Wednesday, August 8, 2018

நிலம் சம்மந்தமான வார்த்தைகள்

பழைய ஆவணங்களிலும் காணப்படும் நிலம் சம்மந்தமான வார்த்தைகளின் அர்த்தம்.

1. ஊர் மானியம் – ஊரின் பொது ஊழியத்திற்க்காக விடப்பட்ட வரியில்லா நிலம்

2. ஊரிக்கை – ஊரை சார்ந்த நிலம்

3. காவிதி புறம் – அரசரை கவிதை பாடியதற்கு கொடுக்கப்பட்ட நிலம் ( வரிவிலக்கு)

4. சாந்து புறம் – அரசருக்கு சந்தனம் கொடுத்து வருவதருக்கு விடப்பட்ட நிலம் (வரிவிலக்கு)

5. மடப்புறம் – மடத்திற்காக விடப்பட்ட நிலம் ( வரி விலக்கு)

6. அடிசிற்புரம் – உணவிற்காக விடப்பட்ட நிலம் ( வரி விலக்கு )

7. அறப்புறம் – தரும செயலுக்கு வரி விலக்குடன் விட்ட இடம்.

8. இறையிலி – வரி நீக்கப்பட்ட இடம்

9. கடவுளின் (அ) – கோயில் விடப்பட்ட இறையிலி இடம்.கோயில் இடம்

10. சுவாஸ்தியம் (அ) – பரம்பரையாக வரும் நிலம் சுவாதீயம்

11. பூர்வீக பாத்தியம் – பரம்பரையாக வரும் நிலம்

12. அடுத்தூண் – பிழைப்புக்கு விடப்பட்ட நிலம்

13. ஒரு போகு – ஒரே தன்மையுடைய நிலம்

14. இதை – புன்செய் சாகுபடி நிலம்

15. கூ – நிலம்

16. குறிஞ்சி – மலையும் மலை சார்ந்த இடமும்

17. முல்லை – காடும் காடு சார்ந்த இடமும்

18. மருதம் – வயலும் வயல் சார்ந்த இடமும்

19. நெய்தல் – கடலும் கடல் சார்ந்த இடமும்

20. பாலை – பாலை நிலம்

21. கடறு – பாலை

22. தெரி – பாலை

23. உவர் நிலம் – உப்பு தன்மை நிலம்

24. சுரம் – பாலை

25. தண்பனை – மருதநிலம்

26. காணபாட்சி – உரிமை நிலம்

27. கரம்பு – சாகுபடி செய்யாத நிலம்

28. கரம்பை – வறண்ட களிமண் நிலம்

29. களர் – சேற்று நிலம்

30. கொல்லை – முல்லை நிலம்

31. சோலை – முல்லை நிலம்

32. கடுந்தரை – இறுகிய நிலம்

33. கொத்துக்காடு – கொத்தி பயிரிடுவதற்குரிய நிலம்

34. விளை நிலம் – விளையக்கூடிய இடம்

35. நன்செய் நிலம் – நீர்
கிடைக்கக்கூடிய, பாசனம் உள்ள இடம்

36. தோட்டக்கால் – கிணற்று பாசனம்

37. இறவை – கிணற்று பாசனம்

38. நதி மாதுருகம் – ஆற்று பாய்சல் நிலம்

39. நீராம்பம் – நீர்பாசன வசதி உள்ள நிலம்

40. நீர் நிலம் – நன்செய் நிலம்

41. திருத்து – நன்செய் நிலம்

42. கழனி நிலம் – நன்செய் நிலம்

43. காணி – நன்செய் நிலம்

44. புன்செய் நிலம் – மழையை நம்பும் பாசனம்

45. காடு – புன்செய் நிலம்

46. வானம் பார்த்த பூமி – புன்செய் நிலம்

47. செய்கால் கரம்பு – தரிசாக விடப்பட்ட நிலம்

48. தரிசு – சாகு படி செய்யப்பாடமல் கிடக்கும் நிலம்

49. தரை – பூமி

50. பூமி – நிலம்

51. கீழ்மடை – கிழக்கே இருக்கும் நீர் பாசன இடம்

52. மேல மடை – மேற்கே இருக்கும் நீர் பாசன இடம்

53. கடை மடை – இறுதியாக நீர்பாயும் இடம்

54. தினைபுனம் – தினை வகைகள் விளையும் நிலம்

55. திகர் – மேட்டு நிலம்

56. உள்ளடி நிலம் – ஏரியை அடுத்துள்ள நிலம்

57. ஆற்றுபகை – நதிநீர் பாசனத்தால் உள்ள வண்டல் நிறைந்த நிலம்

58. கல்லாங்குத்து நிலம் – ( கற்கள் மிகுந்து காணப்படும் நிலம்)

