Tuesday, September 10, 2013

திருஆவினன் குடி

முருகனின் மூன்றாம் படை வீடு திருஆவினன் குடி
மற்றும் பழநி மலை கிட்ட தட்ட நூறு ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட அரிய புகைப்படம்..

இராஜராஜன் காலத்திய கோயில்கள். புதிதாக கட்டப்பட்டயைகளும், புதுப்பிக்கப்பட்டவைகளும்



பெரிய கோயில்.  (இராஜராஜேஸ்வரம்) தஞ்சாவூர்
லோகமகா தேவீஸ்வரம்.  திருவையாறு
ஷேத்திரபாலர் கோயில்.  திருவலஞ்சுழி
உத்திரபடீஸ்வரர் கோயில்.  திருச்செங்காட்டங்குடி
திருராமநாததீஸ்வரம் கோயில்.  திருவீரனேஸ்வரம்
அமிர்தகடேஸ்வரர் கோயில்.  திருக்கடையூர்
கதரேரணஸ்வாமி கோயில்.  நாகப்பட்டினம்
பாரிஜாதவனேஸ்வரர் கோயில்.  திருக்கலூர்
திருமலைக்கடம்பூர் கோயில்.  நார்த்தமலை
திருநெடுங்கல்ஸ்நாதசுவாமி கோயில்.  திருநெடுங்கலம்
சாம்வேதீஸ்வரர் கோயில்.  திருமங்கலம்
குந்தன்குழி மகாதேவர் கோயில்.  மதகடிப்பட்டு
பூமீஸ்வரர் கோயில்.  மரக்காணம்
கயிலாயத்துப் பரமேஸ்வரன் கோயில்.  உலகாபுரம்
அரிஞ்சகை விண்ணகர் கோயில்.  உலகாபுரம்
சுந்தரசோழப் பெரும்பள்ளி கோயில்.  உலகாபுரம்
மகாசாஸ்தா கோயில். அகரம்
திருவாலந்துரைஉடைய பரமசிவன் கோயில்.  ஏமப்பேரூர்
பிரம்மபுரீஸ்வரர் கோயில்.  பிரம்மதேசம்
ராஜராஜ விண்ணகரம்.  எண்ணாயிரம்
திருஇராமேஸ்வரம் கோயில்.  ஈசாலம்
ரவுகுல மாணிக்கேஸ்வரர் கோயில்.   தாதாபுரம்
குந்தவை விண்ணகர் ஆழ்வார் கோயில்.  தாதாபுரம்
குந்தவை ஜீனாலயம்.  தாதாபுரம்
சிவலோகமுடைய பரமேஸ்வரம் கோயில்.  திருவக்கரை
வெங்கடேச பெருமாள் கோயில்.   திருமுக்கூடல்
ராஜேஸ்வரமுடைய மகாதேவர் கோயில்.  சிவபுரம்
திருவீரவிண்ணகர் ஆழ்வார் கோயில். ஆர்ப்பாக்கம்
முருகேஸ்வர சுவாமி கோயில்.  மாம்பாக்கம்
ராஜராஜேஸ்வரம்.  சோழபுரம்
ஜெயங்கொண்ட சோழீஸ்வரம்.  செங்குன்றம்
குந்தவை ஜீனாலயம்.   திருமலை
ராஜேந்திர சிம்மேஸ்வரம்.  மேல்பாடி
சோமீஸ்வரம்.  மேல்பாடி
பள்ளிகொண்டார் கோயில்.  (சோமேஸ்வரர் கோயில்) ஆற்றூர்
நெல்லையப்பர் கோயில்.   திருநெல்வேலி
கைலாசபதி கோயில். கங்கைகொண்டான்
நிகரிலிச் சோழ விண்ணகரம்.  சேரமாதேவி
கைலாசமுடையார் கோயில்.  சேரமாதேவி
திரு இராமேஸ்வரம் கோயில்.  திருவாலீஸ்வரம்
ஸோழீஸ்வரர் கோயில்.  நாகர்கோயில்
வானவன் மாதேவீஸ்வரம். (பள்ளிகொண்டா கோயில்) பொலன்ருவ (இலங்கை)
உத்தமசோழீஸ்வரம்.   பொலன்ருவா
அருள்மொழிதேவீஸ்வரம்.    மலூர்பட்னா
ஜெயங்கொண்ட சோழ விண்ணகர்.    மலூர்பட்னா
ராஜேந்திர சிம்மேஸ்வரம் (அப்பரமேய சுவாமி கோயில்)   மாலூர்
இராஜராஜேஸ்வரம்.   மாந்தோட்டம்
சொர்ணபுரீஸ்வரர் கோயில்.  அழாத்திரிபுத்தூர்
சூளாமணிவர்ம விகாரம்.   நாகப்பட்டினம்
கண்ணாயிநாதேஸ்வரன் கோயில்.    திருக்காரவாசல்

