Monday, December 1, 2014

எந்த கிழமையில் எந்த மலர்களை இறைவனுக்கு சிறப்பு ?



1.ஞாயிற்றுக்கிழமைகளில் : தாமரை மலர் சமர்பித்து இறைவனை வணங்கினால், குடும்பத்தில் இருக்கும் மனசங்கடங்கள் நீங்கி, குடும்பத்துடன் சுபிக்ஷமாக இருப்பார்கள்.

2.திங்கள்கிழமைகளில் : முல்லை, மல்லிகை போன்ற மலர்களை கொண்டு இறைவனுக்குப் பூஜை செய்தால், விரோதங்கள் மறையும் மனசங்கடங்கள் நீங்கும்.

3.செவ்வாய் கிழமைகளில் : அரளி, கஸ்தூரி போன்ற சிகப்பு பூக்களை துர்கைக்கு அணிவித்தால் திருமண தடை விலகும். கணவன்- மனைவிக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். ஆயுள் விருத்தியாகும்.

4.புதன்கிழமைகளில் : எல்லா மலர்களையும் சேர்த்து பூஜித்தால், நோய் நீங்கும். நல்ல பிள்ளைகள் பிறப்பார்கள். பிள்ளைகளுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

5.வியாழக் கிழமைகளில் : சாமந்தி போன்ற மஞ்சல் நிற மலர்களை கொண்டு அர்ச்சித்தால், திருமணதடை நீங்கும். தடைபடும் செயல்கள் எளிதாக நடக்கும். தொழில் ஏற்றம் பெறும். குழந்தை பாக்கியம் அமையும்.

6.வெள்ளிக் கிழமைகளில் : மல்லிகை மலர்களால் இறைவனை பூஜை செய்தால், வியாதிகள் நீங்கும். செல்வம் பெருகும். பிள்ளைகளுக்கு நன்மை உண்டாகும்.

7.சனிக்கிழமைகளில் : மனோரஞ்சிதம் மலரால் தெய்வத்திற்கு அர்ச்சனை செய்தால், மன தைரியம் ஏற்படும். விரோதிகள் அழிவார்கள். நல்ல சிந்தனை உண்டாகும்.

8.நவக்கிரகங்களுக்கு ஏற்ற மலர்கள்;
ஒவ்வொரு நவக்கிரகங்களுக்கும் பிடித்தமான மலர்கள் உள்ளன.எந்த கிரகத்தால் ஒருவர் பாதிக்கப்பட்டியிருக்கிறாரோ அந்த கிரகத்திற்கு பரிகாரமாக அர்ச்சனை செய்யும்பொழுது,அந்த கிரகத்திற்கு உரிய மலரையும்,தானியத்தையும் சேர்த்து அர்ச்சனை செய்தால் அந்த கிரகத்தினால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் முற்றிலும் விலகும்.
சூரியன் - செந்தாமரை....
சந்திரன் - வெண் அலரி.
செவ்வாய் - செண்பகம்.
புதன் - வெண் காந்தள்.
குரு - முல்லை.
சுக்கிரன் - வெள்ளைத் தாமரை.
சனி - கருங்குவளை.
ராகு - மந்தாரை.

No comments:

Post a Comment

முத்துசாமி தீட்சிதர்

மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...