Monday, November 18, 2013

இறை வழிபாட்டு முறைகள்



இறைவனை வழிபட நம் முன்னோர்கள் ஒன்பது வழிமுறைகளைச் சொல்லி இருக்கிறார்கள். இவற்றில் அவரவர் இயல்புக்கு ஏற்றாற் போல் ஒவ்வொருவரும் தேர்ந்தெடுத்து வழிபடலாம். இவை தான் அந்த ஒன்பது வழிபாட்டு முறைகள் -

”ச்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ:
ஸ்மரணம் பாத ஸேவனம்
அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம்
ஸக்யம் ஆத்ம நிவேதனம்”

1. ச்ரவணம் – கேட்டல்
2. கீர்த்தனம் – பாடுதல்
3. ஸ்மரணம் – நினைத்தல்
4. பாதஸேவனம் - திருவடி தொழல்
5. அர்ச்சனம் – பூஜித்தல்
6. வந்தனம் – வணங்குதல்
7. தாஸ்யம் – தொண்டு
8. சக்யம் – சிநேகம்
9. ஆத்ம நிவேதனம் – ஒப்படைத்தல்

சநாதன தர்மம் நமக்கு இந்த சுதந்திரத்தை வழிவகுத்துள்ளது. அவரவர் இயல்புக்கு ஏற்ப வழியைத் தேர்ந்தெடுத்து பயணிக்கலாம்.

இதை விட சிறந்த இறை மார்க்கம் இருப்பதாக தெரியவில்லை.

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...