Saturday, January 13, 2018

மருது பாண்டியர்கள்

பதினொன்றாவது மருது பாண்டியர்கள் வாழ்வில் அனுபவித்த பல துயரங்களும் அவர்களுக்கு நடந்த துரோகங்களும் ஏறலாம். மாமன்னர்கள் குற்றவாளி போல சங்கிலி பூட்டி நிற்கிறார்களே இவர்கள் நினைத்து இருந்தால் இவர்களை நம்பி வந்த கட்டபொம்மன் தம்பி ஊமைத்துரையை வெள்ளையனிடம் காட்டி கொடுத்துவிட்டு தனது நாட்டை பாதுகாத்துக் கொண்டு நிம்மதியாக வாழ்ந்து இருக்க முடியும் ஆனால் அவர்கள் தன்னை நம்பி வந்த நண்பனுக்காக தனது ஒட்டு மொத்த வம்சத்தையுமே இழந்தனர்...!!!
தாய் நாட்டின் விடுதலைக்காக இங்கு பலர் உயிர் நீத்து இருந்தாலும் மருது பாண்டியர்களின் வீர மரணம் மிகவும் மாறுபட்டது உலகில் வேறு எந்த மன்னருக்கும் நடக்காத கொடூரம் மருது பாண்டியர்களுக்கு நடந்தது அவர்கள் வெள்ளையனை எதிர்த்தனர் ஆனால் வெள்ளையன் சிறிதும் மனசாட்சியின்றி மருது பாண்டியர்கள் குடும்பத்தில் உள்ள சிறு சிறு குழந்தைகளையும் அழித்தான்...!!!
சின்ன மருது பாண்டியரின் காலில் இரத்தம் வலிக்கிறதே இது துரோகி கரடி கருத்தான் சின்ன மருது பாண்டியருக்கு கொடுத்த பரிசு ஆம் மாமன்னர் சின்ன மருது பாண்டியரின் நிழலாக இருந்த கரடி கருத்தான் பணத்திற்காக வெள்ளையனிடம் விலைபோகி சின்ன மருது பாண்டியரை காலில் துப்பாக்கியால் சுட்டு சிங்கத்தை அடைக்கும் இரும்பு கூண்டிற்குள் அடைத்து வெள்ளையனிடம் பிடித்து கொடுத்தான்...!!!
மருது பாண்டியர்களை சுற்றி ஒரு பிண குவியல் உள்ளதே யார் இவர்கள்...??? நம்மில் பலருக்கு தெரியாது அக்டோபர் 24 1801 அன்று திருப்பத்தூரில் மருது பாண்டியர்களை மட்டுமின்றி 500 க்கும் மேற்பட்ட வீரர்களையும் கொத்து கொத்தாக வெள்ளையன் தூக்கிலிட்டானே அந்த கொடூர சம்பவத்தை இந்த உலகம் மறந்துவிட்டது அந்த வீரர்களின் வீரமரணத்திற்கும் மரியாதை செய்யவே இந்த படம்...!!!
திருப்பத்தூரே இரத்த வெள்ளம் ஓட மரணமே அஞ்சும் மாவீரர்கள் மருது பாண்டியர்களே தூக்கு கயிற்றின் முன்பு நிற்கும் போது வெள்ளையன் அருகில் சிலர் நிம்மதியாக கை கட்டி நின்று இந்த கொடூர சம்பவத்தை கண்டு சிரித்த முகத்துடன் ரசிக்கிறார்களே இவர்கள் தான் சிவகங்கை அரியணைக்கு ஆசைப்பட்டு தாய் நாட்டையும் அவர்களது தன்மானத்தையும் வெள்ளையனின் காலுக்கு கீழ் வைத்துவிட்டு வெள்ளையன் காலில் விழுந்த துரோகிகள் மருது பாண்டியர்களை வெள்ளையனிடம் காட்டி கொடுத்து மன்னரான தமிழ் இனத்தின் துரோகிகள்...!!!
மறதி நமது தேசிய வியாதி எதை வேண்டுமானாலும் மறக்கலாம் ஆனால் மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் தூக்கிலிடப்பட்ட இந்த கொடூர சம்பவத்தை மறக்க முடியுமா...???
வீரவணக்கம் மாமன்னர்களுக்கு...

