"ஓம் அரிஹர புத்திராய புத்திர லாபாய சத்துரு வினாசகனாய மதகஜ வாகனாய பூதநாதாய அய்யனார் சுவாமியே நமஹ"
இந்த மந்திரத்தை 9 முறை செபித்து வழிபட அய்யனார் சுவாமியின் பரிபூரண அருள் கிடைக்கும்.
Tuesday, June 18, 2019
அய்யனார் மந்திரம்:
வராஹி மூல மந்திரம்
வராஹி மூல மந்திரம் :
1)ஒம் க்லீம் உன்மத்தபைரவி வாராஹி
ஸ்வ்ப்பண்ம் ட: ட: ஹும்பட் ஸ்வாஹா.
2)ஒம் ஐம்க்லெளம் ஐம்நமோ பகவதீ வார்த் தாளி , வார்த்தளி
வாராஹி வராஹமுகி வராஹமுகி அந்தே அந்தினி நம :
ருத்தே ருந்தினி நம :
ஜம்பே ஜம்பினி நம :
மோஹே மோஹினி நம :
ஸதம்பே ஸ்தம்பினி நம:
ஸர்வ துஷ்ட ப்ரதுஷ்டானாம் ஸ்ர்வே ஷாம்
ஸர்வ வாக் சித்த சதுர்முக கதி
ஜிஹ்வாஸ்தம் பனம், குரு குரு
சீக்ரம் வச்யம் ஐம்க்லெளம்
ஐம் ட:ட:ட:ட:ஹும் அஸ்த்ராயபட்
3)ஓம் வாம் வாராஹி நம:
ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம:
4) செல்வம் பெருக
ஓம் – ஸ்ரீம் – ஹ்ரீம் – க்லீம் – வாராஹி தேவியை நம:
க்லீம் வாராஹிமுகி ஹ்ரீம் – ஸித்திஸ்வரூபிணி – ஸ்ரீம்
தனவ சங்கரி தனம் வர்ஷய வர்ஷய ஸ்வாஹா.
மூலம்:-
லூம் வாராஹி லூம் உன்மத்த பைரவீம் பாதுகாப்பாம். ஸ்வாஹா II
காயத்ரி மந்திரம்:
ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்
Thursday, June 13, 2019
பார்பாரிக்கா
பஞ்ச பாண்டவர்களில் பீமனுக்கும், இடும்பிக்கும் பிறந்தவன் கடோத்கஜன்.
கடோத்கஜனுக்கும் கம்கன்கடவிற்கும் பிறந்தவன் பார்பாரிக்கா.
.தாய் கம்கன்கட,மகன் பார்பாரிக்காவிற்கு தானே பயிற்சி அளித்து சிறந்த வீரனாக தயார் செய்திருந்தாள்.
சிவ பெருமான் பார்பாரிக்காவிற்கு மூன்று அம்புகளை பரிசளித்திருந்தார்.
முதல் அம்பு, தான் அழிக்க நினைக்கும் இலக்குகளை குறியிட்டு விடும்.
இரண்டாவது அம்பு,தான் காப்பாற்ற நினைக்கும் இலக்குகளை குறியிட்டு ஒதுக்கிக் காப்பாற்றி விடும்.
மூன்றாவது அம்பு அழிக்கக் குறியிட்ட இலக்குகளை அழித்து விடும்.
மூன்று அம்புகளும் தத்தம் பணிகளைச் செய்து விட்டு பார்பாரிக்காவிடம் திரும்பி விடும்.
இது தவிர அக்னி பகவான் மூவுலகையும் வெல்லக்கூடிய வில் ஒன்றை பார்பாரிக்காவிற்கு பரிசளித்திருந்தார் இதன் காரணமாக பார்பாரிக்கா மிகவும் பலம் பொருந்தியவனாக விளங்கினான்.
பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் இடையே யுத்தம் துவங்க இருந்ததை அறிந்த பார்பாரிக்கா போரைக் காண ஆவலுற்றான்.
தாயிடம் ஆசிப் பெற்று தன் நீலக் குதிரை மீதி புறப்பட்டான்.
புறப்படும் முன்,போரில் பலவீனமாக இருந்தவர்கள் பக்கம் சேர்ந்து அவர்களை வெற்றி பெறச்செய்வேன் என்று தாயிடம் சபதம் செய்தான்.
பார்பாரிக்காவின் திறமையை அறிந்திருந்த கிருஷ்ணன்,அவன் மனநிலையை நேரில் கண்டறிய விரும்பி ஒரு பிராமண வேடம் பூண்டுஅவனைக் காணச் சென்றார்.
