Wednesday, August 15, 2012

வல்லாரை / சரசுவதிக் கீரை / Centella asiatica

 
வல்லாரை / சரசுவதிக் கீரை / Centella asiatica

மனநோய்க்கு மா மருந்து !
செயலில் வல்லாரை;
அறிவில் வல்லாரை;

ஆற்றலில் வல்லாரை;
அதுவே மூலிகையில்
ஒரு வல்லாரை.
"வல்லாரை உண்டோரிடம் மல்லாடாதே' என்பது பழமொழி.

வன்மை கொண்ட மானுடர்கள் எல்லாம் மென்மைகொண்ட மூலிகையாம்- நடமாடும் சரஸ்வதியாம் வல்லாரையைச் சரணடைந்து வளம் பல பெறலாம். தேவ மருத்துவராகிய தன்வந்திரி சித்தர் தன் சீடர்களின் நினைவாற்றலும் அறிவுக்கூர்மையும் மேம்படும் பொருட்டு, அவர்களுக்கு வல்லாரை தொடர்பான மருந்துகளைக் கொடுத்து வந்ததாய் பண்டைய சித்தர் நூல்கள் குறிப்பிடுகின்றன. மனநோய்க்கு மா மருந்து !

இதில் இலை பெரிதாக உள்ள இனம், இலை சிறிதாகவும் வேர் மிகுதியாக உள்ள இனம் என இருவகை உண்டு. வேர் மிகுந்து இலை சிறியதாக உள்ள இனம் மருத்துவ குணம் அதிகம் பெற்றிருக்கிறது. மலேசியர்களும், சீனர்களும் வல்லாரையை விரும்பி உணவுடன் உட்கொள்கிறார்கள். இதிலுள்ள ஆவியாகும் எண்ணெய் தோல் பகுதியில் செயல்பட்டு நன்கு வேலை செய்கிறது. உடலைத் தேற்றும் பலம் தரும். தோல் வியாதியிலும் பயன் தரும். வீட்டுச் சமையலில் இக் கீரையை வாரம் இருமுறை பயமின்றி உபயோகிக்கலாம்.

இக்கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்சத்து 'எ', உயிர்சத்து 'சி' மற்றும் தாதுஉப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன. இரத்தத்திற்க்கு தேவையான சத்துக்களை, சரிவிகித அளவில் கொண்டுள்ளது.

மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துக்களை, தகுந்தமுறையில் பெற்றிருக்கிறது. எனவே தான், இதனை சரசுவதிக் கீரை யென்றும் அழைக்கின்றனர்.

மருத்துவ குணங்கள்
* இரத்த சுத்திகரிப்பு வேலையைச் செவ்வனே செய்யும்.
* உடல்புண்களை ஆற்றும், வல்லமைக் கொண்டது.
* தொண்டைக்கட்டு, காய்ச்சல், உடற்சோர்வு, பல்நோய்கள் மற்றும் படை போன்ற தோல் நோய்களை வேரறுக்கும் வல்லமைக் கொண்டது.
* மனித ஞாபகசக்தியை வளர்க்கும் வல்லமை கொண்டது.
* இதனைக் கொண்டு பல்துலக்கினால், பற்களின் மஞ்சள் தன்மை நீங்கும்.
* சளி குறைய உதவுகிறது.

உண்ணும் முறை
* காலைவேளையில், பறித்த சில மணி நேரங்களில், பச்சையாக நன்கு மென்று விழுங்கி வந்தால், மூளை மிகுந்த செயலாற்றல் பெறும்.
* காலைவேளையில், பறித்த சில மணி நேரங்களில், ஒரு கைப்பிடியளவுக் கீரையைப் பச்சையாக நன்கு மென்று விழுங்கிய பின், பசும்பால் உண்டு வர, மாலைக்கண் நோய் குணமாகும்.
* காலைவேளையில், பறித்த சில மணி நேரங்களில் மிளகுடன் உண்டு வர உடற்சூடு தணியும்.
* இக்கீரையை, தினமும் சமைத்து உண்ணலாம். இதன் சத்துக்கள் முழுமையாகக் கிடைக்க, சித்த மருத்துவம் கீழ்கண்டவற்றை உரைக்கிறது.
* இதனை உண்ணும் காலங்களில் மாமிச உணவுகள், அகத்திக் கீரை, பாகற்காய் ஆகியவற்றினை உண்ணக்கூடாது.
* புளி மற்றும் காரத்தினை மிகக் குறைவாகவே உண்ண வேண்டும்.
* சிறுவர் அடிக்கடி உண்ணுதல் மிக்க நல்லது.
* இக்கீரையை, சித்த மருத்துவர்கள் லேகியம், சூரணம், மாத்திரை போன்ற வடிவங்களில் பக்குவப்படுத்தி பயன்படுத்துகிறார்கள்.


Common names in different languages

* வல்லாரை, pronounced vallaarai - Tamil
* Kudakan or Kudangal or കുടക‍‍൯ / കുടങ്ങല് (Malayalam)
* Saraswathi Plant (Telugu: సరస్వతీ ఆకు)
* Ondelaga or ಒಂದೆಲಗ (Kannada)
* Ekpanni or ಒಂದೆಲಗ (?same as Kannada?) (Konkani)
* Brahmi Booti - Hindi
* 崩大碗 (literally: "chipped big bowl"- Chinese)
* Thankuni Pata
* Gotu Kola (ගොටුකොල)
* Asiatic Pennywort
* Indian Pennywort
* Luei Gong Gen
* Takip-kohol
* Antanan
* Pegagan
* Pegaga
* Kula kud
* Bai Bua Bok (ใบบัวบก)
* Brahmi (this last name is shared with Bacopa monnieri[20])
* Rau má (literally: mother vegetable- Vietnamese)
* Manimuni (Assamese)
* Yahong Yahong (Philippines)
* 병풀 (Korean)

No comments:

Post a Comment

முத்துசாமி தீட்சிதர்

மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...