அனுமன் பிரதிஷ்டை செய்த லிங்கம்.!



கும்பகோணம் மன்னார்குடி சாலையில் உள்ள மருதாநல்லூர் எனும் திருக்கருக்குடியில் குற்குணலிங்கேஸ்வரரும் சர்வாலங்கார மின்னம்மை எனும் அத்வைத நாயகியும் அருளாட்சி புரிகின்றனர்.

ஏனாதி நாயனார் இத்தலத்தில்தான் அவதரித்தார்.

இத்தல ஈசன் ராமச்சந்திரமூர்த்தியால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர்.

அனுமந்தலிங்கேஸ்வரர் அனுமனால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர்.

பிரம்மபுரீஸ்வரர் நான்முகனால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர்.

அம்பாள் திருமணக் திருக்கோலத்தில் அருளும் திருத்தலம் இது.

நார்த்தமலை சிவன் கோவில்-புதுக்கோட்டை Tamil nadu (Siva Tample


The Peruvudaiyar Kovil, also known as Brihadeeswara Temple, at Thanjavur in the Indian


அறுபடை வீடுகள்



01.திருப்பரங்குன்றம்
ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார். அசுரனை வென்ற அவர் இந்த தலத்தில் இந்திரனின் மகளான தெய்வானையை திருமணம் செய்து கொண்டார். முருகன் அமர்ந்த கோலத்தில் இருப்பது சிறப்பு. இத்தலத்தில் மலை வடிவில் சிவபெருமான் அருள்புரிகிறார். சிவனின் பெயரால் இத்தலம் "திருப்பரங்குன்றம்' எனப்படுகிறது. முருகனின் அருகில் நாரதர் தாடியுடன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

02. திருச்செந்தூர்
முருகனின் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர். இது கடலோரத்தில் அலைகள் வீச அமைந்துள்ளதால் அலைவாய் என்ற பெயரும் உண்டு. இந்ததலம் கைலாயத்திற்கு சமமானது. முருகப்பெருமான் சூரர்களை வெல்வதற்கு முன்னும் பின்னும் தங்கிய இடம். இவரது திருவடிகளை படகிற்கு சமமாக சொல்கிறார்கள். அதனால் தான் கடலின் முன்புள்ள இத்தலத்திலுள்ள முருகனின் திருவடிகளை வணங்கி பிறவிப் பெருங்கடலை கடப்பதாக நம்பிக்கையுள்ளது.

03. பழநி
சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி பழநி. மருந்தே மலையாக அமைந்த தலம். பழநியில் கால்வைத்தாலே பாதி நோய் தீரும். மலை ஏறிவிட்டால் முழு நோயும் நீங்கும். 12 ஆண்டுகளுக்கு தொடர்ந்து காலை 4 மணிக்கு எழுந்து நீராடி, கிரிவலம் வந்து, மலை மீது ஏறி, முருகன் திருவடி நாடி, தியானத்தில் அமர்ந்தால் அனைத்தும் ஒன்றே என்ற அற்புத தத்துவ விளக்கம் பெறுவதுடன், வாழ்க்கை என்றால் இன்னதென்று உணரும் ஞானஒளியையும் பெறலாம். அபிஷேகம் செய்யப்பட்ட பஞ்சாமிர்தம், பால், தீர்த்தம் சாப்பிட்டால் நோய் தீரும். ஒரு கோயிலுக்கு அபூர்வ சக்தி அளிப்பவை அங்குள்ள மூர்த்தி (சிலை), தீர்த்தம், தலம் (அமைவிடம்) ஆகியவை. பழநி கோயிலுக்கு அபூர்வ சக்தி அளிப்பது சிலை. போகர் சித்தரால் நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது.