குதிராம் போஸ

“ஒருமுறை விடைகொடு அம்மா!
என் அருமை அம்மா!
நான்
மீண்டும் பிறப்பேன்
சித்தியின் வயிற்றில்...
பிறந்தது நான்தான் என்பதையறிய
குழந்தையின் கழுத்தைப் பார்
அதில் சுருக்குக் கயிற்றின்
தடம் இருக்கும்”
இந்திய வரலாற்றில் ஆங்கிலேய அரசை எதிர்த்து முதன் முதலாக வெடிகுண்டுத் தாக்குதல்கள் நடத்தியதால் தூக்கிலிடப்பட்ட 16 வயதே நிரம்பிய இளம் போராளி குதிராம் போஸ் தூக்கிலிடும் முன்பு சிறையில் எழுதி வைத்திருந்த கவிதை இது.
தூக்கிலிடப்படும் போது, அவரது சித்தி கருவுற்றிருந்தார்கள். உடனடியாக மீண்டும் இந்த மண்ணில் பிறந்து, மீண்டும் போராட வேண்டும் என்ற வேட்கை தெறிக்கும் கவிதை இது.
தூக்கில் இடப் படும்போது அவரது கையில் பகவத் கீதையுடன், வாய் "வந்தே மாதரம் என முழங்க அவர் உயிர் பிரிந்தது. வரலாற்றில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது ஏப்ரல் 13ம் தேதி. 1908ம் வருடம்.
1889 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் நாள் வங்காளத்தின் மிதுனப்பூர் மாவட்டத்தில், ஹபிப்பூர் என்ற கிராமத்தில் பிறந்தார்.
இவரது தந்தை திரிலோகநாத் போசு, தாயார் லட்சுமிப்ரியதேவி.
சிறு வயதிலேயே நாட்டுப்பற்றுடன் வளர்ந்த குதிராம், தனது பதின்மூன்றாம் வயதில் 1902 இல் அப்போதைய வங்க விடுதலைப் போராட்ட வீரர்களின் ஆசானாக விளங்கிய அரவிந்தர், விவேகானந்தரரின் சீடர் சகோதரி நிவேதிதை ஆகியோரின் சொற்பொழிவுகளால் ஈர்க்கப்பட்டார். சிறு வயதிலிருந்தே கீதையைப் படித்து அதன்படி நடக்க முயன்றார்.
ஆங்கிலேய ஆட்சியை முறியடிக்கத் தானும் ஏதாவது வழியில் உதவ வேண்டும் எனக் கருதினார். 1904 ல் மேதினிப்பூரில் உள்ள கல்லூரியில் சேர்ந்தார்.
அங்கு ஆசிரியர் சத்தியேந்திரநாத் போஸ் வழிகாட்டதல் கிட்டியது. அங்கு அவருக்கு பல புரட்சியாளர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. பிரிட்டிஷ் அரசை எதிர்த்துப் போராடிய ஆயுதப் போராளி இயக்கமான "ஜுகந்தர்" இயக்கத்தில் இணைந்து ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்துப் போராடினார். மூன்றாண்டுகள் (இறக்கும் வரை) இவ்வியக்கத்தில்இருந்தார்.
இஸ்லாமியர்களும் ஆங்கிலேயர்களும் செய்துகொண்ட ரகசிய உடன்படிக்கையின்படி. 1905ம் ஆண்டு, இந்துக்கள், முஸ்லீம்களிடையே பிரிவினையையும், தீராப்பகையையும் ஏற்படுத்திய வங்கப்பிரிவினை நடைபெறுகிறது.
.
முஸ்லீம்கள் அதிகம் இருந்த பகுதியை கிழக்கு வங்கம் என்றும், இந்துக்கள் அதிகமிருந்த பகுதியை மேற்கு_வங்கம் என்றும் இரண்டாக பிரித்து அறிவிப்பு வெளியிட்டது ஆங்கில அரசு.
இதை எதிர்த்து இந்துக்கள் கடுமையாகப் போராடினார்கள்.கலவரம் வெடித்தது.ஆங்கில அரசு கடும் அடக்கு முறைகளை ஏவியது. ஆனாலும் இந்துக்களின் எதிர்ப்பு போராட்டங்களைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறியது.
.
அனுசீலன் சமிதி, ஜூகாந்தர், கதர்,போன்ற பல ஆயுத போராளி இயக்கங்கள் தோன்றின.
தேசப்பற்று மிக்க குதிராமும் இயல்பாகவே அந்தப் போராட்டத்தில் குதித்தார்; பல காவல் நிலையங்களை குதிராமின் குழு குண்டுகளால் தாக்கியது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு இடங்களில் பிரிட்டிஷ் அதிகாரிகள் மீது தாக்குதல்கள் நடந்தது. யார் தாக்குகிறார்கள் என்று தெரியாமல் ஆங்கிலேய அரசு மிரண்டது.
1908 ல் குதிராம் கைது செய்யப்பட்ட போதுதான், 16 வயதே நிறைந்த இளைஞனின் செயல் அது என்று அரசு உணர்ந்தது.
விடுதலை வீரர்களுக்கு கொடும் தண்டனை வழங்கி வந்த மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்டைக் கொல்ல குதிராம் போசும், அவரது நண்பர் பிரபுல்ல சாஹியும் குண்டு வீசியபோது இருவர் கொல்லப் பட்டனர். இந்தச் சம்பவம் ஆங்கிலேயரை உலுக்கியது. குண்டுவீசி தப்பியவர்களைப் பிடிக்க அரசு கடும் முயற்சிகளை மேற்கொண்டது. புரட்சியாளர்கள் குறித்த தகவல் தெரிவிப்போருக்கு ஆயிரம் ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டது.
அடுத்த சில நாட்களில், சமஸ்திப்பூரில் காவலர்களிடம் பிடிபட்ட பிரபுல்ல சாஹி, தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார். மே மாதம் முதல் தேதி குதிராமும் சிக்கினார். தூக்கில் இடப்பட்டார்.
தூக்கில் இடப் படும்போது அவரது கையில் பகவத் கீதையுடன், வாய் "வந்தே மாதரம் என முழங்க அவர் உயிர் பிரிந்தது.
இவரைப் போன்ற  ஆயிரம் ஆயிரம் இந்திய இளைஞர்களின் தியாகத்தாலும் ரத்தத்தாலும் எழுதப்பட்டதுதான் இந்தியாவின் விடுதலை வரலாறு. ஆனால் எத்தனை பேருக்கு இது சொல்லப்பட்டிருக்கிறது.
வருங்கால சந்ததியினருக்கு நீங்கள் சொல்வீர்களா?

