Tuesday, February 5, 2013
மருத்துவ குணம் எப்படி?
இளநீரில் இருப்பவை:
சோடியம் குளோரைடு, பொட்டாசியம், தாது உப்புக்கள், நீர்ச்சத்து, கால்சியம், உப்புச்சத்து, வைட்டமின்கள் நிறைந்திருக்கின்றன.
தினமும் இளநீர் நம்மை இளமையாக வைத்திருக்கும். குறிப்பாக கோடைக்காலங்களில் உப்புச்சத்தும், நீர்ச்சத்தும், இன்ன பிற பொதுவான சத்துக்களும் உடலில் இருந்து வியர்வை மூலமாக வெளியேறிவிடுவதால் உடல் வெளிறிவிடும். மயக்கம், நாடித்துடிப்பு தளர்வு, தசைகள் இறுகுவது நடக்கும். இதற்கெல்லாம் முக்கியமான காரணம் உடலில் உள்ள உப்பு வெளியேறுவதுதான். இளநீரில் இருக்கின்ற உப்புச் சத்து நம் உடலில் வெப்ப நிலையை சமச்சீராக பாதுகாப்பதோடு, வெப்பநிலையை சரிவர உள் வாங்கி முறையே வெளித்தள்ளுகிறது. இதனால் வேனல்பிடிப்பு, வேனல் அதிர்ச்சி, அயர்ச்சி போன்ற கோடையின் ஆபத்தான விஷயங்கள் இல்லாமல் போகிறது.
எப்படிச் சாப்பிடலாம்?
இளநீரை உடனடியாக குடித்துவிடுவது தான் நல்லது. இரண்டு / மூன்று மணி நேரங்கள் வைத்திருப்பதோ, "ஃபிரிட்ஜில்" வைத்திருந்து குடிப்பதோ அதன் மருத்துவக் குணங்கள் மந்தப்படுத்தக் கூடும். வேண்டுமானால் அரை மணிநேரம் வைக்கலாம். இதில் எதனையும் கலந்து குடிக்கக் கூடாது. சர்க்கரை நோயாளிகள் குறைவாக குடிக்கலாம். சிறுநீரக செயலிழப்பு நோயாளிகள் குடிக்கக் கூடாது. இதய நோயாளிகளுக்கு இளநீர் இதம்.
இளநீருக்கு மாற்று குளிர்பானமா?
குளிரூட்டப்பட்ட செயற்கை குளிர்பானங்களில் "கார்பனேட்டட் வாட்டரும்", காற்றும் தான் செயற்கையாக அடைக்கப்படுகிறது. இதில் உடலுக்கு தேவையற்ற கலோரிச் சத்துக்கள் அதிகமாக இருப்பதால் உடல் குண்டாகும். எலும்புகள் பலவீனமடையும். குடற்புண் உண்டாகும். இவையெல்லாம் தொடர்ந்து குடிப்பதில் உள்ள பக்க விளைவுகள். ஆக இளநீர் இளமைக்கும் வலிமைக்கும் இதம்
Subscribe to:
Post Comments (Atom)
முத்துசாமி தீட்சிதர்
மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...
-
இது புதனின் நட்சத்திரம். 1. கார்த்திகை 2. மிருகசீரிஷம் 3. புனர்பூசம் 4. பூரம் 5. சித்திரை 6. சுவாதி 7. விசாகம் 8. அனுஷம் 9. திருவோணம் 10. அவ...
-
ஸ்ரீ பைரவர் 3000 ஆண்டுகளாக இந்துக்களாலும் , கிறிஸ்துவர்களாலும் , புத்தமதத்தினராலும் , சைவம் மற்றும் வைணவ மார்க்கத்தினராலும் பல்வேறு பெயர்களி...
No comments:
Post a Comment