Friday, September 30, 2016

விரதம் முறை மற்றும் பலன்கள


ஆன்மீகம் என்றும் உள்ளும் புறமும் தூய்மைப்படுத்தும் கருவியாகவே இருக்கிறது.

நாம் பயன்படுத்தும் சம்பிரதாயங்கள் சடங்குகளுக்கு பின்புலத்தில் இருக்கும் காரணம் தெரியாமல் பயன்படுத்துவதால் நாளடைவில் அதன் மேல் ஒரு சலிப்பு ஏற்படுகிறது.

பக்தியுடனோ அல்லது ஈடுபாட்டுடனோ செய்யாத ஆன்மீக காரியங்கள் பலன்கொடுக்காது.

ஒருவர் தான் செய்யும் ஆன்மீக காரியங்களின் தாத்பரியம் தெரிந்தால் தான் அதில் முழுமனதுடன் செய்யமுடியும்.

மேலும் அடுத்த சந்ததியினருக்கு எடுத்துசொல்ல முடியும்.

நமது கலாச்சாரத்தில் சைவம், வைணவம் மற்றும் சாக்தம் என ஏனைய சித்தாத்தங்கள் இருந்தாலும்,

அனைத்து முறையிலும் சில சம்பிரதாயங்கள் ஒன்றாவே இருக்கிறது. அத்தகைய சம்பிரதாயங்களில் முக்கியமானது விரதம் இருத்தல் என்பதாகும்.

விரதம் இருப்பது என்றவுடன் உண்ணாமல் இருப்பது என்று மட்டுமே நினைத்துவிடுகிறோம். ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் தனது அவயங்களை செயல்படாமல் வைப்பது விரதம் இருத்தல் என விளக்கலாம்.

பஞ்சபூதங்களின் வடிவமான நமது ஐந்துவிதமான உணர்வு உறுப்புக்களை செயல்படுத்தாமல் இருக்கும் பட்சத்தில் அபரீதமான சக்தி நமக்குள் சுரக்கும். ப்ராணா என அழைக்கப்படும் இந்த சக்தியை கொண்டு நமது ஆன்மீக வாழ்க்கையில் எளிதில் மேம்படலாம்.

உணர்வு உறுப்புக்கள் ஒவ்வொன்றும் பஞ்சபூதத்தின் அடிப்படையாக இருப்பதாக விளக்கினேன் அல்லவா?
பஞ்சபூதம் குறிக்கும் உறுப்புகள் என்ன என காண்போம்.

கண் - நெருப்பு
வாய் - நீர்
காது - ஆகாயம்
மூக்கு - மண்
தொடு உணர்வு - காற்று

நமது உணர்வு உறுப்புக்களின் செயலை ஒரு நோக்கத்துடன் தற்காலிகமாக நிறுத்தும் பொழுது அது விரதம் என கூறலாம். நம் உடல் சக்தி அதிகமாக உணர்வு உறுப்புக்கள் மூலம் வீணக்கப்படுகிறது.

நாம் அந்த உணர்வு உறுப்புக்களை செயல்பட்டாமல் இருக்கச் செய்தால் அதில் வீணாகும் சக்தி நம்முள்ளே சேமிக்கப்பட்டு ஆன்மீக ஆற்றலா மாற்றம் அடையும்.

காது மற்றும் மூக்கு பகுதிகளின் செயல்பாட்டில் ஆகாயமும் மண்ணும் இருக்கிறது.

ஆகாயம் மற்றும் மண்ணின் தொடர்பில்லாமல் நம்மால் ஒரு கணமும் வாழமுடியாது.

அதை போலவே இந்த இரு அவயங்களின் செயல்களை நாம்மால் செயற்கையாக நிறுத்த முடியாது.

உறுப்புக்களின் செயலை தற்காலிகமாக நிறுத்தினால் நமக்கு சக்தி கிடைக்குமா எப்படி?
என பலர் நினைக்கிறார்கள்.

மஹாபாரதத்தில் கெளரவர்களின் தாய் காந்தாரி.

திருத்ராஷ்டிரனை திருமணம் செய்தபின் தன் கணவன் காணாத இவ்வுலகை நானும் காணமாட்டேன் என தனது கண்களை கட்டிக்கொண்ட பதிவிரதை.

அவள் எடுத்த வைராகியமான முடிவு அவளின் சக்தியை நாளாக நாளாக கூட்டி அவளுக்குள் மாபெரும் சக்தியாக அமைந்துவிட்டது.

பாரத போர் சமயத்தில் தனது கண்கள் மூலம் சேமித்த ஆற்றல் அனைத்தும் தனது மகனுக்கு வழங்கி அவனை மாபெரும் சக்தி உள்ளவனாக மாற்ற எண்ணுகிறாள் துரியோதனனின் அன்புத்தாய் காந்தாரி. துரியோதனனை குளித்துவிட்டு நிர்வாணமாக தன்முன் வர சொல்லுகிறார்.

துரியோதனன் குளிக்க செல்லுகையில் ஸ்ரீ கிருஷ்ணர் எதிர்ப்பட்டு, ”என்னப்பா இந்த சமயத்தில் குளிக்கபோகிறாயா?” என கேட்கிறார்.

தனது தாயின் நோக்கத்தை கூறுகிறான் துரியோதனன்.

ஸ்ரீ கிருஷ்ணர் புன்னகைத்துவிட்டு நீ வளர்ந்த மனிதன் தாயின் முன் நிர்வாணமாக நிற்கலாமா என கேட்கிறார்.

குளித்தபின் வாழை இலையை இடுப்பில் தொடை வரை அணிந்து காந்தாரியின் முன் செல்லுகிறான் துரியோதனன்.

கண்களை திறந்து தனது சக்தியை வழங்கிய காந்தரிக்கு தன்மகன் இடுப்பு பகுதியில் ஆடையுடன் இருப்பதை கண்டு கலங்கினாள்.

ஸ்ரீ கிருஷ்ணரின் மாய விளையாட்டை புரிந்துகொண்டாள்.

பாரத போரின் இறுதியில் பீமனுக்கும், துரியோதனனுக்கும் கடும் மோதல் ஏற்படும் பொழுது எந்த உறுப்பில் தாக்கினாலும் இறக்காமல் இருந்த துரியோதனன் கடைசியில் தொடைப்பகுதியில் தாக்கியதும் இறந்தான்.

காரணம் காந்தாரி வழங்கிய சக்தி தொடைபகுதியில் இல்லை.

பீமன் உடல் வலிமையில் சிறந்தவன் அவனால் காந்தாரியின் கண் மூலம் பெற்ற ஆற்றலை ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதே விரத பலனை நமக்கு உணர்த்தும்.

விரதம் இருக்கும் பொழுது மட்டுமே
நம் உடலில் இருக்கும் சக்தியையும் நாம் தினமும் வீணாக்கும் சக்தியின் அளவையும் புரிந்துகொள்ள முடியும்.

விரதம் இருத்தலில் உணர்வு உறுப்புக்களில் முக்கியத்துவம் பெருவது வாய் எனும் உறுப்பு. பிற உணர்வு உறுப்புக்கள் ஒரு செயலை மட்டுமே செய்யும்.