பீஷ்மர் கூறிய காலகவிருக்ஷியர்


மகாபாரதத்தில் சொல்லப்படாத கருத்துக்களே இருக்க முடியாது. மேலாண்மை தத்துவங்கள், நாட்டு நடப்பு, அரசியல், தனி மனித வாழ்க்கை என்று எல்லா விஷயங்களையும் நமக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறது. அதில் இடம் பெற்றுள்ள, இன்றைய சூழலுக்கு ஏற்ற ஒரு கதையை படிப்போம்.
மகாபாரதத்தில் சண்டையெல்லாம் முடிந்து அம்புப் படுக்கையில் படுத்தவாறு பீஷ்மர், தர்மபுத்திரருக்கு கூறிய அறிவுரைகளில் ஒன்றுதான், சாந்தி பர்வத்தில் இடம் பெற்றுள்ள காலகவிருக்ஷியர் கதை.
‘தர்மா! காலகவிருக்ஷியர் என்பவர் கோசல நாட்டு அரசனுக்கும் மிகவும் நெருங்கியவர். ஆட்சியில் பல மோசடிகள் நடைபெறுகின்றன என்று கேள்விப்பட்டார். உண்மை நிலவரத்தை அரசனுக்கு எடுத்துச் சொல்ல நினைத்தார். பறவைகளை அடைக்கும் சிறிய கூண்டு ஒன்றை வாங்கினார். ஒரு காகத்தை பிடித்து அதில் அடைத்தார். அதை கையில் எடுத்துக் கொண்டு நாட்டிற்குள் சென்றார்.
மக்கள் அதிகம் கூடும் பகுதிக்குச் சென்று, அனைவரின் காதுகளிலும் விழும்படி உரக்க பேசினார்.
“காகங்களுடன் பேசுகிற வித்தை எனக்குத் தெரியும். ‘நடந்தது, நடப்பது, நடக்கவிருப்பது', ஆகிய எல்லாவற்றையுமே காகம் என்னிடம் சொல்லிவிடும். இந்த ராஜ்யத்தில் நடக்கிற விஷயங்கள் எல்லாவற்றையும் இந்தக் காகத்தின் மூலமாக நான் தெரிந்து கொண்டேன்”, என்று சொன்னார்.
பிறகு, அங்கிருந்து கிளம்பி, அந்த தேசத்தின் பல பகுதிகளில் சுற்றி வந்தார். அதோடு மட்டுமில்லாமல் பலரிடம் பேசி, நாட்டில் நடக்கும் குற்றங்களையும், தவறுகளையும் தெரிந்து கொண்டார்.
அடுத்த நாள், நேராக அரசவைக்குச் சென்றார். அரசன் மட்டுமல்ல, எல்லோரும் கூடியிருக்கும் சபை அது. அங்கு அமர்ந்திருந்த ஒரு முக்கியமான அதிகாரியைப் பார்த்து பேசினார்.
“அதிகாரியே! ‘நீ எந்த இடத்தில், என்ன குற்றத்தைச் செய்தாய்', என்பதை இந்தக் காகம் என்னிடம் தெரிவித்துவிட்டது. நாட்டின் பொக்கிஷத்தில் நீ கை வைத்த விஷயத்தை இது என்னிடம் கூறி விட்டது. ஆகையால் இது விசாரிக்கப்பட வேண்டிய விஷயம்”, என்று தைரியமாகத் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து அங்கிருந்த மற்ற அதிகாரிகள் மீதும் அவர் குற்றாம் சாட்டினார். அரச சபையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு சபை கலைந்தது.
அன்று காலகவிருக்ஷியர் ஓர் மடத்தில் தங்கினார். அவரால் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள் பலர் ஒன்று சேர்ந்தனர். அன்றிரவு, கூண்டிலிருந்த காகத்தை கொன்றனர். பொழுது விடிந்தது. காகம் இறந்ததை அறிந்தார் முனிவர். வருத்தமடைந்தார். நேராக அரண்மனை சென்றார். அரசனை தனிமையில் சந்தித்தார்.
‘அரசனே! நான் சொல்லும் விஷயத்தை நீ பொறுமையோடு கேட்க வேண்டும்', என்ற பீடிகையுடன் பேசத் தொடங்கினார்.
“அரசனை நெருங்குவது நல்லதல்ல என்று பெரியோர்கள் கூறியிருக்கிறார்கள். பிழைப்பதற்கு வழியே அற்றவனுக்கும் கூட, அரசனை அண்டிப் பிழைப்பது என்பது தவிர்க்க வேண்டிய செயல். ‘அரசனை நெருங்கி வாழ்வது, பாம்புகளுடன் வாழ்வது போல', என்று பண்டிதர்கள் சொல்கிறார்கள். அரசனுக்கு நண்பர்கள், பகைவர்கள் என்று பலர் இருப்பதால், அரசனை அண்டிப் பிழைப்பவனுக்கு அவர்கள் அனைவரிடமிருந்தே கூட ஆபத்துகள் உண்டாகலாம். கருணை காட்டும் அரசனுக்கு கோபம் ஏற்படும் போது, தீயாக மாறி பொசுக்கி விடுவான். இவையெல்லாம் தெரிந்திருந்தும் கூட, நான் உன்னை