வழியிலேயே அவனைப் பார்த்தும் விட்டார்.அவனைத் தடுத்து நிறுத்தினார்.
ஒரு பிராமணர் தன்னை நிறுத்துவது கண்டு பார்பாரிக்காவும் குதிரையை விட்டு இறங்கினான்.”
என்ன பிராமணரே என்னை ஏன் வழி மறித்தீர் “ என்று கேட்டான் பார்பாரிக்கா.
“ போர் உடையில் நீ வேகமாகச் செல்வது கண்டு ஏன் இந்த பரபரப்பு என்று தெரிந்து கொள்ளும் ஆவல் மிகுதியில் நிறுத்தி விட்டேன் “ என்றான் கிருஷ்ணன்.
“ பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் குருக்ஷேத்திரத்தில் போர் நடக்க உள்ளது,அதில் கலந்து கொள்ளப் போகிறேன்” என்றான் பார்பாரிக்கா.”
யார் பக்கம் சேர்ந்து போரிட போகிறாய் “ என்று வினவினான் கிருஷ்ணன்.”அங்கு போய் பார்ப்பேன்,யார் பக்கம் பலவீனமாக உள்ளதோ அவர்கள் பக்கம் சேர்ந்து அவர்களை ஜெயிக்க வைப்பேன்” என்றான் பார்பாரிக்கா.
” நீ அவ்வளவு பெரிய பராக்கிரமசாலியா” என்ற வினவினான் கிருஷ்ணன்.”
நீங்கள் வேண்டுமானால் என் பராக்கிரமத்தைச்சோதித்து பாருங்களேன்” என்றான் பார்பாரிக்கா.
”இதோ இந்த அரச மரத்தில் உள்ள இலைகளை ஒரே அம்பால் உன்னால் கோர்க்க முடிந்தால் உன்னை பராக்கிரமசாலி என்று ஒப்புக்கொள்கிறேன்” என்றான் கிருஷ்ணன்.
மரத்தின் ஒரு இலையை மட்டும் பிடுங்கி பார்பரிக்காவிற்கு தெரியாமல் தன் காலடியில் போட்டுக் கொண்டான்.
”இதோ ஒரு நொடியில் செய்து விடுகிறேன்” என்று ஒரு மந்திரத்தை உச்சரித்து அம்பை எய்தான் பார்பாரி்க்கா.
அம்பு மரத்தில் இருந்த இலைகளையெல்லாம் கோர்த்துக் கொண்டு கடைசியாக கிருஷ்ணனின் பாதத்தை நோக்கிப் பாய்ந்தது.
”இது என்ன விபரீதம் அம்பு என் பாதத்தைத் துலைக்க முற்படுகிறதே” என்றான்
கிருஷ்ணன்
.”பிராமணரே உன் காலடியில் ஒரு இலை இருக்கும் என்று நினைக்கிறேன்,
உடனே பாதத்தை எடுத்து விடும்” என்றான் பார்பாரிக்கா.
கிருஷ்ணர் பாதத்தை எடுத்தவுடன் பார்பாரிக்காவின் அம்பறாத்தூணியில் இருந்து புறப்பட்ட அம்பு ஒன்று எல்லா இலைகளையும் ஒன்றாகக் கோர்த்தது.
இந்த இடத்தில் ஒரு குட்டி கிளைக் கதை ஒன்று உள்ளது.
துருவாச முனிவர் கிருஷ்ணருக்கு ஒரு வரம் அளித்திருந்தார்.
கிருஷ்ணரின் பாதம் தவிர்த்த ஏனைய இடங்களில் எந்த ஆயுதத்தாலும் பாதிப்பு எற்படாது என்பதே அந்த வரம்.
மெளசால பர்வத்தில் ஜாரா என்னும் வேடன், மான் என்று எண்ணி கிருஷ்ணரின் பாதத்தில் அம்பு எய்து கிருஷ்ணரின் மரணத்திற்கு காரணமானதிற்கு முன் பார்பாரிக்காவின் அம்பு கிருஷ்ணரின் பாதத்தை பதம் பார்த்து பலவீனப்படுத்தியது,குறியிட்டு விட்டது முக்கிய காரணம் என்கிறது புராணம்.
ராமாவதாரத்தின் போது வாலியை மறைந்திருந்து தாக்கியதற்கு வேதனையடைந்த வாலியிடம்,”கிருஷ்ணாவதாரத்தின் போது ஜரா என்னும் வேடனாக நீ பிறந்து நான் மரத்திலே மறைவாக அமர்ந்திருக்கும் போது உன்னால் கொல்லப்படுவேன்” என்று கூறியதாக புராணம் தெரிவிக்கிறது.