ஆனால் வாய் மட்டும் இரு செயலை செய்யும். சுவைத்தல் மட்டும் பேசுதல் என இரு செயல்களை தவிர்ப்பதை அனேக விரதங்களின் அடிப்படையாக இருக்கிறது.

சதுர்த்தி,சஷ்டி,ஏகாதசி,பிரதோஷம் ஆகிய திதிகளும், திங்கள் (சோம வாரம்), வியாழன் (குருவாரம்) கிழமைகளில் விரதமும் நமக்கு நன்மையை ஏற்படுத்தும். அன்றைய கோள்களின் நிலை நமது உடலின் சக்தியை மேலும் வலுசேர்க்கும்.

சாப்பிடாமல் விரதம் இருக்கும் முறையை உண்ணாவிரதம் என்றழைத்தோம்,

தற்சமயம் உண்ணாவிரதம் இருத்தல் என்பது ஏதோ அரசியல் செயலாக மாறிவிட்டது.

ஒரு குறிப்பிட்ட நோகத்திற்காக வைராக்கியத்துடன் உணவு சாப்பிடாமல் இருக்கும் தன்மையை இவ்விரதம் சுட்டிகாட்டுகிறது.

மஹாத்மா காந்தி வெள்ளையருக்கு எதிர்ப்பு காட்ட நமது சம்பிரதாயத்தை ஒரு ஆயுதமாக் பயன்படுத்தினார். தற்சமயம் அது அரசியலாகிவிட்டது.

நாமும் ஒரு வாழ்க்கையில் மேன்மை அடைய ஒரு லட்சியம் மற்றும் வைராக்கியத்துடன் மாதம் இரு நாளிலோ அல்லது வாரம் ஒரு நாளோ விரதம் இருப்போம் ஆனால் அவை கைகூடும் என்பது சான்றோர்களின் வாழ்க்கை மூலம் அறியலாம்.

நமது உடலின் சக்தியை அதிகமாக செலவிடும் உணர்வு உறுப்பு கண். கண்களை காட்டிலும் அதிகமாக் சக்தியை செலவு செய்யும் உறுப்பு ஜீரண உறுப்புகள். உண்ணாமல் இருந்தால் மயங்கி விழுந்துவிடுவோம் என்ற தவறான எண்ணம் பலருக்கு உண்டு.

உண்மையின் சராசரி மனிதன் உண்ணாமல் குறைந்தபட்சம் அறுபது முதல் தொன்னூறு நாள் வாழமுடியும். உங்கள் உடல்வாகுக்கு ஏற்ப மருத்துவரை கலந்துகொண்டு உண்ணா நோன்பு இருங்கள்.

உலக மதங்கள் எத்தனையோ இருந்தாலும் அதில் ஓர் அடிப்படை ஒற்றுமை உண்டு. அதற்கு சிறந்த உதாரணம் விரதம் எனும் தன்மை.

உலகின் அனேக மதங்களில் விரதம் ஒரு புனித சடங்காக கொண்டாடப்படுகிறது.

விரதம் இருக்கும் பொழுது ஏற்படும் முக்கியமான பயன் மனது தனது செயலை மிகவும் குறைவாக செய்து தன்னில் அடங்கிவிடும்.

மனமற்ற தூய நிலையில் ஆன்மீக முன்னேற்றம் விரைவாக நடக்கும்.

பால், பழங்களை உண்டு விரதம் இருத்தல் ஒரு வகை.

நீர் கூட குடிக்காமல் விரதம் இருப்பது மற்றொரு வகை.

நமது உடலின் தன்மை வாழ்க்கை சூழல் பொருத்து விரதம் இருக்க வேண்டும்.

சந்திராம்ச விரதம் என ஒரு வகை விரதம் உண்டு. சந்திரனின் பிறைக்கு ஏற்க சாப்பிடும் விரதம் சந்திராம்ச விரதம். பெளர்ணமி அன்று முழுமைகாக சாப்பிட ஆரம்பித்து படிப்படியாக குறைப்பார்கள்.

அமாவாசை அன்று ஒன்றும் சாப்பிடாமல் இருப்பார்கள்.

அமாவாசைக்கு அடுத்தநாள் ஒரு கவளம் என படிப்படியாக உணவை கூட்டுவார்கள்.

சந்திராம்ச விரதத்தை பொருத்தவாரை மாதம் முழுவதும் விரத தினங்கள்தான்.

யார் எல்லாம் உண்ணா விரதம் இருக்க கூடாது?

• சஷ்டியப்த பூர்த்தி முடித்த முதியவர்கள்
• வியாதியினால் மருந்து உண்பவர்கள்
• கர்ப்பிணிகள்
• பிரம்மச்சாரிகள்
• சன்யாசிகள்

இவர்களை தவிர பிறர் உண்ணா நோன்பு இருக்கலாம் என்கிறது தர்ம சாஸ்திரம்.

மேலும் சன்யாசிகளுக்கு
என்று தனி விரதங்களும் பிரம்மச்சாரிகளுக்கு தனி விரதமும் சாஸ்திரத்தில் உண்டு.
☘
மெளனவிரதம் இருப்பது வாய் எனும் உறுப்பின் மற்றொரு விரதமாகும். மெளவிரதத்தால் நமது உடல் மற்றும் மனது தூய்மை ஆகிறது. மெளனவிரதம் அனைவரும் இருக்க தகுந்த ஒரு விரதம்.

இதில் யாருக்கும் தடையில்லை.

உலகின் சிறந்த மொழி மெளனம்.

தக்‌ஷ்ணாமூர்த்தி உலகுக்கு அளித்த வேதம்.

மெளனமாக இருப்பதால் நம்மில் இருக்கும் சக்தியை மிகவும் துல்லியமாக அறியலாம்.

மெளனவிரதம் இருந்துவந்தால் உங்கள் உள்ளுணர்வு மிகவும் கூர்மையானதாக மாறி உங்களை விழிப்புணர்வாளர்களாக மாற்றும்.

மெளனவிரதம் இருக்கும் பொழுது சிலர் காகிதத்தில் எழுதி காட்டுவார்கள்.

மனதை ஒருநிலைப்படுத்தும் நோக்கில் இருக்கும் விரதத்திற்கு இது எதிரான செயல்.

மெளனவிரதம் இருக்கும் காலத்தில் உங்களை ஒரு ஜடப்பொருளாக பாவித்துக்
கொள்ளுங்கள்.

உங்கள் உடல்☘ செயல்படலாம் ஆனால் சைகை மூலமோ, எழுத்து மூலமோ பேசாதீர்கள்.

அப்பொழுது தான் மெளனவிரதத்தின் பயனை முழுமையாக உணரமுடியும்.

விரதங்களில் வாய்மூலம் அனுஷ்டிக்கும் விரதத்தை பற்றி பார்த்தோம்.

ப்ராணாயமத்தில் கும்பகம் எனும் செயல் தற்காலிகமான
சுவாச விரதம் எனலாம்.

மேலும் பிரம்மச்சரிய விரதம் தொடு உணர்வுக்கு விரதமாகும்.

ஒரு ஆன்மீகவாதிக்கு வைராக்கியம், அப்யாசம், பக்தி ஆகியவை மிகவும் முக்கியம்.

தனது எடுத்துக்கொண்ட செயலை எப்பாடுபட்டாவது முடிக்கும் செயல் வைராக்கியம்.

