Saturday, June 20, 2020

மூன்றுவித உணவுகள்


1.சாத்விக உணவு
2.ராஜஸ உணவு
3.தாமஸ உணவு

உயிரிலிருந்து உணவு உற்பத்தியாகிறது.உணவிலிருந்து உயிர் உற்பத்தியாகிறது என்று வேதம் கூறுகிறது.

ஒரு உயிர் இன்னொரு உயிரின் உணவாகிறது.

ஸ்ரீமத்பகவத்கீதையில் ஸ்ரீகிருஷ்ணர் மூன்றுவித உணவுகளைப்பற்றி கூறுகிறார்

ஆயுள், அறிவு, பலம், ஆரோக்கியம், சுகம், விருப்பம் ஆகியவைகளை  உண்டுபண்ணுபவை,  ரசமுள்ளவைகள், பசையுள்ளவைகள், வலிவு தருபவைகள், இன்பமானவைகள் ஆகிய ஆகாரங்கள் சாத்வீக உணவு

கசப்பு, புளிப்பு, உவர்ப்பு, அதிக உஷ்ணம், காரம், உலர்ந்தவை, எரிச்சலூட்டுபவை, துக்கத்தையும், சோகத்தையும், நோயையும் உண்டுபண்ணுபவையான ரஜோகுண உணவு

பொழுது கழிந்த, சுவையிழந்த, நுர்நாற்றமெடுத்த, பழைய, எச்சிலான, தூய்மையற்ற உணவு.
போதையூட்டக்கூடிய உணவுகள், நீண்ட நாட்கள் பாதுகாக்கப்பட்டு பின்பு பரிமாறப்படும் உணவுகள், ஒரே தட்டில் உள்ள உணவை எச்சில் உணவை பலர் உண்பது, மாமிச உணவுகள் போன்றவை தமோ குண உணவு

உணவில் ஐந்து தோஷங்கள் உண்டு.

1) அர்த்த தோஷம்
தீயவழியில் பணம் சம்பாதிப்பவனிடம், பாவியிடம், தெய்வநம்பிக்கை இல்லாதவனிடம் உணவு உண்பதால் பாவம் வருகிறது.

2) நிமித்த தோஷம்.
எதற்காக உணவு சமைக்கப்படுகிறது? யார் உணவை சமைக்கிறார்கள்? என்பதை பார்க்க வேண்டும். அத்தோடு சமைக்கப்பட்ட உணவு நாய், எறும்பு, காகம் போன்ற ஜந்துக்களால் தொடப்படாமல் இருத்தலும் அவசியம், உணவில் தூசி, தலை மயிர், புழுக்கள் போன்றவையும் இருக்கக் கூடாது.
-
3) ஸ்தான தோஷம்
உணவு சமைக்கப்படும் இடம் நல்ல இடமாக இருக்க வேண்டும்.பலர் கூடும் இடங்கள்,தூசி நிறைந்த இடங்கள்,அசுத்த சூழல் உள்ள இடங்கள்,மழை,காற்று இவைகளால் பாதிக்கப்படும் இடங்கள்,
அற்ப விவாதங்கள் நடக்கும் இடங்கள் போன்றவை சமைப்பதற்கு ஏற்ற இடங்கள் அல்ல.

4) ஜாதி தோஷம்
ஒவ்வொரு உணவுக்கும் ஒரு ஜாதி இருக்கிறது. ஜாதி என்பது பிறவியில் உண்டான குணம். சில காய்கள் பிறவியிலேயே விஷமுள்ளவையாக இருக்கும்.சில காய்கள் அதிக சூட்டை உருவாக்கும். சில மாமிசங்கள் நோய்க்கிருமிகள் உள்ளவையாக இருக்கும், சில காய்கள் அல்லது மாமிசம் இயல்பிலேயே நாற்றமெடுக்கும். இவைகள் ஜாதிதோஷம் உள்ளவை.

5) சம்ஸ்கார தோஷம்
ஒரு உணவு இன்னொரு உணவுடன் சேர்வதால் வரும் தோஷம். சாத்விக உணவுடன் தாமஸ உணவை கலத்தல் உணவை உரிய முறையில் சமைக்காமல் பாதியில் இறக்குதல்
உணவை அதிக அளவு வேகவைத்தல், அதிகமாக வறுத்தல், கரியவைத்தல் போன்றவை 

உணவை சமைத்தபிறகு தெய்வங்களுக்கு படைக்க வேண்டும்.

இந்த உலகத்தில் நாம் மட்டும் வாழவில்லை.நமக்கு மேலே தெய்வங்கள் இருக்கின்றன.
அவர்களும் உணவினால்தான் வாழ்கிறார்கள். உணவில் தூலபகுதி, சூட்சுமப்பகுதி என்று இரண்டு உள்ளது.
சூட்சுமப்பகுதியை தெய்வங்கள் உணவாக உட்கொள்கின்றன.
தூலப்பகுதியை மனிதர்கள் உணவாக உட்கொள்கிறார்கள்.

உணவை நியதிப்படி சமைத்தாலும், ஒவ்வொரு உணவும் பிற உயிர்களிடமிருந்து பெறப்படுபவைதான்
ஒரு உயிர் இன்னொரு உயிருக்கு உணவாகிறது. இதனால் உயிர்களைக் கொன்ற பாவம், அதை உண்பர்களுக்கு வந்து சேர்கிறது.
காய்கறி,விதைகள், பால் போன்ற உணவை உண்டாலும் அதனால் பாவம் வரவே செய்கிறது.

தெய்வங்களுக்கு உணவை படைப்பதால் அந்த உணவில் வரும் பாவத்தின் பெரும்பகுதியை தெய்வங்கள் ஏற்றுக்கொள்கின்றன.
அப்படியானால் தெய்வங்களுக்கு பாவம் வராதா? தெய்வங்கள் பாவத்தை தங்களிடம் எதையும் வைத்துக்கொள்வதில்லை.தெய்வங்களை யார் பழிக்கிறார்களோ அவர்களுக்கு அந்த பாவம் செல்கிறது.

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...