Monday, March 25, 2019

ஸ்ரீ லக்ஷ்மண ஜெயம்

ஸ்ரீராமர் பட்டாபிஷேகம் ஏற்ற பின் ராமரை பார்த்து ஆசி கூற அகஸ்திய மாமுனிவர் அயோத்திக்கு வருகை புரிந்தார் அகஸ்தியர் சபையில் அமர்ந்ததும் ராவண வதம் பற்றி விவாதிக்கலாயினர் அனைவரும் அப்பொழுது அகஸ்தியர் சபையினரை பார்த்து ராவண கும்பகர்ண வதத்தை விட லக்ஷ்மணன் ராவணன்மகன் மேகநாதனை வதைத்ததே மாபெரும் வீர செயல் என்றார்.

அகஸ்தியர் அதை கேட்டு அனைவரும் ஆச்சிரியமாக அகஸ்தியரை பார்க்க ஸ்ரீராமர் ஏதும் அறியாதவர் போல் ஸ்வாமி எதை வைத்து அப்படி கூறினீர்கள்மேகநாதன் அவ்வளவு சக்தியுள்ளவனா என்று கேட்க அகஸ்தியர் ராமா எல்லாம் அறிந்தவன் நீ ஆனால் ஏதும் அறியாதவன் போல் லக்ஷ்மணின் பெருமையை என் வாயாலே கூறவேண்டும் என்றுதானே இப்படி அறியாதவன் போல் கேட்கிறாய் சரிநானே கூறுகிறேன் சபையோர்களே ராவணன் மகன் மேகநாதன் தேவலோக அரசன் இந்திரனுடன் போர்புரிந்து அவனை வென்று சிறையில் அடைத்து வைத்தது யாவரும் அறிந்ததே

நான் முக கடவுளான பிரம்மா இந்திரனை விடுவிக்க மேகநாதனிடம் கோரிக்கை வைக்க மேகநாதன் இந்திரனை விடுவிக்க வேண்டுமென்றால் தாங்கள் எனக்கு மூன்று அறிய வரங்கள் தரவேண்டும் என நிபந்தனை வைத்தான் அவை
1.பதினான்கு ஆண்டுகள் உணவு உண்ணாதவனும் 2.அதே பதினான்கு ஆண்டுகள் ஒரு நொடி கூட உறங்காது இருப்பவனும் 3.அதே பதினான்கு ஆண்டுகள் எந்த ஒரு பெண் முகத்தையும் ஏறெடுத்து பார்க்காது இருப்பவன் எவனோ அவனால் மட்டுமே எனக்கு மரணம் நிகழவேண்டும் என்று பிரம்மாவிடம் மூன்று அறியவரங்களை பெற்று இந்திரனை விடுவித்தான் அதனால் மேகநாதனை யாவரும் இந்திரஜித் என்று அழைத்தனர்

இப்படி பட்ட மேகநாதனை வதம் செய்த பெருமை லக்ஷ்மணனையே சேரும் என்று கூறிமுடிக்க,

ராமர் ஸ்வாமி லக்ஷ்மணன் என்னுடன் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் இருந்த போது அவன் எந்த ஒரு மாதையும் (பெண்ணையும்) ஏறெடுத்து பார்த்ததில்லை என்பதை நான் அறிவேன் ஆனால் உணவும் உறக்கமும் இல்லாமல் எப்படி இருந்திருப்பான் என்று கேள்வி எழுப்ப

அகஸ்தியர் அனைத்தும் அறிந்து வைத்து கொண்டே கேட்கிறாயே சரி சற்று பொறு உன் கேள்விக்கான விடையை லக்ஷ்மணனிடமே கேட்டு தெரிந்து கொள்வோம் என்று கூறி லக்ஷ்மணனை அழைத்து வர ஏற்பாடு செய்தார்

அகஸ்தியர் சபைக்கு வந்த லக்ஷ்மணன் அண்ணன் ராமரையும் குரு அகஸ்தியரையும் சபையோரையும் வணங்கிய பின் ராமர் தன் சந்தேகத்தை கேட்டார்லக்ஷ்மணா என்னோடு வனவாசம் இருந்தபோது எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்க்காமையும் உணவு உண்ணாமையும் உறக்கம் கொள்ளாமையும் இருந்தாய் என அகஸ்தியர் கூறுகிறாரே எப்படி என சபையோர் முன் விளக்கமுடியுமா

