிதேவதை - அக்னி
ப்ரத்யதி தேவதை - ருத்திரன்
தலம் - சூரியனார் கோவில்
நிறம் - சிவப்பு
வாகனம் - ஏழு குதிரைகள் பூட்டிய ரதம்
தானியம் - கோதுமை
மலர் - செந்தாமரை , எருக்கு
வஸ்திரம் - சிவப்பு
ரத்தினம் - மாணிக்கம்
அன்னம் - கோதுமை, ரவா, சர்க்கரைப் பொங்கல்

2.சந்திரன்.
பாற்கடலில் தோன்றியவர். தண்ணொளி உடையவர் . வளர்பிறையில் சுபராகவும், தேய்பிறையில் பாபராகவும் விளங்குபவர்.
கடக ராசிக்கு அதிபதி.
திக்கு -தென்கிழக்கு
அதிதேவதை - ஜலம்
ப்ரத்யதி தேவதை - கௌரி
தலம் - திருப்பதி
நிறம் - வெள்ளை
வாகனம் - வெள்ளைக் குதிரை
தானியம் - நெல்
மலர் - வெள்ளை அரளி
வஸ்திரம் - வெள்ளாடை
ரத்தினம் - முத்து
அன்னம் - தயிர் சாதம்

3 .அங்காரகன் (செவ்வாய்)
இவர் வீரபத்திரர் அம்சம். சுப்ரமணியரை தெய்வமாகக் கொண்ட இவர், பாவ பலனைக் கொடுக்கும் குரூரர்.
மேஷம் , விருச்சிக ராசிகளுக்கு அதிபதி.
திக்கு -தெற்கு
அதிதேவதை - நிலமகள்
ப்ரத்யதி தேவதை - க்ஷேத்திரபாலகர்
தலம் - வைத்தீசுவரன் கோவில்
நிறம் - சிவப்பு
வாகனம் - ஆட்டுக்கிடா
தானியம் - துவரை
மலர் - செண்பகப்பூ, சிவப்பு அரளி
வஸ்திரம் - சிவப்பு ஆடை
ரத்தினம் - பவளம்
அன்னம் - துவரம் பருப்பு பொடி சாதம்

4.புதன்.
இவர் சந்திரனுடைய குமாரர். தீய கிரகங்கள் விளைவிக்கும் பீடைகளை அழிக்கும் ஆற்றல் இவருக்கு உண்டு.
மிதுனம், கன்னி ராசிகளுக்கு அதிபதி
திக்கு - வட கிழக்கு
அதிதேவதை - விஷ்ணு
ப்ரத்யதி தேவதை - நாராயணன்
தலம் - மதுரை
நிறம் - வெளிர் பச்சை
வாகனம் - குதிரை
தானியம் - பச்சைப் பயறு
மலர் - வெண்காந்தள்
வஸ்திரம் - வெண்ணிற ஆடை
ரத்தினம் - மரகதம்
அன்னம் - பாசிப்பருப்பு பொடி சாதம்

5.குரு.
இவர் தேவ குரு என்னும் பட்டத்தை உடையவர். இவருடைய பார்வையால், தோஷங்கள் அனைத்தும் நீங்கும். பூரண சுபர்.
தனுசு , மீன ராசிகளுக்கு அதிபதி.
திக்கு - வடக்கு
அதிதேவதை - பிரம்மா
ப்ரத்யதி தேவதை - இந்திரன்
தலம் - திருச்செந்தூர்
நிறம் - மஞ்சள்
வாகனம் - மீனம்
தானியம் - கடலை
வஸ்திரம் - மஞ்சள் நிற ஆடை
ரத்தினம் - புஷ்பராகம்
அன்னம் - கடலைப் பொடி சாதம் , சுண்டல்.

6.சுக்கிரன்.
இவர் அசுர குரு. இவரை மழைக்கோள் என்றும் அழைப்பர். சுபர். ரிஷபம்,
துலாம் ராசிகளுக்கு அதிபதி.
திக்கு - கிழக்கு
அதிதேவதை - இந்திராணி
ப்ரத்யதி தேவதை - இந்திர மருத்துவன்
தலம் - ஸ்ரீரங்கம்
வாகனம் - முதலை
தானியம் - மொச்சை
மலர் - வெண் தாமரை
வஸ்திரம் - வெள்ளாடை
ரத்தினம் - வைரம்
அன்னம் - மொச்சைப் பொடி சாதம் .

