நட்சத்திர ஜோதிடம்
நட்சத்திரங்களுக்குரிய தாவரங்கள் நமது
முன்னோர்கள் வான சாஸ்திரத்தை ஒட்டி பலன்கள் கணித்தனர் வான சாஸ்திரத்தின்
ஒரு பகுதியாக 12 இராசிகளுக்கும். 9 கிரகங்;களுக்கும் உரிய நட்சத்திரங்கள்
வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வகையில் அஸ்வினி முதல் ரேவதி வரை மொத்தம் 27
நட்சத்திரங்கள் ஆகும். இதன் உட்பிரிவுகளாக. ஒவ்வொரு நட்சத்திரமும் நான்கு
சம பாகங்களாக வகுக்கப்பட்டுள்ளன. இந்த பாகங்கள் ஒவ்வொன்றும் பாதங்கள்
எனப்படும். இந்த வகையில், ஒவ்வொரு நட்சத்திரமும் முதல், இரண்டாம்,
மூன்றாம் மற்றும் நான்காம் பாதங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு
இராசிக்கும் இரண்டேகால் நட்சத்திரம் உரிமையுடையது.ஒவ்வொரு கிரகத்திற்கும்
மூன்று நட்சத்திரங்கள் உள்ளது. உதாரணமாக மேஷ ராசிக்கு அஸ்வினி. பரணி,
கார்த்திகை முதல் பாதம் வரை உரிமையுள்ளதாகும். ஒவ்வொரு
நட்சத்திரத்திற்கும் (ஐனன நட்சத்திரம்-பிறந்த நட்சத்திரம்) அதற்குரிய
சிறப்பான தாவரம் வகைப்படுத்தப்பட்டுள்ளது. உதாரணமாக பரணி
நட்சத்திரத்திற்கு நெல்லி உகந்த தாவரமாக உரிமை அளிக்கப்பட்டுள்ளது. பரணி
நட்சத்திரத்தை பிறந்த நட்சத்திரமாக கொண்டவர்களுக்கு இயல்பான உடல்நிலை
பாதுகாப்புக்கு உகந்ததாக நெல்லிக்கனி விளங்குவது
கிரகங்களுக்குரிய தாவரங்கள் நமது முன்னோர்கள் வான சாஸ்திரத்தில் சிறந்து
விளங்கிய அதே நேரத்தில் கிரகங்கள் மனிதனின் வாழ்வில் ஏற்படுத்தும்
விளைவுகள் குறித்தும் ஆழ்ந்த கணக்கீடுகளை ஏற்படுத்தியள்ளனர். இதனை
அடிப்படையாகக் கொண்டு பலன்களும் கணிக்கப்பட்டன. அவை கிரக பலன்கள்
எனப்பட்டன. தீய பலன்கள் ஏற்படும் காலக் கட்டத்தில் அது எந்த கிரகத்தால்
ஏற்படுகி;;;ன்றது என்பது கணிக்கப்பட்டு. அவ்வாறு ஏற்படும் தீமைகளைக்
குறைக்க அந்த குறிப்பி;ட்ட கிரகத்திற்கென வழிபடும் தாவரங்கள்.
கிரகங்களுக்குரிய பண்பினை பிரதிபலிக்கும் தாவரங்கள் (கிரக சமித்து)
கிரகங்களுக்குரிய சிறப்பான தானியங்கள் (கிரக தானியம்) கிரகங்களுக்குரிய
நிறங்கள்,திசைகள். தொழுகை மலர்கள் போன்றவையும் இந்த வகையில்
வகைப்படுத்தப்பட்டுள்ளனர். உதாரணமாக எருக்கன் சூரிய கிரகத்தின் பண்பினை
பிரதிபலிப்பதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. சூரியனுக்குரிய தொழுகை மலராக
செந்தாமரை உள்ளது. செந்தாமரை மலர் மொட்டு இதய வடிவமாக அமைந்துள்ளது.
சூரியனின் பிரதிபலிப்பு இதயத்திலும். வயிற்றுப் பகுதியிலும் அமைவதாக வான
சாஸ்திரம் குறி;ப்பிடுகிறது. இதய நோய்க்கான மருத்துவத்திலும் (இரத்தக்
கொதிப்பு போன்றவை) தாமரை பயன்படுவது அறிவியல் ப+ர்வமாக உறுதி
செய்யப்பட்டுள்ளது. இதே போன்று அந்தந்த கிரகத்திற்கென கூறப்பட்டுள்ள
தாவரங்களும் சிறப்பான மருத்துவப் பயன்களுடன் திகழ்கின்றன.