லக்ஷ்மணர் அண்ணா உங்களுக்கு நினைவு இருக்கலாம் ரிஷிமுக பர்வதத்தில். மாதா சீதையை தேடிஅலைந்த போது மாதாவால் வீசப்பட்ட அணிகலன்களை சுக்ரீவன் நம்மிடம் காட்டும்போது அன்னையின் பாத அணிகலன்களை தவிர வேறு எதுவும் என்னால் அடையாளம் காண முடியவில்லை காரணம் அன்னையின் பாதத்தை மட்டுமே பார்த்து நான்தினமும் வணங்குவேன் அதனால் பாதஅணிகலன்களை மட்டுமே என்னால் அடையாளம் காணமுடிந்தது.

அடுத்து வனவாசத்தின் போது நீங்களும் மாதாவும் இரவில் உறங்கும்போது நான் காவல் புரியும் நேரம் நித்ராதேவி என்னை ஆட்கொள்ள வரும் நேரம் நான் நித்ராதேவி யிடம் ஒரு வரம் கேட்டேன் அம்மா என் அண்ணன் ராமரையும் என் அண்ணியானமாதா சீதா தேவியையும் பாதுகாக்கவே நானும் அண்ணனோடு வனவாசம் வந்துள்ளேன்

அதனால் எங்கள் வனவாசம் முடியும் வரை என்னை நீ ஆட்கொள்ளவே கூடாது இந்த வனவாசம் முடியும் வரை எனக்கு உறக்கமே வரக்கூடாது என வேண்டிக்கொண்டேன் நித்ராதேவியும் என் வேண்டுதலுக்கு செவி சாய்த்து என்னை பதினான்கு ஆண்டுகள் ஆட்கொள்ள மாட்டேன் என வரமளித்தாள்.

அதனால் எனக்கு உறக்கம் என்பதே இல்லாமல் இருந்தது வனவாசத்தின் போது மூன்றாவது நம் குருநாதராகிய விஸ்வாமித்திரர் நம் உடல் சோர்வு அடையாமல் இருக்கவும் பசியே எடுக்காமல் இருக்கவும் பலா அதிபலா என்னும் மிகவும் சக்திவாய்ந்த காயத்திரி மந்திரத்தை நம் இருவருக்கும்

அவரது யாகம் வெற்றி பெற காவல் புரிந்ததற்காக உபதேசித்தார் அந்த பலா அதிபலா மந்திரத்தை தினமும் உச்சரித்தே எனக்கு பசிஏற்படாமலும் உடல் சோர்வு அடையாமலும் பார்த்துக்கொண்டேன் என்று கூற சபையினர் எல்லோருமே லக்ஷ்மணனை ஆச்சிரியமாக பார்க்க
ஆஞ்சநேயர் அயர்ந்தே போனார் லக்ஷ்மணின் ராம பக்தியை நினைத்து ராமர் அரியணையை விட்டு இறங்கி வந்து லக்ஷ்மணனைகண்ணீருடன் ஆரத்தழுவி கொண்டார் ஜெகம் புகழும் புண்ணிய கதை ராமனின் கதை மட்டும் அல்ல, லக்ஷ்மணின் கதையும் என்பது எம் கருத்து..! ஸ்ரீ ராமஜெயம் சொல்வது எவ்வளவு புண்ணியமோ அப்படியே

ஸ்ரீ லக்ஷ்மண ஜெயம் சொல்வது புண்ணியமே

கர்ணனும் கிருஷ்ணரும்

"என் தாயார் நான் பிறந்த நேரத்தில் என்னை ஆற்றில் விட்டுவிட்டார் முறைதவறிப் பிறந்த குழந்தை என்றார்கள் இது என் தவறா?

நான் சத்ரியன் அல்ல என்று கூறி துரோணாச்சாரியார் எனக்கு கல்வியைக் கற்றுத்தரவில்லை இது என் தவறா?

பரசுராமர் எனக்கு கற்றுக் கொடுத்தார், ஆனால் சத்ரியன் எனக்கூறி நான் படித்த எல்லாவற்றையும் மறக்க என்னை சாபம் கொடுத்தார் இது என் தவறா?

