அந்நிய நாட்டில் இருந்து
இந்திய வந்து மதத்தை பரப்பிய கிருத்துவ பெண்மணி பற்றிய செய்தி உலகெங்கும்
புகழ்ந்து எழுதப்பட்டது
எதோ இந்திய நாட்டிற்க்கு கிருஷ்த்துவர்கள்தான்
இலவச படிப்பும் ஏழைக்களுக்கு இறங்கும் தருமசிந்தனையை புகட்டியது போல ஒரே
புகழாராங்கள்!!!
நமது சரித்திரத்தில் பல ஆயிரம் வருடங்களாக தர்மசாலைகள் அமைத்து, வடநாட்டில் இருந்து நமது ராமேஸ்வரம் செல்லும் யாத்திரீகர்களுக்கு உணவும் இருக்க இடமும் தரும் நிறைய சத்திரங்கள் கட்டப்பட்டமை அறிவோம்..
அவற்றை சிலவற்றின் விரிவான கதைகள் பார்ப்போம்!!!
முதலில் நமது அருகில் (இரண்டு நூற்றாண்டு என்பதற்காக சொன்னேன் ) இருந்த மராட்டிய மன்னர்கள் (இவர்கள் அன்றைய செழிப்பான தஞ்சையை ஆண்டவர்கள் ) கட்டி வைத்த பல சத்திரங்களை பார்ப்போம்!!
1784 மிக புகழ்வாய்ந்த ராஜாமடம் சத்திரம் எனப்படும் மோகனாம்பாள் சத்திரம் இரண்டாம் துளஜா தனது மனைவி மோகனா சாகோபாவின் நினைவாக ஏற்ப்படுத்தினார் .. பின்னர் 1820 க்குள் சுமார் 15 பெரிய சத்திரங்கள் தஞ்சை எங்கும் கட்டப்பட்டன ..
இவைகளில் நாம் முன்பே சொன்ன ராமேஸ்வரம் செல்லும் யாத்ரீகர்களும், பள்ளியில் படிக்கும் மாணாக்கர்களும் அருகில் வசிக்கும் ஏழை எளியவர்களும் உடல் ஊனமுற்றோரும் , கோவிலில் பணிபுரியும் அந்தணர்களும் உணவு அளிக்கப்பட்டன . இந்த சத்திரங்களில் இருந்து உலுப்பை மானியம் அளிக்கப்பட்டன இது சத்திரத்திர்க்கு வர இயலாதவர்களுக்கும் பெரிய அதிகாரிகளுக்கும் அரிசி, உப்பு புளி முதலிய பொருள்கள் அவர்களுக்கு வீட்டில் சென்றே அளிக்கப்பட்டன .
இவைகளில் மிக புகழ் வாய்ந்தது முத்தாம்மாள்புரச்சத்திரம் . இது தஞ்சாவூர் பட்டுக்கோட்டை சாலையில் 20 கிலோமீட்டர் தொலைவில் ஒரத்த நாட்டில் உள்ளது.
இந்த முதாம்பாள் சத்திரத்திற்கு ஒரு சோக கதை உள்ளது ... இது 16.01.1802 ‘துன்மதி புஷ்யசுத்த த்ரயோதசியில்” தொடங்கப்பட்டது . “சரபோசி மகாராசா தனக்கு விவாகமாவதற்கு முன் எல்லாக் குணங்களும் பொருத்திய ஒரு ஸ்திரியை எடுத்துக்கொண்டு இருந்தார். அவள் இரண்டு தடவை கர்ப்பந்தரித்துப் பிரசவித்து இரு குழந்தைகளும் இறந்து போயின. இரண்டாவது பிரசவ சமயத்தில் அந்த அம்மாளும் இறந்தபடியால் அவள் மரணம் அரசனின் சோகத்துக்குக் காரணமாயிற்று . அந்த அம்மாள் இறக்கும் தருவாயில் தன பெயரில் ஒரு அன்ன சத்திரம் ஏற்படுத்த வேண்டுமென்று மகாராஜாவை கேட்டுக்கொண்டாள்.
அதற்க்கு ராஜாவும் இசைந்து சேதுக்குப் போகும் வழியில் உத்தமமானதும் யாத்திரீகர்களுக்கு மிகவும் உபயோகமுள்ளதுமான ஒரு சத்திரத்தையும் பக்கத்தில் ஒரு அக்கிரகாரத்தையும் ஒரு கோவிலையும் ஒரு சிங்காரவனம் குளம் இவைகளை கட்ட ஏற்பாடு செய்து அவிடத்திர்க்கு முக்தாம்பாள்புரம் என்று பெயரிட்டு அதை நன்றாய் நடத்துவதற்கான எற்பாடுகளை செய்து வைத்தார் “ – இவை தஞ்சாவூரில் ஒரு கோவிலில் கல்வெட்டுக்கலாக உள்ளன !!!