7.சனி
இவர் சூரியனுடைய குமாரர். பாவ பலன் தருவதில் ஈசுவர பட்டம் பெற்றவர். சனியைப் போல கெடுப்பாரும் இல்லை, கொடுப்பாரும் இல்லை என்பது பழமொழியாகும்.
மகரம் , கும்பம் ராசிகளுக்கு அதிபதி.
திக்கு - மேற்கு
அதிதேவதை - யமன்
ப்ரத்யதி தேவதை - பிரஜாபதி
தலம் - திருநள்ளாறு
நிறம் - கருமை
வாகனம் - காகம்
தானியம் - எள்
மலர் - கருங்குவளை, வன்னி
வஸ்திரம் - கருப்பு நிற ஆடை
ரத்தினம் - நீலம்
அன்னம் - எள்ளுப்பொடி சாதம்

8.ராகு
இவர் அசுரத்தலையும் , நாக உடலும் உடையவர். மிக்க வீரம் உடையவர். கருநாகம் என்று அழைக்கப் படுபவர்.
திக்கு - தென் மேற்கு
அதிதேவதை - பசு
ப்ரத்யதி தேவதை - பாம்பு
தலம் - காளத்தி
நிறம் - கருமை
வாகனம் - நீல சிம்மம்
தானியம் - உளுந்து
மலர் - மந்தாரை
வஸ்திரம் - கருப்பு நிற ஆடை
ரத்தினம் - கோமேதகம்
அன்னம் - உளுத்தம்பருப்புப்பொடி சாதம்

9.கேது
இவர் நாகத்தலையும் அசுர உடலும் உடையவர். சிகி என்றும் , செந்நாகம் என்றும் அழைக்கப்படுபவர்.
திக்கு - வட மேற்கு
அதிதேவதை - சித்திரகுப்தன்
ப்ரத்யதி தேவதை - பிரமன்
தலம் - காளத்தி
நிறம் - செம்மை
வாகனம் - கழுகு
தானியம் - கொள்ளு
மலர் - செவ்வல்லி
வஸ்திரம் - பல நிற ஆடை
ரத்தினம் - வைடூரியம்
அன்னம் - கொள்ளுப்பொடி சாதம்

நவகிரக தோசம் போக்கும் சில பொதுவான வழிமுறைகளும் உள்ளன. இவ்வழிமுறைகள் எளிதானதும் எல்லாராலும் கடைப்பிடிக்கக் கூடியதுமாகும். அவற்றை இங்கு காண்போம்.

காய்ச்சாத பசும்பாலை ஏதேனும் ஒரு கோவிலுக்கு 15 நாட்கள் கொடுத்தல்: வெள்ளி டம்ளர்களை நீர் அருந்தப் பயன்படுத்துதல் சுக்கிரனை பலப்படுத்தும்.

நீலம் மற்றும் பச்சை ஆடைகளை தவிர்த்தல் சனி, புதன் பாதிப்பிலிருந்து விலக்கும்.

தினமும் நெற்றியில் மஞ்சள் திலகம் அணிதல் குருவருள் கிடைக்க வழி செய்யும்.

கண் தெரியாதவர்களுக்கு இனிப்புகள் வழங்குதல் சனியை ப்ரீத்தி அடையச் செய்யும்.

கைப்பிடி அரிசியை நதி அல்லது ஏரியில் போடவும். இது சந்திரனின் பலத்தை கூட்டும்.

தோலில் செய்த மணிபர்சில் பணம் வைக்க வேண்டாம். சனி கெட்டிருப்பவர்களின் கெடு பலனைக் குறைக்கும்;.

வாகனத்தை எப்போதும் நல்ல நிலையில் சீராக வைத்திருக்க வேண்டும். சனி பலம் நன்றாக அமையும். (ஜாதகத்தில் சனி கெட்டு, அவரது தசை நடந்தால் வாகனத்தில் அதிக பராமரிப்பு செலவு ஏற்படும் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.)

வீட்டில் சூரியனுக்குரிய யாகங்கள் செய்வதும் தினமும் சூரியனுக்கு நீர் படைப்பதும் சூரிய பலத்தை அதிகரிக்கச் செய்யும்.

