Saturday, January 13, 2018

குதிராம் போஸ

“ஒருமுறை விடைகொடு அம்மா!
என் அருமை அம்மா!
நான்
மீண்டும் பிறப்பேன்
சித்தியின் வயிற்றில்...
பிறந்தது நான்தான் என்பதையறிய
குழந்தையின் கழுத்தைப் பார்
அதில் சுருக்குக் கயிற்றின்
தடம் இருக்கும்”
இந்திய வரலாற்றில் ஆங்கிலேய அரசை எதிர்த்து முதன் முதலாக வெடிகுண்டுத் தாக்குதல்கள் நடத்தியதால் தூக்கிலிடப்பட்ட 16 வயதே நிரம்பிய இளம் போராளி குதிராம் போஸ் தூக்கிலிடும் முன்பு சிறையில் எழுதி வைத்திருந்த கவிதை இது.
தூக்கிலிடப்படும் போது, அவரது சித்தி கருவுற்றிருந்தார்கள். உடனடியாக மீண்டும் இந்த மண்ணில் பிறந்து, மீண்டும் போராட வேண்டும் என்ற வேட்கை தெறிக்கும் கவிதை இது.
தூக்கில் இடப் படும்போது அவரது கையில் பகவத் கீதையுடன், வாய் "வந்தே மாதரம் என முழங்க அவர் உயிர் பிரிந்தது. வரலாற்றில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது ஏப்ரல் 13ம் தேதி. 1908ம் வருடம்.
1889 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் நாள் வங்காளத்தின் மிதுனப்பூர் மாவட்டத்தில், ஹபிப்பூர் என்ற கிராமத்தில் பிறந்தார்.
இவரது தந்தை திரிலோகநாத் போசு, தாயார் லட்சுமிப்ரியதேவி.
சிறு வயதிலேயே நாட்டுப்பற்றுடன் வளர்ந்த குதிராம், தனது பதின்மூன்றாம் வயதில் 1902 இல் அப்போதைய வங்க விடுதலைப் போராட்ட வீரர்களின் ஆசானாக விளங்கிய அரவிந்தர், விவேகானந்தரரின் சீடர் சகோதரி நிவேதிதை ஆகியோரின் சொற்பொழிவுகளால் ஈர்க்கப்பட்டார். சிறு வயதிலிருந்தே கீதையைப் படித்து அதன்படி நடக்க முயன்றார்.
ஆங்கிலேய ஆட்சியை முறியடிக்கத் தானும் ஏதாவது வழியில் உதவ வேண்டும் எனக் கருதினார். 1904 ல் மேதினிப்பூரில் உள்ள கல்லூரியில் சேர்ந்தார்.
அங்கு ஆசிரியர் சத்தியேந்திரநாத் போஸ் வழிகாட்டதல் கிட்டியது. அங்கு அவருக்கு பல புரட்சியாளர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. பிரிட்டிஷ் அரசை எதிர்த்துப் போராடிய ஆயுதப் போராளி இயக்கமான "ஜுகந்தர்" இயக்கத்தில் இணைந்து ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்துப் போராடினார். மூன்றாண்டுகள் (இறக்கும் வரை) இவ்வியக்கத்தில்இருந்தார்.
இஸ்லாமியர்களும் ஆங்கிலேயர்களும் செய்துகொண்ட ரகசிய உடன்படிக்கையின்படி. 1905ம் ஆண்டு, இந்துக்கள், முஸ்லீம்களிடையே பிரிவினையையும், தீராப்பகையையும் ஏற்படுத்திய வங்கப்பிரிவினை நடைபெறுகிறது.
.
முஸ்லீம்கள் அதிகம் இருந்த பகுதியை கிழக்கு வங்கம் என்றும், இந்துக்கள் அதிகமிருந்த பகுதியை மேற்கு_வங்கம் என்றும் இரண்டாக பிரித்து அறிவிப்பு வெளியிட்டது ஆங்கில அரசு.
இதை எதிர்த்து இந்துக்கள் கடுமையாகப் போராடினார்கள்.கலவரம் வெடித்தது.ஆங்கில அரசு கடும் அடக்கு முறைகளை ஏவியது. ஆனாலும் இந்துக்களின் எதிர்ப்பு போராட்டங்களைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறியது.
.
அனுசீலன் சமிதி, ஜூகாந்தர், கதர்,போன்ற பல ஆயுத போராளி இயக்கங்கள் தோன்றின.
தேசப்பற்று மிக்க குதிராமும் இயல்பாகவே அந்தப் போராட்டத்தில் குதித்தார்; பல காவல் நிலையங்களை குதிராமின் குழு குண்டுகளால் தாக்கியது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு இடங்களில் பிரிட்டிஷ் அதிகாரிகள் மீது தாக்குதல்கள் நடந்தது. யார் தாக்குகிறார்கள் என்று தெரியாமல் ஆங்கிலேய அரசு மிரண்டது.
1908 ல் குதிராம் கைது செய்யப்பட்ட போதுதான், 16 வயதே நிறைந்த இளைஞனின் செயல் அது என்று அரசு உணர்ந்தது.
விடுதலை வீரர்களுக்கு கொடும் தண்டனை வழங்கி வந்த மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்டைக் கொல்ல குதிராம் போசும், அவரது நண்பர் பிரபுல்ல சாஹியும் குண்டு வீசியபோது இருவர் கொல்லப் பட்டனர். இந்தச் சம்பவம் ஆங்கிலேயரை உலுக்கியது. குண்டுவீசி தப்பியவர்களைப் பிடிக்க அரசு கடும் முயற்சிகளை மேற்கொண்டது. புரட்சியாளர்கள் குறித்த தகவல் தெரிவிப்போருக்கு ஆயிரம் ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டது.
அடுத்த சில நாட்களில், சமஸ்திப்பூரில் காவலர்களிடம் பிடிபட்ட பிரபுல்ல சாஹி, தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார். மே மாதம் முதல் தேதி குதிராமும் சிக்கினார். தூக்கில் இடப்பட்டார்.
தூக்கில் இடப் படும்போது அவரது கையில் பகவத் கீதையுடன், வாய் "வந்தே மாதரம் என முழங்க அவர் உயிர் பிரிந்தது.
இவரைப் போன்ற  ஆயிரம் ஆயிரம் இந்திய இளைஞர்களின் தியாகத்தாலும் ரத்தத்தாலும் எழுதப்பட்டதுதான் இந்தியாவின் விடுதலை வரலாறு. ஆனால் எத்தனை பேருக்கு இது சொல்லப்பட்டிருக்கிறது.
வருங்கால சந்ததியினருக்கு நீங்கள் சொல்வீர்களா?

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...