Friday, December 19, 2014

நாரத பங்கம்- 'வீணாதார அநுமன்'


                      ஒருமுறை அனுமனை நாரதர் இசைப்போட்டிக்கு அழைத்தார். அது வீணை மீட்டும் போட்டி. ''யார் இசைக்கு கற்பாறைகள் உருகுகிறதோ.....அவரே வென்றவர்''-என்பது போட்டியின் நிபந்தனை.

               முதலில் அநுமன் வீணை இசைத்தான். நாரதர் தன்னுடைய வீணையை ஒரு பாறையின் மீது வைத்துவிட்டு இசையை ரசித்தார்.அநுமன் ராமநாமத்தை பற்பல ராகங்களில் அற்புதமாக இசைத்தான். பாறைகள் அப்படியே உருகின.

        அநுமன் முறை முடிந்தது. பாறைகளும் மீண்டும் முன்போல் இறுகிவிட்டன. இப்போது நாரதர் முறை. பாறைமேல் வைத்த வீணையைக் காணோம்! காரணம், உருகிய பாறைக்குள் வீணை புதைந்து இருந்தது. இறுகி பாறைக்குள்ளிருந்து எடுக்க நாரதர் தன்னால் முடிந்த அளவு முயன்று பார்த்தார். ம்ஹும்....எடுக்க முடியவில்லை.

      அதைக்கண்ட அநுமன், ''என் வீணையால் வாசியுங்களேன்''-என வேண்டினான். நாரதரா அதை ஏற்பார்! ''வீணையென்ன? வாய்ப்பாட்டுக்கே பாறைகள் உருகும்,பார்'' எனக்கூறி பல பாடல்களைப் பாடினார்.

            ஆனால் அந்தப்பாறைகள் இம்மியும் உருகவில்லை. இறுதியில், தன் ஆணவத்தைவிட்டு அநுமனைச் சசரணடைந்தார். புன்முறுவலுடன் நாரதமுனியை வணங்கி, தன் வீணையை இசைத்தான். தானாக பாறைகள் உருகின. வீணையை வெளியில் எடுத்து அடக்கத்துடன் நாரதரிடம் அளித்தான் அநுமன். நாரதர் மகிழ்ந்து ''உனக்கு 'வீணாதார அநுமன்' என்ற பெயரை அளிக்கிறேன், சிரஞ்சீவியாக வாழ்வாய்'' என ஆசி கூறினார். (தினமலர் பக்திமலரிலிருந்து).

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...