இராசிகளுக்குரிய தாவரங்கள் ஒன்பது கிரகங்கள் 12 இராசியி;ல்--மேஷம் முதல் மீனம் வரை. அவற்றுக்குரிய நிலைப்படி சுற்றுகின்றது. இடம் மாறுகின்றன. ஓவ்வொரு இராசிக்கும் உரிய சிறப்பான கிரகங்கள் உச்சம் - ஆட்சி நிலை அடைவதாக கணக்கிடப்படுகி;ன்றன. ஊதாரணமாக குரு கிரகத்திற்க தனுசு மற்றும் மீனம் ஆகியவை சிறப்பான ராசிகள். இதே போன்று ஒவ்வொரு இராசிக்கும். அந்த இராசியின் சிறப்பான பலனைப் பெறும் கிரகத்தைப் பொறுத்து இராசிக்குரிய தாவரங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
இராசிகளுக்குரிய தாவரங்கள் ஒன்பது கிரகங்கள் 12 இராசியி;ல்--மேஷம் முதல் மீனம் வரை. அவற்றுக்குரிய நிலைப்படி சுற்றுகின்றது. இடம் மாறுகின்றன. ஓவ்வொரு இராசிக்கும் உரிய சிறப்பான கிரகங்கள் உச்சம் - ஆட்சி நிலை அடைவதாக கணக்கிடப்படுகி;ன்றன. ஊதாரணமாக குரு கிரகத்திற்க தனுசு மற்றும் மீனம் ஆகியவை சிறப்பான ராசிகள். இதே போன்று ஒவ்வொரு இராசிக்கும். அந்த இராசியின் சிறப்பான பலனைப் பெறும் கிரகத்தைப் பொறுத்து இராசிக்குரிய தாவரங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
தல விருட்சங்கள் இந்தியாவைப் பொறுத்தமட்டில், தல விருட்சங்களாக உள்ள தாவரங்கள் பலவும் கோயில்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் உரிய பாதுகாப்புடன் பராமரிக்கப்பட்டுள்ளன. தென்னிந்தியாவில் வணங்கப் பெறும் கடவுளர்களில் பெரும்பாலானவர்களுக்கு தல விருட்சங்கள் உண்டு. சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட தல விருட்சங்களும் உள்ளன. சிவபெருமானுக்கு வன்னி மரம். மாவிலிங்கம் போன்ற தல விருட்சங்கள். ஐயனாரப்பனுக்கு வீரமரம். ஈச்சமரம். போன்றவை தல விருட்சங்களாக விளங்குகின்றன. கோயில்களில் உள்ள மூலவர் தெய்வங்களைப் பொறுத்து தல விருட்சங்கள் அமைக்கப் பட்டுள்ளன. மூலவருக்கு உரிய அர்ச்சனை வழிபாடு நடைபெறாத போது அந்த ஆலயத்தி;ன சக்தி முழுவதையும் அங்குள்ள தல விருட்சமே ஏற்று. கோயிலையும். அங்குள்ள உயிரினங்கனையும். பாதுகாப்பதாக நம்பப்படுகிறது. ஆகம கருத்துக்களின்படி முறையான காலக்கட்டத்தில் திருப்பணி நடைபெறாத கோயில்களுக்கும் இந்த விஷயம் பொருந்தும். தல விருட்சங்களைப் பற்றி ஆராய்ந்து வரும் தாவரவியல் வல்லுநர்கள். இந்த குறிப்பி;ட்ட தாவரங்கள் ஒரு காலக்கட்டத்தில் குறிப்பிட்ட நிலப் பகுதியில் அபரிமிதமாகக் காணப்பட்டிருக்கக் கூடும் எனத் தெரிவிக்கின்றனர். இதற்கு நிறைய உதாரணங்கள் உண்டு. மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் தலமரமாக கடம்ப மரம் உள்ளது. ஒரு காலக்கட்டத்தில் கடம்ப வனமாக இருந்த வனப்பகுதியை பாண்டிய மன்னன் அழித்து மதுரை மாநகராக மாற்றியதாக வரலாறு கூறுகிறது. தில்லை வனமாக இருந்த நிலப்பகுதியே இன்றைய சிதம்பரம் நகரமாகும். ஆலமரக் காடுகள் நிறைந்திருந்த நிலப்பகுதியே இன்றைய திருவாங்காடு ஆகும். குற்றாலத்தில் அமைந்துள்ள குற்றாலநாதர் கோயிலின் தல மரமாக விளங்குவது குறும்பலா மரமாகும். இதனை வழிபட்டு திருஞானசம்பந்தர் பதிகம் பாடியுள்ளது தல விருட்சங்களுக்குரிய மகத்துவத்தை நாம் உணர்வதற்கு சான்றாக உள்ளது.
No comments:
Post a Comment