1825 வருடம் தஞ்சவுரை ராஜாவிற்கு துணையாக இருந்த ரெசிடண்ட் அதிகாரி ஜான் பைபாப் என்போன் ஒரத்தநாடு முக்தம்பாள் சத்திரத்தை பார்வை இட்டு ஒரு பதிவு செய்து இருக்கிறான் ... (இந்த மாறி தருமம் செய்து பணம் போவதை கண்டு அவன் நிச்சியம் பொறமை பட்டு ... பல வேலைகள் செய்து வைத்தான்!!! cap on kings expenditures etc !!) சுமார் 13,007 கலம் நெல் இந்த சத்திரத்திற்கு உமையாள்புரத்தில் இருந்து மட்டும் (பல கிராமங்கள் இந்த ஒரு சத்திரத்திற்கு இணைக்க பட்டு இருந்தது) அனுப்பப்பட்டு இருக்கிறது என்றும் (ஒரு கலம் என்பது 48 படி நெல் ) அந்த சத்திரத்தை சுற்றி ஐந்து கல்வி நிலையங்கள் இருந்தன என்று அதில் படிக்கிறவர்கள் 641 மாணவர்கள் என்றும் . ஒரு நாளைக்கு மூன்று வேலையும் சாப்பிடுகிறவர்கள் 4020 பேர் , மேலே குறிப்பிட்ட உலுப்பைதாரர்களுக்கு (அவர்கள் வீட்டிற்க்கு செல்லும்) 45,000 கலம் நெல் ... மாத சம்பளம் செலவான தொகை 9,000/- ரூபாய் அன்று ஒரு பெரிய எருதின் விலை மூன்று ரூபாய் மட்டுமே !! அங்கே உள்ள பள்ளியில் ஆங்கில படிப்பும் உண்டு திருநல்வேலியை சேர்ந்த ஒரு வெள்ளாளர் சொக்கலிங்கம் என்கிறவர் ..இந்த சத்திரத்தில் ஆங்கில படிப்பு முடித்து ஊருக்கு போன பொது அவருக்கு ரூபாய் 10/ வழங்கி அனுப்பிய கணக்கும் இருக்கு !!!
முக்தாம்பாள்புரம் சத்திரம் நிறைய வருவாயுடன் இருந்திர்க்கிறது .. east india company சுமார் 60,000/ ரூபாய் இதனிடம் கடன் வாங்கி மாசம் 600/- வட்டி குடுத்த விசயமும் தெரிகிறது. இவை எல்லாம் 1825 வருடத்து பதிவு!!!
இதேபோலேவே ராஜாமடத்திலும் (மோகனாம்பாள்) ஒரு பெரிய சத்திரம் இருந்தது அதில் 1960 வரை சுமார் 500 மாணவர்கள் தங்கி உணவருந்து படித்து வந்தனர் .. அது சுமார் 800 X 600 அடி விஸ்தாரம் கொண்டது . படிக்கிற மாணவர்களுக்கு தினமும் 10 Ml மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வந்தாதாக ஒரு குறிப்பு இருக்கிறது (1950 களில் மின்சார வசதி வரவில்லை ) வாரா வாரம் மாணவர்கள் குளிக்க 3/16 சேர் நல்லெண்ணெய் அரை பைசா அரப்பும் வழங்கப்பட்டு இருந்திருக்கிறது .. திங்கள் வியாழன் இரண்டு நாட்கள் அதிராமபட்டினத்தில் இருந்து ஒரு ஆங்கில மருத்துவர் மாணவர்களை உடல் நிலை சோதிப்பார்!!! இன்று மாசம் 10,000/- கட்டி நீங்கள் உங்கள் பிள்ளைகளை படிக்கவைக்கும் A/c room hostel களில் கூட இந்த கவனிப்பு இருக்காது !!!
இதே போல ஸ்ரீரங்கத்திற்கு கிழக்கே உள்ள திருவவனைக்கோவிலில் அமைந்துள்ளது ரங்கூன் ரெட்டியார் சத்திரம் .. இந்த சத்திரத்தை நிறுவியவர் சிதம்பரம் ரெட்டியார் ... பெரம்பலூருக்கு அருகில் உள்ள வரகுப்பட்டியில் பிறந்தவர். பர்மாவிற்கு சென்று அங்கு துறைமுகத்தில் விசைப்படகுகள் இயக்கும் தொழிலில் பொருள் ஈட்டி பெரும் செல்வந்தரானார்.
