Monday, December 15, 2014

உருள்வல நேர்ச்சை ஏன்?- (அங்கப் பிரதக்ஷணம்)



சிலர் கோவிலைச் சுற்றி, இடமிருந்து வலது புறமாக, சுடும் கட்டாந்தரையில், உருள் வலம்  செய்கிறார்களே, அது எதற்காக?
பொதுவாக கோவிலுக்குச் செல்பவர்கள் அனைவரும் இடதிலிருந்து வலது பக்கமாக மூன்று முறையாவது தெய்வச்சிலை உள்ள கருவறையைச் சுற்றி நடப்பார்கள். ஆனால் சிலர் மட்டும், வேண்டுதல்படி, நடப்பதற்குப் பதிலாக படுத்து உருண்டு கொண்டே சுற்றுவார்கள்.
ஒரு சக்தி வடிவத்தை சுற்றி வரும்போது, தெய்வீக சக்தியை கிரகிக்கும் தன்மை அதிகரிக்கிறது. ஆனால் நாம் வாழும் இடத்தைப் பொறுத்து அது இரண்டு விதமாக உள்ளது. பூமத்திய ரேகைக்கு வட பகுதியில், அதாவது இந்தியா போன்ற நாடுகளில் வாழ்பவர்கள், கருவறையைச் சுற்றி வலது புறமாகவும் (கடிகாரம் சுற்றும் திசையில்), பூமத்திய ரேகைக்கு தென் பகுதியில் வாழ்பவர்கள் இடது புறமாகவும் சுற்ற வேண்டும். ஏன் இந்த வேறுபாடு என்றால்..
இதனை Coriolis Effect என்று சொல்வர்,இதை ஒரு உதாரணம் மூலம் விளக்க முடியும். பூமத்திய ரேகைக்கு தென் பகுதியில் ஒரு அகன்ற புனலில் தண்ணீரை ஊற்றி தண்ணீர்மேல் ஒரு பூவினை வைத்தால் நீர் கீழே வடியும்போது பூ வலமிருந்து இடமாக சுற்றும், பூமத்திய ரேகைக்கு வடக்கில் இதே சோதனையை செய்தால் பூ இடமிருந்து வலமாக சுற்றும்,சரியாக பூமத்திய ரேகை கோட்டில் இந்த சோதனையை செய்தால் கீழே தண்ணீர் வடியும்போது போ சுற்றவே சுற்றாது . ஒரு சரியாக பூமத்திய ரேகையில் அமைந்துள்ள ஊர்களில், இதை ஒரு சுற்றுலா அம்சமாக வைத்திருப்பார்கள்.
நம் நாடு பூமத்திய ரேகைக்கு வடபுறம் உள்ளது எனவேதான் , நம் நாட்டில் ஒரு சக்தி வடிவத்தை சுற்றும்போது இடமிருந்து வலது புறமாக சுற்றுகிறார்கள். இப்படிச் செய்யும்போது தெய்வீகத்தை கிரகிக்கும் தன்மை அதிகமாகிறது. ஆனால் ஏன் படுத்துக் கொண்டே சுற்றுகிறார்கள் என்றால்..
கருவறையில் இருந்து வரும் மின்காந்த அலைகள் தலையில் புகுந்து கால் வழியே வெளியேறும்,இதனால் உடல் பிரச்சனைகள் தீரும், எனவே நடந்து சுற்றுவதற்குப் பதிலாக உருண்டு கொண்டே சுற்றுகிறார்கள்.
அதே சமயம் பிரதோஷ நாளில் மாலை 4.30-6.00 இறைவனின் கோமுக நீர் பாதையை தாண்டாமல் சுற்றுவது ஏன்?
அந்த நேரத்தில் கிழக்கு நோக்கிய கருவறையில் மின்காந்த அலையில் சில மாற்றம் ஏற்ப்படுகிறது அதனால் வட்டப்பாதையை தவிர்க்க வேண்டும் என முன்னோர்கள் உத்தேசித்து கோமுகத்தினை தாண்டாதே,வந்த வழியே திரும்பி சுற்றினை முடி என முன்னோர்கள் கூறியுள்ளனர்.
சிவன் கோயில்கள் ஒவ்வொன்றும் சக்தி நிலைகள். அறிவியல் கூடங்கள் என்றால் மிகையல்ல ...........சிவாயநம

No comments:

Post a Comment

இளவயது ஒற்றர் சரஸ்வதி ராஜாமணி

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மிக இளவயது ஒற்றராகச் செயல்பட்ட சரஸ்வதி ராஜாமணி அவர்களின் வாழ்க்கை வரலாறு வீரமும் தியாகமும் நிறைந்தது. ந...