அணுகியதற்குக் காரணம், உன் மீது இருக்கும் அக்கறையே! உன் தந்தையின் காலத்திலிருந்து உங்கள் குடும்பத்துடன் நட்பு பாராட்டியதால், ஆட்சி ஒழுங்காக நடக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது. அதனால்தான் இங்கே நடக்கும் குற்றங்களை நான் எடுத்துரைக்க முயன்றேன். அதிகாரிகளைப் பற்றிய உண்மையை நான் உனக்குத் தெரிவித்தேன். ‘எனக்கு அந்த தகவல்களை கூறியது காகம்', என்று நம்பி, அதைக் கொன்றுவிட்டார்கள். அவர்களுடைய அடுத்த குறி நானாகத்தான் இருப்பேன். இனி உன் ராஜ்யத்தில் வசிப்பது எனக்கு நல்லதல்ல”.
“உன்னுடைய அதிகாரிகளை நீ சோதித்துப் பார்க்க வேண்டும். உனக்கு நல்லதைச் செய்ய விரும்புகிறவர்களை அவர்கள் அழிக்கப்பார்க்கிறார்கள். அவர்கள் உன்னால் விலக்கி வைக்கப்பட வேண்டியவர்கள். என்னால் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள், வாலில் அடிக்கப்பட்ட பாம்பை போன்றவர்கள்! பழி வாங்கத் துடித்துக் கொண்டிருப்பார்கள். ஆகையால் உன்னிடமிருந்து விடை பெறுகிறேன்”, என்று கூறி கிளம்பினார்.
வருத்தமடைந்தான் அரசன்.
‘ஐயா! எனக்கு நல்லது செய்ய விரும்பிய உங்களுக்குத் தீமையை நினைக்கிறவர்கள், இங்கு இருக்கத் தேவையில்லை. அவர்களை உடனே விரட்டி விடுகிறேன். நீங்கள் என்னுடன் இருந்து ஆட்சி செய்ய உதவ வேண்டும்”, என்று கேட்டுக்கொண்டான்', அரசன்.
காலகவிருஷியர் பேசினார்.
‘அரசனே! என்னால் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள் அனைவரின் மீதும், உடனே நடவடிக்கை எடுத்துவிடாதே! குற்றம் செய்த பலர் ஒன்று சேர்ந்து கொண்டால், அவர்களுடைய கொடுமை தாங்க முடியாது. ஆகையால், அவர்கள் ஒன்று சேரும் வகையில் உனது நடவடிக்கை அமைந்து விடக்கூடாது. அவர்களை ஒவ்வொருவராக நீ அழிக்கவேண்டும். முதலில் அவர்களிடம் இருக்கும் செல்வத்தைப் பறிக்க ஏற்பாடு செய்யவேண்டும். ஏனென்றால் அவர்கள் திருடிச் சேர்த்த செல்வத்தின் காரணமாகத்தான், அவர்களுடைய கர்வம் வளர்ந்திருக்கிறது. முதலில் அதைக் குலைக்க வேண்டும். குற்றம் செய்த அதிகாரிகளில் ஒருவருக்கு ஒருவர் விரோதியாக இருக்கக்கூடும். அந்த விரோதியை அனுப்பி, குற்றத்தைக் காட்டிக்கொடுத்து விடுவேன் என்று மிரட்டச் சொல்லி பொருளைப் பறிக்க வேண்டும். அதன் பின்னர் இருவரையும் முடிக்க வேண்டும். அவர்களில் சிலரிடம் நீ அன்பு காட்டுவது போல் நடிக்க வேண்டும். இது அவர்களுக்குள் விரோதத்தை வளர்க்கும். தீய மந்திரியை, மற்றொரு தீய மந்திரியாலேயே அழிக்க வேண்டும். தீயவர்களிடம் அதிகாரம் அளிக்காமல், மக்களின் நன்மையைக் கருதி ராஜ்யத்தை நடத்தும் திறமை உன்னிடம் வளரவேண்டும்”.
காலகவிருஷியர் சொன்ன விஷயங்களில் மிக முக்கியமான ஒன்று இதுதான்:
‘அரசனே! சுலபத்தில் எரிந்து விடக்கூடிய புதர்கள், ஒரு மரத்தைச் சுற்றி வளர்கிறது. பிறகு அந்த மரத்தையே சார்ந்து வாழ்கிறது. காட்டுத் தீ ஏற்படும் போது, புதர்களில் பற்றுகின்ற தீ அந்த மரத்தையே அழித்து விடுகிறது. அதைப் போல உன்னைச் சார்ந்திருப்பவர்களாலேயே உனக்கு அழிவு வரும்', என்று அறிவுரை கூறினார்.
அரசன் உண்மை நிலையை உணர்ந்து கொண்டான். திறமையும், நேர்மையும் கொண்ட ஒருவரை மந்திரியாக்கினான். காலகவிருக்ஷியரை தனது புரோகிதராக அமர்த்திக்கொண்டான். அவரின் வழிகாட்டுதலின் பேரில், தீய அதிகாரிகளையும், மந்திரிகளையும் விலக்கினான். நல்ல முறையில் ஆட்சி செய்து புகழ்பெற்ற அரசனாக விளங்கினான்.
பீஷ்மர் கூறிய காலகவிருக்ஷியர் கதை முடிந்தது.

