Tuesday, June 11, 2019

பாரதத்தின் தேசிய மொழி

1950 சனவரி 26 முதல் நடப்புக்கு வந்த இந்திய அரசமைப்புச் சட்டத்தில், 17ஆம் (XVII)) பகுதியில், “ஆட்சிமொழி - Offical Language” என்னும் தலைப்புடன், நான்கு “பிரிவுகளின் -Chapters”கீழ், விதிகள் 343 முதல் 349 முடிய உள்ளவை - “இந்திய அரசின் ஆட்சி மொழி (அ) அலுவல் மொழியாக, தேவநாகரி வரி வடிவில் உள்ள இந்தி இருக்கும்” எனக் கூறியது.

மேலே காணப்பட்ட ஏழு விதிகளில், எதிலும்-“இந்தி தேசிய மொழி -Hindi is the National Language” என்பதாக இல்லை.

அதாவது இந்தி மொழி இந்திய அரசின் 1) எல்லா ​ நிர்வாக  அலுவலகங்களிலும்;
2) நாடாளுமன்றத்திலும்;
3) உச்சநீதிமன்றத்திலும் அலுவல் மொழியாக இருக்கும் என்று மட்டுமே எழுதப்பட்டுள்ளது.

இவற்றை​ ,  அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது இணைப்பில் (Eighth Schedule) விதிகள் 344(1), 351-இன்படி, 1950 முதல் 2002 வரையில், 14 மொழிகளே இருந்தன. 2003இல் செய்யப்பட்ட 92ஆவது திருத்தத்துக்குப் பிறகு, 22 “மொழிகள்” பட்டியலிடப்பட்டுள்ளன.

இவை “பிராந்திய மொழிகள்” என்றோ, “மாநிலங் களின் மொழிகள்” என்றோ இங்கே குறிப்பிடப்பட வில்லை.

பகுதி – II என்கிற தலைப்பின்கீழ் மட்டும் - “பிராந்திய மொழிகள் -Regional Languages” என்று காணப்பட்டுள்ளது. இதன்கீழ் விதிகள் 345, 346, 347 உள்ளன.

இது மூன்றாவது மோசடி; இது ஓர் அவமானம்.

இந்த நிலையில் “மொழிகள்” என்கிற மேலே கண்ட பட்டியலில் “ஆங்கிலம்” என்பது இல்லை.

அப்படி இல்லாமலே “ஆங்கிலம்-இந்தி பேசாத மக்கள் விரும்புகிற வரையில், இணை ஆட்சி மொழியாக இருக்கும்” என்று, “ஆட்சி மொழிச் சட்டம்” என்கிற ​ நிர்வாக சட்டம் இருக்கிறது.

இது​ போன்ற   மோசடி. ஏன்?

அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெறாத ஆட்சி மொழிச் சட்டம் - ஆங்கிலம் தொடர்ந்து ஆட்சி மொழியாக இருக்க மட்டுமே பயன்படுமே அன்றி,​ அதனால் ​ இந்தி ஆட்சிமொழியாக ஆவதைத் தடுக்க​ முடியாது . இது உண்மை.

இந்தியாவின் அரசாங்க மொழி இந்தியாக இருக்க வேண்டும், அது தகுந்தமுறையில் அமையும் வரை ஆங்கிலம் இருக்கலாம் என்றார் அம்பேத்கர் 

மாநில மொழி அரசாங்க மொழி ஆக்கக் கூடாது, ஏனெனில், இரு மொழிகள் மக்களைப் பிரிக்கும்,  ஆனால்  இந்தி, மக்களை இணைக்கும்  என்கிறார் – அம்பேத்கர்   
அதை சூழ்ச்சி எண்ணம் கொண்ட  நேருவும் , இங்குள்ள தலைவர்களும் சேர்ந்து ஆங்கிலத்துக்கு வெண்சாமரம் வீசி தங்கள் சொந்த மொழியான தமிழுக்கு துரோகம் செய்தார்கள் , இவர்கள் உடன்படிக்கையின் படி
அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெறாத ஆட்சி மொழிச் சட்டம் - ஆங்கிலம் தொடர்ந்து ஆட்சி மொழியாக இருக்க மட்டுமே பயன்படுமே அன்றி, இந்தி ஆட்சிமொழியாக ஆவதைத் தடுக்கப் பயன்படாது. இது உண்மை.

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...