Wednesday, April 15, 2015

Dr.அம்பேத்கர்

அண்ணலும் மொழிப்புலமையும்.

அண்ணலுக்கு மராத்தியம்,பாலி, ஹிந்தி, சமஸ்கிருதம், உருது, ஆங்கிலம், ஜெர்மன்,பெரிசியன் உள்ளிட்ட பல்மொழிகளும் சிறப்பாக அறிந்தவர். ஆனால் அவர் சமஸ்கிருத மொழியில் பெற்ற புலமை ஒரு போராட்ட வடிவமாகும். இளமையில் கல்வி கற்கும் போது தீண்டப்படாத சமூகமாக பார்க்கப்பட்ட மகார் இனப் பிள்ளையாதலால் அவருக்கு சமஸ்கிருதம் மறுக்கப்பட்டது. பிறகு அவரே அதை தீவிரமாகக் கற்று எது மறுக்கப்பட்டதோ அதிலேயே உயர்நிலையை அடைந்து போராட்டக்களமாக ஆக்கி வென்றார்.

அண்ணலின் சமஸ்கிருத புலமைக்கு ஓர் எடுத்துக்காட்டுச் சம்பவம் இது. பாராளுமன்றத்தில் மொழிகள் குறித்த விவாதத்தில் அண்ணல் பேசிக்கொண்டிருந்தார். அப்போது சமஸ்கிருதத்தைப்பற்றி பேசினார். சமஸ்கிருதம் இந்திய சிறந்த மொழிகளில் முக்கியமானது என்று அவர்கூறியதும் அண்ணலின் சம்ஸ்கிருத அறிவை சோதிக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினரும், சமஸ்கிருத அறிஞருமான பேராசிரியர் மித்ரா சமஸ்கிருதத்தில் ஒரு கேள்வியை அண்ணலிடம் கேட்டார். அண்ணல் அதற்கான பதிலை சம்ஸ்கிருதத்திலேயே கூறினார். இருவருக்குமான விவாதம் சுமார் ஒரு மணிநேரம் நடந்தது. இருவருமே சமஸ்கிருதத்திலேயே பேசினார்கள். அண்ணல் அசராமல் சமஸ்கிருதத்தில் பேச, "டாக்டர் அம்பேத்கர் நீங்கள் சமஸ்கிருதத்தில் வித்வான் என்பதை ஒப்புக்கொள்கிறேன்" என்றார் பேராசிரியர் மித்ரா.

"சமஸ்கிருதம் ஓர் அறிவுச்சுரங்கம். இலக்கியப்பெட்டகம்.பிராமணர்கள் இதை சரியாகக் கற்பதுமில்லை;மற்றவர்களை கற்க அனுமதிப்பதுமில்லை" என்றார் அண்ணல்.

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...