செவ்வாய் தோஷம் நீங்க உதவும் ஆலயங்கள்

செவ்வாய் தோஷத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள கீழ்க்கண்ட ஆலயங்களில் ஏதாவது ஒரு ஆலயத்துக்கு சென்று வழிபட்டு பரிகாரம் செய்யலாம்.
செவ்வாய் தோஷத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள கீழ்க்கண்ட ஆலயங்களில் ஏதாவது ஒரு ஆலயத்துக்கு சென்று வழிபட்டு பரிகாரம் செய்யலாம்.
1. கைலாசநாதர் திருக்கோவில், கோடகநல்லூர், திருநெல்வேலி.
2. வைத்த மாநிதி பெருமாள் (நவதிருப்பதி-3), திருக்கோவில், திருக்கோளூர், தூத்துக்குடி. 
3. தண்டாயுதபாணி திருக்கோவில், திண்டுக்கல்.
4. சதுர்முக முருகன் திருக்கோவில், சின்னாளப்பட்டி, திண்டுக்கல்.
5. நரசிங்கப்பெருமாள் திருக்கோவில், மன்னாடி மங்கலம், மதுரை. 
6. பிரளயநாதர் திருக்கோவில், சோழவந்தான், மதுரை. 
7. ஆறுமுக நயினார் திருக்கோவில், கோடாங்கிபட்டி தீர்த்த தொட்டி, தேனி.
8. நாகம்மாள் திருக்கோவில், பாலமேடு, கெங்கமுத்தூர், மதுரை.
9. திருவாப்புடையார் திருக்கோவில், செல்லூர், மதுரை.
10. விருத்தபுரீஸ்வரர் திருக்கோவில், திருப்புனவாசல், புதுக்கோட்டை.
11. வீரபத்திரர் திருக்கோவில், அனுமந்தபுரம், காஞ்சீபுரம். 
12. சுப்பிரமணியசுவாமி திருக்கோவில், காங்கேயநல்லூர், வேலூர்.
13. சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோவில், குருசாமி பாளையம், நாமக்கல்.
14. சங்கமேஸ்வரர் திருக்கோவில், பவானி, ஈரோடு.
15. முத்துகுமார சுவாமி திருக்கோவில், பவளமலை, ஈரோடு. 
16. சுப்ரமணியசுவாமி திருக்கோவில், சென்னிமலை, ஈரோடு. 
17. பாலதண்டாயுதபாணி திருக்கோவில், கோட்டுப்புள்ளாம் பாளையம், கோயம்புத்தூர்.
18. மலையாள தேவி துர்காபகவதி திருக்கோவில், நவகரை, கோயம்புத்தூர்.
19. தேனுபுரீஸ்வரர் திருக்கோவில், பட்டீஸ்வரம், தஞ்சாவூர்.
20. அருணஜடேசுவரர் திருக்கோவில், திருப்பணந்தாள், தஞ்சாவூர்.
21. அகோர வீரபத்திரர் திருக்கோவில், வீராவாடி, திருவாரூர்.
22. வைத்தியநாதர் திருக்கோவில், வைத்தீஸ்வரன் கோவில், நாகப்பட்டினம். 
23. அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில், மேலக்கடம்பூர், கடலூர். 
24. நல்லிணக்கீஸ்வரர் திருக்கோவில், எழுச்சூர், சென்னை.
25. கல்யாண கந்தசுவாமி திருக்கோவில், மடிப்பாக்கம், சென்னை. 
26. அகஸ்தீஸ்வரர் திருக்கோவில், வில்லிவாக்கம், சென்னை.

