Wednesday, April 22, 2015

கிறித்தவ மதத்தை ஏன் இலங்கையிலும், இந்தியாவிலும் பரப்புகிறார்கள் ?


                உண்மையான உலக வரலாற்றை 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வரை புரட்டிப் பார்ப்போமேயானால், பல உண்மைகள் நமக்கு புலப்படும். கிறித்தவர்களும் முசுலீம்களும் வரலாற்றுப்படி சொந்தக்காரர்களாக இருந்தாலும் இவர்களுக்குள் தீராத பகை ஈராயிரம் ஆண்டுகளாக உள்ளது உலக நடப்பைப் பார்க்கும் போதே உங்களுக்கு புலப்படும். சண்டை சண்டை சண்டை என்றே இவர்கள் சண்டை போட்டு கொன்று குவித்த மக்கள் பல்லாயிரம் கோடி. சிலுவைப்போர் என்ற பெயரில் நடந்த போர்களும் அதனால் செத்து மடிந்த பல்லாயிரம் கோடி மக்களுமே இதற்கு சாட்சி. சிலுவைப் போரைப் பற்றி இணையத்தில் எண்ணற்ற தகவல்கள் உள்ளன. படித்து அறிந்து கொள்ளுங்கள்.
 
உலகில் ஐரோப்பியர்களின் ஆதிக்க வெறியும் இனவெறியும் இந்த பூமியை சவக்குழியாக்கியிருக்கிறது என்றால் அது மிகையாகாது. இவர்களின் ஆதிக்க வெறியின் இலக்காகவே பாரத தேசமும் கடந்த பல நூற்றாண்டுகளாக பல இன்னல்களை சந்தித்து பல வளங்களையும் கொள்ளையடிக்கப்பட்டு இழந்தது. இந்த இன்னல்களை பற்றி நன்றாகவே வரலாற்று பாடத்தில் படித்திருப்பீர்கள். வியாபாரம் செய்வதற்காக வந்தவர்கள் நம் வந்தாரை வாழவைக்கும் குணத்தை பயன்படுத்திக் கொண்டு நம்மை அடிமையாக்கி வெறும் பத்தாயிரம் ஆங்கிலேயர்கள் முப்பது கோடி மக்களை அடிமைப்படுத்தி ஆட்சி செய்து நம் வளத்தை சுரண்டி சென்றனர். இவர்களுக்கு முசுலீம்களுடனான பகை தொடர்ந்து வந்து கொண்டே இருந்திருக்கிறது. இந்த பூமி இருக்கும் வரை இது தீராது. எத்தனை ஒபாமாக்களும் பின்லேடன் வந்தாலும் இது தொடர்ந்து கொண்டே இருக்கும். இவர்களின் பகையில் மாட்டிக் கொண்டது அப்பாவி இந்து மதத்தினரும், புத்த மதத்தினரும் தான்.
 
இவர்கள் தங்கள் ஆதிக்க வெறியை உலகில் ஏவிட, இருவரும் வேறு வேறு வழி முறைகளை பயன்படுத்துகின்றனர். இருபுறமும் இருக்கும் தங்கள் மக்கள் தொகையை பெருக்கிட பல வழிகளை கண்டனர். முசுலீம்கள் எத்தனை குழந்தைகள் வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என்ற யோசனையில் திட்டம் தீட்டி, சட்டம் அமைத்து தங்கள் மக்கள் தொகையை பெருக்கி வருகின்றனர். ஆனால், பொருளாதாரம் என்ற பெயரில் வாழ்வதையே கடினமாக்கிவிட்ட கிறிஸ்தவர்களோ, அந்த மக்கள் பெருக்க வழியில் செல்ல முடியாததால், உலகில் மீதமிருக்கும் இந்து மதத்தினரையும் புத்த மதத்தினரையும் குறி வைத்து அவர்களை கிறிஸ்தவர்களாக்க கங்கணம் கட்டிக்கொண்டு வருகிறார்கள்.
 
ஐரோப்பியர்களின் இனவெறியும் ஆதிக்க வெறியுமே கிறிஸ்தவ மதமாற்றத்திற்கு மூல காரணம். இதற்காக, இவர்கள் வெளிநாடுகளில் இருக்கும் சர்ச்சுகளில் மாதங்தோறும் பணம் வசூல் செய்து இலங்கை, இந்திய சர்ச்சுக்களுக்கு அனுப்பி இந்த மதமாற்ற வேலைகளில் ஈடுபடுகின்றனர். இலங்கை, இந்தியாவில் உள்ள பெரும்பாலான சர்ச்சுக்கள் ஒவ்வொன்றும் வெளிநாட்டு சர்ச்சுகளுடன் தொடர்புடையவை. வெளிநாட்டினரே நம் நாட்டிற்குள் வேற்றுமையை உண்டாக்கி நம் அமைதிக்கு பங்கம் வர வழிவகுக்கின்றனர்

No comments:

Post a Comment

இளவயது ஒற்றர் சரஸ்வதி ராஜாமணி

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மிக இளவயது ஒற்றராகச் செயல்பட்ட சரஸ்வதி ராஜாமணி அவர்களின் வாழ்க்கை வரலாறு வீரமும் தியாகமும் நிறைந்தது. ந...