தனது ஆன்மீக செயல்களை தடையில்லாமல் தினமும் எந்த காரணம் கொண்டும் விடாமல் செய்வது அப்யாசம்.

ஈஸ்வரனிடத்தில் முழுமையான ஈடுபாட்டுடன்
இருப்பது பக்தி.

ஆன்மீகவாதியின் லட்சணங்களான இவை விரதம் இருக்கும் பொழுது நம்மில் செயல்படத் தொடங்கும்.

இறைவனை நினைத்து உண்ணாமல் இருக்கும் பொழுது நம்மில் ஆன்மீக முன்னேற்றம் ஏற்படுவதன் காரணமும் இதுதான்.

நமது சாஸ்திரம் பஞ்ச அவயங்களுக்கும் தனித்தனியே விரதங்களை வழங்கி உள்ளது.

நமது உணர்வு உறுப்புக்களை சரியான முறையில் பயன்படுத்தினால் அதன் சக்தியையும் படைப்பாற்றலையும் மேம்படுத்தமுடியும்.

இரைச்சலான ஒரு சந்தையில் ஒருவரை அழைத்தால் அவருக்கு நாம் அழைப்பது கேட்காது,

அதே நேரம் அமைதியான ஒரு தோட்டத்தில் இருக்கும் ஒருவரை அழைத்தால் அவருக்கு நமது அழைப்புரியும்.

அது போல உங்கள் உணர்வு உறுப்புக்கள் சந்தைக்கடை போல பல செயல்களில் ஈடுபடும் பொழுது பரமாத்மாவை அழைத்தால் அவரிடம் நீங்கள் நெருங்க முடியாது.

விரதம் மூலம் உங்கள் உடலை மேன்மையாக்குங்கள். உங்கள் உடல் எனும் நந்தவனத்தில் பரமாத்மா நிரந்தரமாக வசம் செய்வார்...

Tuesday, September 27, 2016

விதுரர் சொன்ன நீதி


இந்த மூன்று சமயங்களில் எந்த முடிவும் எடுக்க கூடாது.

1. பசி வயிற்றை கிள்ளும் போது.
2. தூக்கம் நம் கண்களை சுழற்றும் போது.
3. போதையில் இருக்கும் போது.

இந்த மூன்று சமயங்களில் யாருக்கும் வாக்குறுதி தரக்கூடாது.

1. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் போது.
2. மிகவும் துக்கத்தில் இருக்கும் போது.
3. மிகவும் கோபத்தில் இருக்கும் போது.

இந்த மூன்று விதமானவர்களின் நட்பை ஒதுக்க வேண்டும்.

1. நம்மைப் பற்றி உணராதவர்கள்.
2. நம்மைக் கண்டு பொறாமை கொள்பவர்கள்.
3. நமக்கு ஈடாக செயல்பட முடியாதவர்கள்.

இந்த மூன்று பேரை எப்போதும் மறக்கக் கூடாது.

1. ஆபத்தில் நமக்கு உதவி செய்தவர்கள்.
2. நம் குறைகளை பெரிது படுத்தாதவர்கள்.
3. நம்முடைய நலத்தை நாடுபவர்கள்.

விரோதியை நம்பலாம்.
ஆனால் துரோகியை ஒரு போதும் நம்பவும் கூடாது.
மன்னிக்கவும் கூடாது.

ஒருவருடைய குணம் சரியில்லை என்று அறிந்த பின் அவர்களை விட்டு ஒதுங்கி போவதே நல்லது.

இல்லையேல் அவர்கள் தரத்திற்கு நம்மை தாழ்த்தி விடுவார்கள்.

Monday, September 26, 2016

"தகுதிச் சிறப்புதான் காரணம்"

மாவீரன் அர்ச்சுனன் கிருஷ்ணனிடம், ஐயனே, பிதாமகன் பீஷ்மர், தலைவன் தர்மர், பக்திமான் பீமன் இவர்களெல்லாம் இருக்க அவசரபுத்தியும், கோபமும் கொண்ட எனக்கு கீதையை உபதேசிப்பது முறையோ என பணிந்து கேட்க,

அதற்கு ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா,
"அர்ஜுனா ! நீ என்னோடு நெருங்கிப் பழகுபவன். என் மீது தோழமை கலந்த அன்புடன் இருப்பவன் என்பதால் நான் உனக்கு கீதையைச் சொல்லவில்லை.

நீ நினைப்பதுபோல் பிதாமகர் பீஷ்மரை அறங்கள் அனைத்துமுணர்ந்த ஒரு மகாத்மாவாக என்னால் கருதமுடியவில்லை. சாஸ்திரங்கள் உணர்வதால்மட்டும் ஒரு மனிதனுக்கு சிறப்பு வந்துவிடாது;

"கடைப்பிடித்தால்தான் சிறப்பு"

கௌரவர்கள் அதர்மம் புரிகிறார்கள் என்பதறிந்தும் பீஷ்மர் அவர்கள் பக்கமே இருக்கிறார்.

அதேசமயம் பாண்டவர்களை தனியே பார்க்க நேரும்போது
தர்மம் வெல்ல ஆசிர்வதிப்பதாகவும் கூறுகிறார்.

இது இரட்டை வேடம் ஒரே சமயத்தில் இரண்டு குதிரைகளில் சவாரி செய்வது சாத்தியமற்றது.

"எண்ணம், சொல், செயல் இவை ஒன்றாக எவனிடம் இணைந்திருக்கிறதோ அவனே உத்தமன்"
பீஷ்மர் அப்படிப்பட்டவராக இல்லை.

தர்மர் கீதை கேட்கத் தகுதியானவர் என்பது உன் எண்ணம். அவர் நல்லவர்தான். ஆனால் முன்யோசனை இல்லாதவர்.
தவறு செய்துவிட்டுப் பிறகு வருந்திக்கொண்டிருப்பது அவர் இயல்பு.  தர்மர் நீதியையும் தருமத்தையும் கடைப்பிடிப்பவர் என்பதில் சந்தேகமில்லை. 
ஆனால், அவரால் தக்க நேரத்தில் தன் கடமை என்னவென்று உணர இயலவில்லை.

பீமனைப் பற்றிச் சொன்னால் பீமன் அளவற்ற பலசாலி. பக்திமானும்கூட. ஆனால் அவனிடம் மனோபலமும் இல்லை; அறிவு பலமும் இல்லை. வீண் கோபத்தில் அவன் விளைவித்த விபரீதங்கள் அநேகம்.

அர்ஜுனா ! நீ இவர்களைப்
போன்றவனல்ல மகாவீரன். அதிநுட்பம் வாய்ந்த அஸ்திர வித்தை பல கற்றவன் என்ற போதும்கூட, நீ முன் யோசனை உள்ளவனாய் இருக்கிறாய்.
அதுதான் உன் தனிச்சிறப்பு.

இதோ பார், உன்னைவிட வயதான, அறிவிலும் பெரியவர்களான பலரையும் மதித்து நீ இத்தனை வாதிக்கிறாய் என்னிடம்..

