Wednesday, October 15, 2014

செய்வினை தோஷம் போக வழிபாடுகள்…


1.செய்வினை காரணமாக தொழில் நஷ்டம், வறுமை, பிள்ளைகள் கல்வி மந்தம், கடன் தொல்லை போன்றவை ஏற்படலாம். செய்வினை பாதிப்புக்கு குல தெய்வக் குற்றமும் காரணமாக இருக்கலாம். செல்வம் வரும் போது குல தெய்வத்தை மறந்து விடுவதே இதற்குக் காரணம் எனவே குடும்பத்தோடு குல தெய்வத்தை மூன்று பவுர்ணமிக்கு நேரில் சென்று வழிபட்டு வந்தால் ஒருவர் செய்த செய்வினை உங்களை பாதிக்காது.
ஒரு சனிக்கிழமையில் உங்கள் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவிலுக்குச் சென்று அங்குள்ள நவகிரகங்களுக்கு தேங்காய்-9, நாட்டு வாழைப்பழகம்- 18, கொட்டைப்பாக்கு-18, வெற்றிலை -18, கதம்பப்பூ- ஒன்பது முழம். பூஜைப் பொருட்களைக் கொண்டு வழிபாடு செய்தால், உங்களுக்குக் கெடுதல் செய்ய வைக்கப்பட்ட செய்வினை நீங்கும். செய்வினை தோஷத்தை
2.விரட்டும் மற்றொரு பரிகாரம் வருமாறு:-
முதலில் குலதெய்வத்துக்குக் காணிக்கை எடுத்து வைக்க வேண்டும். 27 எலுமிச்சைப் பழம் எடுத்து, அதனைச் சாறுபிழிந்து ஒரு பாத்திரத்தில் எடுக்க வேண்டும். (சாறோடு தேவையான அளவு தண்ணீர் கலந்து வைத்துக் கொள்ளலாம்) பிழியப்பட்ட சாறை, உங்கள் வீட்டைச் சுற்றியும், வியாபார இடத்தைச் சுற்றியும் வெளிப்புறமாக ஊற்றுங்கள் சாறு பிழியப்பட்ட எலுமிச்சைத் தோல்களை உங்கள் வீட்டு முன்பு வைத்து, அதனோடு 27 அரசங்குச்சிகளைச் சேர்த்து எரிக்க வேண்டும்.
அது சாம்பலானபின், அந்த சாம்பலை உங்கள் வியாபார ஸ்தலம், உங்கள் வீடு முதலிய இடங்களில் தூவி விடுங்கள். செய்வினை பறதோடிவிடும். யோக நரசிம்மரின் படத்தை வீட்டில் வைத்து தினமும் காலையில் நீராடிய பின்பு 12 தடவை வலம் வந்து வணங்கி வாருங்கள் செய்வினை தோஷம் இருந்தால் யோக நரசிம்மரின் சக்தியால் அது முறிந்து விடும்.
3.கால பைரவர்க்கு பூசணி விளக்கு செய்து நல்லண்ணை ஊற்றி சிகப்பு துணியில் மிளகு தீபம் ஏற்றவும் சனிக்கிழமை அன்று வணக்கவும்.
4.விட்டில் 45 நாட்களுக்கு காலையில் மருதாணி விதை மட்டும் துபம் & இரவு வெண்கடுகு துபம் சாம்பிராணி உடன் போடவும்.
5.விட்டில் 45 நாட்களுக்கு பேய் மிரட்டி இலை திரி விளக்கும் உடன் நெய் தீபம் காலை மாலை போடவும்.
6.வீட்டை கடல்நீர் அல்லது இந்துப்பு விட்டு கழுவி தள்ளவும் வரம் ஒரு முறை.
7.வீட்டின் உள்ள செல்லும்போது கால் கழுவி விட்டு செலவும்.
8.வீட்டின் உள்ள தேவை இல்ல பொருள் இருத்தல் சுத்த படுத்துக.தேவை இல்ல நபர்கள் கொடுக்கும் உணவு அல்லது பொருகளை வங்காதீர்.வீட்டுக்கு வரும் அனைத்து நபர்களை
கண்காணிக்கவும்.
9.உங்கள் குடுபத்தினர் அணிந்த ஆடைகளை நனைத்து வைக்கவும்.
10.அசைவதை விடவும்.

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...