மறைமலை அடிகள்

அலையலவும் வங்காளக் குடாக்கடலின் அடிக்கிடக்கும்விலைவரம்பு காணாத முழுமுத்தும் மேலுயர்ந்த

மலையருவி கொழித்துவரும் மணிகளொடு பசும்பொன்னும்

தலையணியப் பிறநாட்டார்தந்தனை இந்திய மாதே

உலகிற்கோர் விளக்கனையாய் எம்முயிர்கோர் உயிரனையாய்

பலவாறு நின்புகழ்மை பாரித்து என்சிற்றறிவாற்
சொலவருமோ? தொலையாத வளமுடையாய்  தொன்றுதொட்ட
நலமெலாம் பிறர்கவர இந்நாளில் நாணினையே

அந்நாணம் இனியொழிய நின்மகார் அறிந்தெழுந்து
முன்னாளில் விரிந்தபல கைத்தொழிலை முதிர்ச்சியுற்ற
மன்னிமிக முயல்கின்றார் மனக்கவலை நீங்குற்றோம்
இன்னுமிவர் சிறக்கவென ஏத்திமிக வாழ்ததுவமே!

-மறைமலை அடிகள்

தமிழக நதிகள்

1. கடலூர் மாவட்டம்

a)தென்பெண்ணை, 


b)கெடிலம், 

c)வராகநதி, 

d)மலட்டாறு, 

e)பரவனாறு,                                 

f)வெள்ளாறு, 

g)கோமுகி ஆறு, 

h)மணிமுக்தாறு, 

i)ஓங்கூர்

2. விழுப்புரம் மாவட்டம்

a)கோமுகி ஆறு, 


b)மலட்டாறு, 

c)மணிமுத்தாறு

3. காஞ்சிபுரம் மாவட்டம்

a)அடையாறு, 


b)செய்யாறு, 

c)பாலாறு, 

d)வராகநதி, 

e)தென்பெண்ணை,                   

f)பரவனாறு  

4. திருவண்ணாமலை மாவட்டம்

a)தென்பெண்ணை, 


b)செய்யாறு, 

c)வராகநதி, 

e)வெள்ளாறு

5. திருவள்ளூர் மாவட்டம்

a)கூவம், 


b)கொஸ்தலையாறு, 

c)ஆரணியாறு, 

d)பாலாறு

6. கரூர் மாவட்டம்

a)அமராவதி, 


b)பொன்னை

7. திருச்சி மாவட்டம்

a)காவிரி, 


b)கொள்ளிடம், 

c)பொன்னை, 

d)பாம்பாறு

8. பெரம்பலூர் மாவட்டம்

a)கொள்ளிடம்

9. தஞ்சாவூர் மாவட்டம்

a)காவிரி, 


b)வெட்டாறு, 

c)வெண்ணாறு, 

d)கொள்ளிடம்,  

e)அக்கினி ஆறு

10. சிவகங்கை மாவட்டம்

a)வைகையாறு, 


b)பாம்பாறு, 

c)குண்டாறு, 

d)கிருதமல் ஆறு,

11. திருவாரூர் மாவட்டம்

a)காவிரி, 


b)வெண்ணாறு, 

c)பாமணியாறு, 

d)குடமுருட்டி

12. நாகப்பட்டினம் மாவட்டம்

a)காவிரி, 


b)வெண்ணாறு

13. தூத்துக்குடி மாவட்டம்

a)ஜம்பு நதி, 


b)மணிமுத்தாறு, 

c)தாமிரபரணி, 

d)குண்டாறு,                                  

e)கிருதமல் ஆறு, 

d)கல்லாறு, 

e)கோராம்பள்ளம் ஆறு

14. தேனி மாவட்டம்

a)வைகையாறு, 


b)சுருளியாறு, 

c)தேனி ஆறு, 

d)வரட்டாறு,

e)வைரவனாறு

15. கோயம்புத்தூர் மாவட்டம்

a)சிறுவாணி, 


b)அமராவதி, 