களத்திலே நின்றபோதும் உற்றார், உறவினர் மதிப்பிற்குரிய பெரியோர்களையெல்லாம் எப்படிக் கொல்வது தேவைதானா இந்த யுத்தமும் இழப்பும் என்றெல்லாம் நீ யோசித்தாய்.. அத்தனை பேரையும் இழந்து அரசாட்சியைப் பெறுவதால்
என்ன பெருமை இருக்க முடியும் என்று கலங்கினாய்.. பிச்சை எடுத்து வாழவும் நான் தயார் என்று என்னிடம் கூறினாய்..

நீ பதவி வெறியனல்ல. பழைய விரோதங்களுக்குப் பழி வாங்க வேண்டுமென்று முன்பு நினைத்திருந்த போதும், களத்தில் அவர்களை மன்னித்து போரே வேண்டாம் என்று எண்ணுகிற உள்ளம் உன்னிடம் இருக்கிறது
ஓரளவு நீதி எது அநீதி எது என்று சிந்திக்கிறனாகவே நீ எந்த தருணத்திலும் இருந்திருக்கிறாய். இதெல்லாம்தான் நான் உனக்கு கீதையை உபதேசிக்கக் காரணங்கள்

"நீதியான வழியில் நடக்க அனைத்தையும் தியாகம் செய்யும் மனவலிமையும் தேவை"

"தன்னுடைய புனிதமான கடமையை உணர்பவனுக்குத்தான் கீதை கேட்கும் தகுதி உண்டு"

இப்போது புரிகிறதா அர்ஜுனா, நான் உனக்கு கீதை சொல்லக் காரணம் தனிச்சலுகை எதுவுமல்ல; "தகுதிச் சிறப்புதான்" காரணம்.
அர்ஜுனன் அப்போதும்கூட அகந்தை
எதுவுமற்றவனாய் அடக்கத்தோடு ஸ்ரீகிருஷ்ணரைநோக்கி வணங்கி நின்றான்

ஓம் நமோ நாராயணாய:

" துரை முருகன் " யார் ?

திருத்தணி_முருகன்_கோயில் படிக்கட்டுகளுக்கும், சென்னைக்கும் ஒரு சம்பந்தம் உண்டு. அது ஆங்கில ஏகாதிபத்தியத்தோடு தொடர்புடையது.

அதைத் தெரிந்துகொள்வதற்கு முன் துரை என்று தமிழில் ஒரு பெயர் உண்டு. அந்தப் பெயர் சங்க இலக்கியத்திலோ, பக்தி இலக்கியத்திலோ... வேறு தமிழ் கல்வெட்டுகளிலோ காணப்படாதது. அது வெள்ளையர்கள் இந்தியாவுக்கு வந்த பிறகு தோன்றிய பெயர் .

அடிமைப்பட்டுக்கிடந்த நம் இந்தியா ஆங்கிலேயர்களை ஆஷ்துரை, அந்த துரை, இந்த துரை என்று அழைப்பதில் அவர்கள் பெருமை கொண்டார்கள்.

தமிழில் மட்டும் அண்ணாதுரை, துரைசாமி, வெள்ளைத்துரை, சாமிதுரை, துரை தயாநிதி, துரை மாணிக்கம் என இவ்வளவு பெயர்கள் வைத்திருக்க மாட்டோம்.

இப்படி தமிழுக்கு சம்பந்தமே இல்லாத " துரை " என்று தமிழோடு இணைக்கப்பட்டது ? ஒரு சிறிய சரித்திரக் குறிப்பு.

முதன் முதலில் திருத்தணி முருகனை துரையோடு இணைத்த சம்பவம்தான் திருத்தணி படிஉற்சவம் விழா.

அது ஆங்கிலப் புத்தாண்டுக்கு முந்தைய இரவு திருத்தணிப் படிக்கட்டுகளில் நடைபெறும்.

ஆங்கிலப் புத்தாண்டு அன்று, முருகன் கோயில் படி உற்சவம் நடப்பது ஏன் ? என்ற கேள்வி எழலாம்.

சோளிங்கரை அடுத்த வள்ளிமலை முருகன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டுக்கு முந்தைய இரவு, படி உற்சவம் நடக்கும்.

ஒவ்வொரு படிக்கட்டுக்கும் மஞ்சள் குங்குமம் வைத்து பூஜை செய்து படியில் ஏறிச் செல்வார்கள்.

வள்ளிமலை சுவாமிகள் என்ற ஓதுவார் இதை துவக்கி வைத்து நடத்தி வந்தார்.

அவர் திருத்தணி முருகன் கோயிலுக்கு ஒருமுறை வந்திருந்தபோது கோயிலில் பக்தர் கூட்டம் குறைவாக இருப்பதைப் பார்த்தார். என்ன காரணம் ? என விசாரித்தபோது,

இன்று ஆங்கிலப் புத்தாண்டு தினம் மக்கள் எல்லாம் துரைமார்களுக்கு சலாம் வைத்து அவர்களின் காலில் விழுந்து ஆசி பெறுகிற நாள். அதனால் புத்தாண்டு அன்று தமிழர்கள் யாரும் வருவது இல்லை' என்று கூறியிருக்கிறார்கள்.

வள்ளிமலை சுவாமிகள் " துரைகளுக்கெல்லாம் பெரிய துரையான துரை முருகன் இருக்கும் இடத்துக்கு வாருங்கள்...

இனி ஒவ்வொரு ஆங்கிலப் புத்தாண்டு அன்றும் திருத்தணியில் படி உற்சவம் நடக்கட்டும் ' என்று அழைப்பு விடுத்தார்.

துரைகளுக்கு சலாம் போட்டால் இம்சையே அதிகரிக்கும்.

எம்பெருமான் துரை முருகனுக்கு சலாம் போட்டால் புண்ணியம் வீடு வந்து சேரும். சந்ததிகளை காக்கும் என்றார்.

1917-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி முதல் திருத்தணி முருகன் துரைமுருகன் ஆனார்.

அன்று முதல் படி உற்சவம் ஆரம்பமானது. வெள்ளையர்கள் வீட்டுமுன் சலாம் போட்டு நிற்கும் அவலமும் நின்றது...