பார்ப்பாரிக்காவின் பராக்கிரமத்தை உணர்ந்து கொண்ட கிருஷ்ணர் பஞ்ச பாண்டவர்களை ஒளித்து வைத்தாலும் பார்பாரிக்காவின் அம்பு தேடிக் கண்டு பிடித்துக் கொன்று விடும் என்று உணர்ந்தார்..!
உன்னிடம் எனக்கு ஒரு யாசகம் வேண்டுமே” என்றான் கிருஷ்ணன்.
”எது வேண்டுமானாலும் தயங்காமல் கேளும் பிராமணரே !” என்றான் பார்பாரிக்கா.
”உன் தலையை கொய்து விட வேண்டும் என்று விரும்புகிறேன்” என்றான் கிருஷ்ணன்.
சற்றே திகைத்து விட்ட பார்பாரிக்கா,
” நீர் யார்,உண்மையை சொல்லும்,நீங்கள் சாதாரண பிராமணரே அல்ல” என்றான்.
பகவான் கிருஷ்ணர் தன் சுய உருவத்தில் திவ்ய சொரூபனாகக் காட்சித் தந்தார்.”
கேசவா,நாராயணா,மாதவா,கோவிந்தா,
மதுசூதனா...என்று பல்வேறு நாமங்களால் கிருஷ்ணரை துதித்தான்.
” பார்பாரிக்கா,நீ மாவீரன். உன் தாயிடம் நீ மேற்கொண்ட பிரத்திக்ஞையின் விளைவுகளை நீ அறியவில்லை.
நீ பாண்டவர்களுக்கு 7 அக்ஷொனி படைகளும்,கெளரவர்களுக்கு 11 அக்ஷொனி படைகளும் இருப்பதைப் பார்த்து பாண்டவர்கள் பக்கம் சேர்வாய் ;உன் பராக்கிரமத்தால் கெளரவ படை தோற்கத் துவங்கும்.
அது பலவீனமாவதை உணர்ந்து,உன் தாய்க்கு செய்து கொடுத்த சத்தியத்தின் காரணமாக நீ கெளரவர்கள் பக்கம் சேர்வாய்.
பாண்டவர்கள் தோற்க துவங்குவார்கள்.முடிவில் பாண்டவ,கெளரவ சேனைகள் முற்றிலும் அழிந்து நீ மட்டுமே மிஞ்சுவாய்.
இது தர்மத்திற்கு நல்லதல்ல.ஆகவே நீ போரில் பங்கேற்கக் கூடாது.
உன் தாய்க்குச் செய்து கொடுத்த சத்தியத்தின் காரணமாக இது சாத்தியமல்ல.
ஆகவே தர்மத்தின் பொருட்டு நீ உயிர் தியாகம் செய்து விடு”என்றான் கிருஷ்ணன்.
பார்பாரிக்காவும் இசைந்தான்.
பார்பாரிக்கா உண்மையில் நீ ஒரு யக்ஷன்.
முன் ஒரு சமயம்,பூமியில் அதர்ம சக்திகள் அட்டூழியம் நிகழ்த்தி வந்த நேரம்,பிரம்மாதி தேவர்கள் எல்லாம் என்னை வந்து பணிந்து தங்களைக் காபாற்றும்படி வேண்ட,நானும் தர்மத்தைக் காக்க அவதாரம் எடுப்பதாகக் கூறினேன்.
அதற்கு அங்கிருந்த நீ,அதற்கு நான் தேவையில்லை
என்றும் நீ ஒருவனே போதும் என்றும் கூறினாய்.
இதை கேட்ட பிரம்மதேவன் கோபமுற்று,நீ பூமியில் மகத்தான சக்திகளுடன் பிறப்பாய் என்றும்,அதர்ம சக்திகளை ஒழிக்க முற்படும் போது நீயே என்னால் கொல்லப்பட்டு முதல் பலி ஆகி விடுவாய் என்றும் உன்னைச் சபித்தார்,அதன் காரணமாகவே,இன்று உனக்கு இந்த நிலை ஏற்பட்டு உள்ளது.
மேலும் போர் துவங்கும் முன் ஒரு மாவீரனை களபலி கொடுக்க வேண்டும்.
உன்னை மிஞ்சிய மாவீரன் இத்தரணியில் இல்லை” என்றான் கிருஷ்ணன்.
கிருஷ்ணனின் சக்ராயுதம் பார்பாரிக்காவின் தலையை கொய்தது.
பரந்தமனின் பரம் பதம் கிடைத்து விட்ட பிறகு வேறென்ன வேண்டும் என்று திருப்தி அடைந்த பார்பாரிக்கா கிருஷ்ணா நான் போரினைக்காண மட்டும் மிகவும் ஆவலுடன் இருக்கிறேன்” என்றான்.
