Saturday, August 25, 2012

மாரடைப்பைத் தடுக்கும் `கிவி’!




`சீனத்து நெல்லிக்கனி’ என்றால் யோசிப்பீர்கள். `கிவி’ என்றால் உங்களுக்குத் தெரியக்கூடும். இந்த வெளிநாட்டுப் பழம், தற்போது நம்மூர் கடைகளில் கிடைக்கிறது.
பல மருத்துவக் குணங்கள் அடங்கிய `கிவி’யின் முக்கியமான தன்மை, மாரடைப்புக்குத் தடை போடுவது.

திடீரென்று மனிதர்களின் உயிரைப் பறிக்கும் அபாயங்களில் முக்கியமானது, மாரடைப்பு. மாரடைப்புக்கு முன் பல்வேறு நிகழ்வுகள் இதயத் தமனிகளில் நிகழ்கின்றன. அவற்றில் முக்கியமானது, ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள், பிளேட்லெட்கள் போன்றவை ஒன்றாகக் குழுமி, கட்டி அடைப்பாக மாறி இதயத் தமனிகளில் ரத்தம் செல்லாமல் முழுமையாக அடைத்து, மாரடைப்புக்கு வழிவகுப்பது.
அவ்வாறு இதயத் தமனிகளில் கட்டி உருவாகாமல் தடுக்கும் ஆற்றல் `கிவி’ பழத்துக்கு இயற்கையாக உள்ளது. மேலும் இது, வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு ஏற்ற கனியாகும்.
இதில் `போலேட்’ என்ற சத்தும், `ஒமேகா 3′ என்ற கொழுப்பு அமிலமும் மற்ற பழங்களை விட மிக அதிகமான அளவில் உள்ளது.
இவை, குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ள சத்துகளில் மிகவும் சிறந்தவை என்று உணவியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். எனவே, வளரும் குழந்தைகளுக்குக் கிவி பழத்தைக் கொடுப்பது நல்ல பலன் அளிப்பதாக அமையும்.
நீரிழிவு நோயாளிகளுக்கும் `கிவி’ பழம் நல்லது என்கிறார்கள். காரணம் இப்பழத்தின் சர்க்கரைக் குறியீட்டின் அளவானது மிகவும் குறைவு. எனவே இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை மற்ற பழங்களைப் போல விரைவாக அதிகரிக்காமல், கொஞ்சமாகவும், நிலையாகவும் நிலைநிறுத்துகிறது. எனவே சர்க்கரை நோயாளிகள் சாப்பிடுவதற்கு ஏற்ற பழம் இது என்று தெரிவிக்கப்படுகிறது.
உடல் எடையைக் குறைக்க நினைப்பவர் களுக்கும் `கிவி’ கைகொடுக்கும். காரணம், மற்ற பழங்களுடன் ஒப்பிடுகையில் இதில் குறைவான கலோரிகள் உள்ளன. ஆப்பிள், பேரிக்காயில் 32.8 கலோரிகளும், வாழைப்பழத்தில் 22.4 கலோரிகளும், ஆரஞ்சுப் பழத்தில் 20.9 கலோரிகளும் உள்ளன. ஆனால் ஒரு `கிவி’ பழத்தில் 3.8 கலோரிகளே உள்ளன.

No comments:

Post a Comment

முத்துசாமி தீட்சிதர்

மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...