04. சுவாமிமலை சிவகுருநாதன்
சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்தை உபதேசித்து சுவாமி மலையில் சுவாமிநாதனாக முருகப்பெருமான் வீற்றிருக்கின்றார். "தன்னைவிட தன் பிள்ளைகள் அறிவுடையவர்களாக இருப்பது இப்பரந்த உலகத்தில் வாழும் உயிர்களுக்கெல்லாம் நன்மையைத் தரும்' என்கிறார் வள்ளுவர். அந்த வழியில் தன் பிள்ளையின் வாயால் மந்திரத்தின் பொருளை கேட்டு மகிழ்ந்தார் சிவன். அதுவும் தன் பிள்ளை குருவாக வீற்றிருக்க, தானே சீடனைப் போல் அமர்ந்து கேட்டார். அதனால் ""சிவகுருநாதன்'' என்ற பெயரை முருகப்பெருமான் பெற்றார்.

05. திருத்தணி முருகன்
அழகே உருவாக பொலிவுடன் காட்சி தரும் முருகன், திருத்தணியில் மார்பில் காயம்பட்ட தடத்துடன் இருக்கிறார். இதனை சூரனுடன் போரிட்ட போது ஏற்பட்ட காயம் என்கிறார்கள். திருச்செந்தூரில் சூரனை வதம் செய்த முருகன் இங்கு வந்து கோபம் தணிந்து சாந்தமாக அமர்ந்தார். கோபம் தணித்த இடம் என்பதால் "தணிகை' என இவ்வூர் பெயர் பெற்றது. அபிஷேக சந்தனம் இத்தலத்தில் பிரசாதமாக தரப்படுகிறது. இ தனை பக்தர்கள் நீரில் கரைத்து குடிக்கின்றனர். இதனால், நோய் நீங்கும் என்பது நம்பிக்கை.

06. சோலைமலை
அறுபடைவீடுகளில் ஆறாவது வீடாக விளங்குவது சோலைமலை. மதுரையிலிருந்து 20 கி.மீ., தொலைவில் உள்ளது. அவ்வைக்கிழவியிடம்,"" சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?,'' என்று சாதுர்யத்துடன் உரையாடிய முருகன், இங்கு கோயில் கொண்டிருக்கிறார். உலக உயிர்கள் அனைத்தும் பழங்கள். அவற்றின் மீது பாசபந்தம் என்னும் மண் ஒட்டியிருக்கிறது. அதனைப்போக்க கல்வியறிவு மட்டும் போதாது. இறையருள் என்னும் மெய்யறிவும் வேண்டும் என்பதை உணர்த்த சுட்டிப்பையனாக வந்து திருவிளையாடல் புரிந்தவர் இவர். தன்னை வழிபட்டவர்க்கு கல்வியறிவும், ஞானமும் தருபவராக அருள்கிறார். ""அறிவால் அறிந்து உன் இருதாள் இறைஞ்சும் அடியார் இடைஞ்சல் களைவோனே'' என்று அருணகிரிநாதர் இவரைப் போற்றியுள்ளார்.

இந்து சாஸ்திரீய திருமண முறைகள்


இந்து சாஸ்திரங்கள் எட்டு வகையான திரு மண முறைகள் பற்றி கூறுகின்றன. அந்த எட்டு வகை திருமணங்களைப் பற்றி அர்த்த சாஸ்திரம் எழுதிய கெளடில்யர் வரை பல் வேறு ரிஷிகள் குறிப் பிட்டு இருந்தாலும் மனு வின் விளக்கம் பயனுள்ளது.