ஒரு பசு தற்செயலாக என் அம்பு மூலம் தாக்கப்பட்டது அதன் உரிமையாளர் என்னுடைய தவறுக்காக என்னை சபித்தார்.

திரௌபதியின் சுயம்வரத்திலே நான் தேரோட்டியின் மகன் என்பதற்காக நான் அவமானப்படுத்தப்பட்டேன்

குந்தி கூட இறுதியாக என் மற்ற மகன்களை காப்பாற்ற மட்டுமே என்னைத் தேடி வந்தார்.இப்படி சுற்றி இருப்பவர்கள் அனைவராலும் வஞ்சிக்கப்பட்ட போது துரியோதனனின் அன்பு மூலமாகவே எனக்கு எல்லாம் கிடைத்தது ஆகையால் அவன் பக்கம் நான் நிற்பது எப்படி தவறாகும் எனக் கேட்டான்

அதற்கு கிருஷ்ணன் பதிலாக "கர்ணா நீயாவது பரவாயில்லை ஆனால், நான் ஒரு சிறையில் பிறந்தேன்.என் பிறப்புக்கு முன்பே மரணம் காத்திருந்தது.நான் பிறந்த இரவு அன்றே என் பெற்றோரிடமிருந்து நான் பிரிக்கப்பட்டேன்.

நீ சிறுவயதிலிருந்து , வாள், இரதங்கள், குதிரைகள், வில், அம்புகள் ஆகியவற்றின் இரைச்சலை நீங்கள் கேள்விப்பட்டிருப்பாய் ஆனால் . நானோ மாடு கொட்டில் சாணம் வைக்கோல் இவைகளுக்கிடையே வளர்ந்தேன் நடக்க ஆரம்பிக்கும் முன்னே என்னைக் கொல்ல பல முயற்சிகள் நடந்தன

நல்ல கல்வி இல்லை இராணுவ பயிற்சி இல்லை ஆனால் எல்லோரும் நான்தான் நடக்கும் பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம் என்கிறார்கள்.

நீங்கள் ஆசிரியர்களால் மதிக்கப்படுகிறபோது நான் எந்தக் கல்வியையும் பெறவில்லை. நான் 16 வயதில் தான் ரிஷி சாண்திபனியின் குருகுலத்தில் சேர்ந்தேன்!

நீங்கள் விரும்பிய ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டீர்கள். ஆனால் நானோ நான் விரும்பிய பெண்ணை திருமணம் செய்யாமல் என்னை நேசித்த பெண்களை மேலும் கொடியவர்களிடம் இருந்து நான் காப்பாற்றிய பெண்களை திருமணம் செய்துகொண்டேன்.

ஜராசந்த்திடமிருந்து என் மக்களைக் காப்பாற்றுவதற்காக, யமுனா நதிக்கரையிலிருந்து கடலிலிருந்து தூரத்திலிருந்து என்னுடைய முழு சமூகத்தையும் நகர்த்த வேண்டியிருந்தது. நான் ஓடிப்போன ஒரு கோழை!

துரியோதனன் போரில் வெற்றி பெற்றால், உனக்கு நிறைய பொருள் நாடு சேனை கௌரவம் கிடைக்கும். ஆனால் பஞ்சபாண்டவர் உடன் சேர்ந்து யுத்தம் செய்தால் எனக்கு என்ன கிடைக்கும்?

கண்ணன்தான் இந்த போருக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு மட்டுமே மிஞ்சும்

கர்ணா ஒன்றை நினைவில் கொள் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் சவால்கள் உள்ளன.

வாழ்க்கை எப்போதுமே இலகுவாகவும் எளிதாகவும் இருப்பதில்லை.ஆனால் மனசாட்சிப்படி தர்மத்தின்பால் நிற்பதே சரியானதாகும் . எத்தனை முறை நாம் ஏமாற்றப்பட்டோம், எத்தனை முறை நாம் அவமானப்படுதப்பட்டோம், எத்தனை முறை வீழ்ச்சி அடைகிறோம் என்பது முக்கியமானத அல்லஅந்த நேரத்தில் நாம் எப்படி மீண்டு எழுந்தோம் என்பதே முக்கியமானது.