இவர் 1932 இல் சுந்தரராஜ பெருமாள் கோவிலை பெரும் பொருள்செலவில் ரங்கூனில் கட்டியுள்ளார், மேலும் ரெட்டியார் உயர்நிலை பள்ளி ஒன்றையும் ரங்கூனில் தொடங்கி நடத்தி வந்தார்.. பின்னர் இவர் ஈட்டிய பெரும் செல்வத்தை திருச்சிக்கு கொண்டு வந்து திருவானைக்காவலில் இன்று காணும் இந்த மிக பிருமாண்டமான இந்த சத்திரத்தை உருவாக்கினார்( இது சிதம்பரம் ரெட்டியார் அன்னதான சத்திரம் என்கிற ஒரு அறக்கட்டளையின் கீழ் இயங்குகிற மாறி செய்தார்)
இந்த அறக்கட்டளைக்காக லால்குடி தாலுக்காவில் ஆதிகுடி, சிறுதையூர், மேட்டுப்பட்டி, பல்லாவரம் முதலிய கிராமங்களில் சுமார் 200 ஏக்கர் நன்செய் , மணக்கால் கிராமத்தை சுற்றி 300 ஏக்கர் நன்செய் நிலங்களையும் வாங்கினார் .. இந்த நிலங்களில் கிடைக்கும் நெல் மூட்டைகளை காக்க மணக்கால் கிராமத்தில் ஒரு பிருமாண்ட நெல் கிடங்கியை ஒன்றையும் கட்டினார்.. அதை கொண்டு இந்த சத்திரத்தில் தினமும் அன்னதானம் செய்தார் ..
இன்று இது மூடி இருக்கிறது !!! எல்லா இடங்களிலும் இதே கதைதான் !!.. என்னிடம் சுமார் 400-500 தமிழக சத்திரங்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன .. இவைகளில் மாணவர்களுக்கு தங்கி படிக்க உதவிகள் செய்யப்பட்டனஅவைகள் எல்லாம் அழிந்து .. பணம் இருந்தால்தான் படிப்பு .. சோறு போட நிலம் வாங்கியது போக காலேஜ் கட்டி, கல்லு ஊன்றி வீட்டு மனை விற்று காசு சம்பாரிக்க நிலம் வாங்கி குவிக்கும் காலம் இது
பல ஆயிரம் ஏக்கர் நிலம் .. தினமும் பல ஆயிரம் பேர் படிப்பு உணவு என்று செழிப்போடு இருந்த இந்த தஞ்சையின் பல சத்திரங்கள் 20நூற்றாண்டின் விடுதலை ஆனா சுமார் 15 -20 ஆண்டுகள் வரை செயல் பட்டு வந்தன என்று கேட்டல் நீங்கள் அதிர்ச்சி அடைவீர்கள் .. ஆம் இவை சுமார் 200 ஆண்டுகள் செம்மையாக செயல் பட்டு 1960 முடிவுகளில் . அனைத்து நிலங்களும அரசியல் வாதிகளால் சூறையாடப்பட்டு மறைந்து ஒழிந்தன.
படிக்க வைக்க தங்க வைக்க ஒரு பெரிய அமைப்பு எதுவும் இல்லை ..சிவாஜி படத்தில் காட்டுவது போல இதை எவரேனும செய்ய முயன்றால் என்ன ஆகும் என்றும் காட்டி விட்டார்கள்.
திட்டம் இட்டு வெள்ளைகாரனால் மற்றும் நமது அரசியல் வியாதிகளால் இந்த பல ஆயிரம் வருடம் செழித்த பெரிய அளவிலான தரும சிந்தனைகள் அழிக்கப்பட்டன !! பொருள் ஈட்டும் வெறியை வளர்த்து விட்ட வெளிநாட்டு மோகம் தனிமனித சுயநல வாழ்விற்கு அடிகோலிவிட்டது . நான் என் குடும்பம் என் பிள்ளைகள் .. அடுத்தவனைபற்றிய சிந்தனை நமது வெற்றிக்கு தடை என சிறுவயது முதலே போதனை!! வருத்தமான சுயநல மனநிலை நோக்கி தமிழன் சென்று கொண்டு இருக்கும் வரலாற்று உண்மை ..
நன்றி.. விஜயராகவன் கிருஷ்ணன்//
No comments:
Post a Comment