1. பிரம்ம முறை திருமணம்:

வேத ஆகமங்களை கற்றுத்தேர்ந்து, நல் லொழுக்கமுள்ள ஒரு ஆணை, பெண்ணி ன் தந்தை அழைத்து, தனது மகளுக்கு விலை யுயர்ந்த ஆடை அணிகலன்களைப் பூட்டி மணமுடித்து வைப்பது.

2. தெய்வ முறை திருமணம்:

பூசை புனஸ்காரங்களை நிறைவேற்றும் அர்ச்சகருக்கு, பெண்ணின் தந்தை தனது மக ளை ஆபரணங்களைப் பூட்டி தானமாக அளி ப்பது.

3. அர்ஷா முறை திருமணம்:

புனித கடமையை நிறைவேற்றும் பொருட்டு மண மகனிடம் இருந்து பெண்ணின் தந்தை தானமாக இவ்விரண்டு ஜோடி பசுக்களையும் காளைகளை யும் பெற்று தனது மகளை மணமகனுக்கு அளிப்பது.

4. பிராஜாபத்ய முறை திருமணம்:

பெண்ணின் தந்தை மணமகனுக்கு மரியாதை செலுத்தி, ‘நீங்கள் இருவரும் இனி உங்கள் கட மைகளை இணைந்தே நிறைவேற்று வீர்களாக’ என்று சொல்லி தனது மகளை தானமாக அளி ப்பது.

5. அசுர முறை திருமணம்:

மணமகன் தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தனங்களை ஒரு கன்னிப் பெண்ணின் உறவினர்களுக்கு பரிசாக அளித்து மண மகளை அடைவது

6. காந்தர்வ முறை திருமணம்:

மணமகனும் மணமகளும் ஒருவருக் கொரு வரான பாலுணர்வால் உந்தப்பட்டு தாமாகவே இணைந்து வாழ்வது.

7. ராக்ஷஷ முறை திருமணம்:

ஒரு பெண்ணின் உறவினர்களை கொன்று அல்லது காயப்படுத்தி, அவள் அழுதாலும் அரற்றினாலும் கவலைப்படாமல் அவள் விருப் பத்துக்கு மாறாக அவளை கவர்ந்து செய்து மணமுடிப்பது.

8. பைசாச முறை திருமணம்:

ஒரு பெண் மயக்கமுற்று அல்லது உறக்கத்தில் இருக்கை யிலோ அல்லது போதையிலிருக்கையிலோ அவளை நய வஞ்சகமாக அடையும் பாவ கரமான முறை.

அட்டமா சித்திக்கள்:



1. அணிமா
2. மஹிமா
3. லஹிமா
4. கரிமா
5. பிராத்தி
6. பிரகாமியம்
7. ஈசத்துவம்
8. வசித்துவம்

அட்டமா சித்தி என்று மரபாகக் கருதப்படும் எட்டுத் திறமைகளை அடைந்தவர்கள் சித்தர்கள் ஆவர். இவை இயற்கை அளித்த திறமைகள் எனவும் அற்புதத் தன்மை உடையன என்றும் கருதப்படுகின்றன. இவ்வாறான அட்டமா சித்திகளைச் சித்தர்கள் அட்டாங்க யோகப் பயிற்சியினால் பெற்றனர். இந்தச் சித்திகளைத் திருமந்திரம் விளக்குகிறது

அணுவினும் நுண்ணுருவு கொளல் அணிமாவாம், அவற்றின்
அதி வேகத்து இயங்கியும் தோய்வற்ற உடல் லகிமா,
திணிய பெருவரை என மெய் சிறப்புறுகை பகிமா,
சிந்தித்த பலம் எவையும் செறிந்துறுகை பிராத்தி,
பிணை விழியர் ஆயிரவரொடும் புணர்ச்சி பெறுகை
பிரகாமி, ஈசிதை மாவலியும் அடி பேணி
மணமலர் போல் எவராலும் வாஞ்சிக்கப்படுகை
வசி வசிதை வலியாரால் தடுப்பரிய வாழ்வே.

அணிமா:
பெரிய ஒரு பொருளை தோற்றத்தில் சிறியதாகக் காட்டுவது/ஆக்குவது.
பிருங்கி முனிவர் முத்தேவர்களை மட்டும் வலம் வருவதற்காக சிறு வண்டாக உருமாறினார் என்ற செய்தி அணிமா என்ற சித்தைக் குறிக்கும்.