பார்பாரிக்காவின் தலையைப் போர் பூமியைப் பார்த்து நின்ற ஒரு குன்றின் மீது வைத்தான் கிருஷ்ணன்.
போர் நடந்து முடிந்தவுடன்,பாண்டவர்களுக்குள் ஒரு வாக்குவாதம்.
தங்களில் யார் பராக்கிரமத்தால் போரில் வென்றோம் என்பதே அது.
கிருஷ்ணரிடம் வந்து “கிருஷ்ணா எங்களில் யார் பராக்கிரமத்தால் இந்த போரில் வென்றோம் என்று கூறு” என்றனர்.”
எனக்கு எப்படி தெரியும்,நானோ அர்ஜுனனின் ரதத்தை ஓட்டிக்கொண்டு அவன் சொன்னபடியெல்லாம் சென்று கொண்டிருந்தேன்.
போதாக்குறைக்கு எதிரிகளின் அம்புக்கணைகள் வேறு என் உடம்பை பதம் பார்த்து கொண்டிருந்தன.
இந்த நிலையில் என்னால் வேறு எதையும் பார்க்க தோன்றுமா என்ன” என்றான் கிருஷ்ணன்.
”அப்படியென்றால் வேறு யாரைத்தான் கேட்பது”என்று திகைத்தனர் பாண்டவர்கள்.
”ஒரு ஆள் முழு போரையும் பார்த்திருக்கிறான்.
அவனை வேண்டுமானால் கேட்கலாம்” என்றான் கிருஷ்ணன்.
”யாரது” என்று வினவிய பாண்டவர்களை பார்பாரிக்காவிடம் அழைத்துச் சென்றார் கிருஷ்ணர்.
”என்ன பார்பாரிக்கா முழு போரையும் பார்த்தாயா?” கேட்டான் கிருஷ்ணன்.
”பார்த்தேன் கிருஷ்ணா”என்றான் பார்பாரிக்கா.
”பாண்டவர்களுக்கு ஒரு சந்தேகம்,யார் பராக்கிரமத்தால் இந்த போரில் வென்றோம் என்று” என்று கேட்டான் கிருஷ்ணன்.
”எனக்கு என்ன தெரியும் கிருஷ்ணா,யுத்த பூமியிலே ஒவ்வொரு தலை விழும் போதும் அங்கு உன் சக்ராயுதம்தான் என் கண்ணுக்கு தெரிந்தது”என்றான் பார்பாரிக்கா.
பாண்டவர்கள் வெட்கித் தலை குனிந்தனர்.
*ஸர்வம் கிருஷ்ணார்ப்பணம்.*
Tuesday, June 11, 2019
பாரதத்தின் தேசிய மொழி
1950 சனவரி 26 முதல் நடப்புக்கு வந்த இந்திய அரசமைப்புச் சட்டத்தில், 17ஆம் (XVII)) பகுதியில், “ஆட்சிமொழி - Offical Language” என்னும் தலைப்புடன், நான்கு “பிரிவுகளின் -Chapters”கீழ், விதிகள் 343 முதல் 349 முடிய உள்ளவை - “இந்திய அரசின் ஆட்சி மொழி (அ) அலுவல் மொழியாக, தேவநாகரி வரி வடிவில் உள்ள இந்தி இருக்கும்” எனக் கூறியது.
மேலே காணப்பட்ட ஏழு விதிகளில், எதிலும்-“இந்தி தேசிய மொழி -Hindi is the National Language” என்பதாக இல்லை.
அதாவது இந்தி மொழி இந்திய அரசின் 1) எல்லா நிர்வாக அலுவலகங்களிலும்;
2) நாடாளுமன்றத்திலும்;
3) உச்சநீதிமன்றத்திலும் அலுவல் மொழியாக இருக்கும் என்று மட்டுமே எழுதப்பட்டுள்ளது.
இவற்றை , அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது இணைப்பில் (Eighth Schedule) விதிகள் 344(1), 351-இன்படி, 1950 முதல் 2002 வரையில், 14 மொழிகளே இருந்தன. 2003இல் செய்யப்பட்ட 92ஆவது திருத்தத்துக்குப் பிறகு, 22 “மொழிகள்” பட்டியலிடப்பட்டுள்ளன.
இவை “பிராந்திய மொழிகள்” என்றோ, “மாநிலங் களின் மொழிகள்” என்றோ இங்கே குறிப்பிடப்பட வில்லை.
பகுதி – II என்கிற தலைப்பின்கீழ் மட்டும் - “பிராந்திய மொழிகள் -Regional Languages” என்று காணப்பட்டுள்ளது. இதன்கீழ் விதிகள் 345, 346, 347 உள்ளன.