c)பவானி, 

d)நொய்யலாறு, 

e)பாம்பாறு

f)கெளசிகா நதி

16. திருநெல்வேலி மாவட்டம்

a)தாமிரபரணி, 


b)கடனா நதி, 

c)சிற்றாறு, 

d)இராமநதி, 

e)மணிமுத்தாறு,

f)பச்சை ஆறு, 

g)கறுப்பா நதி, 

h)குண்டாறு, 

i)நம்பியாறு, 

k)கொடுமுடிஆறு,   

l)அனுமாநதி,

m)கருமேனியாறு, 

n)கரமணை ஆறு

(சேர்வலாறு.மணிமுத்தாறு.கடனா ஆறு. பச்சையாறு. சிற்றாறு.பேயனாறு.நாகமலையாறு,காட்டாறு.சோம்பனாறு,கௌதலையாறு.உள்ளாறு.பாம்பனாறு.காரையாறு.நம்பியாறு.கோதையாறு.கோம்பையாறு.குண்டாறு இவை அனைத்தும் தாமிரபரணியின் துணையாறுகள் )

17. மதுரை மாவட்டம்

a)பெரியாறு, 


b)வைகையாறு, 

d)குண்டாறு, 

e)கிருதமல் ஆறு,   

f)சுள்ளி ஆறு, 

g)வைரவனாறு, 

h)தேனியாறு, 

i)வாட்டாறு, 

j)நாகலாறு, 

k)வராகநதி, 

l)மஞ்சள் ஆறு, 

m)மருதாநதி, 

n)சிறுமலையாறு, 

o)சுத்தி ஆறு, 

p)உப்பு ஆறு

18. திண்டுக்கல் மாவட்டம்

a)பரப்பலாறு, 


b)வரதம்மா நதி, 

c)மருதா நதி, 

d)சண்முகாநதி,                                          

e)நங்கட்சியாறு, 

f)குடகனாறு, 

g)குதிரையாறு, 

h)பாலாறு, 

i)புராந்தளையாறு,                        

j)பொன்னை, 

k)பாம்பாறு, 

l)மஞ்சள் ஆறு

19. கன்னியாகுமரி மாவட்டம்

a)கோதையாறு, 


b)பறளியாறு, 

c)பழையாறு, 

d)நெய்யாறு, 

e)வள்ளியாறு

20.இராமநாதபுரம் மாவட்டம்

a)குண்டாறு, 

c)கிருதமல் ஆறு, 

d)வைகை, 

e)பாம்பாறு, 
                                                          
f)கோட்டகரையாறு, 

g)உத்திரகோசம் மங்கை ஆறு

21. தருமபுரி மாவட்டம்

a)காவிரி, 


b)தொப்பையாறு, 

c)தென்பெண்ணை 

22. சேலம் மாவட்டம்

a)காவிரி, 


b)வசிட்டாநதி, 

c)வெள்ளாறு

23. விருதுநகர் மாவட்டம்

a)கௌசிகாறு, 


b)வைப்பாறு, 

c)குண்டாறு, 

d)அர்ஜுனா நதி, 

e)கிருதமல் ஆறு

24. நாமக்கல் மாவட்டம்

a)காவிரி, 


b)உப்பாறு, 

c)நொய்யலாறு

25. ஈரோடு மாவட்டம்

a)காவிரி, 


b)பவானி, 

c)உப்பாறு

26. திருப்பூர் மாவட்டம்

a)நொய்யலாறு, 


b)அமராவதி, 

c)குதிரையாறு

27. புதுக்கோட்டை மாவட்டம்

a)அக்கினி ஆறு, 


b)அம்பூலி ஆறு, 

c)தெற்கு வெள்ளாறு, 

d)பம்பாறு,                             

e)கோட்டகரையாறு



இப்படி நதிகளின் பட்டியல் நீண்டுக்கொண்டே இருக்கின்றது.