நம் வாழ்க்கையில் நடக்கும் தவறுகள் நம்மை தவறான பாதையில். போவதற்காக உரிமையைக் கொடுக்கவில்லை

எப்போதும் நினைவில் கொள் வாழ்க்கை எனபது ஒரு பாதை சில நேரங்களில் கரடுமுரடாக இருக்கலாம் அதைக் கடப்பது நம் காலணிகளால் அல்ல நாம் எடுத்து வைக்கும் அடிகள் மூலமே.

Sunday, March 24, 2019

யாரையும் குறைவாக எண்ணாதீர்கள்!!!

விஞ்ஞானி ஒருவர்,
தன் காரில் பயணம் செய்து கொண்டு இருந்தார்… வழியில் டயர் பஞ்சர் ஆகி விட்டது.

கடை ஏதும் இல்லை. கடை குறைந்தது ஒரு கிலோமீட்டர் தூரம் இருக்கிறது. கூட யாரும் வராததால் அவரே டயரை மாற்ற ஆரம்பித்தார்.

அனைத்து போல்ட்டையும் கழட்டி விட்டு ஸ்டெப்னி எடுக்கக் போகும் போது. கால் இடறி கீழே விழுந்தார். கையில் வைத்திருந்த போல்ட்கள் ஒரு குட்டையில் விழுந்து விட்டது.

இப்பொழுது என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டு இருந்தார்.

அப்பொழுது கிழிந்த ஆடையோடு ஒரு வழிப்போக்கன் அந்த வழியாக வந்தான். அந்த வழிப்போக்கன், இவரைப் பார்த்து ஐயா என்ன ஆச்சு என்றான். இவரோ, இவனிடம் சொல்லி என்ன ஆகப் போகிறது?’ என்று எண்ணியபடி ஒன்றும் இல்லை நீங்கள் போகலாம் என்றார்.

அந்த வழிப்போக்கன் கிளம்ப எத்தனித்தான். அந்த விஞ்ஞானிக்கு அப்பொழுது ஒரு எண்ணம் தோன்றியது.
‘இந்த சாக்கடை குட்டையில் இவனை விட்டால் யாரும் இறங்க மாட்டார்கள், அதனால் இவனை இறங்க சொல்லலாம்’ என்று எண்ணி அவனிடம், ‘நான் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன், அந்த குட்டையில் விழுந்த என்னுடைய போல்ட்டை எடுத்துத் தாருங்கள்’- என்றார் விஞ்ஞானி.

‘ஒ! இது தான் உங்கள் பிரச்சனையா? நான் அந்த குட்டையில் இறங்கி எடுத்து தர ஆட்சேபனை ஏதும் இல்லை. ஆனால் அதை விட ஒரு சுலப வழி இருக்கிறது. மூன்று சக்கரங்களில் இருந்தும் தலா ஒரு போல்ட்களை கழட்டி இப்போதைக்கு இந்த சக்கரத்தை மாட்டி வண்டியை தயார் செய்து கொள்ளுங்கள், பிற்பாடு அருகில் உள்ள மெக்கானிக் கடைக்கு ஓட்டிச் சென்று 4 போல்ட்டுகள் வாங்கி எல்லா சக்கரத்திலும் மாட்டிக் கொள்ளுங்கள்’- என்று சொன்னார் வழிப்போக்கர்.

‘நான் இத்தனை பெரிய விஞ்ஞானியாக இருந்தும், எனக்கு இந்த சுலப வழி தெரியாமல் போய் விட்டதே! இவரைப் போய் குறைத்து எடை போட்டு விட்டோமே!’ என்று தனக்குள் கூறிக் கொண்டு தலை குனிந்தார் விஞ்ஞானி.

நீதி: யாரையும் குறைவாக எண்ணக்கூடாது,

ஆம்நண்பர்களே,
உயிருள்ள பறவைக்கு எறும்பு உணவு;
உயிரற்ற பறவையோ எறும்புக்கு உணவு;

ஒரு மரத்தில் பல்லாயிரம் தீக்குச்சிகளை உருவாக்கலாம். அதே ஒரு தீக்குச்சியினால், பல்லாயிரம் மரங்களை அழிக்கலாம்.

நேரமும், சூழ்நிலையும் எப்பொழுதும் மாறலாம். எனவே யாரையும் குறைவாக எண்ண வேண்டாம்.

Tuesday, March 19, 2019

ஐந்து வகை அன்ன தோஷங்கள்

உணவுகளால் ஏற்படும் ஐந்து வகை தோஷம் பற்றி உங்களுக்கு தெரியுமா..? கட்டாயம் படிங்க..!!

