தீர்த்தம்_ஆடவேண்டுமென்று தேடுகின்ற தீனர்காள்
தீர்த்தம் ஆடல் எவ்விடம் தெளித்து நீர் இயம்பிலீர்
தீர்த்தமாக உம்முளே தெளிந்து நீர் இருந்த பின்
தீர்த்தமாக உள்ளதும் சிவாயம் அஞ்செழுத்துமே.
-சிவவாக்கியர்
பொருள்:-
தலம்_தீர்த்தம்_மூர்த்தம் என்றும் நல்ல தீர்த்தங்களில் மூழ்கி நீராடினால் அநேக பாவங்களும் அகன்றுவிடும் என்றும் காவிரி, கங்க, யமுனா என்று தீர்த்தங்களைத் தேடி ஓடும் அன்பர்களே!! அப்படியெல்லாம் தேடித் தீர்த்தமாடியதால் செய்த பாவம் யாவும் போய்விட்டதா?
பாவங்கள்_அகல தீர்த்தமாடுவது எந்த இடம் என்று நீங்கள் தெளிவாகச் சொல்ல வேண்டும். உங்களுக்குள் தெளிந்த தீர்த்தமாக உள்ள நீரையும் அது இருக்கும் இடத்தையும் தெரிந்து கொண்டீர்களா?
அவ்வாறு_அனைத்து பாவங் களையும் போக்க வல்லதாக உள்ள தீர்த்தமாகிய அது பஞ்சாட்சரம் என்ற மெய்ப்பொருள் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
அதிலேயே_பஞ்சபூதங்களும் உள்ளதை உணர்ந்து சிவயநம என்று அஞ்செழுத்தை ஓதி அதையே நினைந்து நெகிழ்ந்து நீராடும் வழியை அறிந்து தியானம் செய்யுங்கள்.
No comments:
Post a Comment