ஶ்ரீவில்லிபுத்து தினமும் சரஸ்வதி மந்திரம் ஜெபிப்பது புதன் பலத்தைக் கூட்டும்: பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்தும்.

வியாழக்கிழமைகளில் கோவில்களில் லட்டு வழங்குவது குரு பலத்தை அதிகரிக்கும். அதுபோல் வியாழக்கிழமைகளில் பூண்டு, வெங்காயம் தவிர்ப்பது நல்லது.

பசுவின் கோமியத்தை வீட்டில் அவ்வப்போது தெளித்தால் வீட்டிலுள்ள பீடைகள் அகலும்.

16 நாட்கள் கோவிலில் கொள்ளு தானம் செய்வது கேது ப்ரீத்திக்கு உகந்தது.

பையில் சிறிய வெள்ளிக்கட்டி வைத்திருப்பதும்; கையில் வெள்ளி வளையம் அணிவதும் சுக்கிரனுக்கு நல்லது.

அனுமனை அனுதினமும் வணங்கினால் சனியினால் ஏற்படும் சங்கடங்கள் அகலும்.

சர்க்கரை, கடலைப் பருப்பு, நெய், அரிசி ஆகியவற்றை மாதப்பிறப்பன்று தானமளித்தால், வீட்டில் அன்னபூரணியின் கடாட்சம் கிட்டும்.

இரவில் ஒரு கைப்பிடியளவு பச்சைப் பயிறை நீரிலிட்டு, மறுநாள் அதனை புறாக்களுக்கு உணவாக அளித்தால் புதனால் ஏற்படும் தோசம் நீங்கும்.

வெள்ளிக்கிழமைகளில் பசுக்களுக்கு புல் அளித்தால் சுக்கிரனின் அனுக்கிரகம் கிடைக்கும்

நவக்கிரங்களின் காயத்ரீ மந்திரங்கள்.

1.) ஸ்ரீ சூரியன் காயத்ரீ:-ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே: பாச ஹஸ்தாய தீமஹிதன்னோ சூர்ய ப்ரயோதயாத்.

2.) ஸ்ரீ சந்திரன் காயத்ரீ:- ஓம் பத்ம த்வஜாய வித்மஹே: ஹேம ரூபாய தீமஹி தன்னோ ஸோம ப்ரயோதயாத்.

3.) ஸ்ரீ செவ்வாய் காயத்ரீ:- ஓம் வீர த்வஜாய வித்மஹே: விக்ன ஹஸ்தாய தீமஹி தன்னோ பௌம ப்ரயோதயாத்.

4.) ஸ்ரீ புதன் காயத்ரீ:- ஓம் கஜ த்வஜாய வித்மஹே: சுக ஹஸ்தாய தீமஹி தன்னோ புத ப்ரயோதயாத்.

5.) ஸ்ரீ குரு காயத்ரீ:- ஓம் விருஷப த்வஜாய வித்மஹே: க்ருணி ஹஸ்தாய தீமஹி தன்னோ குரு ப்ரயோதயாத்.

6). ஸ்ரீ சுக்கிரன் காயத்ரீ:- ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே: தநுர் ஹஸ்தாய தீமஹி தன்னோ சுக்கிர ப்ரயோதயாத்.

7.) ஸ்ரீ சனீஸ்வரர் காயத்ரீ:- ஓம் காக த்வஜாய வித்மஹே: கட்க ஹஸ்தாய தீமஹி தன்னோ மந்த ப்ரயோதயாத்.

8.) ஸ்ரீ ராகு காயத்ரீ:- ஓம் நாக த்வஜாய வித்மஹே: பத்ம ஹஸ்தாய தீமஹி தன்னோ ராகு ப்ரயோதயாத்.

9.) ஸ்ரீ கேது காயத்ரீ:- ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே: சூல ஹஸ்தாய தீமஹி தன்னோ கேது ப்ரயோதயாத்

திருமணம் நடக்குமா???