தமிழ்நாட்டு நதிகளில் உள்ள நீர்த் தேக்கங்கள் / அணைகள்:



நீர்த் தேக்கத்தின் பெயர்


***************************

வராக நதி படுகை

1. வீடூர்

பெண்ணையாறு படுகை

2. கிருஷ்ணகிரி

3. சாத்தனூர்

4. தும்பஹள்ளி

5. பாம்பார்

6. வாணியாறு

வெள்ளாறு நதிப் படுகை

7. வெல்லிங்டன்

8. மணிமுக்தா நதி

9. கோமுகி நதி

காவேரி நதிப் படுகை

10. மேட்டூர்

11. சின்னாறு

12. சேகரி குளிஹல்லா

13. நாகவதி

14. தொப்பையாறு

15. பவானி சாகர்

16. குண்டேரி பள்ளம்

17. வரட்டுப் பள்ளம்

18. அமராவதி

19. பாலாறு, பெருந்தலாறு

20. வரதமா நதி

21. உப்பாறு (பெரியாறு மாவட்டம்)

22. வட்டமலைக் கரை ஓடை

23. பரப்பலாறு

24. பொன்னையாறு

25. உப்பார் (திருச்சி மாவட்டம்)

வைகை நதிப் படுகை

26. வைகை

27. மஞ்சளாறு

28. மருதா நதி

வைப்பார் நதிப் படுகை

29. பிளவுக்கல் (பெரியாறு நீர்த்தேக்கம்)

30. பிளவுக்கல் (கோவிலாறு நீர்த்தேக்கம்)

31. வெம்பக்கோட்டை நீர்த்தேக்கம்

32. குள்ளுர் சந்தை

தாமிரபரணி நதிப் படுகை

33. மணிமுத்தாறு

34. கடனா

35. ராம நதி

36. கருப்பா நதி

37. குண்டாறு

கோதையாறு நதிப் படுகை

38. பேச்சிப் பாறை

39. பெருஞ்சாணி

40. சித்தாறு - i

41. சித்தாறு - ii



மேற்கு நோக்கிப் பாயும் நதிக்களை கிழக்கே திருப்புதல்



பெரியாறு நதிப் படுகை

42. பெரியாறு

43. மேல் நீராறு அணைக்கட்டு

44. கீழ் நீராறு

சாலக்குடி நதிப்படுகை

45. சோலையாறு

46. பரம்பிக்குளம்

47. தூனக்கடவு

48. பெருவாரிப் பள்ளம்

பாரதப் புழை நதிப் படுகை

49. ஆழியாறு

50. திருமூர்த்தி



இப்படி நீர்த்தேக்கங்களையும் நீண்ட வரிசைப்படுத்தலாம்.



தமிழக நீர்நிலைகள்



நாட்டின் விடுதலைக்கு முன் அதாவது 1947-ல் அன்றைய சென்னை மாகாணமான இன்றைய தமிழக நிலப்பரப்பில் மட்டும் 50,000 நீர் நிலைகள் இருந்தன. இன்றைக்கு பாதிக்கு குறைவாக 20,000 நீர் நிலைகள் இருப்பதாக புள்ளிவிபரங்கள் சொல்கின்றன.



மதுரை, சென்னை மாநகரங்களைச் சுற்றி 500 ஏரிகள் - குளங்கள் காணாமல் போய்விட்டன. பழவேற்காடு ஏரியை ஆந்திர அரசு சிறிது சிறிதாக அபகரித்துக் கொண்டது. வீராண ஏரியும் சரியாகப் பராமரிப்

வாயு தொல்லை நீங்க!!!


சுக்கு - 50 கிராம்

மிளகு - 50 கிராம்

திப்பிலி - 50 கிராம்

இந்துப்பு - 50 கிராம்

சீரகம் - 50 கிராம்

கருஞ்சீரகம் - 50 கிராம்

கடுக்காய் - 50 கிராம்

பெருங்காயம் - 50 கிராம்

சாதிக்காய் - 50 கிராம்

இவை அனைத்தையும் முறைப்படி சுத்தி செய்து தனித் தனியாக மிக்ஸியில் போட்டு பொடி செய்து, பின் எல்லா பொடிகளையும் சேர்த்து நன்றாக கலந்து  கொள்ளவும்.


தேன், மோர், வெந்நீர் இதில் ஏதாவது ஒன்றுடன் கால் டீஸ்பூன்  அளவு கலந்து காலை, இரவு சாப்பிட்டு வர வாயு தொல்லை, விலா எலும்பு வலி, இடுப்பிலிருந்து மார்பு வரை வேதனை தரும் வாயு தொல்லை, மூச்சை அழுத்தி பிடிக்கும் நெஞ்சு வலி, முதலியவைகள் குணமாகும்.

முத்துசாமி தீட்சிதர்

மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...