எம்பெருமானார் நியமித்த எழுபத்துநான்கு ஆசார்ய பீடங்கள்

1. ஆளவந்தார் குமாரர் சொட்டை நம்பி அவர் குமாரர் என்னாச்சான் அவர் குமாரர் பிள்ளையப்பன்
2. பெரிய நம்பி குமாரர் புண்டரீகர்
3. திருக்கோட்டியூர் நம்பி குமாரர் தெற்காழ்வான்
4. திருமாலையாண்டான் குமாரர் சுந்தரத்தோளுடையார்
5. பெரிய திருமலை நம்பி குமாரர் ராமானுஜ பிள்ளை திருமலை நம்பி
6. கூரத்தாழ்வான் குமாரர் பட்டர் சீராமப்பிள்ளை
7. முதலியாண்டான் குமாரர் ந்தாடையாண்டான்
8. நடுவிலாழ்வான்
9. கோமடத்தாழ்வான்
10. திருக்கோவலூராழ்வான்
11. திருமோகூராழ்வான்
12. பிள்ளைப் பிள்ளை யாழ்வான்
13. நடாதூராழ்வான்
14. எங்களாழ்வான்
15. அனந்தாழ்வான்
16. மிளகாழ்வான்
17. நெய்யுண்டாழ்வான்
18. சேட்டலூர் சிறியாழ்வான்
19. வேதாந்தி யாழ்வான்
20. கோயிலாழ்வான்
21. உக்கலாழ்வான்
22. அரணபுரத்தாழ்வான்
23. எம்பார்
24. கிடாம்பி யாச்சான்
25. கணியனூர் சிறியாச்சான்
26. ஈச்சம்பாடி யாச்சான்
27. கொங்கி லாச்சான்
28. ஈச்சம்பாடி ஜீயர்
29. திருமலை நல்லான்
30. சட்டம் பள்ளி ஜீயர்
31. திருவெள்ளறை ஜீயர்
32. ஆம்கொண்ட வல்லி ஜீயர்
33. திருநகரிப் பிள்ளை
34. காராஞ்சி சோமாஜியர்
35. அலங்கார வேங்கடவர்
36. நம்பி கருந்தேவர்
37. சிறுபள்ளி தேவராஜ பட்டர்
38. பிள்ளையறந்தை யுடையார்
39. திருக்குருகைப்பிரான் பிள்ளான்
40. பெரிய கோயில் வள்ளலார்
41. திருக்கண்ணபுரத்தரையர்
42. ஆசூரிப் பெருமாள்
43. முனிப் பெருமாள்
44. அம்மங்கிப் பெருமாள்
45. மாருதிப் பெரியாண்டான்
46. மாறொன்றிலா மாருதிச் சிறியாண்டான்
47. சோமாஜியாண்டான்
48. ஜீயராண்டான்
49. ஈஸ்வராண்டான்
50. ஈயுண்ணிப் பிள்ளை யாண்டான்
51. பெரியாண்டான்
52. சிறியாண்டான்
53. குறிஞ்சிபுரச் சிறியாண்டான்
54. அம்மங்கியாண்டான்
55. ஆளவந்தாராண்டான்
56. அருளாளப் பெருமாளெம் பெருமானார்
57. தொண்டனூர் நம்பி
58. மருதூர் நம்பி
59. மழுவூர் நம்பி
60. திருக்குறுக்குடி நம்பி
61. குரவை நம்பி
62. முடும்பை நம்பி
63. வடுக நம்பி
64. வங்கிபுரத்த நம்பி
65. ஸ்ரீ பராங்குச நம்பி
66. அம்மங்கி யம்மாள்
67. பரித்திக் கொல்லையம்மாள்
68. உக்கலம்மாள்
69. சொட்டையம்மாள்
70. முடும்பையம்மாள்
71. கோமண்டூர் பிள்ளை
72. கோமாண்டூர் இளையவல்லி
73. கிடாம்பிப் பெருமாள்
74. ஆர்க்காட்டுப் பிள்ளான்

புரிசை ச. அரங்கநாதன் எழுதிய ஸ்ரீவைணவ பூர்வாசாரியர்கள் வைபம் நூலிலிருந்து

Thursday, September 15, 2016

வெள்ளையர் ஆட்சியையும் தர்மசிந்தனை வீழ்ச்சியும் :-


அந்நிய நாட்டில் இருந்து இந்திய வந்து மதத்தை பரப்பிய கிருத்துவ பெண்மணி பற்றிய செய்தி உலகெங்கும் புகழ்ந்து எழுதப்பட்டது

எதோ இந்திய நாட்டிற்க்கு கிருஷ்த்துவர்கள்தான் இலவச படிப்பும் ஏழைக்களுக்கு இறங்கும் தருமசிந்தனையை புகட்டியது போல ஒரே புகழாராங்கள்!!!

நமது சரித்திரத்தில் பல ஆயிரம் வருடங்களாக தர்மசாலைகள் அமைத்து, வடநாட்டில் இருந்து நமது ராமேஸ்வரம் செல்லும் யாத்திரீகர்களுக்கு உணவும் இருக்க இடமும் தரும் நிறைய சத்திரங்கள் கட்டப்பட்டமை அறிவோம்..
 
அவற்றை சிலவற்றின் விரிவான கதைகள் பார்ப்போம்!!!

முதலில் நமது அருகில் (இரண்டு நூற்றாண்டு என்பதற்காக சொன்னேன் ) இருந்த மராட்டிய மன்னர்கள் (இவர்கள் அன்றைய செழிப்பான தஞ்சையை ஆண்டவர்கள் ) கட்டி வைத்த பல சத்திரங்களை பார்ப்போம்!!

1784 மிக புகழ்வாய்ந்த ராஜாமடம் சத்திரம் எனப்படும் மோகனாம்பாள் சத்திரம் இரண்டாம் துளஜா தனது மனைவி மோகனா சாகோபாவின் நினைவாக ஏற்ப்படுத்தினார் .. பின்னர் 1820 க்குள் சுமார் 15 பெரிய சத்திரங்கள் தஞ்சை எங்கும் கட்டப்பட்டன ..

இவைகளில் நாம் முன்பே சொன்ன ராமேஸ்வரம் செல்லும் யாத்ரீகர்களும், பள்ளியில் படிக்கும் மாணாக்கர்களும் அருகில் வசிக்கும் ஏழை எளியவர்களும் உடல் ஊனமுற்றோரும் , கோவிலில் பணிபுரியும் அந்தணர்களும் உணவு அளிக்கப்பட்டன . இந்த சத்திரங்களில் இருந்து உலுப்பை மானியம் அளிக்கப்பட்டன இது சத்திரத்திர்க்கு வர இயலாதவர்களுக்கும் பெரிய அதிகாரிகளுக்கும் அரிசி, உப்பு புளி முதலிய பொருள்கள் அவர்களுக்கு வீட்டில் சென்றே அளிக்கப்பட்டன .
இவைகளில் மிக புகழ் வாய்ந்தது முத்தாம்மாள்புரச்சத்திரம் . இது தஞ்சாவூர் பட்டுக்கோட்டை சாலையில் 20 கிலோமீட்டர் தொலைவில் ஒரத்த நாட்டில் உள்ளது.

இந்த முதாம்பாள் சத்திரத்திற்கு ஒரு சோக கதை உள்ளது ... இது 16.01.1802 ‘துன்மதி புஷ்யசுத்த த்ரயோதசியில்” தொடங்கப்பட்டது . “சரபோசி மகாராசா தனக்கு விவாகமாவதற்கு முன் எல்லாக் குணங்களும் பொருத்திய ஒரு ஸ்திரியை எடுத்துக்கொண்டு இருந்தார். அவள் இரண்டு தடவை கர்ப்பந்தரித்துப் பிரசவித்து இரு குழந்தைகளும் இறந்து போயின. இரண்டாவது பிரசவ சமயத்தில் அந்த அம்மாளும் இறந்தபடியால் அவள் மரணம் அரசனின் சோகத்துக்குக் காரணமாயிற்று . அந்த அம்மாள் இறக்கும் தருவாயில் தன பெயரில் ஒரு அன்ன சத்திரம் ஏற்படுத்த வேண்டுமென்று மகாராஜாவை கேட்டுக்கொண்டாள்.

