இந்த முறையானது சித்தர்கள் நமக்கு அருட்கொடையாக அருளியது. இன்று நம்மிடம் பழக்கத்தில் இருந்து மறைந்துவிட்ட முறையும் கூட.
அது என்ன முறை.? ஓம் உச்சரிப்பதில் என்ன ஆச்சரியம் இருந்துவிட போகிறது.?என்ன புதுமை இருந்து விடப்போகிறது.?சாதாரணமாக ஓம் என்று சொன்னாலே போதுமே என்று தான் நமக்கு தோன்றும்.
ஓம் என்பது வெறும் வார்த்தையால் உச்சரிக்க வேண்டிய மந்திரம் அல்ல.அதனுடன் சேர்த்து பிராணனும் இயங்க வேண்டும்.பிரணவ மந்திரம் சொன்னால் மரணத்தை கூட வெல்லலாம் என்று சொல்வதின் அர்த்தம் என்ன தெரியுமா.?
இதோ
சித்தர்களால் அருளப்பட்ட முறை இது.மறைக்கப்பட்ட முறையும் கூட.மறைந்துவிட்ட முறையும் கூட.
பிரணவ தீக்ஷை என்பது தற்போது ஓம் எனும் மந்திரத்தை பலதரப்பட்ட முறையில் நமக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. அ உ ம் மூன்றும் சேர்ந்தோ அல்லது ஓம் என்ற முறையிலோ பரவலாக கிடைத்து வருகிறது.அதை நாம் உச்சரித்தும் சாதகம் செய்தும் வருகிறோம்.
ஆனால் அதை எப்படி பிரயோகம் செய்ய வேண்டும்.?
முதலில் சாதகன் பத்மாசனத்திலோ அல்லது சுகாஸனத்திலோ முதுகெலும்பு நேராக இருக்கும்படி அமர்ந்து கொள்ளல் வேண்டும்.
பின்னர் சுவாசத்தை 20 முறை உள்ளும் புறமுமாக நிதானமாக இழுத்து விட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள வேண்டும்.
'அ' மற்றும் 'உ' இரண்டும் இணைந்த எழுத்தான 'ஓ' எனும் அட்சரத்தை ரேசகம் எனும் மூச்சை வெளியே தள்ளும் முறையில் 16 வினாடி அளவு வெளியே தள்ளியவண்ணம் சப்தமாக செய்யவேண்டும்.
பின்னர் 16 வினாடி அளவு மூச்சை நிறுத்தி வைக்க வேண்டும்.அதாவது கும்பகம் எனும் முறையில்.
பின்னர் 16 வினாடி அளவு 'ம்' எனும் அட்சரத்தை பூரகம் எனும் முறையில் உள்ளே சப்தமாக இழுக்க வேண்டும்.
இது ஒரு சுற்று ஆகும்.
இது போல தினசரி குறைந்த பட்சம் 30 சுற்றுகளும் அதிகபட்சம் 120 சுற்றுகளும் செய்யலாம்.
இதுவே பிரணவம் உச்சரிக்கும் முறை ஆகும்.இது 'பிராணாயாம பிரணவம்' ஆகும்.இதுவே மரணத்தை வெல்வதற்கான அதி சூட்சுமம் அடங்கிய தொடக்கம் ஆகும்.
நுரையீரல் பாதிப்பு உள்ளவர்கள் தகுந்த குருவின் ஆலோசனைகளை பெற்று அவரின் முன்னிலையில் செய்வதே நல்லது.
இந்த முறையில் சந்தேகம் உள்ளவர்கள் அல்லது இந்த முறையை தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் தொலைபேசியில் சந்தேகங்களை கேட்க வேண்டாம்.ஏனெனில் இந்த பயிற்சியை தொலைபேசியில் விளக்க இயலாது.வேண்டுவோர் நேரில் வந்து பெற்றுக்கொள்ளலாம்.
புரிந்தவர்கள் மட்டும் ஞான குரு போகரை வணங்கிவிட்டு செய்யலாம்.
நன்றிகள்
போகர் சித்தாந்தசபை
பழனி.
9488008816
No comments:
Post a Comment