அன்னம் என்பது நம்முடைய உயிரைத் தாங்குவது. அப்படிப்பட்ட உணவு எப்படி, எங்கே, எந்த முறையில், யாரால் சமைத்து பரிமாறப்பட்டு சாப்பிடுகிறோம் என்பது மிகவும் முக்கியமானது. உணவு சமைப்பதிலும், பரிமாறுவதிலும், உண்பதிலும் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததா? என்றால், ஆம்.. முக்கியத்துவம் வாய்ந்தது தான். அதனால் தான் ‘உணவில் ஆசாரத்தை கடைப்பிடி’ என்று சான்றோர்கள் சொல்லி வைத்திருக்கின்றனர். இங்கே ஆசாரம் என்பதற்கு சுத்தம் என்று பொருள்.

நாம் உண்ணும் உணவில் ஐந்து வகையான தோஷங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவை

1.அர்த்த தோஷம்,
2.நிமித்த தோஷம்,
3ஸ்தான தோஷம்,
4.குண தோஷம்,
5.சம்ஸ்கார தோஷம் ஆகும். இந்த ஐந்து வகையான தோஷங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

#அர்த்த_தோஷம்

இந்த தோஷத்தைப் பற்றி, ஒரு குட்டிக் கதையின் மூலமாக நாம் அறிந்து கொள்ளலாம். ஒரு துறவி, தன்னுடைய சீடனின் வீட்டிற்கு உணவருந்துவதற்காக சென்றிருந்தார். உணவருந்திக் கொண்டிருக்கும் போது, தனது சீடனிடம் ஒரு நபர் பணம் நிரம்பிய மூட்டை ஒன்றைக் கொடுப்பதை துறவி பார்த்தார்.

உணவருந்தி முடித்ததும் துறவி ஒரு அறையில் ஓய்வு எடுத்தார். அந்த அறையில்தான் சீடன் வாங்கி வைத்த பணம் நிரம்பிய மூட்டை இருந்தது. திடீரென்று துறவியின் மனதில் தீய எண்ணம் உண்டாகி, அந்த மூட்டையில் கையை விட்டு கொஞ்சம் பணத்தை எடுத்து மறைத்து வைத்துக் கொண்டார். பின்னர் சீடனிடம் விடை பெற்றுக் கொண்டு வீடு திரும்பினார்.

மறு நாள் காலையில் பூஜை செய்யும் போது, முதல் நாள் தான் செய்ததை நினைத்துப் பார்த்தார், துறவி. அவருக்கு தான் எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டோம் என்பது உறைத்தது. சீடனின் வீட்டில் உணவருந்திய பின்னர்தான் இந்த கெட்ட எண்ணம் தோன்றியது. அந்த உணவு இரவில் ஜீரணமாகி, காலையில் கழிவாக வெளியேறிய பின்னர் மனம் பரிசுத்தம் ஆனதையும் அவர் எண்ணிப்பார்த்தார்.

உடனடியாக பணத்தை எடுத்துக் கொண்டு சீடனின் வீட்டிற்குச் சென்றார். நடந்ததைச் சொல்லி பணத்தைத் திருப்பிக் கொடுத்தார்.

பின்னர், ‘நீ சம்பாதித்த பணம் எப்படி வந்தது?’ என்று சீடனிடம் கேட்டார்.
அதற்கு அந்த சீடன் தலைகவிழ்ந்தபடியே, ‘நான் நேர்மையற்ற வழியில்தான் பணம் சம்பாதித்தேன்’ என்று ஒப்புக்கொண்டான்.

இப்படி நேர்மையற்ற வழியில் சம்பாதிக்கும் பணத்தினால் வாங்கப்படும் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவுகளை உண்பதால் வருவதே ‘அர்த்த தோஷம்.’ இங்கே ‘அர்த்தம்’ என்பதற்கு ‘பொருள்’ என்று சொல்வார்கள். நாம் சமைக்கும் உணவுப் பொருட்கள் நியாயமான சம்பாத்தியத்தில் வாங்கியதாக இருக்க வேண்டியது அவசியம்.