59. வட்டகை நிலம் – சுற்றிலும் வெளியிதப்பட்ட நிலம்

60. அசும்பு – வழுக்கு நிலம்

61. மேய்ச்சல் நிலம் – கால்நடை மேயும் நிலம்

62. செம்பாட்டு நிலம் – செம்மண் நிலம்

63. சேவலை – செம்மண் நிலம்

64. கரிசல் – கருப்புமண் நிலம்

65. களிதரை – களிமண் நிலம்

66. நத்தம் – கிராமத்தில் வீட்டுமனை

67. மேட்டு கழனி – மேடான நன்செய்

68. பள்ளக்காடு – பள்ளமான புன்செய்

69. பயிரிலி – தரிசு நிலம்

70. பழந்தரை – நீண்ட நாள் சாகுபடியில் இருந்து வளம் குன்றிய நிலம்

71. புழுதி காடு – புழுதியாக விடப்பட்ட புன்செய்

72. புண்புலம் – தரிசு நிலம்

73. புன்னிலம் – வறண்ட பயனற்ற நிலம்

74. மானாவரரி – மழை நீரால் சாகுபடி

75. மா – நிலம்

76. மென்பால் – மருதநிலம்

77. வறுநிலம் – பாழ்நிலம்

78. விடுநிலம் – தரிசு நிலம்

79. மெல்லடி புலம்பு – நெய்தல் நிலம்

80. பார் – கடினமான நிலம்

81. பற்றுகட்டு – குடியுரிமை நிலம்

82. பங்கு காடு – கூட்டு பங்கு காடு

83. பாழ் நிலம் – விளைச்சலுக்கு உதவாத நிலம்

84. புறவு – முல்லை நிலம்

85. புறணி – முல்லை நிலம்

86. விருந்தி – ஒருவர் பிழைப்புக்கு மானிய நிலம்

87. விதைப்பாடு – குறிப்பிட்ட அளவு விதை விதைப்பதற்குரிய நிலம்

88. வித்துப்பாடு – குறிப்பிட்ட அளவு விதை விதைப்பதற்குரிய நிலம்

89. முதை புனம் – நெடுங்காலம் பயன்பாட்டில் உள்ள நிலம்

90. மானியம் – கோயில் நிர்வாகம் அறச்செயல்கள் போன்றவற்றிற்கு முற்காலத்தில்வழங்கப்பட்ட வரியில்லாத நிலம்

91. மனை – வீடு கட்டுவதற்கான நிலம்

92. போடுகால் – தரிசு நிலம்

93. பொது நிலம் – பிரிக்கபடாத நிலம்

94. மஞ்சள் காணி – சீதன நிலம்

95. பொன்காணி – சீதன நிலம்

96. பூசாவிருத்தி – கோயிற் பூசைக்கு விடப்பட்ட மானியம்

97. புறம்போக்கு நிலம் – சாகுபடிக்கு ஏற்றவை அல்ல (அ) பொது பயன்பாட்டிற்கு விடப்பட்ட தீர்வை
விதிக்கப்படாத நிலம்.

98. புறம் – இறையிலி நிலம்

99. புறவு – அரசனால் அளிக்கப்பட்ட மானிய நிலம்

100. பிரம்ப தேயம் – பிராமணர்க்கு தரப்பட்ட மானிய நிலம்

101. பாதவக்காணி – கோயில் பணியாளர்களுக்கு படியாக தரப்பட்ட நிலம்

102. படிபுறம் – கோயில் அர்ச்சகருக்கு அளிக்கப்படும் மானிய நிலம்

103. வெட்டுகாடு – திருத்தியமைத்த காட்டு நிலம்

104. வேலி – நிலம்

105. வெங்கள் மண் – சூரிய வெப்பத்தால் சூடேறிய மண்

106.தர்காசி நிலம் – தரிசு நிலம்

இது போன்று இன்னும் பல்வேறு வகையான நிலங்கள் உள்ளன.

No comments:

Post a Comment

முத்துசாமி தீட்சிதர்

மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...