இது மூன்றாவது மோசடி; இது ஓர் அவமானம்.
இந்த நிலையில் “மொழிகள்” என்கிற மேலே கண்ட பட்டியலில் “ஆங்கிலம்” என்பது இல்லை.
அப்படி இல்லாமலே “ஆங்கிலம்-இந்தி பேசாத மக்கள் விரும்புகிற வரையில், இணை ஆட்சி மொழியாக இருக்கும்” என்று, “ஆட்சி மொழிச் சட்டம்” என்கிற நிர்வாக சட்டம் இருக்கிறது.
இது போன்ற மோசடி. ஏன்?
அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெறாத ஆட்சி மொழிச் சட்டம் - ஆங்கிலம் தொடர்ந்து ஆட்சி மொழியாக இருக்க மட்டுமே பயன்படுமே அன்றி, அதனால் இந்தி ஆட்சிமொழியாக ஆவதைத் தடுக்க முடியாது . இது உண்மை.
இந்தியாவின் அரசாங்க மொழி இந்தியாக இருக்க வேண்டும், அது தகுந்தமுறையில் அமையும் வரை ஆங்கிலம் இருக்கலாம் என்றார் அம்பேத்கர்
மாநில மொழி அரசாங்க மொழி ஆக்கக் கூடாது, ஏனெனில், இரு மொழிகள் மக்களைப் பிரிக்கும், ஆனால் இந்தி, மக்களை இணைக்கும் என்கிறார் – அம்பேத்கர்
அதை சூழ்ச்சி எண்ணம் கொண்ட நேருவும் , இங்குள்ள தலைவர்களும் சேர்ந்து ஆங்கிலத்துக்கு வெண்சாமரம் வீசி தங்கள் சொந்த மொழியான தமிழுக்கு துரோகம் செய்தார்கள் , இவர்கள் உடன்படிக்கையின் படி
அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெறாத ஆட்சி மொழிச் சட்டம் - ஆங்கிலம் தொடர்ந்து ஆட்சி மொழியாக இருக்க மட்டுமே பயன்படுமே அன்றி, இந்தி ஆட்சிமொழியாக ஆவதைத் தடுக்கப் பயன்படாது. இது உண்மை.
Sunday, June 2, 2019
சலத்தால் பொருள்செய்து
பச்சை மண்ணால் செய்த பானையில் நீரை ஊற்றிவைத்து தாராளமாக அதைப் பாதுகாக்கலாம், சட்டரீதியாக ஒரு பிரசினையும் இல்லை - உச்சநீதிமன்றம்.
வஞ்சனையால் பொருள்சேர்க்கும் அரசின் பாதுகாப்பு, பச்சை மண்ணால் செய்த பானையில் நீரை ஊற்றிவைத்துப் பாதுகாப்பது போல - திருக்குறள்
'பானையும் நீரும் சேர்ந்து அழிதல் போல, அரசனும் அவன் ஈட்டிய பொருளும் சேரக்கெடும்' என்பதே எல்லா உரையாசிரியர்களும் இக்குறளுக்குக் கூறும் பொருள். இன்றைய காலகட்ட அரசியல் சூழலில் நடப்பது இதற்கு நேர்மாறாக அல்லவா இருக்கிறது என்றே நாம் பொதுவாக எண்ணுவோம். ஆனால், குறளாசிரியர் இந்த உவமையில் இன்னும் ஆழ்ந்த ஒரு பொருளையும் வைத்திருக்கிறார் என்று தோன்றுகிறது. அதாவது, எந்த சுயகட்டுப்பாடும் இன்றி ஊழல் செய்து பொருள் சேர்க்கும் ஆட்சியாளர்கள் தன்னிச்சைப்படி சிதறும் நீர் போல. அவர்களைக் கட்டுப்படுத்தும் நீதிநெறிகளும், சட்டங்களும் கூட அதே போல பச்சைமண் பானையாக இருந்தால், ஒட்டுமொத்த சமூகமும் சீரழியும். மாறாக, அந்தச் சட்டங்களும் நெறிகளும் தர்மம், நியாயம் என்னும் நெருப்பில் சுட்டுக் கெட்டிப் படுத்தப் பட்ட பானையாக இருக்க வேண்டும். அதுவே உண்மையான பாதுகாப்பு.
சலத்தால் பொருள்செய்து ஏமார்த்தல் பசுமண்
கலத்துள் நீர் பெய்திரீஇ யற்று.