அதற்க்கு ராஜாவும் இசைந்து சேதுக்குப் போகும் வழியில் உத்தமமானதும் யாத்திரீகர்களுக்கு மிகவும் உபயோகமுள்ளதுமான ஒரு சத்திரத்தையும் பக்கத்தில் ஒரு அக்கிரகாரத்தையும் ஒரு கோவிலையும் ஒரு சிங்காரவனம் குளம் இவைகளை கட்ட ஏற்பாடு செய்து அவிடத்திர்க்கு முக்தாம்பாள்புரம் என்று பெயரிட்டு அதை நன்றாய் நடத்துவதற்கான எற்பாடுகளை செய்து வைத்தார் “ – இவை தஞ்சாவூரில் ஒரு கோவிலில் கல்வெட்டுக்கலாக உள்ளன !!!

1825 வருடம் தஞ்சவுரை ராஜாவிற்கு துணையாக இருந்த ரெசிடண்ட் அதிகாரி ஜான் பைபாப் என்போன் ஒரத்தநாடு முக்தம்பாள் சத்திரத்தை பார்வை இட்டு ஒரு பதிவு செய்து இருக்கிறான் ... (இந்த மாறி தருமம் செய்து பணம் போவதை கண்டு அவன் நிச்சியம் பொறமை பட்டு ... பல வேலைகள் செய்து வைத்தான்!!! cap on kings expenditures etc !!) சுமார் 13,007 கலம் நெல் இந்த சத்திரத்திற்கு உமையாள்புரத்தில் இருந்து மட்டும் (பல கிராமங்கள் இந்த ஒரு சத்திரத்திற்கு இணைக்க பட்டு இருந்தது) அனுப்பப்பட்டு இருக்கிறது என்றும் (ஒரு கலம் என்பது 48 படி நெல் ) அந்த சத்திரத்தை சுற்றி ஐந்து கல்வி நிலையங்கள் இருந்தன என்று அதில் படிக்கிறவர்கள் 641 மாணவர்கள் என்றும் . ஒரு நாளைக்கு மூன்று வேலையும் சாப்பிடுகிறவர்கள் 4020 பேர் , மேலே குறிப்பிட்ட உலுப்பைதாரர்களுக்கு (அவர்கள் வீட்டிற்க்கு செல்லும்) 45,000 கலம் நெல் ... மாத சம்பளம் செலவான தொகை 9,000/- ரூபாய் அன்று ஒரு பெரிய எருதின் விலை மூன்று ரூபாய் மட்டுமே !! அங்கே உள்ள பள்ளியில் ஆங்கில படிப்பும் உண்டு திருநல்வேலியை சேர்ந்த ஒரு வெள்ளாளர் சொக்கலிங்கம் என்கிறவர் ..இந்த சத்திரத்தில் ஆங்கில படிப்பு முடித்து ஊருக்கு போன பொது அவருக்கு ரூபாய் 10/ வழங்கி அனுப்பிய கணக்கும் இருக்கு !!!
முக்தாம்பாள்புரம் சத்திரம் நிறைய வருவாயுடன் இருந்திர்க்கிறது .. east india company சுமார் 60,000/ ரூபாய் இதனிடம் கடன் வாங்கி மாசம் 600/- வட்டி குடுத்த விசயமும் தெரிகிறது. இவை எல்லாம் 1825 வருடத்து பதிவு!!!

இதேபோலேவே ராஜாமடத்திலும் (மோகனாம்பாள்) ஒரு பெரிய சத்திரம் இருந்தது அதில் 1960 வரை சுமார் 500 மாணவர்கள் தங்கி உணவருந்து படித்து வந்தனர் .. அது சுமார் 800 X 600 அடி விஸ்தாரம் கொண்டது . படிக்கிற மாணவர்களுக்கு தினமும் 10 Ml மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வந்தாதாக ஒரு குறிப்பு இருக்கிறது (1950 களில் மின்சார வசதி வரவில்லை ) வாரா வாரம் மாணவர்கள் குளிக்க 3/16 சேர் நல்லெண்ணெய் அரை பைசா அரப்பும் வழங்கப்பட்டு இருந்திருக்கிறது .. திங்கள் வியாழன் இரண்டு நாட்கள் அதிராமபட்டினத்தில் இருந்து ஒரு ஆங்கில மருத்துவர் மாணவர்களை உடல் நிலை சோதிப்பார்!!! இன்று மாசம் 10,000/- கட்டி நீங்கள் உங்கள் பிள்ளைகளை படிக்கவைக்கும் A/c room hostel களில் கூட இந்த கவனிப்பு இருக்காது !!!

இதே போல ஸ்ரீரங்கத்திற்கு கிழக்கே உள்ள திருவவனைக்கோவிலில் அமைந்துள்ளது ரங்கூன் ரெட்டியார் சத்திரம் .. இந்த சத்திரத்தை நிறுவியவர் சிதம்பரம் ரெட்டியார் ... பெரம்பலூருக்கு அருகில் உள்ள வரகுப்பட்டியில் பிறந்தவர். பர்மாவிற்கு சென்று அங்கு துறைமுகத்தில் விசைப்படகுகள் இயக்கும் தொழிலில் பொருள் ஈட்டி பெரும் செல்வந்தரானார்.

இவர் 1932 இல் சுந்தரராஜ பெருமாள் கோவிலை பெரும் பொருள்செலவில் ரங்கூனில் கட்டியுள்ளார், மேலும் ரெட்டியார் உயர்நிலை பள்ளி ஒன்றையும் ரங்கூனில் தொடங்கி நடத்தி வந்தார்.. பின்னர் இவர் ஈட்டிய பெரும் செல்வத்தை திருச்சிக்கு கொண்டு வந்து திருவானைக்காவலில் இன்று காணும் இந்த மிக பிருமாண்டமான இந்த சத்திரத்தை உருவாக்கினார்( இது சிதம்பரம் ரெட்டியார் அன்னதான சத்திரம் என்கிற ஒரு அறக்கட்டளையின் கீழ் இயங்குகிற மாறி செய்தார்)

இந்த அறக்கட்டளைக்காக லால்குடி தாலுக்காவில் ஆதிகுடி, சிறுதையூர், மேட்டுப்பட்டி, பல்லாவரம் முதலிய கிராமங்களில் சுமார் 200 ஏக்கர் நன்செய் , மணக்கால் கிராமத்தை சுற்றி 300 ஏக்கர் நன்செய் நிலங்களையும் வாங்கினார் .. இந்த நிலங்களில் கிடைக்கும் நெல் மூட்டைகளை காக்க மணக்கால் கிராமத்தில் ஒரு பிருமாண்ட நெல் கிடங்கியை ஒன்றையும் கட்டினார்.. அதை கொண்டு இந்த சத்திரத்தில் தினமும் அன்னதானம் செய்தார் ..

இன்று இது மூடி இருக்கிறது !!! எல்லா இடங்களிலும் இதே கதைதான் !!.. என்னிடம் சுமார் 400-500 தமிழக சத்திரங்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன .. இவைகளில் மாணவர்களுக்கு தங்கி படிக்க உதவிகள் செய்யப்பட்டனஅவைகள் எல்லாம் அழிந்து .. பணம் இருந்தால்தான் படிப்பு .. சோறு போட நிலம் வாங்கியது போக காலேஜ் கட்டி, கல்லு ஊன்றி வீட்டு மனை விற்று காசு சம்பாரிக்க நிலம் வாங்கி குவிக்கும் காலம் இது

பல ஆயிரம் ஏக்கர் நிலம் .. தினமும் பல ஆயிரம் பேர் படிப்பு உணவு என்று செழிப்போடு இருந்த இந்த தஞ்சையின் பல சத்திரங்கள் 20நூற்றாண்டின் விடுதலை ஆனா சுமார் 15 -20 ஆண்டுகள் வரை செயல் பட்டு வந்தன என்று கேட்டல் நீங்கள் அதிர்ச்சி அடைவீர்கள் .. ஆம் இவை சுமார் 200 ஆண்டுகள் செம்மையாக செயல் பட்டு 1960 முடிவுகளில் . அனைத்து நிலங்களும அரசியல் வாதிகளால் சூறையாடப்பட்டு மறைந்து ஒழிந்தன.