மஹிமா:
சிறிய பொருளைப் பெரிய பொருளாக்குவது.
வாமன அவதாரத்தில் திருமால் இரண்டடியால் மூவுலகை அளந்ததும், கிருஷ்ண பரமாத்மா அர்ஜூனனுக்கு விஸ்வ ரூப தரிசனம் காட்டி உலகமே தன்னுள் அடக்கம் என்று காட்டியதும் மஹிமா என்னும் சித்தாகும்.

லஹிமா:
கனமான பொருளை இலேசான பொருளாக ஆக்குவது.
திருநாவுக்கரசரை சமயப் பகை காரணமாக கல்லில் கட்டி கடலில் போட்டபோது கல் மிதவையாகி கடலில் மிதந்தது லஹிமா ஆகும்.

கரிமா:
இலேசான பொருளை மிகவும் கனமான பொருளாக ஆக்குவது.
அமர்நீதி நாயனாரிடம் கோவணம் பெறுவதற்காக இறைவன் வந்தபோது, ஒரு கோவணத்தின் எடைக்கு தன்னிடமுள்ள எல்லா பொருட்களை வைத்தும் தராசுத் தட்டு சரியாகாமல் கடைசியாக தானும் தன் மனைவியும் ஏறி அமர்ந்து சரி செய்த சித்தி கரிமா.

பிராத்தி:
எவ்விடத்திலும் தடையின்றி சஞ்சாரம் செய்வது.
திருவிளையாடற்புராணத்தில் "எல்லாம்வல்ல சித்தரான படலம்" என்னும் பகுதியில் சிவன் ஒரே சமயத்தில் நான்கு திசைகளிலும் காட்சியளித்ததாக வரும் சித்தி பிராத்தி.

பிரகாமியம்:
வேண்டிய உடலை எடுத்து நினைத்தவரிடத்தில் அப்போதே தோன்றுதல்.
அவ்வையார் இளவயதிலேயே முதுமை வடிவத்தைப் பெற்றதும், காரைக்கால் அம்மையார் தன்னுடைய அழகான பெண்வடிவத்தை மாற்றி பேய் வடிவம் பெற்றதும் பிரகாமியம் என்னும் சித்தாகும்.

ஈசத்துவம்:
ஐந்து தொழில்களை நடத்துதல்.
திருஞானசம்பந்தர் பூம்பாவைக்கு உயிர் கொடுத்து எழுப்பியமை ஈசத்துவம் எனும் சித்தாகும்.

வசித்துவம்
ஏழுவகைத் தோற்றமாகிய தேவ, மானிட, நரக, மிருக, பறப்பன, ஊர்வன, மரம் முதலியவற்றைத் தம்வசப் படுத்துதல்.
திருநாவுக்கரசர் தம்மைக் கொல்வதற்காக வந்த யானையை நிறுத்தியதும், ராமர் ஆலமரத்திலிருந்து ஒலி செய்து கொண்டிருந்த பறவைகளின் ஓசையை நிறுத்தியதும் வசித்துவம் எனும் சித்தாகும்

வேம்பு


வேப்ப மரத்திலிருந்து வீசும் காற்று ஒரு வகை மருத்துவ குணம் கொண்டது. இது உடலுக்கு தீங்கை விளைவிக்கும் பாக்டீரியாகளைக் கொல்லும் சக்தியை உடையது. வேப்பமரங்கள் அதிகமாக இருக்கும் கிராமங்களில் மற்ற இடங்களில் நோய்கள் பரவுவது போல் பரவுவது இல்லை. நன்றாக தழைத்து வளர்ந்து இருக்கும் வேப்ப மரத்தை தினந்தோறும் பார்த்து வந்தாலே கண்களுக்கு குளிர்ச்சி உண்டாகும். அம்மரத்தின் அடியில் மாலை நேரங்களில் அமர்ந்து இருந்தாலே மன இறுக்கம் குறையும். உடல் உபாதைகளும் நீங்கும். இதனால் தான் மன நல காப்பகங்களில் கூட அதிகமாக நாம் வேப்ப மரங்களை காண முடியும். இதனால் மன நலம் பாதிக்கபட்டவர்கள் குணமடைய வாய்ப்பு உண்டு.