[சலம் - வஞ்சனை [छल:] ; ஏமார்த்தல் - பாதுகாத்தல்]
துறவும் தாய்மையும்
நம் இந்தியக் கலாசாரத்தில் அன்னைக்கு அளிக்கப்பட்டிருக்கும் இடம் வேறு எந்தக் கலாசாரத்திலும் அளிக்கப்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை.
இந்தியக் கலாசார மரபின் சிறப்பு என்னவென்றால், ஒரு மனிதன் இந்த உலகின் எல்லா விஷயங்களிலிருந்தும் துறவு மேற்கொண்டாலும்கூட, தாயிடமிருந்து துறவு என்பது இல்லை என்பதே.
இதை இந்திய ஆன்மிக வரலாற்றில் மாபெரும் மாற்றங்களை ஏற்படுத்திய இருவர் இதை நிலைநிறுத்திவிட்டுப் போனார்கள்.
ஒருவர் ஆதி சங்கரர், மற்றொருவர் பட்டினத்து அடிகள்..
ஆதி சங்கரர் சிருங்கேரியில் இருக்கும்போது, தனது அன்னைக்கு காலம் நெருங்கிவிட்டது என்று உணர்ந்து உடனடியாகக் காலடி திரும்புகிறார். அங்கிருந்த பழமைவாதிகள் சங்கரருக்கு அவருடைய வீட்டுக்குள்ளே நுழைவதற்கான அனுமதியை மறுக்கிறார்கள்.
ஆனால், தாயோடு ஓர் உயிருக்கு ஏற்பட்ட உறவு, துறவினால் அழிக்க முடியாதது என்று கூறி ஆதி சங்கரர் தன்னுடைய காவி உடையை நீக்கிவிட்டு, அன்னைக்குப் பணிவிடை செய்கிறார்.
பிரம்மத்தை உணர்ந்த ஞானி தன்னுடைய மகன் என்பதை உணர்ந்திருந்த அந்த அன்னை ஆர்யாம்பாள், ஆதி சங்கரரிடம் தனக்கு பிரம்ம ஞானத்தைப் போதிக்க வேண்டும் என்று உயிர் பிரியும் தருவாயில் கேட்கிறாள்.
உடனே சிவ புஜங்கம் மற்றும் விஷ்ணு புஜங்கம் ஆகிய ஸ்லோகங்களை ஆதி சங்கரர் பாடுகிறார். அதைக் கேட்டுக் கொண்டே அந்தத் தாயின் உயிர் பிரிகிறது.
எல்லா உணர்ச்சிகளையும் கடந்திருக்க வேண்டிய ஞானியாகிய ஆதி சங்கரர் அந்த ஊர் மக்களின் எதிர்ப்பையும் மீறி, அன்னையின் சிதைக்குத் தீ மூட்டி 5 ஸ்லோகங்களைப் பாடுகிறார்.
அவைதான் உலகப் புகழ் பெற்ற மாத்ரு பஞ்சகம் ஆகும். அந்த 5 ஸ்லோகங்களின் பொருள் பின் வருமாறு:
(1) தடுக்க முடியாத பிரசவ வேதனை ஒருபுறம் இருக்க, வாய்க்கு ருசி இல்லாதிருத்தல், உடம்பு இளைத்தல், ஒரு வருட காலம் மல மூத்திரம் நிறைந்த படுக்கை ஆகியவற்றோடு கூடிய கர்ப்ப காலத்தில் ஓர் அன்னை படும் துயரத்தையும், பாரத்தையும் கொஞ்சமாவது தீர்க்க முடியாதவன் ஆகி விடுகிறானே பிள்ளை என்பவன். தனக்காக அந்தக் கஷ்டங்களைத் தாங்கிக் கொள்ளும் தாயை என்னவென்று சொல்ல, அந்தத் தாய்க்கு வணக்கம்.
(2) தாயே, ஒரு சமயம் நான் படிக்கும் குருகுலத்துக்கு வந்து, கனவில் நான் சன்யாசம் பூண்டதாகக் கண்டு உரக்க அழுதாயே, அப்பொழுது குருகுலம் முழுவதும் உன் எதிரில் அழுததே, அப்படிப்பட்ட உன்னை உனது கால்களில் விழுந்து வணங்குகிறேன்.
(3) தாயே, மரிக்கும் தருணத்தில் தண்ணீர் கூட கொடுக்கப்படவில்லை. மரித்த தினத்தில் சிரார்த்தம் கொடுக்க முடியாமல் இருந்தது. உன் மரண வேளையில் தாரக மந்திரம் கூட ஜபிக்கப்படவில்லை. காலம் கடந்து வந்துள்ள என் மீது இணையற்ற தயை காட்ட வேண்டும், தாயே.
