Monday, September 26, 2016

" துரை முருகன் " யார் ?

திருத்தணி_முருகன்_கோயில் படிக்கட்டுகளுக்கும், சென்னைக்கும் ஒரு சம்பந்தம் உண்டு. அது ஆங்கில ஏகாதிபத்தியத்தோடு தொடர்புடையது.

அதைத் தெரிந்துகொள்வதற்கு முன் துரை என்று தமிழில் ஒரு பெயர் உண்டு. அந்தப் பெயர் சங்க இலக்கியத்திலோ, பக்தி இலக்கியத்திலோ... வேறு தமிழ் கல்வெட்டுகளிலோ காணப்படாதது. அது வெள்ளையர்கள் இந்தியாவுக்கு வந்த பிறகு தோன்றிய பெயர் .

அடிமைப்பட்டுக்கிடந்த நம் இந்தியா ஆங்கிலேயர்களை ஆஷ்துரை, அந்த துரை, இந்த துரை என்று அழைப்பதில் அவர்கள் பெருமை கொண்டார்கள்.

தமிழில் மட்டும் அண்ணாதுரை, துரைசாமி, வெள்ளைத்துரை, சாமிதுரை, துரை தயாநிதி, துரை மாணிக்கம் என இவ்வளவு பெயர்கள் வைத்திருக்க மாட்டோம்.

இப்படி தமிழுக்கு சம்பந்தமே இல்லாத " துரை " என்று தமிழோடு இணைக்கப்பட்டது ? ஒரு சிறிய சரித்திரக் குறிப்பு.

முதன் முதலில் திருத்தணி முருகனை துரையோடு இணைத்த சம்பவம்தான் திருத்தணி படிஉற்சவம் விழா.

அது ஆங்கிலப் புத்தாண்டுக்கு முந்தைய இரவு திருத்தணிப் படிக்கட்டுகளில் நடைபெறும்.

ஆங்கிலப் புத்தாண்டு அன்று, முருகன் கோயில் படி உற்சவம் நடப்பது ஏன் ? என்ற கேள்வி எழலாம்.

சோளிங்கரை அடுத்த வள்ளிமலை முருகன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டுக்கு முந்தைய இரவு, படி உற்சவம் நடக்கும்.

ஒவ்வொரு படிக்கட்டுக்கும் மஞ்சள் குங்குமம் வைத்து பூஜை செய்து படியில் ஏறிச் செல்வார்கள்.

வள்ளிமலை சுவாமிகள் என்ற ஓதுவார் இதை துவக்கி வைத்து நடத்தி வந்தார்.

அவர் திருத்தணி முருகன் கோயிலுக்கு ஒருமுறை வந்திருந்தபோது கோயிலில் பக்தர் கூட்டம் குறைவாக இருப்பதைப் பார்த்தார். என்ன காரணம் ? என விசாரித்தபோது,

இன்று ஆங்கிலப் புத்தாண்டு தினம் மக்கள் எல்லாம் துரைமார்களுக்கு சலாம் வைத்து அவர்களின் காலில் விழுந்து ஆசி பெறுகிற நாள். அதனால் புத்தாண்டு அன்று தமிழர்கள் யாரும் வருவது இல்லை' என்று கூறியிருக்கிறார்கள்.

வள்ளிமலை சுவாமிகள் " துரைகளுக்கெல்லாம் பெரிய துரையான துரை முருகன் இருக்கும் இடத்துக்கு வாருங்கள்...

இனி ஒவ்வொரு ஆங்கிலப் புத்தாண்டு அன்றும் திருத்தணியில் படி உற்சவம் நடக்கட்டும் ' என்று அழைப்பு விடுத்தார்.

துரைகளுக்கு சலாம் போட்டால் இம்சையே அதிகரிக்கும்.

எம்பெருமான் துரை முருகனுக்கு சலாம் போட்டால் புண்ணியம் வீடு வந்து சேரும். சந்ததிகளை காக்கும் என்றார்.

1917-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி முதல் திருத்தணி முருகன் துரைமுருகன் ஆனார்.

அன்று முதல் படி உற்சவம் ஆரம்பமானது. வெள்ளையர்கள் வீட்டுமுன் சலாம் போட்டு நிற்கும் அவலமும் நின்றது...

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...