இயற்கையாகவே வேப்பமரத்தின் இலைகளின் நுனி பகுதிகள் பூமியை பார்த்த படியே கீழ் நோக்கி இருக்கும். இதனால் ஒளிச்சேர்கையின் போது வெளியாகும். ஆக்சிஜனில் வெகு சக்தியுள்ள ஒசான் (O3)கலந்து உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மனித உடலில் உண்டாகும் சகல வியாதிகளையும் குணமாக்கிடும் மருத்துவ குணத்தைக் கொண்ட சஞ்சீவி மரமாக வேம்பு திகழ்கின்றது. இம்மரத்தில் வேர், பட்டை, மரப்பட்டை, மரக்கட்டை , வேப்பங் கொட்டையின் மேல் ஓடு, உள்ளிருக்கும் பருப்பு, வேப்பமரத்து பால் , வேப்பம் பிசின், வேப்பங்காய் , வேப்பம் பழம் , பூ, இலை , இலையின் ஈர்க்கு , வேப்பங் கொழுந்து போன்றவை மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளபடியால் அவை அனைத்துமே சித்த , ஆயுர்வேத முறை வைத்தியங்களில் மருந்துப் பொருளாகச் சேர்க்கப்பட்டு வருகிறது.

இதனால் தான் அம்மை கண்டுள்ள வீட்டின் வாசற்புறத்தில் வேப்பிலைக் தோரணம் கட்டி வைப்பார்கள் .இவ்வாறு வைப்பதினால் அம்மை நோயானது பரவாமல் இருக்கும்.அம்மை நோய்க்கு ஆளானவர்களை வேப்பிலை மீது தான் படுக்க வைத்திருப்பார்கள் . இது அம்மை நோய் இறங்கும் போது உடம்பில் ஒரு வித நமைச்சலும் அரிப்பும் உண்டாகும் . இதைத் தடுக்கவே இவ்வாறு செய்கிறார்கள். அம்மை நோய் இறங்கிய பின் தலைக்குத் தண்ணீர் விடுவார்கள். அவ்வாறு தண்ணீர் விடும் சமயத்தில் வேப்பிலை மற்றும் மஞ்சள் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து எடுத்த விழுதினை நோயாளியின் உடம்பு முழுவதும் பூசிப் பின் உடம்பைக் கழுவுவார்கள்.

சமீப காலமாக அறிவியல் ஆய்வுகள் வேப்பிலைக்கு நச்சினை முறிக்கும் தன்மை மற்றும் நுண்ணிய விஷ கிருமிளையும் அழிக்கும் தன்மை உடையது எனத் தெளிவுபடுத்துகிறது.

மேலும் குழந்தை பிரசவமான வீட்டின் வாசற்புறத்தில் வேப்பிலைத் தோரணம் கட்டி வைப்பார்கள். இவ்வாறு வைப்பதினால் வெளியிலிருந்து வருபவர்களிடமிருந்து நச்சுகிருமியானது தாய் சேய் இருவரிடமும் பரவாமல் தடுத்து இருவரையும் பாதுகாக்கும்.

நீரழிவு என்று சொல்லகூடிய சர்க்கரை வியாதியையும் இது கட்டுபடுத்தும். எவ்வாறென்றால் வேப்பங் கொழுந்தை மை போல் அரைத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சர்க்கரை வியாதியின் கடுமை குறைந்து அதைக் கட்டுபடுத்தலாம் .மேலும் மஞ்சள் காமலை, குடற்புண், பாம்புகடி, வீக்கம், காய்ச்சல் போன்றவைகளையும் இது குணப்படுத்த வல்லது.

வேப்பம்பூ ஆனது நிம்பஸ்டி ரோல் என்ற பொருளை கொண்டுள்ளது. இது மனித உடலில் சுரக்கும் ஹார்மோன்களில் ஒன்றை ஒத்துப் போவதால் இது பசியை தூண்டிடவும், பித்தம் , வாந்தி, வாதம் சம்பந்தப்பட்ட நோய்களையும் குணப்படுத்துகிறது.