நிச்சயமாக திருமணம் நடக்கும் என்பதை நிர்ணயம் செய்வது எப்படி

ஆண் ஜாதகம்

1, ஆண் ஜாதகத்தில் லக்னாதிபதிக்கு 1,5,9-இல் அல்லது 2,12-இல் அல்லது
7-இல் 7-க்குடையவன் நின்றிருக்க 7-க்குடையவனுக்கு திரிகோணத்தில் கேதுஇல்லாமல் இருக்க வேண்டும்.

2, ஆண் ஜாதகத்தில் குருவுக்கு 1,5,9-இல் அல்லது 2,12-இல் அல்லது 7-இல் சுக்கிரன் நின்றிருக்க, சுக்கிரனுக்கு திரிகோணத்தில் கேது இல்லாமல் இருக்க வேண்டும்.

3, 7-க்குடையவனும், லக்னாதிபதியும் அடுத்தடுத்த ராசிகளiல் நின்றால்
திருமணம் நிச்சயம் நடைபெறும்.
4, 7-க்குடையவனும், லக்னாதிபதியும் ஒருவருக்கொருவர் திரிகோணமாக
நின்றால் திருமணம் நிச்சயம் நடைபெறும்.

5, 7-ஆம் பாவ அதிபதி லக்னத்திற்கு கேந்திரத்தில் ( 1-4-7-10 )
நின்றிருந்தால் திருமணம் நிச்சயம் நடைபெறும்.

6, 7-ஆம் பாவ அதிபதி குருவாக அமைந்து லக்னத்திற்கு கேந்திரத்திலோ (1-4-7-10 ) அல்லது திரிகோணத்திலோ ( 1,5,9 ) நின்றிருந்தால் திருமணம் நிச்சயம் நடைபெறும்.

7, 7-ஆம் பாவ அதிபதி செவ்வாயாக அமைந்து லக்னத்திற்கு கேந்திரத்திலோ அல்லது 6-ஆம் வீட்டிலோ அல்லது 10-ஆம் வீட்டிலோ நின்றிருந்தால் திருமணம் நிச்சயம் நடைபெறும்.

8, 7-ஆம் பாவ அதிபதிபதி சனியாக அமைந்து, லக்னத்திற்கு கேந்திரத்திலோ அல்லது 4-ஆம் வீட்டிலோ அல்லது 11-ஆம் வீட்டிலோ நின்றிருந்தால் திருமணம் நிச்சயம் நடைபெறும்.

9, 7-ஆம் பாவ அதிபதியும், லக்னாதிபதியும் இணைந்து எந்த
பாவத்திலிருந்தாலும் திருமணம் நிச்சயம் நடைபெறும்.

10, 7-ஆம் பாவ அதிபதியும் லக்னாதிபதியும் ஒருவருக்கொருவர் சம சப்தமாக இருந்தாலும் திருமணம் நிச்சயம் நடைபெறும்.

11, 7- ஆம் பாவாதிபதியும், லக்னாதிபதியும் பரிவர்த்தனை பெற்று
நின்றிருந்தால் திருமணம் நிச்சயம் நடைபெறும்.

மேற்கண்ட விதிகளில் ஒரு விதியாவது ஜாதகருக்கு பொருந்தி வருமானால்
நிச்சயம் திருமணம் ஆகும். எனக் கூறலாம்.

பெண் ஜாதகம்

1, பெண் ஜாதகத்தில் லக்னாதிபதிக்கு 1,5,9-இல் அல்லது 2,12-இல் அல்லது
7-இல் 7-க்குடையவன் நின்றிருக்க 7-க்குடையவனுக்கு திரிகோணத்தில் கேது இல்லாமல் இருக்க வேண்டும்.

2, பெண் ஜாதகத்தில் சுக்கிரனுக்கு 1,5,9-இல் அல்லது 2,12-இல் அல்லது 7-
இல் செவ்வாய் நின்றிருக்க, செவ்வாய்க்கு திரிகோணத்தில் கேது இல்லாமல் இருக்க வேண்டும்.

மேற்கண்ட விதிகளில் ஒரு விதியாவது ஜாதகருக்கு பொருந்தி வருமானால்
நிச்சயம் திருமணம் ஆகும். எனக் கூறலாம்.

Monday, July 16, 2018

உபவாச விரதங்கள்

புராணத்தில் 27 வகையான உபவாச விரதங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது...

1.உமிழ்நீரைக் கூட விழுங்காமல் இருப்பது. இதை யோகிகள் மட்டுமே கடைப்பிடிப்பார்களாம்.