#நிமித்த_தோஷம்

நாம் சாப்பிடும் உணவைச் சமைக்கும் நபர், நல்ல மனதுடன் இருக்க வேண்டியது அவசியம். அவர் நேர்மையானவராகவும், அன்பானவராகவும், நல்ல சுபாவம் கொண்டவராகவும் இருக்க வேண்டும். மேலும் சமைக்கப்பட்ட உணவானத நாய், எறும்பு, பல்லி, காகம் போன்றவற்றால் தீண்டப்படாமல் இருப்பதும் முக்கியம். உணவில் தூசி, தலை முடி, புழுக்கன் போன்றவையும் இருக்கக்கூடாது. மேற்சொன்ன ஏதேனும் ஒரு குற்றம் இருந்தாலும் அந்த உணவை சாப்பிடுபவர்களுக்கு ‘நிமித்த தோஷம்’ ஏற்படும்.

அசுத்தமான உணவு, மன அசுத்தத்தையே விளைவிக்கும். தீயவன் சமைத்த உணவு தீமையான எண்ணங்களையே உண்டாக்கும். நல்லவன் சமைத்த உணவால்தான் மனதில் நற்சிந்தனைகள் எழும்.

குருசேத்திரப் போரில் அம்புகளால் துளைக்கப்பட்ட பீஷ்மர், போர் முடியும் நாள் வரை அம்புப் படுக்கையிலேயே உயிரோடு இருந்தார். அவரைச் சுற்றி கிருஷ்ணரும், பாண்டவர்களும், திரவுபதி போன்றவர்களும் இருந்தனர். அவர்களுக்கு பீஷ்மர் அறிவார்ந்த சிந்தனைகளின் மூலமாக பல நல்ல மொழிகளை சொல்லிக்கொண்டிருந்தார்.

அப்போது திரவுபதியின் மனதில் ஒரு எண்ணம் ஓடியது. ‘இப்போது இவ்வளவு அறிவார்ந்து சிந்திக்கும் பீஷ்மர், அன்று என்னை சபையில் துரியோதனன் ஆடையை அவிழ்க்க உத்தரவிட்ட போது, எதற்காக வாயை மூடிக் கொண்டிருந்தார்’ என்று நினைத்தாள்.

அவளது மன ஓட்டத்தை அறிந்து கொண்ட பீஷ்மர், ‘தாயே! நான் துரியோதனின் ஆதரவில் அவனால் படைக்கப்பட்ட உணவை சாப்பிட்டு வந்தவன். என் அறிவை முற்றிலுமாக அந்த உணவு மறைத்து விட்டது. அம்பால் துளைக்கப்பட்டு, இவ்வளவு நாள் நான் சாப்பிடாமல் இருந்ததால், என் பழைய ரத்தம் சொட்டுச் சொட்டாக வெளியேறி, நான் பரிசுத்தனாகிறேன். எனது அறிவும் பிரகாசிக்கிறது’ என்றார்.

#ஸ்தான_தோஷம்

மூன்றாவதாக நாம் பார்க்கப் போவது ‘ஸ்தான தோஷம்.’ எந்த இடத்தில் உணவு சமைக்கப்படுகிறதோ அங்கு நல்ல அதிர்வுகள் இருக்க வேண்டும். சமைக்கும் போது தேவையற்ற பிரச்சினைகள், அற்ப காரியங்களுக்காக விவாதங்கள் போன்றவை நடந்தால், அதனால் அந்த உணவு அசுத்தப்பட்டு விடும். அதே போல் கழிப்பறை, மருத்துவமனை, யுத்த களம், வழக்கு மன்றம் ஆகியவற்றின் அருகே சமைக்கப்படும் உணவும் சாப்பிடுவதற்கு உகந்தது அல்ல.

துரியோதனன் 56 விதமான விசேஷ உணவு வகைகளைத் தயாரித்தான். அதனை உண்பதற்காக கிருஷ்ணரை அழைத்தான். ஆனால் கிருஷ்ணரோ உணவருந்த மறுத்து விட்டார். அதனால் கோபம் கொண்ட துரியோதனன், கிருஷ்ணரை சிறைப்பிடிக்கவும் முயன்றான். ஆனால் கிருஷ்ணரோ நேராக விதுரரின் வீட்டிற்குச் சென்றார். அவரைப் பார்த்த விதுரரின் மனைவி மகிழ்ச்சியில் திளைத்தாள்.