(4) என் முத்தல்லவா, என் கண்கள் அல்லவா, என் ராஜா, என் குழந்தை சிரஞ்சீவியாய் வாழ வேண்டும் என்றெல்லாம் கொஞ்சினாயே தாயே. அத்தகைய வாயில், சாரம் இல்லாத பிடி அரிசியைத்தானே போடுகிறேன்.
(5) அன்று பிரசவ காலத்தில் அம்மா, அப்பா, சிவா என்று உரக்கக் கத்தினாய் அல்லவா, தாயே, இன்று நான் கிருஷ்ணா, கோவிந்தா, ஹரே முகுந்தா என்று கூறி அஞ்சலி செய்கிறேன்.
மேற்கண்ட பொருள் கொண்ட மாத்ரு பஞ்சகம் ஆதி சங்கரர் போன்ற ஒரு துறவியின் மனதுக்குள் இருந்தும், தாய்ப் பாசத்தை மீட்டெடுக்கச் செய்த பாடல்கள் ஆகும்.
கேரளத்தில் ஓர் ஆதி சங்கரர் போலவே, தமிழகத்தில் பட்டினத்தாரும் தன்னுடைய துறவுக் கோலத்தைத் துறந்து தனது தாயின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வந்து விடுகிறார்.
இவ்வுலக வாழ்க்கையில் எதிலும் சாரம் இல்லை என்றும், அணிந்திருந்த அரை வேட்டி உள்பட எல்லாப் பந்தங்களும் சுமையாகப் போய்விட்டன என்றும் பற்றற்ற நிலையில் பாடிய பட்டினத்தாருக்கும் தனது தாயின் மரணம் தாங்க முடியாத வேதனையை ஏற்படுத்துகிறது.
அப்போது அவர் பாடிய 10 பாடல்கள் கேட்பவர் நெஞ்சை உருக்கும் தன்மை கொண்டவை. அதில் ஒரு பாடல்..
"ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் - செய்யவிரு
கைப்புறத்தி லேந்திக் கனகமுலை
தந்தாளை எப்பிறப்பிற் காண்பேன் இனி"
என்று பட்டினத்தார் பாடுகிறார்.
ஆதி சங்கரருக்கு ஆறாம் நூற்றாண்டிலும், பட்டினத்து அடிகளுக்கு பத்தாம் நூற்றாண்டிலும் ஏற்பட்ட அதே துயரம், இன்னொரு துறவிக்கும் ஏற்படுகிறது.
1900-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சுவாமி விவேகானந்தர் தனது தாயிடம் சிறிது காலம் போய் இருக்க விழைகிறார். அப்போது ஆதி சங்கரரை நினைவில் கொண்டு சுவாமி விவேகானந்தர் கூறினார்:
1884-இல் என் தாயாரை நான் விட்டு வந்தது பெரும் துறவு. இப்போது திரும்பவும் என் தாயாரிடம் போவது அதை விடப் பெரிய துறவு என்று எனக்கு இப்போது காட்டப்படுகிறது. ஒரு வேளை அன்று ஆதி சங்கரருக்கு எந்த அனுபவத்தைக் கொடுத்தாளோ அதே அனுபவத்தை நானும் பெற வேண்டும் என்று தேவி விரும்புகிறாள் போலும்.
எனவே, நமது நாட்டைப் பொருத்த அளவில் ஆதி சங்கரர், பட்டினத்து அடிகள், சுவாமி விவேகானந்தர் போன்ற பிள்ளைகள் பிறக்கும் நாள் எல்லாம் அன்னையரை போற்றும் நாளாக அமையும்.
அல்சர் அலட்சியம்_வேண்டாம்
வாழ்க்கைமுறை மாற்றத்தால், நாம் விலைக்கு வாங்கிய நோய்களில் இதுவும் ஒன்று.
உணவு செரிப்பதற்காக வயிற்றில் அமிலங்கள் சுரக்கும். இந்த அமிலங்களால் வயிற்றுக்கு எந்தப் பாதிப்புகளும் ஏற்படாதவாறு, புரதங்களால் உருவாக்கப்பட்ட படிமங்களும் (Layers) இருக்கும். இது இரைப்பையைப் பாதுகாக்கும் வகையில் அமைந்திருக்கும். குடல், இரைப்பை, சிறுகுடல், வாய் போன்ற இடங்களில் புண்கள் ஏற்பட்டு, இந்த படிமங்களைப் பாதிக்கும்போதுதான் பிரச்னை ஏற்படுகிறது.
அல்சர் அறிகுறிகள்!
அல்சர் புண்களில் 30-40 சதவிகிதம் அறிகுறிகளே தெரியாது.