படிக்க வைக்க தங்க வைக்க ஒரு பெரிய அமைப்பு எதுவும் இல்லை ..சிவாஜி படத்தில் காட்டுவது போல இதை எவரேனும செய்ய முயன்றால் என்ன ஆகும் என்றும் காட்டி விட்டார்கள்.

திட்டம் இட்டு வெள்ளைகாரனால் மற்றும் நமது அரசியல் வியாதிகளால் இந்த பல ஆயிரம் வருடம் செழித்த பெரிய அளவிலான தரும சிந்தனைகள் அழிக்கப்பட்டன !! பொருள் ஈட்டும் வெறியை வளர்த்து விட்ட வெளிநாட்டு மோகம் தனிமனித சுயநல வாழ்விற்கு அடிகோலிவிட்டது . நான் என் குடும்பம் என் பிள்ளைகள் .. அடுத்தவனைபற்றிய சிந்தனை நமது வெற்றிக்கு தடை என சிறுவயது முதலே போதனை!! வருத்தமான சுயநல மனநிலை நோக்கி தமிழன் சென்று கொண்டு இருக்கும் வரலாற்று உண்மை ..
 
நன்றி.. விஜயராகவன் கிருஷ்ணன்//

Saturday, September 3, 2016

வீரபாண்டிய கட்டபொம்மன்



ஆட்சி கி.பி 1790- கி.பி 1799
முடிசூட்டு விழா கி.பி 1790
முன்னிருந்தவர் ஜெகவீர கட்டபொம்மன்
அரச குலம் நாயக்க மன்னர்
தந்தை ஜெகவிர கட்டபொம்மன்
தாய் ஆறுமுகத்தம்மாள்
வீரபாண்டிய கட்டபொம்மன், தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாளையக்கார மன்னர் ஆவார். இவர் தெலுங்கு மொழி பேசும் ராஜகம்பளம் நாயக்கர் இனத்தில் பிறந்தவர்.இவருடைய முன்னோர்கள் ஆந்திராவிலிருந்து விசயநகர ஆட்சிக்காலத்தில் தமிழகத்திற்கு குடிபெயர்ந்து வந்தவர்கள் ஆவர்.

கட்டபொம்மன்_பெயர்_காரணம்

அழகிய வீரபாண்டியபுரம் எனும் ஊரில் (இன்றைய ஒட்டபிடாரம்) ஆட்சிபுரிந்து வந்த ஜெகவீரபாண்டியனின் (நாயக்க வம்சம்) அவையில் அமைச்சராக பொம்மு என்கிற கெட்டி பொம்மு (தெலுங்கு) இடம்பெற்றிருந்தார். இவரது பூர்வீகம் பெல்லாரி ஆகும். வீரமிகுந்தவர் என்ற பொருளை தெலுங்கில் உணர்த்தும் கெட்டி பொம்மு எனும் சொல் நாளடைவில் கட்டபொம்மு என்று மாறி பின் தமிழில் கட்டபொம்மன் என்ற சொல்லாயிற்று. ஜெகவீரபாண்டியனின் மறைவிற்குப்பின் அரசகட்டிலில் ஏறிய கட்டபொம்மு பின் ஆதி கட்டபொம்மன் என்று மக்களால் அழைக்கப்பட்டார். இவரே பொம்மு மரபினரின் முதல் கட்டபொம்மன்.

இந்த பொம்மு மரபில் வந்தவர்களே (திக்குவிசய கட்டபொம்மன்) ஜெகவீர கட்டபொம்மன், ஆறுமுகத்தம்மாள் தம்பதியர். இவர்களின் புதல்வரே வீரபாண்டியன் எனும் இயற்பெயர் கொண்ட வீரபாண்டிய கட்டபொம்மனாவார். இவர் நாயக்க வம்ச அரசாட்சியில் தொடர்ந்து வருவதால் பொம்மு நாயக்கர்  என்று மக்களால் அழைக்கப்பட்டார்.

வாழ்க்கை

ஜனவரி 3 1760 அன்று ஆறுமுகத்தம்மாள் - திக்குவிசய கட்டபொம்மு தம்பதியருக்கு, பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன். பெப்ரவரி 2, 1790 அன்று 47 வது[சான்று தேவை] பாளையக்காரராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.அப்போது அவருக்கு வயது முப்பது ஆகும்.வீரபாண்டிய கட்ட பொன்னனுக்கு குமாரசாமி என்ற ஊமைத்துரை, துரைச்சிங்கம் என்ற இரு சகோதரர்களும், ஈசுவர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு சகோதரிகளும் இருந்தனர். இவரது துணைவியார் வீரசக்கம்மாள். இவர்களுக்குப் பிள்ளைப் பேறு இல்லை. இவர் 9 ஆண்டுகள், 8 மாதம், 14 நாட்கள் அரசுப் பொறுப்பிலிருந்தார்.

போர்

கும்பினியார் தங்களுடைய ஆட்சியை நிலைநாட்டிக் கொள்வதற்காக பாளையக்காரர்களிடம் வரி வசூலிப்பது என முடிவு செய்தனர். நெல்லை மாவட்டத்தில் வரிவசூலிக்கும் பொறுப்பை ஏற்றிருந்த ஆங்கிலேய தளபதி மாக்ஸ்வெல்லால் பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தாரர் வீரபாண்டிய கட்டபொம்மனிடம் வரிவசூலிக்க முடியவில்லை. இதனடிப்பையில் கி.பி. 1797 இல் முதன் முதலாக ஆங்கிலேய தளபதி ஆலன் துரை பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்கு பெரும்படையுடன் போரிட வந்தார். 1797 - 1798 இல் நடந்த முதல் போரில் கோட்டையை தகர்க்க முடியாமல் வீரபாண்டிய கட்டபொம்மனிடம் ஆலன் துரை தோற்று ஓடினார். அதன் பின்னர் நெல்லை மாவட்டக் கலெக்டர் ஜாக்சன் துரை வீரபாண்டிய கட்ட பொம்மனைச் சந்திக்க அழைத்தார். கட்டபொம்மனை அவமானப்படுத்த நினைத்து வேண்டுமென்றே பல இடங்களுக்கு வரச்சொல்லி சந்திக்காமல் அலைக்கழித்தார். இறுதியில் செப்டம்பர் 10, 1798 இல் இராமநாதபுரத்தில் சந்தித்தார். அப்போது தந்திரத்தால் வீரபாண்டிய கட்டபொம்மனைக் கைது செய்ய முயன்றார். அதை முறியடித்து வீரபாண்டியக் கட்டபொம்மன் மீண்டும் பாஞ்சாலங்குறிச்சியை வந்தடைந்தார். செப்டம்பர் 5, 1799 இல் பானர்மென் என்ற ஆங்கிலேயத் தளபதியால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை முற்றுகையிடப்பட்டது. அங்கு கடும் போர் நடைபெற்றது. போரில் பல ஆங்கிலேயர்கள் உயிரிழந்தனர். இருப்பினும் கோட்டை வீழ்ந்துவிடும் என்ற நிலையில் வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையை விட்டு வெளியேறினார். செப்டம்பர் 9 1799 இல் ஆங்கிலேயர்களால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை கைப்பற்றப்பட்டது. அக்டோபர் 1, 1799 இல் புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமானால் வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு கும்பினியாரிடம் (கிழக்கிந்திய கம்பெனி) ஒப்படைக்கப்பட்டார். அக்டோபர் 16 1799 இல் ஆங்கிலேயத் தளபதி பேனர்மேன் ஆணைப்படி கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்டார்.

