Friday, July 20, 2012

ட்ரோஜன் குதிரை பற்றிய கதை



     கிரேக்க இதிகாசக் கதை ஒன்றின் படி, கிரேக்க தேசத்து அழகியான கெலனையும் அந்நாட்டின் செல்வங்களையும் ப்ரயம் மன்னனின் மகனான பாரீஸ் என்னும் இளவரசன் தன் ட்ரோஜன் நகருக்குக் கடத்திச் சென்றுவிட்டான். இதனால் கிரேக்கர்களுக்கும் ட்ரோஜனியர்களுக்கும்    இடையே கடும் யுத்தம் வந்தது. 12 வருடங்கள் நீடித்த இப்போரை வெல்வதற்கு
கிரேக்கர்கள் ஓர் தந்திரத்தைக் கையாண்டனர். அடியில் சக்கரம் வைக்கப்பட்ட ஓர் பிரமாண்டமான மரக்குதிரையைச் செய்து அதன் வயிற்றுக்குள் போர்வீரர்களை நிறைத்து வைத்து அதைபோர்க்களத்துக்கு இழுத்துச் சென்றனராம். போர் நடந்து கொண்டிருந்தபோது கிரேக்கர், குதிரையைக் போர்களத்திலேயே விட்டு விட்டு தோற்றுப் போனவர்கள் போல் ஓடிவிட்டனர்.இதனைக்கண்ட ட்ரோஜன் வீரர்கள், கிரேக்கர்கள் தோற்றுப்போய்விட்டதாக நினைத்து குதிரையை தமது பாதுகாக்கப்பட்ட நகருக்குள் இழுத்துச் சென்று தமது வெற்றியை விமர்ச்சையாக கொண்டாடினர்.ஒரேயொரு குருட்டு மதகுரு மட்டும் அதன் உள்ளே ஆபத்து ஒளிந்திருக்கிறது என்று கத்தினானாம். யாரும் அவன் பேச்சைச் சட்டை பண்ணவில்லை. குடியும் கூத்துமாக இரவு முழுவதுமாக கொண்டாடிய அவர்கள் தூக்கத்தில் வீழ்கையில் கிரேக்க வீரர்கள் குதிரையின் வயிற்றை விட்டு வெளியே வந்து ட்ரோஜன் வீரர்கள் அனைவரையும் கொன்று அந்நகரைத் தீவைத்து எரித்தனராம். கெலன் மீட்கப்பட்டு அவள் கணவன் மெனலசிடம் கொண்டு செல்லப்பட்டாள் என கதை செல்கின்றது.

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...