கிருஷ்ணரை கண்ட ஆனந்தத்திலும், பதற்றத்திலும், அவருக்கு என்னத் தருகிறோம் என்பதை உணராத நிலையிலும், வாழைப்பழத்தை உரித்து பழத்தைத் தூக்கி எறிந்து விட்டு, தோலை அன்புடன் கொடுத்தாள். அதை வாங்கித் தின்ற கிருஷ்ணர் மகிழ்ச்சியடைந்தார். ஆனால் இதையெல்லாம் கண்ட விதுரர் பதறிப்போனார். தன்னுடைய மனைவியை கோபமாக பார்த்தார்.

கிருஷ்ணரோ, ‘விதுரரே! நான் அன்பிற்காகத் தான் ஏங்குகிறேன். எனக்கு உள்ளன்புடன் ஒரு துளி ஜலம், ஒரு இலை, ஒரு பழம் என்று எதைத் தந்தாலும், அதுவே எனக்குப் போதும்’ என்று அருளினார்.

ஆம்.. நாம் ஒருவருக்கு படைக்கும் உணவை, உள்ளன்புடன் பரிமாற வேண்டியது மிகவும் அவசியம்.

#குண_தோஷம்

நாம் சமைக்கும் உணவில் அடங்கி இருக்கும் மூலப் பொருட்கள், சாத்வீக குணமுடையதாக இருக்க வேண்டும். பால், நெய், அரிசி, மாவு, பருப்பு போன்றவை சாத்வீகமானவை. புளிப்பு, உரைப்பு, உப்பு உள்ளிட்டவை ராஜஸிகமானவை. பூண்டு, வெங்காயம், மாமிசம், முட்டை போன்றவை தாமஸிகமானவை. சாத்வீக உணவு ஆன்மிக முன்னேற்றத்தைத் தருகிறது. ராஜஸிக உணவு உலக மாயையில் சிக்கும் உணர்வைத் தூண்டி சுயநலத்திற்கு வழி வகுக்கிறது. தாமஸிக உணவு தீய எண்ணங்களை வளர்க்கிறது.

#சம்ஸ்கார_தோஷம்

தூய்மையாக உணவு சமைக்கப்பட்டாலும் கூட, உணவு வகைகள் ஒன்றுடன் ஒன்று மாறுபட்டிருக்கக் கூடாது. அதிகமாக வேக வைத்தல், அதிகமாக வறுத்தல், பழைய உணவு போன்றவை தோஷமானவை. உடம்புக்கும் உள்ளத்திற்கும் ஊறு விளைவிப்பவை. இதைத்தான் ‘சம்ஸ்கார தோஷம்’ என்கிறார்கள்.

இந்த ஐந்து வித தோஷங்களையும் விலக்கி, ஒருவன் உணவை உண்ண வேண்டும். அதனால் தான் அன்னை அல்லது மனைவியால் இல்லத்தில் சமைத்து பரிமாறப்படும் உணவை ஏற்பது நல்லது என்று முன்னோர்கள் சொல்லி வைத்தனர்.

Monday, March 11, 2019

மகாலட்சுமி ஸ்துதி

தேடினாலும் கிடைத்தற்கரிய அற்புதமான பழைய  ஓலைச்சுவடிகளில் சமஸ்கிருதத்தில்  எழுதப்பட்ட மகாலட்சுமி ஸ்துதிகளை படிக்க  ஏதுவாக எளிமைப்படுத்தி  இங்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.தினம் கூறிவழிபட அனைத்து லஷ்மி ரூபங்களையும் ஒரேநேரத்தில் வழிபட்ட பலன் கிடைக்கும். குறிப்பாக பெண்களுக்கு மிகவும் முக்கியமானதாகும்.தினமும் பூஜை  அறையில் மனமுருகி 11முறை கூறி வழிபட சகல சம்பத்துகளும் பெருகிடும்.