Monday, August 22, 2016

அறமற்ற துறையினால் சிக்கி சீரழியும் கோயில்கள்


பொதுவாக வருமானம் வரும் கோயிலில் தான் அறமற்ற துறை கால் பதிக்கும். அந்தக் கோயிலை தன் வசம் எடுத்துக்கொள்ளும். ஆள் நடமாட்டம் இல்லாத கோயிலுக்குள் அறமற்ற துறை நுழைவதில்லை.

கோயில் உண்டியலிலேயே குறியாக இருக்கும் அறமற்ற துறை உண்டியலில் குவியும் பணத்தில் 10% கோயில் பணிகளுக்கு செலவிடுகிறது. ஏனைய வருமானத்தை இதர செலவுகளுக்கு பயன்படுத்துகிறது. உதாரணமாக, கோயில் செயல் அலுவலருக்கு ஜீப் வாங்குவது, மடிக்கணினி வாங்குவது, அமைச்சர்களின் தனிப்பட்ட உதவியாளர்களுக்கு கார் வாங்குவது, அரசாங்கத்தின் இதர செலவுகளுக்கு என கோயில் வருமானம் பயன்படுத்தப்படுகிறது. நித்தம் கோயிலில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களுக்கு உண்டியலிலிருந்து பங்கு கொடுக்கப்படுவதில்லை.

தான் எடுத்துக்கொண்டு கோயில்களை சீர்படுத்துகிறேன் பேர்வழி என்று நம்முடைய புராதன சின்னங்களையும், கலை பொக்கிஷங்களையும் அழித்துவிடுகிறது அறமற்ற துறை. கிடைத்தக்கறியா சிற்பங்களும், நுட்பமான வேலைப்பாடுகள் அடங்கிய பொருட்களும் கோயில்களிலிருந்து களவாடப்படுகின்றன. கோயில் புணர் நிர்மானம் என்ற வகையில் அறமற்ற துறை டெண்டர்கள் விட்டு பல கோடிகளை சம்பாதிக்கிறது. சாமியை பார்க்க தனி கியூ அமைத்து அதற்கு சீட்டு விற்று அதில் பணம் சம்பாதிக்கிறது. கோயிலுக்கு சொந்தமாக நம் முன்னோர்கள் எழுதி வைத்த லட்சக்கணக்கான நிலங்களை அறமற்ற துறை ஏனையோர்களுடன் சேர்ந்து ஆட்டையை போடுகிறது.

பல கோயில் நிலங்கள் ரியல் எஸ்டேட் நிலங்களாக மாறியிருக்கின்றன/மாறிவருகின்றன. பல சந்தர்ப்பங்களில் கோயில் நிலங்கள் சர்ச் கட்டுவதற்கும், மசூதி கட்டுவதற்கும் வழங்கப்பட்ட அவலங்களும் நடந்தேறி உள்ளன. கோயில் நிலத்தில் மாற்று சமூகத்தினர் கடைகள் அமைக்கின்றனர். ஆனால் அதற்கு அவர்கள் வாடகை ஏதும் தருவதில்லை. வாடகைக்கு விடப்பட்ட கோயில் சொத்துக்களிலிருந்தும் கோயிலுக்கு வருவாய் ஏதும் வருவதில்லை. கோயில்களுக்கு வராத வாடகை கோடிக்கணக்கில் இருக்க அறமற்ற துறை அதை வசூலிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை.

நம்முடைய வீட்டையோ, சொத்தையோ மற்றவர் ஆக்கிரமித்தால் நாம் உடனே வழக்கு தொடர்கிறோம், நம்முடைய சொத்தை மீட்கிறோம். ஆனால் கோயில் சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்படும்போது அது நம்முடைய கவனத்திற்கு வருவதில்லை. அப்படியே வந்தாலும் நாம் அதை கண்டு கொள்வதில்லை. அரசியல் குண்டர்கள் தலையீடு இருக்கு நமக்கேன் வம்பு என்று நாம் ஒதுங்கிவிடுகிறோம். இது அறமற்ற துறையின் அராஜகங்களுக்கு வலிமை சேர்க்கிறது.

தன்னுடைய வரவு செலவு கணக்குகளை தானே தணிக்கை செய்யும் அதிகாரத்தைப் பெற்ற ஒரு அதிசய அரசுத்துறை உலகில் உண்டெனில் அது அறமற்ற துறைதான்.

இவ்வளவு பணத்தை கொள்ளையடிக்கும் அறமற்ற துறை பொது மக்களுக்கு என்று எந்த வசதியையும் கோயில்களில் செய்து தருவதில்லை. அறமற்ற துறையின் நிர்வாகத்தில் இருக்கும் பெரும்பான்மையான கோயில்கள் சரியாக பாராமரிக்கப்படுவதில்லை.

அறமற்ற துறையின் கிடுக்கிப்பிடியிலிருந்து என்று நம்முடைய கோயில்கள் விடுபடுமோ அன்றுதான் நம்முடைய தர்மம் தழைத்தோங்கும்.

நாம் நம் கோயில்களையும், தர்மத்தையும் காக்க வேண்டுமென்றால் கோயில்களில் காணிக்கை செலுத்தக்கூடாது. மாறாக அர்ச்சகர் தட்டில் காணிக்கை செலுத்தலாம். சாமிக்கு நெய்வேத்தியத்திற்கு ஏற்பாடு செய்யலாம். உண்டியலில் மட்டும் காசு போடக்கூடாது. மகரந்தம் இருக்குமவரை தான் தேனீக்கள் பூக்களை அண்டும். அதேபோல் உண்டியலில் காசு விழும் வரைதான் அறமற்ற துறை கோயில்களை தன் கைவசம் வைத்திருக்கும். அறமற்ற துறையின் கட்டுபாட்டில் இருக்கும் வரையில் கோயில்களுக்கு விமோச்சனம் இல்லை. எனவே ஹிந்து சகோதரர்கள் இது குறித்து சிந்திப்பீர், செயல்படுவீர்.

"நகர்ப்புற நக்சல்" (Urban Naxal)

செயல்பாடுகள் மற்றும் சட்டப் பின்னணி ​1. அறிமுகம் மற்றும் சொல்லாடலின் தோற்றம் ​ "நகர்ப்புற நக்சல்" (Urban Naxal) என்பது இந்திய அ...