2.தேன் அல்லது இளநீர் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.

3.பசுவின் பாலை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.

4.எந்த உணவுமில்லாமல் தொடர்ந்து பன்னிரண்டு நாட்கள் நீரை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.

5.காலை நேரம் மட்டும் உணவருந்தி உபவாசம் இருத்தல்.

6.பகல் நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

7.இரவு நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

8.மூன்று நாட்கள்தொடர்ந்து காலை நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

9.மூன்று நாட்கள்தொடர்ந்து மதிய நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

10.மூன்று நாட்கள்தொடர்ந்து இரவு நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

11.கடுமையான விரதங்களுக்கு 21 நாட்கள் வெறும் பசும்பால் மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.

12.மூன்று நாட்கள் பகல் ஒருவேளை மூன்று கைப்பிடி உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

13.இரவில் மட்டும் மூன்று கைப்பிடி அளவு உணவு மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

14.ஒருநாள் பகல் நேரத்தில் சுத்தமான எள்ளுப் புண்ணாக்கு மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

15.ஒருநாள் இரவில் மட்டும் பசுவின் பால் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

16.ஒரு நாள் மோரை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.

17.ஒரு நாள் முழுவதும் சுத்தமான நீரை மட்டுமே அருந்தி உபவாசம் இருத்தல்.

18.ஒரு நாள் முழுவதும் பொரிமாவு (புழுங்கல் அரிசியை வறுத்து நன்கு பொடித்து நெய், தேங்காய், சர்க்கரை ஆகியவற்றைப் போட்டுப் பிசைந்து வைத்திருப்பது) மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

19.ஒரு நாள் முழுவதும் திணை மாவு மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

20.தேய்பிறை அன்று ஆரம்பித்து வளர்பிறை முடிந்து திரும்பத் தேய்பிறை நாட்கள் வரை தினம் ஒருபிடி அன்னத்தை மட்டும் சாப்பிட்டு பின்னர் தினம் ஒவ்வொரு பிடி அன்னத்தை அதிகமாக்கிக் கொண்டு சுக்கிலபட்சம் முடிந்த பிறகு திரும்ப ஒவ்வொரு பிடி அன்னமாகக் குறைப்பது என உபவாசம் இருத்தல்.

21.ஒரு நாள் முழுவதும் வில்வ தழையையும் நீரையும் மட்டுமே அருந்தி உபவாசம் இருத்தல்.

22.ஒரு நாள் முழுவதும் அரச இலைத் தளிர்களையும், நீரையும் அருந்தி உபவாசம் இருத்தல்.

23.ஒரு நாள் முழுவதும் அத்தி இளந்தளிகளையும், நீரையும் மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.

24.இரு வேளை உணவுடன் உபவாசம் இருத்தல்.

25.முதல் நாள் ஒரு வேளை பகல் உணவு மட்டும், மறுநாள் இரவு மட்டும் உணவுடன் உபவாசம் இருத்தல்.

26.மாமிச உணவுகள், மசாலாக்கள் இல்லாத சைவ உணவுகளை மட்டுமே குறைந்த அளவு சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

27.வாழைக்காய், பூண்டு, வெங்காயம், பெருங்காய்ம் ஆகியவை சேர்ந்த உணவுகளை மட்டும் சேர்த்துக் கொள்ளாமல் உபவாசம் இருத்தல்.

- இந்த உபவாச விரதங்களில் எதைக் கடைப்பிடித்தால் நல்லது என்கிறீர்களா?.

உங்கள் உடல் நிலைக்கும், சூழ்நிலைக்கும் தகுந்த எந்த உபவாசத்தையும் நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.

ஆனால் எதுவுமே சாப்பிடாமல் நீர் மட்டும் அருந்தி உபவாசம் இருப்பதே சிறந்த விரத முறையாகும்.

கடவுளைக் கண்ட ஹரி சிங்

ஜெய்ப்பூரில், சுவாமி (சுவாமி விவேகானந்தர்) அரசின் தலைமைத் தளபதியான சர்தார் ஹரி சிங்குடன் மிகவும் நெருக்கமாகப் பழகினார். அவர் ஹரி சிங்கின் இல...