This is Shivgaga Betta about 70 Kms from Bangalore


கந்தர் அந்தாதி-அருணகிரிநாதர்


ஆறுமுகப் பெருமானுக்கு உகந்த ஆறு நூல்களுள் ஒன்று இந்த கந்தர் அந்தாதி. இதிலுள்ள காப்புச் செய்யுள்களால் இது திருவண்ணாமலையிற் பாடப்பட்டிருத்தல் வேண்டுமெனத் தோன்றுகிறது. நூலிலுள்ள நூறு செய்யுள்களின் முதலெழுத்துக்கள் சி, சீ, செ, சே, தி, தீ, தெ, தே என்னும் எட்டெழுத்துக்களுள் அடங்குதல் கவனிக்கத்தக்கது. இந்நூலைப் பாடியவர் அருணகிரி நாதர்.

பெரும்புலமை வாய்ந்த பாரதம் பாடிய வில்லிபுத்தூரார், தமது கல்விச் செருக்கால், தம்மோடு வாது செய்து தோற்றவர்களின் காதைக் குறடு கொண்டு குடைந்து தோண்டும் வழக்கத்தை கொண்டிருந்தார். அவருக்கும் அருணகிரிநாதருக்கும் ஒருமுறை தருக்கம் உண்டாயிற்றென்றும், அப்போது ஆசுகவியாக அருணகிரிநாதர் பாடிய நூல் தான் கந்தர் அந்தாதி என்றும் அந்நூலுக்கு உரையை வில்லிபுத்தூரார் உடனுக்குடன் கூறி வந்தார் என்றும் கூறுவர். அவ்வாறு கூறி வரும் போது ‘திதத்த’ எனத் தொடங்கும் 54வது செய்யுளுக்கு வில்லிபுத்தூரார் உரை கூற இயலாது திகைத்து தோல்வியுற்றார்.

திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே.

அதற்கு அருணகிரிநாதரே உரை அருளினார் என்றும் கூறுவர். பின்பு ஏனைய பாடல்களுக்கு வில்லிபுத்தாரே உரை கூறினார் என்றும் கூறுவர். வில்லிபுத்தார் உரை கூற முடியாமல் தோல்வியுற்றாலும் அருணகிரிநாதர் அவருடைய காதை அறுத்து இழிவுபடுத்தாமல், இனி கருணைக்கு விரோதமான இவ்வழக்கத்தை விட்டுவிட வேண்டும் என புத்தி சொல்லி அவர் கையிலிருந்த குறடை எறியச் செய்தார் என்றும் கூறுவர். இக்கருணையைக் கருதியும் ‘கருணைக் கருணகிரி’ என்னும் வழக்கு எழுந்தது.

அருணகிரிநாதர், தமிழ் நாட்டில் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து முருகக் கடவுள் மீது பாடல்கள் எழுதி புகழ் பெற்ற அருளாளர். இவர் திருவண்ணாமலையில் பிறந்தார் என்றும், காவிரிப் பூம்பட்டினத்தில் பிறந்தார் என்றும் சொல்கின்றனர். இவர் தமிழ் மொழி, வடமொழி ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்றவர். இவரைப்போல் ஆயிரக்கணக்கான பல்வேறு இசைச் சந்தங்களிலே பாடியவர் வேறு யாரும் இல்லை என்றே சொல்லலாம். கருத்தாழமும், சொல்லழகும், இசைத்தாளச் செறிவும் நிறைந்தது இவர் பாடல்கள். இவர் எழுதிய திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்து இருக்கிறார்கள்.

கடவுளைக் கண்ட ஹரி சிங்

ஜெய்ப்பூரில், சுவாமி (சுவாமி விவேகானந்தர்) அரசின் தலைமைத் தளபதியான சர்தார் ஹரி சிங்குடன் மிகவும் நெருக்கமாகப் பழகினார். அவர் ஹரி சிங்கின் இல...