" மகாலட்சுமி ஸ்துதி "

1. சுத்தலக்ஷ்ம்யை புத்திலக்ஷ்ம்யை வரலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே சௌபாக்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

2. வசோலக்ஷ்ம்யை காவ்யலக்ஷ்ம்யை காநலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே ச்ருங்காரலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

3. தநலக்ஷ்ம்யை தான்யலக்ஷ்ம்யை தராலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே அஷ்டைச்வர்ய லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

4. க்ருஹலக்ஷ்ம்யை க்ராமலக்ஷ்ம்யை ராஜ்யலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே ஸாம்ராஜ்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

5. சாந்திலக்ஷ்ம்யை தாந்திலக்ஷ்ம்யை க்ஷேமலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே அஸ்த்வாத்மாநந்தலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

6. ஸத்யலக்ஷ்ம்யை தயாலக்ஷ்ம்யை ஸெளக்கிய லக்ஷ்ம்யைநமோ நம:
நம: பாதிவ்ரத்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

7. கஜலக்ஷ்ம்யை ராஜலக்ஷ்ம்யை தேஜோலக்ஷ்ம்யை நமோ நம:
நம: ஸர்வோத்கர்ஷலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

8. ஸத்வலக்ஷ்ம்யை தத்வலக்ஷ்ம்யை போதலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே விஜ்ஞானலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

9. ஸ்தைர்யலக்ஷ்ம்யை வீர்யலக்ஷ்ம்யை தைர்ய லக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே அஸ்த்வெளதார்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யைநமோ நம:

10. ஸித்திலக்ஷ்ம்யை ருத்திலக்ஷ்ம்யை வித்யாலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே கல்யாணலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

11. கீர்த்திலக்ஷ்ம்யை மூர்த்திலக்ஷ்ம்யை வர்ச்சோலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே த்வநந்தலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

12. ஜபலக்ஷ்ம்யை தபோலக்ஷ்ம்யை வ்ரதலக்ஷ்ம்யை லக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே வைராக்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

13. மந்த்ரலக்ஷ்ம்யை தந்த்ரலக்ஷ்ம்யை யந்த்ரலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே குருக்ருபாலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

14. ஸபாலக்ஷ்ம்யை ப்ரபாலக்ஷ்ம்யை கலாலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே லாவண்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

15. வேதலக்ஷ்ம்யை நாதலக்ஷ்ம்யை சாஸ்த்ரலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே வேதாந்தலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

16. சேத்ரலக்ஷ்ம்யை தீர்த்தலக்ஷ்ம்யை வேதிலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே ஸந்தானலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

17. யோகலக்ஷ்ம்யை போகலக்ஷ்ம்யை யக்ஞலக்ஷ்ம்யை நமோ நம:
க்ஷீரார்ணவ புண்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

18. அன்னலக்ஷ்ம்யை மநோலக்ஷ்ம்யை ப்ரக்ஞாலக்ஷ்ம்யை நமோ நம:
விஷ்ணுவக்ஷேபூஷலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

19. தர்மலக்ஷ்ம்யை அர்த்தலக்ஷ்ம்யை காமலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே நிர்வாணலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

20. புண்யலக்ஷ்ம்யை சேமலக்ஷ்ம்யை ச்ரத்தாலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே சைதன்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

21. பூலக்ஷ்ம்யை தே புவர்லக்ஷ்ம்யை ஸுவர்லக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே த்ரைலோக்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

22. மஹாலக்ஷ்ம்யை ஜனலக்ஷ்ம்யை தபோலக்ஷ்ம்யை நமோ நம:
நம: ஸத்யலோகலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

23. பாவலக்ஷ்ம்யை வ்ருத்திலக்ஷ்ம்யை பவ்யலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே வைகுண்டலக்ஷம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

24. நித்யலக்ஷ்ம்யை ஸத்யலக்ஷ்ம்யை வம்சலக்ஷம்யை நமோ நம:
நமஸ்தே கைலாஸலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

25. ப்ரகிருதிலக்ஷ்ம்யை ஸ்ரீலக்ஷ்ம்யை ஸ்வஸ்திலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே கோலோகலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

26. சக்திலக்ஷ்ம்யை பக்திலக்ஷ்ம்யை முக்திலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே த்ரிமூர்த்தி லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

27. நமச்சக்ராரஜ லக்ஷ்ம்யை ஆதிலக்ஷ்ம்யை நமோ நம:
நமோ ப்ரும்மானந்த லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

                      "சுபமஸ்து"

இளவயது ஒற்றர் சரஸ்வதி ராஜாமணி

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மிக இளவயது ஒற்றராகச் செயல்பட்ட சரஸ்வதி ராஜாமணி அவர்களின் வாழ்க்கை வரலாறு வீரமும் தியாகமும் நிறைந்தது. ந...