அடிக்கடி பசி,
சாப்பிட்ட பிறகும் பசி,
வயிற்று வலி,
முதுகு வலி,
வயிற்று எரிச்சல்,
நெஞ்சு எரிச்சல்,
சாப்பிட்டதும் வாந்தி
போன்ற பிரச்னைகள் இருக்கும்.
பால்,
தண்ணீர்,
பிஸ்கட்
போன்ற உணவுகளைச் சாப்பிட்டதும், வயிற்று வலி குறைந்தது போன்ற உணர்வைத் தந்தால், அது முதல் கட்ட அல்சர்.
சிறிது உணவைச் சாப்பிட்ட பிறகும் வயிற்று வலி தொடர்ந்தால், அல்சர் தீவிரமாகி உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
அல்சர் வரக் காரணங்கள்!
சமச்சீர் உணவு சாப்பிடாமல் இருப்பது,
அதிக மசாலா,
எண்ணெய் உணவுகள்,
உணவுப் பழக்கத்தில் மாற்றம், காலை உணவத் தவிர்த்தல்,
ஹெலிகோபேக்டர் பைலோரி (Helicobacter pylori) என்ற கிருமித் தொற்று,
மனப் பிரச்னையால் அமிலங்கள் சுரப்பதில் மாற்றங்கள்,
வீரியமுள்ள வலி மாத்திரைகள்,
ஸ்டீராய்டு மருந்துகளை உட்கொள்வது,
மது மற்றும் புகைப்பழக்கமும்
அல்சரை ஏற்படுத்தும்.
70 சதவிகித உணவு மற்றும் வாழ்வியல் தவறுகளால்தான் அல்சர் ஏற்படுகிறது.
#ரிஸ்க்அல்சர்
வயிற்றுப் புண்ணுக்கு நீண்ட காலம் சிகிச்சை எடுக்காமல் இருந்தால், அது லிப்போமா (lymphoma) என்ற புற்றுநோயாக மாற வாய்ப்புகள் அதிகம். என்றோ ஒரு நாளைக்கு அதிகளவில் மது அருந்த, அவர்களுக்கும் அல்சர் வரும். வாந்தி, வாயு பிரச்னைகளைக் கொண்டுவந்து, அல்சர் நோயைத் தீவிரமாக்கிவிடும்.
நீண்ட காலம் அல்சர் இருந்தால், அந்தப் புண்களின் வடுக்களும் இருக்கும். இது குடலில் ஓட்டை விழும் அளவுக்குக் கொண்டுவந்து, குடல் அடைப்பை ஏற்படுத்தலாம். ரத்தக் குழாய்களை அரித்து, பெரிய பிரச்னைகளை ஏற்படுத்தலாம். இதற்கான காரணங்களை முறையாகக் கண்டறிந்து, தகுந்த சிகிச்சைகளை மேற்கொண்டு, அல்சரை குணமாக்கிவிடலாம்.
உணவின் மூலம் அல்சரைத் தடுக்கலாம்!
நம் தென் இந்திய உணவுகள் ‘நல்ல உணவு’ பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இந்த உணவைச் சாப்பிட்டாலே, அல்சர் வருவதை வெகுவாகக் குறைக்கலாம்.
ஆவியில் வேகவைக்கப்பட்ட உணவுகளுக்கு முதல் இடம் தரலாம்.
எண்ணெய், உப்பு, மசாலா, காரம் இவற்றைக் குறைந்த அளவில் எடுத்துக்கொள்ளலாம்.
தேன், ப்ரக்கோலி, முட்டைகோஸ், வெங்காயம், பூண்டு, பால் பொருட்கள், வாழை, அதிக நார்சத்துள்ள உணவுகள் மிகவும் நல்லது.
தவிர்க்கலாம்……
கோலா பானங்கள்,
சோடா,
ஊறுகாய்,
பதப்படுத்தப்பட்ட உணவுகள்,
சிட்ரஸ் வகை
ஆயத்த பழச்சாறுகள்,
டீ,
காபி
தவிர்க்கலாம்.
முத்துசாமி தீட்சிதர்
மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...
-
இது புதனின் நட்சத்திரம். 1. கார்த்திகை 2. மிருகசீரிஷம் 3. புனர்பூசம் 4. பூரம் 5. சித்திரை 6. சுவாதி 7. விசாகம் 8. அனுஷம் 9. திருவோணம் 10. அவ...
-
ஸ்ரீ பைரவர் 3000 ஆண்டுகளாக இந்துக்களாலும் , கிறிஸ்துவர்களாலும் , புத்தமதத்தினராலும் , சைவம் மற்றும் வைணவ மார்க்கத்தினராலும் பல்வேறு பெயர்களி...