கடார முருகல் அல்லது மங்குஸ்தீன் எனப்படுவது ஒருவகை பழத்தின் பெயராகும்.இப்பழத்தை மங்குஸ்தீன் என்று ஆங்கிலத்தில் அழைப்பர்.தமிழில் கடார முருகல் என்ற பெயர் இப்பழத்திற்கு உண்டு.இது சுண்டாத் தீவு மற்றும் இந்தோனேசியாவின் மொலாக்கா பகுதியைத் தாயகமாகக் கொண்டது. இம்மரம் 7 முதல் 25 m (20–80 அடி) உயரமானது. கடார முருகல் (உள்ளோட்டுச் சதயம்) இனிப்பும் இலேசான புளிப்பும் கொண்டதாகவும் , சாற்றுத்தன்மையும் சிறிதளவும் நார்த்தன்மையுமுள்ள பழமாகவும் காணப்படும். இது வெள்ளை நிறமுடையது. பழத்தின் சுற்றுக்கனியம் கருங்கபில நிறமானது.
இலங்கையில் தாழ்நில ஈரவலயத்தைச் சேர்ந்த களுத்துறை, கம்பகா,கொழும்பு, காலி ஆகிய மாவட்டங்களிலும் மற்றும் கேகாலை, கண்டிமாவட்டங்களில் சில பகுதிகளிலும் மங்குசுத்தான் பயிரிடப்படுகிறது. பொதுவாக வீட்டுத்தோட்டப் பயிராகவே இது செய்கை பண்ணப்படுகிறது.
No comments:
Post a Comment